THE ARTIST AND THE MODEL-2012/உலகசினிமா/ஸ்பெயின்/மாடல் அகதி.


கலைக்கு நமக்கும் என்ன சம்பந்தம்... அழகான சிற்பமா இருந்தாலும் பிரகாஷ் லவ் அஞ்சுன்னு ஆர்ட்டின் வரைஞ்சி வைப்போம்...
பட்  அதுக்கும் நமக்கும் இந்த காலத்துல ரொம்ப தூரம் பாஸ்..

டிவைன்  லவ்வர்ஸ்ன்னு ஒரு படம்... அப்ஸ்ரா தியேட்டர்....கோயம்புத்தூர் பஸ்  ஸ்டாட்ண்டுக்கு பக்கத்தில் இருந்து தியேட்டர் அது....  ரொம்ப அருமையாக தியேட்டர்... இப்ப  அதை இடிச்சிட்டாங்கன்னு நினைக்கறேன்...அங்கதான் அந்த படத்தை பார்த்தேன்... 

என்னா கூட்டம் என்னா கூட்டம்..??? படத்தோட கதை ரொம்ப சிம்பிள்...ஒரு சிற்பி ஆண் பெண் ரெண்டு பேரையும் நிர்வாணம நிற்க  வச்சி  சிற்பம் செதுக்கிட்டு இருக்கும் போது, ரெண்டு பேருக்கும்  மூடு வந்து மேட்டர் பண்ண.... போங்கு புடிச்ச   சிற்பி ஓத்தா  நான் அங்க பாறையோடு  போராடிக்கிட்டு இருக்கேன்... உங்களுக்கு சுகம் கேட்குதான்னு பொட்டுன்னு அந்த ஆண்  மாடல் தலையில சுத்தியால அடிச்சி காலி பண்ணிடறான்..... அடுத்த ஜென்மத்துல அதே  இடத்துக்கு வந்து ரெண்டு பேரும் மேட்டர் பண்ணி எப்படி மோட்சம் அடைகின்றார்கள் என்பதுதான் கதை... என்னா கூட்டம் தியேட்டர்ல எல்லா ஷோவும் புல்லு....


மற்ற ஊர்ல  படம் எப்படி ஓடிச்சி பத்திரிக்கை கமென்ட் எல்லாம் போட்டு ஒரு போஸ்டர் ஒட்டி இருந்தாங்க... அதுக்கு அப்புறம் சத்யராஜ் ஓவியரா  நடிச்ச படம் பூவிழி வாசலிலே.... அதுல கொலைகாரன் முகம்  நினைவுக்கு வர  பிரஷ்ஷூம் கேன்வாசோட சத்யராஜ் ஆறடிக்கு லோ ஆங்கில்  பிரேமில்  நிற்க...  வில்லன் ஆண்டனி முகம் ரெட் பில்டர் லைட்டுல வந்து வந்து போக... ஜோஹொ....ஜொ ஹோன்னு அங்கி போட்டுக்கிட்டு நாலு பேர் சுத்தி சுத்தி கத்திக்கிட்டு கிடப்பானுங்க... சத்யராஜூக்கு  கொலைகாரன் முகத்தை நினைவுக்கு வர விடமா தடுக்கறாங்களாமா....??  வெரி ஃபன்னி.


அதுக்கு அப்புறம் கமலு ஆர்ட்டிஸ்ட்டா சிவபெருமான் ஸ்டைலில் 910 வரைஞ்ச அன்பே சிவத்துல பார்த்தது... அதே போல காதலா காதலா படத்துல லிங்கம்ன்னு ஆர்ட்டிஸ்டுகளை ஜாலியா  கலாய்ச்ச படத்தை பார்த்து இருக்கோம்... பட் இந்த ஸ்பெயின் படம் கொஞ்சம் டீடெயிலானது.


 சில பேரை நமக்கு பார்க்கும் போது பிடிக்காது.. பெரிசா ஈர்ப்பும் வராது... கடனெழவேன்னு பேசிக்கிட்டு இருப்போம் அல்லது  பழகிட்டு இருப்போம்... பெரிசா ஒட்டு இல்லாம...   கடமைக்கு பழகுவோம்... சில இடத்துல சுயநலமா வேற வழியில்லாம பேசித்தொலைப்போம். வழிஞ்சி வைப்போம்... சில  பேர் கிட்ட பேசும் போது கடமைக்கு பேசறோம்ன்னு நல்லா தெரியும்.... இருந்தாலும் வேற வழி இல்லை என்பதால் அவரிடம் பேசியாக வேண்டுமே என்று பேசுவோம் இல்லையா...? அப்படி  பேசிப்பழகும் பெண் அகதிக்கும் ஒரு கலைஞனுக்கும் இடையில் நடக்கும் உணர்வுகள்தான் இந்த மொத்த திரைப்படமும்...


  இரண்டாம் உலக போரின் போது அதாவது 1940 லிருந்து 1944 ஆம் ஆண்டு வரை  பிரான்சை நாஜிக்கில் நாலு வருஷம் அக்குப்பை பண்ணிக்கிட்டு இருந்த போது  பிரான்சில் ஊருக்கு ஒதுக்குப்புறமா வாழ்த்துக்கிட்டு இருந்த ஒரு கலைஞனுக்கும் அவனுக்கு மாடலாக இருந்த ஸ்பெயின்  தேசத்து அகதிபெண்ணுக்கும் இடையில் இருந்த  உணர்வினை அப்படியே அழகியலாக்கி செல்லுலாய்டில் சிறை பிடிக்கின்றது இந்த திரைப்படம்.


Marc Cros (Jean Rochefort) ஊருக்கு ஒதுக்கு புறமாய் தன்  மனைவியுடன் வாழ்த்து வருகின்றார்... கேன்வாஸ்  ஓவியங்கள் மற்றும் சிலைகள்  வடிப்பதுதான் அவரின்  வேலை,... அவரின் சிலைக்கு மாடல் பெண்ணை  தேடிக்கொண்டு இருக்கும் போது மார்க் இன் மனைவி கண்ணில் சாலையோரம் படத்து உறங்கும்  அழகான இளம் பெண்  கண்ணில் படுகின்றாள்.... 

அவளை வீட்டுக்கு அழைத்து சென்று தன் கணவன் செய்யப்போகும் சிலைக்கு மாடலாக இருக்க சம்மதமா என்று கேட்கின்றாள்.. அவள் பெயர்   மெர்சி...ஸ்பெயின் சிறைச்சாலையில் இருந்து தப்பித்து அகதியாக தெரு தெருவாக  அலையும் பெண்... இருக்க இடம் , சாப்பிட சாப்பாடு அது போதும் இப்போதைக்கு.... கூச்சம் , நிர்வாணம், மானம்,  அவமானம், மயிறு மட்டை எல்லாம் அப்புறம்தான் என்று முடிவு எடுத்து  நிர்வாண மாடலாக இருக்க சம்திக்கின்றாள்...

சாப்பாட்டுக்காகவும் தங்க இடம் இல்லாத வாழ்க்கை சூழலில்   ஒரு ஒவியனுக்கு  நிர்வாண  மாடல் ஆகியவள் எப்படி மெல்ல மெல்ல  அந்த ஓவியனின்  ரசனையோடு ஒத்துப்போகின்றாள் என்பதை கவித்துவமாக படமாக்கியிருக்கின்றனர்.

முதலில் இந்த படம் பிளாக் அண்டு ஒயிட்  சித்திரம்... அப்படி  எடுத்தமைதான் இந்த படத்துக்கு கூடுதல் அழகை கொடுத்து  இருக்கின்றது என்று  நம்புகின்றேன்.. போன தலைமுறை பிளாக் அண்டு ஒய்ட்  நிர்வாண  போட்டோக்களை பார்த்தாலே டெம்ட் ஏறும்,... ஆனால் இந்த தலைமுறையில்  கலர்  போட்டோதான் அந்த  உணர்வை கொடுக்கும் என்பது என் எண்ணம்.. காரணம் புத்தியில் மூளையில்  பதிந்து போன விஷயம்.. போன தலைமுறைக்கு கலர் சான்ஸ்  இல்லை ... இந்த தலைமுறைக்கு ரெண்டும் சாத்தியம் என்பதால் அப்படி சொல்கின்றேன்..


முதலில் நிர்வாணமாக இருக்கவும் போஸ் கொடுக்கவும் சிரமபடும்  கட்டங்களையும்.. ஒரே இடத்தில்  உட்கார்ந்து போஸ் கொடுக்க முடியாமல் அதே இடத்தில் தூங்கும் காட்சிகளும் கவிதை...

வார் நடக்குது என்பதை சில கேரக்டர்கள் மூலம் உணர வைப்பதுதான் சினிமா கலையை முழுதாக  புரிந்துக்கொண்டவன் என்பதை காட்சிகளில் உணர்த்தப்படுகின்றன...

  தண்ணீரில் நிர்வாண போஸ் கொடுத்துக்கொண்டு இருக்க... திடிர் என்று நீந்தும் ஆசை  வந்து நீந்துவதும்..... மறைந்து இருந்து சின்ன  பிள்ளை போல கிழவர் மேல்  நீர் அடித்து விளையாடுவதும்... கட்டையில் போகும் வயதாக இருந்தாலும் அன்பும், காதலும், காமமும், ஒரு போதும் அழியாது என்பதை காட்சிகள் மூலம் விவரித்த இடம் அருமையோ அருமை... 


பெண் சினேகம் என்பது எந்த வயதாக இருந்தாலும் அதனை விட்டு விடாமல் தற்காத்துக்கொள்ளத்தான்  மனது போராடும் என்பதை நீட்டி முழங்காமல்...  சில டயலாக்குகள் மூலம் கேள்வி கேட்டு  அந்த வயதானவனின் பொசசிவ் உணர்வுகளை வெளிப்படுத்தும்  இடம் கவிதை...

அதே போல நிர்வாண போஸ் கொடுப்பதை எட்டி பார்க்க  கூடும் சின்ன பசங்க... அதுல ஒருத்தன் அங்கேயே தூங்கிடறதுன்னு அழியாத கோலங்கள் படத்தினை பார்த்தது போல காட்சிகள்  நினைவில் பதிகின்றன.

காமம் என்பது வியர்க்க விறு விறுக்க முயங்குவது மட்டும்தான் என்று  பலர் நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.. ஒருவேளை  அந்த வயது வரும் போது இந்த திரைப்படம் பார்க்கையில் நிச்சயம் அவர்களால் வேறு விதமாய் உணர முடியும் என்று நம்புகின்றேன்.. அதே போல  சூர்யா போல ஆண்தான் பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும் எனும் பிம்பங்களை ஊடகங்கள்தான் உருவாக்கி வைத்துள்ளன... ஆனால் உண்மை என்னவெனில் அளுமை உள்ள   ஆண்களையே பெண்களுக்கு  அதிகம் பிடிக்கின்றது என்பதுதான் சிதர்சனமாக உண்மை....

 இதற்கு  உதாரணம்... பாலுமகேந்திரா, மவுனிகா.... பாலுமகேந்திரா பையன் ஷங்கியை விட மூன்று வயது மட்டுமே பெரிய மவுனிகா பாலுமகேந்திராவின் இரண்டாவது மனைவியாக வாழ்ந்தார்...   ஒரு கட்டத்தில் மவுனியை  தலையில் தட்டி  துரத்தி இருக்க வெண்டும் ஆனால் என்னால் முடியவில்லை என்று ஓப்பனாக ஒத்துக்கொண்ட ஒரே ஒப்பற்ற கலைஞன் பாலுமகேந்திராதான்... அதே போல எனக்கு புள்ளை வேணாம்  ... சொத்து வேணாம், இந்த சமுகம் என்னை பற்றி என்ன கமென்ட் சொன்னாலும் எனக்கு கவலை இல்லை..   என்று அந்த கலைஞனோடு இரண்டாவது மனைவியாக கடைசி வரை வாழ்ந்தார் மவுனிகா... இந்த படத்தை பார்க்கும் போது  எனக்கு அவர்கள் இருவருடைய நினைவுதான் வந்தது..


சிற்பம் உருவாக்கி  சின்ன சின்ன  வேலைகள்   நாகசு செய்கின்றேன் என்று திரும்ப திரும்ப  சுரண்டி  சுரண்டி  அழகு படத்தும் காட்சி அருமை.
 படத்துல  பிளாக் அண்டு ஒயிட் ஷாட்டில் லைட்டிங்க அருமையாக சில இடங்களில் அமைந்து விடுகின்றது ... முக்கியமாக   முழு சிற்பமும் ரெடியாகி விட  அந்த சிற்பத்தை போஸ் கொடுத்தவளுக்கு திருப்பி முழுமையாக காட்டும் அந்த காட்சியில் லைட்டிங்... யப்பா.... சான்சே இல்லை.



காமம் ஒருவனுக்கு எந்த கணத்தில் தோன்றும்? எந்த புள்ளியில் தோன்றும்??? அவனது வேலையில் கவனம் செலுத்த முடியுமா?- ஓவியர்  சாலை  தேனீர் கடையில் டீ குடிப்பதில் இருந்து வரும் காட்சிகள்... காமத்தை உணர்ந்தவனால்   புரிந்தவனால் காட்சியாக வடிக்க  முடியும் என்பதை பின் வரும் காட்சிகள் உணர்ந்துகின்றன.

 ஒரு போட்டோவை வைத்துக்கொண்டு அதை விளக்குவதும்   சின்ன  சின்ன கொடுகளுக்கு  எல்லாம் புது  அர்த்தம் கொடுப்பதும்.. ஒரு லைன் டிராயிங்கில்  எப்படி எல்லாம் பார்க்க வேண்டும் என்று  விளக்கி சொல்லும் காட்சி அருமை.. 
இந்த திரைப்படம் உலக சினிமா விழாக்களில் கலந்து கொண்டு நிறைய விருதுகளை அள்ளியது என்பது குறிப்பிடதக்கது.. 

====
படத்தின் டிரைலர்...



=========
படக்குழுவினர் விபரம்..

Directed by Fernando Trueba
Produced by Angélica Huete
Written by Fernando Trueba
Jean-Claude Carrière
Starring Jean Rochefort
Aida Folch
Cinematography Daniel Vilar
Editing by Marta Velasco
Studio Fernando Trueba P.C.
Bonne Pioche
Release dates
September 23, 2012 (2012 SSIFF)
August 2, 2013 (United States)
Running time 104 minutes
Country Spain

Language French

=========
பைனல் கிக்.

(பிரான்சில் வாழ்ந்த ஒரிஜினல் கலைஞன் Henri Matisse)

இந்த திரைப்படம்  மூன்று தலைமுறைகளை  பார்த்து பிரான்சில் வாழ்ந்த  காலம் சென்ற ஓவிய கலைஞன் Henri Matisse இனை இன்ஸ்பயராக கொண்டு எடுத்த திரைப்படம்  என்று ஒரு சில விமர்சகர்கள் கருதுகின்றன. Aida Folch  நிர்வாண மாடலாக சின்ன சின்ன    வெகுளிதனங்களை  வெளிப்படுத்தி கவருகின்றார்...  கேமராமேன் Daniel Vilar    லைட்டிங் மற்றும் பிரேம்களில் அசத்தி இருக்கின்றார். இந்த படம் அவசியம் பார்த்தே தீரவேண்டிய திரைப்படம் கண்டிப்பாக வயதுக்கு வந்தவர்களுக்கு மட்டும்.. ஆர் ரேட்டிங்  திரைப்படம் இது.

============
படத்தின் ரேட்டிங்..
பத்துக்கு  எட்டு.

நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

6 comments:

  1. தலைவா, நீங்கள் இதுவரை பார்த்த படங்களின் ஒளிதொகுப்பைஎல்லாம் பத்திரமாக வைத்திருக்கிறீர்களா. கண்டிப்பாக இந்த கலேக்ஷுன் உலகத்திலேயே வேற யாரிடமும் இருக்காது.

    ReplyDelete
  2. Ur approach to the cinema is astounding...keep it up.....

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner