கல்லூரி அரங்கம் முழுவதும்
மாணவ மாணவிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது...
அவர்களுக்கு உரிய அரட்டையில் ஈடுபட்டு
இருந்தார்கள்.. கூட்டம் என் பக்கம் திருப்ப வேண்டும்... எனக்கான நேரம் குறைவு...
தன்னம்பிக்கை பற்றி பேச
ஆரம்பித்தேன்....
திரும்பவும் கொஞ்சம் சல சலப்பு இருந்து கொண்டு இருந்தது.. நான் அது
பற்றி கவலை படவில்லை. யார் எல்லாம் அவ நம்பிக்கையோடு
வாழ்கின்றீர்கள்..? என்னால் முடியாது.. எனக்கு இது
கிட்டாது... எனக்கு யாருமே இல்லை... அதனால் என்னால் ஜெயிக்க முடியாது.. அதனால்
தோல்வியுற்றேன்... என்று யாரெல்லாம் நினைத்து கவலை பட்டு இருக்கின்றீர்கள் என்று கேட்டு விட்டு
மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் கை தூக்குங்கள் என்று சொன்னேன்.
மாணவ மாணவிகளில்
கணிசமாக கை உயர்த்தினார்கள்.. மற்றவர்கள் தன்னை பற்றி என்ன நினைப்பார்களோ என்று பாதி
தைரியத்துடன் கை தூக்கலாமா? வேண்டாமா ? என்று சில கைகள் யோசித்துக்கொண்டு இருந்தன...
நண்பர்களே இப்போது உங்கள் முன் விருந்தினர் என்ற முறையில் பேசிக்கொண்டு இருக்கும்
நான்... சென்னையில் கொக்கோ கோலா பாட்டில் ஓப்பன்
பண்ணிகொடுத்தற்காக 50 காசு டிப்ஸ் பெற்ற சர்வர் பையன்தான் உங்கள் முன் நிற்கின்றேன்
என்றேன்..
கூட்டம் எந்த சல சலப்பும் இன்றி
அமைதிகாத்தது. நான் பேச ஆரம்பித்தேன்... எத்தனை
போராட்டங்களை கடந்து வந்திருக்கின்றேன் என்று
பேச பேச கூட்டம் மந்திரத்துக்கு கட்டு பட்டது போல காது கொடுத்து கேட்க ஆரம்பித்தது...
நம்மை அசைத்து பார்க்க நம் தன்னம்பிக்கையை குறைத்து
போட நிறைய செயல்கள் நம்மை சுற்றி நடக்கும்
ஆனாலும் நாம் வெற்றி நடை போட நம் தன்னப்பிக்கையை வளர்த்துக்கொள்வது அவசியம்..
தம்பி டாக்டர் பாலாவின் நெருங்கிய நண்பன்
ராஜேஷ் என்னிடத்தில் கேள்வி கேட்டான்.. அண்ணே... நீதான் வளர்ந்துட்டே... அப்புறம்
எதுக்கு திரும்ப திரும்ப இந்த கஷ்டப்பட்ட விஷயத்தை சொல்லிக்கிட்டே இருக்கே... என்றான்...
அதுக்கு நான் பதில் சொன்னேன்.
ஒன்னு நான் அதிகம் ஆடாம இருக்க
நானே என் தலையில தட்டி உட்கார வச்சிக்க திரும்ப
திரும்ப சொல்லறேன்... ரெண்டாவது.. இது கண்ணுக்கு தெரியாம பல பேருக்கு என் வாழக்கை ஒரு இன்ஸ்பிரேஷன்...
யாழினி பர்த்டேவுக்கு
பெங்ளூர்ல இருக்கேன்...
உங்களையும் யாழினியையும் சந்திக்க ஒரு வாய்ப்பு... நான் பங்கஷனுக்கு வரலாமா?
என் பேரு ராஜகுமார்... என்று போன் செய்தார் நண்பர் ஒருவர் ....
நான் அவசியம் வரலாம் என்று சொன்னேன்.
யாழினி பிறந்தநாள் விழாவுக்கு
ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்து விட்டார்.... பெங்களூருவில் ஆண் செவிலியராக பணியாற்றுகின்றார்...
அவ்வளவுதான் எனக்கு தெரியும்... பேச நேரம் இல்லை....
நிச்சயம் நிறைய பேசுவோம் ராஜ்குமார்.
ஜாக்கி நீங்கதான் எனக்கு
இன்ஸ்பிரேஷன்... உங்களை பார்த்து பிளாக் எல்லாம்
ஆரம்பிச்சி எழுதி இருக்கேன்.. பட் என்னால தொட்ர்ந்து எழுத முடியலை.. என்று சொல்லி வெகு நேரம் இருந்து விட்டு யாழினிக்கு பரிசு பொருட்களை அளித்து
விட்டு, நன்கு பழகிய நண்பனை போல, முதல் முறையாக பார்ப்பவன் ஒருவன் கை கொடுத்து சட்டென அணைத்து அவன்
அன்பை வெளிப்படுத்தினானே... அதுக்குதான் இதை திரும்ப திரும்ப சொல்லறது ராஜேஷ்...
தன்னப்பிக்கை கதைகள் வாசிக்கவும்,
கேட்கவும் , உங்கள் கண்ணால் பார்க்கும் போது உங்களுகே அறியாமல் உங்களில் நிறைய மாற்றங்கள் நிகழும்
என்பதை நீங்கள் அறிவீர்களா? நண்பர்களே.
தேர்வுக்கு பயந்து கொடைக்கானல்
ஏரியில் விழுந்து பள்ளி மாணவன் தற்கொலை செய்துக்கொண்டான் என்று செய்தி படிக்கையில்...
தன்னப்பிக்கை இல்லாமல் வளர்ந்த பிள்ளையை வீட்டில் படிக்கும் மெஷினாக மாற்றியதன் விளைவுதான்
இது என்பது என் எண்ணம்.
ஆல் ஈஸ் லாஸ்ட்.... எல்லவாற்றையும் இழந்த ஒருவன்...
ஆனாலும் தன்னம்பிக்கையோடு கடைசி வரை போரடுகின்றான்...ஒரு கட்டத்தில் NO
OTHER GO ... என்ற situation இல் இயற்கை விடாமல் சதி செய்ய ... ஒரு கட்டத்தில்
அதே இயற்கை எப்படி அவனுக்கு உதவி செய்தது என்பதுதான் கதை.
பெண்டாஸ்ட்டிக் மார்வலஸ் பிலிம்.. ஆல் ஈஸ் லாஸ்ட்.
ராபர்ட் ரெட் போர்டு எனக்கு
பிடிக்காத நடிகர்... முஞ்சி எல்லாம் சொறி பிடிச்சது
போல....டேமி மூர் என்ற அழகு பதுமையை ஒரு நாள் நைட்டுக்கு ரபார்ட் ரெட்போர்டுக்கு வித்துடுவான்... டைப் அடிக்கும்
போது படத்தோட பேர் மறந்து போச்சி.... ரைட்... அந்த ஆளை எனக்கு பிடிக்காது...
ஒரு ஹாலிவுட் ஹீரோவுக்கான எந்த லட்ச்சணமும் அந்த ஆள் கிட்ட இல்லை
என்பதால் அந்த ஆளை எனக்கு பிடிக்கவே பிடிக்காது.
இது ஒரு 15 வருடத்துக்கு முன்னாடி கதை....
பட் நண்பர்
கார்த்திக் நாகராஜ் சார் சொல்லி....ஸ்பை கேம் படம் பார்த்தேன்... என்னைக்கு அந்த படத்தை பார்த்து முடிச்சேனோ... அந்த செகன்ட்ல இருந்து
நான் ராபர் ரெட் போர்டு ரசிகர் ஆயிட்டேன்...
அவன் ஒரு நடிப்பு ராட்சஸன். சான்சே இல்ல...
படம் புல்லா ஒரே ஒருத்தவன்தான்...... வேற யாரும் கோ ஆர்ட்டிஸ்ட் இல்லை.. ஆனாலும்
படம் பார்க்கும் 106 நிமிஷமும் நாம
அவன் கூடயே டிராவல் ஆகறது போல எடுத்து இருக்கானுங்க பாருங்க.. அங்க நிக்கறானுங்க
அவனுங்க...
நம்ம தமிழ் ஹீரோக்கிட்ட
போய் இது போல ஒரு கதை சொன்னா... ஓத்தா கழுத்தாமட்டையில ஒன்னு வச்சி... ஜென்மத்துக்கும்
அவன் முகத்துல நாம முழிக்காத அளவுக்கு நம்மை உதைச்சி அனுப்பிடுவான்...
படம் புல்லா.. என் மூஞ்சி மட்டுமே வருமா?- இதை ஒரு கதைப்பு.......... எடுத்துக்கிட்டு
வந்தான் பாரு.... அதை கேட்கலான்னு சொன்ன்னான் பாரு.... பிஆர்ஓ... அவன் இனிமே என் மூஞ்சியிலேயே
முழிக்க கூடாதுன்னு சொல்லிடு என்று தமிழ் நடிகர் நிச்சயம் சொல்லி இருப்பார்...
தனியா சொகுசு சின்ன போட்டுல இருக்கறவன் ஏதெச்சையா ஒரு விபத்தை சந்திக்க அதனால
ரேடியோ தொடர்பை இழக்கின்றான்.... அவன்
செத்தானா? உயிர் பிழைத்தானா? என்பதுதான் கதை.
2000 ஆம் ஆண்டு தனியா
ஒரு ஒருத்தவனை மட்டும் வச்சிக்கிட்டு முக்கா
வாசி படத்தை எடுத்தாங்க... அந்த படம் CAST
AWAY.... டாம் ஹாங்ஸ் அந்த படத்துல நடிச்சி இருப்பார்...
கூரியர் பிளைட்டு விபத்துக்குள்ளாகி ஆள் ஆரவார மற்ற
தீவில் மாட்டிக்கொண்டு ஒரு மனிதன் உயிர் வாழ
நடத்தும் போரட்டம்தான் அந்த திரைப்படம்.... அந்த திரைப்படத்துல கடைசி சீன்ல நிறைய கேரக்டர்
வரும்.. இந்த படத்துல படத்தோட பர்ஸ்ட் ஷாட்டுல இருந்து லாஸ்ட் ஷாட்டு வரைக்கு ராபர்ட்ரெட்போர்டுதான்.... வேற யாரும் இந்த படத்துல
கோ ஸ்டார் இல்லை... அந்த அளவுக்கு பக்கா திரைக்கதை....
கடைசி ஷாட்டுல கூட ஒரே ஒரு கை மட்டும் நடிச்சி இருக்கும்....
காஸ்ட் அவே படத்துல நாயகன் தரையில இருப்பான்.. எந்த விஞ்ஞான உபகரணமும் அவன்கிட்ட இருக்காது....
ஆனா இந்த படத்துல இவனுக்கு எல்லா விஞ்ஞான
உபகரணமும் இருக்கும்... ஆனா நடுக்கடல்ல இருப்பான்...
அவனுக்கு ஆபத்து ரொம்ப கம்பி... உயிர் வாழலாம்.... ஆனா இவனுக்கு நொடிக்கு நொடி ஆபத்து...
ஒரு கட்டத்துல காத்து மற்றும் மழை சவுண்டை கேட்டாலே தலை வலிக்கும் அளவுக்கு
ரொம்ப கொடுமையா இருக்கறதை அழகா காட்சி படுத்தி
இருக்காங்க...
முக்கியமா.... மழை ரொம்ப நாள் கழிச்சி பேயும் போது அதை அனுபவித்து கொண்டாடும் ராபர்ட் ரெட் போர்ட்.. அதே புயல் மழையா வரும் போது
அதை கண்டு மிரளும் காட்சிகள்... அருமை...
படத்தில் முதல் டயலாக் தண்ணியில் விழுந்த ரீசிவருக்கு
கொஞ்சம் உயிர் இருக்கும் போது உதவி வேண்டும் என்று கேட்பது.. அடுத்த டயலாக்... இயற்கை தொடர்ந்து
வஞ்சிக்கின்றது என்று தெரிந்து (FUCK)ஓத்தா........................................
என்று கத்துவது... அவ்வளவுதான் டயலாக்...
படம் முழுக்க கடல் கடல் கடல் ரபார்ட்ரெட்போர்டு அவ்வளவுதான்...
பெரிய சென்டிமென்ட் சீன் எல்லாம் இல்லை... லட்டர் எழுதி பாட்டில்ல போடறதுன்னு ரொம்ப வள வளன்னு வளர்த்தலை...
சுத்தமா தண்ணி இல்லை...
ஆனாலும் கடல் தண்ணியை நீராவி மூலமா ரெடி பண்ணி
எடுத்துக்குடிக்கறது.... பலம் இல்லை என்பதை காட்ட கை நடுக்கத்துடன் எல்லா வேலையையும்
செய்யறது என்று ராபர்ட் ரெட்போர்டு பின்னி எடுக்கின்றார்...
இந்த படத்துக்கு பிரின்சிபல்
போட்டோகிராபியும் விஷூவல் எபெக்ட்டும் படத்தை
தூக்கி நிறுத்தி நம்மை கடல்ல இருப்பது போல நம்ம வைக்கின்றன...
ராபர்ட் ரெட் போர்டுஉடன் நம்மையும் பயணிக்க வைத்த இந்த திரைப்படத்தின் இயக்குனர் J. C. Chandor.... சான்சே இல்லை மேன் .....பின்னிட்டிங்க... பின்னி... ஒரு விளம்பர பட டைரக்டரா இருந்து இப்படி ஒரு படத்தை கொடுத்து அசத்தி இருக்கிங்க... சான்சே இல்லை. வாழ்த்துகள்.
=======
படத்தின் நாமினேஷன் மற்றும் குவித்த விருதுகள்...
Awards
Award Category Recipients
and nominees Result
AARP Annual Movies
for Grownups Awards Judge's Award for
Extraordinary Merit All is Lost Won
86th Academy Awards Best Sound Editing Steve Boeddeker, Richard Hymns Nominated
Chicago Film Critics
Association Best Actor Robert Redford Nominated
Critics' Choice
Movie Awards Best Actor Robert Redford Nominated
Detroit Film Critics
Society[29] Best Actor Robert Redford Nominated
71st Golden Globe
Awards[30][31] Best Actor – Motion Picture
Drama Robert Redford Nominated
Best Original Score Alex Ebert Won
Gotham Awards[32] Best Actor Robert
Redford Nominated
Independent Spirit
Awards[33] Best Feature Nominated
Best Director J. C. Chandor Nominated
Best Male Lead Robert Redford Nominated
Best Cinematography Frank G. DeMarco Nominated
Motion Picture Sound
Editors Golden Reel Awards[34][35] Best
Sound Editing: Sound Effects & Foley in a Feature Film Richard Hymns, Steve Boeddeker Nominated
New York Film
Critics Circle[36] Best Actor Robert Redford Won
Phoenix Film Critics
Society[37] Best Actor in a
Leading Role Robert Redford Nominated
San Francisco Film
Critics Circle Best Actor Robert Redford Nominated
Best Editing Pete Beaudreau Nominated
Satellite Awards[38] Best Motion Picture Nominated
Best Actor – Motion
Picture Robert Redford Nominated
Best Sound (Editing
and Mixing) Brandon Proctor,
Richard Hymns, Steve Boeddeker Nominated
Best Visual Effects Brendon O'Dell, Collin Davies, Robert
Munroe Nominated
Washington D.C. Area
Film Critics Association[39] Best Actor Robert Redford Nominated
======
படத்தின் டிரைலர்....
=======
படக்குழுவினர் விபரம்
Directed by J. C. Chandor
Produced by Justin Nappi
Teddy Schwarzman
Neal Dodson
Anna Gerb
Written by J. C. Chandor
Starring Robert Redford
Music by Alex Ebert
Cinematography Frank G. DeMarco
Editing by Pete Beaudreau
Studio Before the Door Pictures
Washington Square Films
Distributed by Lionsgate (United States)
FilmNation Entertainment (International)
Release dates
May 22, 2013 (Cannes)
October 25, 2013 (United States, limited)
Running time 106 minutes
Country United States
Language English
Budget $8.5 million
Box office $10,581,817
========
பைனல்கிக்.
தன்னம்பிக்கை இழந்தவர்கள்
அவசியம் பார்த்தே தீர வேண்டிய திரைப்படம் இது.. இந்த படத்தை கூகுள் பிளஸ்சில் பகிர்ந்தது
கொண்ட தம்பி இராமசாமி கண்ணனுக்கு என் நன்றிகள்.
=====
படத்தோட ரேட்டிங்
பத்துக்கு எட்டு
=======
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
Buried movie parunga athulayum ore actor than
ReplyDeleteடைப் அடிக்கும் போது படத்தோட பேர் மறந்து போச்சி.... "Indecent Proposal"
ReplyDeleteAnna Review super...Naan before 2 month parthuten na....Super film.
ReplyDeleteUnga rasigan na Kekuren" Against the family" film review panugana...
Anna Review Super..2 Month Beforeenna padam parthen...
ReplyDeleteAnna ungal rasigan oru vendugol neega kandiap Against the wild" review solluga na
Will definitely watch this one. I liked Robert Redford from spy games and the last Castle
ReplyDelete//நம்ம தமிழ் ஹீரோக்கிட்ட போய் இது போல ஒரு கதை சொன்னா... ஓத்தா கழுத்தாமட்டையில ஒன்னு வச்சி... ஜென்மத்துக்கும் அவன் முகத்துல நாம முழிக்காத அளவுக்கு நம்மை உதைச்சி அனுப்பிடுவான்...
ReplyDeleteபடம் புல்லா.. என் மூஞ்சி மட்டுமே வருமா?- இதை ஒரு கதைப்பு.......... எடுத்துக்கிட்டு வந்தான் பாரு.... அதை கேட்கலான்னு சொன்ன்னான் பாரு.... பிஆர்ஓ... அவன் இனிமே என் மூஞ்சியிலேயே முழிக்க கூடாதுன்னு சொல்லிடு என்று தமிழ் நடிகர் நிச்சயம் சொல்லி இருப்பார்...//
என்ன சார் பேசறீங்க?நம்ம உலக நாயகன் இருக்கும் பொது என்ன பிரச்சினை? சினிமா முழுக்க அவர் மூஞ்சி வர மாதிரி தானே படம் எடுத்து நம்மள கொல்லுவாரு? அவர் கிட்ட இந்த மாதிரி கதைய சொன்னா ஒரு இளிச்சவாய் தயாரிபாளர புடிச்சு இந்த படத்தை அப்படியே காப்பி அடிச்சு அந்த படம் தன்னோட கதை மாதிரி போட்டுக்குவாரு
Jackie Anna "The lone survivor" review solluga. ..Please
ReplyDelete