(Before the Devil Knows You're Dead)18+பணம் படுத்தும் பாடு...

உலகின் நடக்கும் பெரும்பாலான குற்றங்களுக்கு பின்னனியில் இருப்பது பணமும், காமமும்தான்...பல குற்றங்களுக்கு பணம் மிக முக்கியகாரணமாக இருக்கின்றது... இரண்டாம் இடத்தில் இருக்கும் காமத்தின் பால் நடக்கும் கொலைகள் ஏராளம்...

கணவனுக்கு மனைவிக்குமான உரையாடல்.... மனைவி பெட்டி படுக்கையுடன் கிளம்பி விட்டாள்...

எங்க கிளம்பிட்ட?

எல்லாம் மாறிடுச்சி...

நீ இப்பவெல்லாம் எதையும் என்கிட்ட சொல்றது இல்லை...

எனக்கு புரியலை என்ன சொல்லற...

நேத்து கார்ல என்ன நடந்தது???என் உதவி ஏதாவது வேனுமா? என்று மனைவி கேட்கின்றாள்..
கணவன் வேண்டாம் என்று சொன்னதும்... அவள் பெட்டி படுக்கையுடன் செல்கின்றாள்...

கணவன் அவளை தடுக்கவில்லை..
அவள் கதவு பக்கம் போனதும் சொல்கின்றாள்...

உன்னால கண்டுபிடிக்க முடியலையா? எனக்கு வேறு ஒரு தொடர்பு இருந்துச்சின்னு...

கணவன்... நீ என்ன சொல்லற....?

நான் என்ன சொல்லவரேன்னா...நான் வேற ஒருத்தனோட படுத்தேன்..ஒவ்வொறு வியாழக்கிழமையும் நானு்ம் உன் தம்பி ஹான்க்கும் ஒன்னா படுத்து புரள்வோம்.. அது மட்டும் அல்ல அவன் என்னை லவ் பண்ணறேன்னு சொன்னான்..இப்ப கூட அவன் என்னை பயங்கரமா காதலிக்கின்றான்...
உன்னை மாதிரி எப்பவாவது இல்லை... எப்பயுமே.. என்று ஒரு மனைவி சொன்னாள் ஒரு கணவனுக்கு எப்படி இருக்கும்...
என்னது என் தம்பியா?
ஆமாம்...

நீ எதாவது என்கிட்ட சொல்ல போறியா?
உனக்கு என் மேல கோபம் வரலையா?

என்று கணவனிடம் கேட்டுவிட்டு கேபுக்கு பணத்தையும் கணவனிடம் வாங்கி கொண்டு செல்கின்றாள்..... அவன் எதுவும் பேசவில்லை... அவன் ஏன் பேசவில்லை அவன் பேவிடாமல் தடுத்த விஷயம் என்ன....

Before the Devil Knows You're Dead படத்தின் கதை இதுதான்...
Andy Hanson (Hoffman)ம் Hank (Hawke) இரண்டு பேரும் அண்ணன் தம்பிகள்... இருவரும் திருமணம் ஆனவர்கள்... இருவருக்கும் பண பிரச்சனை...இவர்களின் பெற்றோர் ஒரு நகை கடையில் வேலை செய்கின்றார்கள்... இருவருக்கும் பணம் தேவை என்பதால் பெற்றோர் வேலை செய்யும் நகைகடையில் கொள்ளை அடிக்கலாம் என்று அண்ணன் ஆண்டி சொல்ல ஹன்க்கும் அதற்க்கு ஒத்துக்கொள்கின்றான்... கொள்ளை அடிக்க போகும் போது எந்த துப்பாக்கியும் எடுத்து போய் உயிர் சேதம் இல்லாமல் கொள்ளை அடிக்க வேண்டும் என்பது பிளான்... ஆனால் பிள்ளையார்
பிடிக்க குரங்கு ஆன கதையாக பிளான் சொதப்புகின்றது... இதற்க்கு நடுவில் அண்ணன் அண்டியின் மனைவியை ஒவ்வொறு வியாழக்கிழமையும் தனி வீட்டில் வர வைத்து அண்ணனுக்கு கட்டில் துரோகம் செய்கின்றான்..பிளான் சொதப்பியதால் இந்த நகை கொள்ளையில் இவர்களின் அம்மா குண்டு அடிபட்டு கோமாவுக்கு போக... யோவ் நீதான் சொன்ன கொள்ளை அடிக்க போகும் போது துப்பாக்கி எடுத்துக்குனு போக கூடாதுன்னு அப்புறம் எப்படி என்று கேட்கின்றீர்களா? அதான் சொன்னேன் இல்லையா... பிளான் சொதப்பிடிச்சின்னு.........எப்படி சொதப்புச்சின்னு மிச்சபடத்தை பாருங்க...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....
இந்த படம் 2007ம் ஆண்டு வெளியானது...-

இந்த படம் பத்திரிக்கையாளர் காட்சிக்கா நியூயார்க் பிலிம் பெஸ்ட்டிவலில் திரையிடபட்டது....

88 சதவித ரசிகர்கள்... இந்த படத்தை பார்ககலாம் என பரிந்துரைத்து உள்ளார்கள்...

இந்த படம் ஒரு கிரைம் படம் என்றாலும் மெதுவான திரைக்கதை... இருப்பினும்...திரைக்கதை சற்று சுவாரஸ்யத்தை கூட்டும் விதமாக அமைத்து இருக்கின்றார்கள்.....

இந்த படத்தின் முதல் காட்சியே டாக்கி ஸ்டைல் உடலுறவு காட்சி...

இந்த படத்தின் வேகத்துக்கு ஏற்றது போல் பல காட்சிகள் ஸ்டேடிபிளாக்கில் ஷுட் செய்து இருப்பார்கள்...

அம்மா இறந்து போனதும்...அடக்கம் செய்து விட்டுஅப்பாவும் ஆண்டியும் உட்கார்ந்து பேசும் அந்த காட்சி நல்ல கம்போசிஷன்...
இந்த படத்தில் நடித்த பல நடிகர் நடிகைகள் அக்காடமி விருதுகள் வாங்கியவர்கள் என்பது குறிப்பிடதக்கது...

நெஞ்சில் நிற்க்கும் காட்சி...
கொள்ளை அடிக்கும் போது பெரிய பரபரபப்பு இல்லாமல் கொள்ளை அடிக்கும் அந்த காட்சி....

மனைவிக்கா ஏங்கும் பெரியவர் தன் பெரிய மகனை கொலை செய்ய முயலும் அந்த கிளைமாக்ஸ் காட்சியும்...

தம்பியிடம் ஹங்கிடம் துப்பாக்கி முனையில் எனக்கு எல்லாம் தெரியும் என்று ஆண்டி சொன்னதும் சட்டென புரிந்து... அண்ணணிடம் மன்னிப்பு கேட்கும் அந்த காட்சி....
ஆண்டியிடம் அவன் மனைவி...உன் தம்பியோடு வாரம் ஒரு முறை உறவு கொள்கின்றேன் என்று சொல்லும் அந்த காட்சி...அதற்க்கு அண்டி ரியாக்ஷனும்

படத்தின் டிரைலர்....

படக்குழுவினர் விபரம்...

Directed by Sidney Lumet
Produced by Michael Cerenzie
Brian Linse
William S. Gilmore
Paul Parmar
Written by Kelly Masterson
Starring Philip Seymour Hoffman
Ethan Hawke
Albert Finney
Marisa Tomei
Rosemary Harris
Amy Ryan
Music by Carter Burwell
Cinematography Ron Fortunato
Editing by Tom Swartwout
Distributed by THINKFilm
Release date(s) October 26, 2007
Running time 123 min.
Country United States
Language English

படத்தின் சென்சார் புகைபடம்.....

அன்புடன்
ஜாக்கிசேகர்...

ஒரு நாளைக்கு சராசரியா என் தளத்தை 1500பேர் வாசிக்கிறிங்க... அதுல ஒரு 100 பேர் ஓட்டு போட நேரம் ஒதுக்கினா என்ன கொறைஞ்சா போயிடுவிங்க...

4 comments:

  1. உலகின் நடக்கும் பெரும்பாலான குற்றங்களுக்கு பின்னனியில் இருப்பது பணமும், காமமும்தான்

    நிஜம்

    ReplyDelete
  2. பேரைப்பார்த்து பேய் படம்னு நினைச்சு இன்னும் பார்க்காம வச்சுருக்கேன் ஜாக்கி.. பாத்துடறேன்..

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner