VALLINAM-2014/ வல்லினம். அருமை.





கடலூர் கூத்தப்பாக்கம் கிராமத்தில் ஒரு காலத்தில் கோலி குண்டு,  கோட்டிபுல், மாணவர்களிடம் ரொம்ப பேமஸ்... முக்கியமாக கோட்டிபுல் ரொம்ப பேமஸ்...
 துளுக்கர்கள்  சமாதி அருகே காலையில் இருந்து மாலை வரை கோட்டி விளையாடியது நினைவுக்கு வருகின்றது...நாங்கள் 5 ஆம் வகுப்பு படிக்க ஆரம்பிக்கும் போது  கிரிக்கெட் விளையாட்டு எங்கள் ஊரில் மெல்ல தலைதூக்கியது...

சென்னையில்  இருந்து லீவுக்கு வரும் பசங்கள்,மிட்ஆன், லெக்ஸ்பின், ஸ்கொயர் டிரைவ் என்று ஏதேதோ  ஆங்கில வார்த்தைகள் சொல்லி எங்களை தாழ்வுமணப்பான்மையில் உழல செய்தார்கள்...இதனால் அந்த விளையாட்டை இன்னும் நன்றாக கற்றுக்கொள்ளும் வெறி எங்கள் அனைவருக்கும் கனன்று கொண்டு இருந்தது.

கூத்தபாக்கம் மாரியாத்தா கோவில் மாந்தோப்பில் புடிக்கற ஆட்டம் விளையாடுவோம்.. ஒரு பெரிய ரவுன்ட் தரையில் குச்சியால் வரைந்து, அதுக்கு நடுவில் ஜா பூ திரி போட்டு,  அதில் தோற்றவனை வட்டத்துக்கு நடுவில் நிறுத்தி ஒரு பையன் கையில் ஒரு குச்சியை கொடுத்து ,அந்த குச்சியை வெகு தூரம் வீசி எறிந்தால் வீசிய குச்சியை எடுத்து வந்து ,அந்த வட்டத்தில் போட்டு விட்டு எங்களை பிடிக்க வேண்டும்.. அவன் அந்த குச்சியை ஓடி வந்து எடுக்கும் முன் நாங்கள் வானர படைகளாக மாறி மாமரங்களில் ஏறிவிடுவோம்... அவன் மாமரத்தில்  வேர் பக்கம் ஏறுவதற்குள் பக்கத்து  மா மரத்துக்கு அல்லது  தாழ்ந்த கிளை வழியாக கீழே இறங்கி, ஓடி வந்து  அந்த வட்டத்துக்கு வந்து விடுவோம். இப்படி வானர படையாக விளையாடியவர்களுக்கு கிரிக்கெட் பெரிய விஷயம் அல்லவா???

அந்த கிளவுஸ், அம்பயர், என்று அந்த விளையாட்டின் மீது ஒரு இது எங்களுக்கு வர ஆரம்பித்த நேரம் அது.


அப்போது இருந்த பெரிய அண்ணன்கள் எல்லோரும் காசு போட்டு பேட் வாங்க முடிவு செய்தார்கள். நாங்களும் அதில் சேர்ந்து கொள்ள வாய்ப்பு கொடுத்தார்கள்... எல்லாரும் பேட் பிடித்தால் பால் பொறுக்கி போட ஆள் வேண்டும் அல்லவா? அதனால் எங்களையும் சேர்த்துக்கொண்டார்கள். கோட்டி போல் ஒரு திசையில் கிரிக்கெட் பந்தை கணிக்க முடியாது.. சகல திசைகளிலும் பறக்கும் அதனால் எங்களை  சேர்த்துக்கொள்வதை தவிர வேறு வழியில்லை... சரி அதுக்கு முன் எங்கள் அணிக்கு பேர் வைக்க முடிவு செய்தோம்...


பேர் கண்டிப்பாக வைக்க வேண்டுமா? என்று கேட்க்கும் போது பெட் மேச் விளையாட பேர் அவசியம் என்றார்கள்... பெரிய கோவில் தெஐ பசங்க..பேட்டை பசங்க எல்லாரும் பேரோடு விளையாடுறாங்க... அதனால் பேர் முக்கியம் என்றார்கள்....மின்னல் அணி என்று  பெயர் வைத்தால் என்ன என்று கேட்க??தீவிர பரிசீலனைக்கு பிறகு அந்த பெயரை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள்..

மரவாடி சுவற்றில் மின்னல் அணிவீரர்கள் என்று எல்லோருடைய பெயரையும் எழுதி வைத்தார்கள்...
எல்லோரும் காசு போட்டு பேட், ஸ்டெம்ப் வாங்க முடிவு செய்தோம் முக்கி முனறி 150 ரூபாய் சேர்பதற்குள்  நாக்கு தள்ளிவிட்டது...பத்து, எட்டு ,நான்கு என்று யாரிடம் எவ்வளவு இருந்தாலும் அதனை பேட்வாங்கும் நிதியில் சேர்த்தோம்...மைனர் வீட்டு பாலமுருகனிடம் எப்போதும் காசு விளையாடும்... பேட் நிதி சேர்க்கும் நாளில் அவனிடம் காசு விளையாடவில்லை.. அதனால் 4வது படிக்கும் பாலமுருகன் இரண்டு ரூபாய் கொடுத்தான்.


கிரிக்கெட் பற்றி ஒரு எழவும் எங்களுக்கு தெரியாது.. ஆனால் எங்களை கபில்,கவாஸ்கர்,ரவிசாஸ்திரியாக நினைத்துக்கொண்டோம்...
பாண்டிக்கு போய் பேட் வாங்கி வந்தோம்.... அந்த பேட் ரொம்ப அழகாக  இருந்தது.. நல்ல வழ வழப்பு....


ஸ்டெம்ப் நட்டோம் விளையாட ஆரம்பிக்கும் போது எல்லாம் தெரிந்த ஒரு ஏகாம்பரம் வந்தது.. ஆயில் பேட் என்றால் அதில் ஆயில் நன்றாக ஊறினால்தான் நெடுநாள் உழைக்கும் என்று  சொல்ல அவன் சொல்லுக்கு ஆட்டுமந்தை போல தலையாட்டினோம்....


பக்கத்து கடை வண்டி மெக்கானிக்கிடம்  பைக்கில் யூஸ் செய்த கருப்பு ஆயிலை ஒரு பாட்டிலில் ஊற்றி எடுத்து வந்து புது பேட்டின் மீது ஊற்றினோம்...
ஒரு படத்தில் சீட்டு விளையாடும் இடத்தில் வடிவேலு எல்லாம் தெரிஞ்சது போல சொல்ல, மறு பேச்சு பேசாமல் கார்டுகளை இறக்கி தோற்ப்பார்களே.. அது போல அந்த  எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் அடுத்த ஐடியாவை சொல்லியது அதுதான் எல்லவற்றையும் விட உச்சம்.


இப்படி புது பேட் மேல ஆயில்  ஊற்றினால் எப்படி ஆயில் அதனுள் இறங்கும்... அதனால் ஆணியால் பேட் முழுவதும் குத்தி அதன் பிறகு ஆயில் ஊற்றினால் அந்த பேட் ஆயில் பேட் என்று  சொல்லியது....

ஓத்தா இதான் ஆயில் பேட்டா என்று மின்னல் அணி உற்சாகமாக மாறி பம்பரத்தில் இருந்த ஆணி மற்றும் வீட்டில் இருந்து ஆணி எடுத்து வந்து  பேட்டை மாந்தோப்பில் வைத்து புது பேட்டில் உக்கு மாண்டாவில் மாட்டிய பம்பரம் போல அந்த புது பேட்டை ஆள் ஆளுக்கு நொங்கு எடுத்து மரியாத்தா உக்கிரமாக அம்மை போட்டது போல மாற்றினோம்...


அந்த புது பேட்டை  அணி குத்தி பொத்தலாக பார்க்கும் போதுதான் மின்னல் அணியில் இருந்த உறுப்பினர்கள் அத்தனை பேருக்கு ஒரு விஷயம் உறுத்தியது.. இது போல பேட்டை நாம் எந்த போட்டியிலும் ,டிவியிலும் பார்த்தது இல்லையே என்ற போது அதுக்கு அந்த ஏகாம்பரம், பிளாக் அண்டு ஒயிட் டிவியில் எப்படி கிளினா  தெரியும் என்று பதில் சொல்லியது....

சரி விளையாடலாம் என்று முடிவு எடுத்து டீம் பிரித்தோம்.. ஆணியில் குத்தி சொறிப்பிடிக்க வைத்த ஆயில் பேட்டை வைத்தக்கொண்டு நெய்வேலி காட்டாமணி கழி ஸ்டெம்புக்கு முன் ஸ்டைலாக கொளுத்து ரவி ஸ்டைலாக கைலி கட்டி நின்றதை பார்த்ததும் எல்லோருக்கும் உடனே பவுலிங் மற்றும் பீல்டிங் செய்வதை விட பேட் பிடிக்க ஆசையாக இருந்தது...


ஹரி ஓம் என்று ஒரு ஓவர் எந்த பிரச்சனையும் இல்லாமல் முடிந்தது...இரண்டாம் ஓவர் ஆரம்பிக்கும் போது நாலாம் வகுப்பு படிக்கும் பாலமுருகன் தான் பேட் பிடிக்க வேண்டும் என்று அடம் பிடித்தான்... அது சாத்தியம் இல்லை என்று மின்னல் அணி உறுப்பினர்கள் சொன்னோம்...
அப்பிடின்னா நான் பேட் வாங்க கொடுத்த இரண்டு ரூபாயை கொடு என்று பாலமுருகன் நச்சரிக்க....புது பேட்டில் அடுத்த ஓவரை ஆவலாய் எதிர்பார்த்த கொளுத்து ரவி...

ங்கோத்தா நான் அப்பவே நினைச்சேன்.. இது மாதிரி நடக்கும்னு இதுக்குதான் இந்த பிளகா பசங்களை எல்லாம்  டீம்ல சேர்க்ககூடாதுன்னு”

என்று பேட்டை எடுத்து தரையில் கோபமாக அடித்து விட்டு பந்தை சமாளிக்க மடித்து இருந்த கைலியை கோபமாக இறக்கிவிட்டு நடக்க ஆரம்பித்தான்....
மின்னல் அணியில் கொளுத்து ரவி கோச்சிகிட்டு போனதும்.. சலசலப்பு அடங்கவே இல்லை...
.
ஒரு ஓவருக்கு மேல் விளையாடதா அந்த பேட் ஆணியால் குத்து வாங்கியதோடு நிறுத்திக்கொண்டது.
மின்னல் அணி அப்படியே  மின்னல் போல காணாமல் போனது..
மரவாடி சுவற்றில் எழுதி வைத்த மின்னல் அணி வீரர்கள் பெயர்கள் மட்டும் பல வருடங்களுக்கு பல  நிஜ மின்னல்களை பார்த்தது....


இப்போது எனக்கு இருக்கும்  ஒரே ஆசை.. அந்த ஆணியால் குத்து வாங்கி ஆயில் பேட்டை பார்க்க வேண்டும் என்பதுதான்.


இந்த பதிவு மின்னல் அணியில் ஒரு செயல் வீரர்ஆக இருந்த எனது பால்ய கால நண்பர் திரு லட்சுமிநாரயணன் அவர்களுக்கு சமர்பணம்.



2011  ஆம் ஆண்டு  கிரிக்கெட் உலக கோப்பை நடந்த போது  எ ங்கள்  ஊர் கிரிக்கெட் அணியான மின்னல் அணி பற்றி நான் எழுதிய பதிவு இது... அந்த அளவுக்கு  கிரிக்கெட்...83 வலக கோப்பையை வென்ற பிறகு இந்த ஆட்டம் பட்டி தொட்டி எங்கும்  பிரபலமானாலும் இந்த ஆட்டத்தை பிரபல படுத்தியதும் இந்த ஆட்டத்துக்கு பிரிட்டிஷ்க்கு பிறகு இந்த ஆட்டத்துக்கு அதிகம்  முக்கியத்துவம் கொடுத்தவர்கள் மேல்தட்டு மக்கள்தான்...

 முக்கியமாக பிராமணர்கள்.. அதிக அளவில்  இந்த   ஆட்டத்துக்கு முக்கியத்துவம்  கொடுக்க... அதனையே அவர்கள் நடத்திய ஊடகங்கள் பிரதிபலிக்க கிரிக்கெட் இந்தியா எங்கும்  பிரபலமாகியது...

தமிழில் அன்றில் இருந்து இன்று வரை வாலிபால், பேஸ்கட் பால் செய்திகளை தொடர்ந்து பதிந்து வருவது  தந்திப்பேப்பர் மட்டுமே.,  பொதுவாய் கிரிக்கெட் தவிர வேறு  எழவும் விளையாட்டு இல்லை என்று நினைக்கும் பொது மன நிலையை உலுக்க  இந்த சப்ஜெக்ட்டை எடுத்துக்கொண்டதற்காகவே அறிவழகனுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்ஸ்.
சுத்தமாக அக்மார்க் தமிழ் தலைப்புகளில்  தமிழ் திரைப்படங்களில்  தலைப்புகள்  வைத்து வெளிவந்துக்கொண்டு இருப்பது  மிக்க  மகிழ்ச்சி  அளிக்கின்றது.

 திருச்சியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவன் நகுல் பேஸ்கட் பால்  விபத்தில் தன்  நண்பனை இழந்து இனி  விளையாடுவதில்லை என்று உறுதி எடுத்து சென்னையில் வந்து  நேஷனல் கல்லூரியில் இரண்டாம்  ஆண்டு  சேர்கின்றான்... அங்கே கிரிக்கெட் டீமுக்கும் இவன் நண்பர்களின் பேஸ்கட் பால் டீமுக்கும் போட்டி வருகின்றது.. யார் ஜெயித்தார்கள் என்பதே படத்தின் கதை.

  பாய்ஸ் படத்தில்  மணிகண்டன் என்ற நபரை தவிர எல்லோரும் சோபித்து  விட்டார்கள்... அவர் கூட இரண்டு படங்களில் நடித்தார்.... ஒரு பெண்ணோடு கவர்ச்சியான காட்சிகளில் பின்னி பெடுலெடுத்தார்.. ஆனால் அவரை இப்போது காணவில்லை...   சித்தார்த்  மற்றும் பரத் நல்ல நடிகர்கள்  என்று பெயர் எடுத்து விட்டார்கள்... தமன் பெரிய இசையமைப்பாளராக மாறி கலக்கி வருகின்றார்... நகுல் ரெண்டும் கெட்டானாக இருந்து வருகின்றார்.... நிறைய பேச்சும் அலட்டலும் சினிமாவில் தேவையில்லாத எதிரிகளை  உருவாக்கிவிடும்... ஆனால்  ஒரு சில  படங்களில்  பிரஸ் மீட்டில் அதிகம் பேசி அலட்டி இருப்பதை நண்பர்கள் சொல்லி இருக்கின்றார்கள்... ஆனால்  அந்த மெசூரிட்டி இப்போது வந்து இருக்கும் என்று நம்புகின்றேன்..

நகுல் கதைக்கு அற்புதமாக பொருந்துகின்றார்...  குளோசப்புகளில் சிகரேட் குடித்து உதட்டை சூடாக்கி ரஜினி லெவலுக்கு போய்க்கொண்டு இருக்கின்றார் என்று நினைக்கின்றேன்.... நுரையிரல் பஞ்சு  போன்றது என்பதை அவருக்கு யாராவது நலம் விரும்பிகள்  விளக்கினால் நலம்

  நாயகியை விட வயிற்று வலியில் துடிக்கும்  நகுலின் பெண் தோழியை நாயகியாக்கி இருக்கலாம்... மிருதுளா நிறைய இடங்களில் தடுமாறுகின்றார். இருந்தாலும்   பாறை பக்கம் இருக்கும் கடலில்  நனைந்து பார்வையாளனை ரிலாக்ஸ் செய்கின்றார்.

ஜெகனின் சில  மொக்கை ஜோக்குகளுக்கு தியேட்டர் அதிருகின்றது.... நண்பர்களிடம் பேசாமல், காபிக்கு பொகாமல் வேலையே கதி என்று  கம்யூட்டர் திரையை 12 மணி நேரத்துக்கு பார்த்துக்கொண்டு இருந்தால்  அப்படித்தான் மொக்கை ஜோக்குக்கெல்லாம் சிரிப்பார்கள் போல.... ரைட்.
ஜெயப்பிரகாஷ்  நாளுக்கு  நாள்  அசத்துகின்றார்....


 கமலா தியேட்டர் சிதம்பரம் அவர்களின் மகன் இந்த படத்தில் நடித்து இருக்கின்றார்... நன்றாகவே நடித்து இருக்கின்றார்... தியேட்டரில் ஒரு ஷாட்டும் எடுத்து இருக்கின்றார்கள்.. பின்னனி கர்ணன் பட பேக்ரவுண்ட் டயலாக் டச்சிங்.


 பேஸ்கட் பால்  தொடமாட்டேன் என்று இருப்பவனை டெம்ட் ஏற்படுத்துவது போல அவன்  கண்ணில் பால் படும் இடங்கள் தேர்ந்த ரசனை... முக்கியமாக  விடுதியில் பேக் கட்டிலக்கு  அடியில்  வைக்கும் காட்சியில் முக்கி முக்கி தள்ள பேஸ்கட் பால்  வெளிவரும் காட்சி அருமை....



 சந்தானபாரதி விளையாட்டு துறை அமைச்சர் போர்டு  போட்டுக்கொண்டு எனக்கு தெரிந்த  விளையாட்டு எல்லாம் என்று சொல்லும் போது  ஒரு பெண் பிரேமில் கிராஸ் ஆகும் போது  ஸ்டே    கொடுத்து பேசுவது... 10 நம்பர் சச்சின் பனியன் அணிந்துக்கொண்டு டீ கொடுப்பது என்று டச்சிங் சீன்களை தூவி இருக்கின்றார்... எந்த அளவுக்கு கிரிக்கெட் மற்றும் சச்சின் டீக்கடை பையன் வரை வியாப்பித்து இருக்கும் காட்சி அது............ கிளைமாக்சில் வியர்வையோடு டீம் ஸ்பிரிட் செய்ய தெத்தி தெத்தி பேசும் காட்சி எரிச்சலை ஏற்ப்படத்துகின்றது.


 படம் முடியும் போது  பிளாக் அண்டு ஒயிட்டில் விளையாட்டுக்கு சாதித்தவர்கள்  போட்டோக்களை பிளாக் அண்டு ஒயிட்டில்  வருகின்றது.... தல அஜித்துக்கு கார் ரேஸ் வீரர் தகுதியில் போட்டோவில் வர...  தியேட்டரில் விசில் காது கிழகின்றது... அதே போல சச்சின் மற்றம் தன்ராஜ் பிள்ளைக்கு விசில் அடித்தார்கள்.. ஆனால்  சானியா மிர்சா போட்டோ வரும் போது ஒரு விசிலும் இல்லை.... என்ன காரணம் என்று விளங்கவில்லை...


ஒளிப்பதிவும்  பின்னனி இசையும் படத்துக்கு  பெரிய பலம்... முக்கியமாக  முதல் கல்லூரி பாடலில் லைட்டிங் கிளாஸ்... கிரவுண்ட் இல்லை என்றதும் பால் பிராக்டிஸ் செய்ய  வராண்டா மற்றும்  கேண்டின் பாத்ரூம் என்று பயணிக்கும் கேமரா ஷாட்ஸ் மற்றும் பின்னனி இசை அருமை.


===========
 படத்தின் டிரைலர்..


=============
படக்குழுவினர் விபரம்


Directed by Arivazhagan Venkatachalam
Produced by Aascar Ravichandran
Written by Arivazhagan Venkatachalam
Screenplay by Arivazhagan Venkatachalam
Story by Arivazhagan Venkatachalam
Starring Nakul
Mrudhula Basker
Atul Kulkarni
Music by S. Thaman
Cinematography Bhaskaran
Editing by Sabu Joseph VJ
Studio Aascar Films
Release dates February 28, 2014
Country India
Language Tamil


===============
பைனல் கிக்...
ஈரம் படம் மூலம் தமிழ் சினிமாவின் கவனம் ஈர்த்த இயக்குனர் அறிவழகன்  இயக்கத்தில் வெளிவரும் இரண்டாம் படம்.. சக்தே இந்தியா இந்த படத்துக்கு நிறைய இடங்களில் இன்ஸ்பயர் ஆகி இருக்கின்றது...  நண்பர் இறந்து போவது  அதனால் பால் தொடாமல் இருக்கும் காரணம் ரொம்ப சப்பையாக இருக்கின்றது.. இன்னும் அந்த அழமான காரணத்துக்கு மட்டும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்க வேண்டும்... சப்பையான காரணமாக இருப்பதால் பதினைந்து நிமிஷத்துக்கு மேல் படத்தில் ஓட்டாமல்  பால் கட்டிலுக்கு அடியில்  இருந்து வெளி வரும் காட்சியில் தான்  நாம்  படத்தோடு நெருக்கமாகின்றோம்...
அதே போல நாயகி இந்த பாலை  கட்டிபுடிச்சிக்கிட்டுதான் இப்ப எல்லாம் தூங்கறேன்னு சொல்லும் காட் சி மிகவும்  அழுத்தமான காட்சி.. ஆனால் அதை சொன்ன இடம் மற்றும் அதுக்கான லீட் சீன்கள் அருமையாக இருந்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்.... மொத்தத்தில் இந்த திரைப்படம் அரைத்த மாவையே அரைக்காமல்  வந்து இருக்கும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

========
படத்தோட ரேட்டிங்
பத்துக்கு ஆறரை 

==========
பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ 

நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

9 comments:

  1. நன்றி! நாங்களும் எங்க ஊர்ல பேட் வாங்கி ஆயில் ஊற்றி இருக்கிறோம்! விவரம் புரியாத வயது அது!

    ReplyDelete
  2. துலுக்கர்கள் என்கின்ற வார்த்தைக்கு பதில் இஸ்லாமியர்கள் என்ற வார்த்தையை உபயோகிக்கவும்........தயவுசெய்து.........

    ReplyDelete
  3. Jackie sir enga oorla kuda kabadi veladum pothu nenjila adi pattu friend sethuttan endru 3 vaeudama kabadi vilayaduvathillai. Ippadathil sonna karanathai etru kollalam. Ithu unmai ipothulam vollyball than vilaiyaduvargal

    ReplyDelete
  4. விமர்சனம் அருமை.
    உங்களை நான் மிகவும் மதிக்கிறேன். நீங்கள் துலுக்கர்கள் சம்மதி என்று எழுதி இருப்பது. மிகவும் அபத்தம். முஸ்லிம்கள சமாதி என்று எழுதியிருக்கலாம்.

    ReplyDelete
  5. அன்பின் சையத்... ஊரில் அந்த இடத்தை தொன்று தொட்டு எல்லோரும் அப்படித்தான் அழைப்பார்கள் அதனால் பேச்சு வழக்கு புளோவில் எழுதியது... கண்டிப்பாக இனி எழுதும் போது...

    ReplyDelete
  6. தல, நீங்க எப்ப ஒரு படத்த கொடுக்கப்போறீங்க?. ரொம்ப நாளாய் கேக்கனும்னு நெனச்சிட்டிருந்தேன். ஏதேனும் முயற்சி செய்துட்டிருக்கீங்களா.

    ReplyDelete
  7. The cricket story was a nostalgic story of all...again with Jackie ( Dhanapalan ) touch

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner