நண்பர் திருச்சி நல்லதம்பி எனக்கு அனுப்பிய கடிதம்..
பொதுவாக இது போன்ற கடிதங்களை ஊக்குவிப்பது இல்லை என்றாலும் சாத்திய கூறுகளை ஆராய்ந்த பின்பே பதிவிடுகின்றேன். உதவி செய்ய விரும்பும் நண்பர்கள் கடிதத்தை படித்து பின் உதவிட கேட்டுக்கொள்கின்றேன்.
================
அன்பின் ஜாக்கி..
நலம். நலமறிய ஆவல்….
கடந்த 03.03.2014 அன்று அம்மா, அக்கா வீட்டிலிருந்து வெளியே வரும்போது கீழே விழுந்து Pelvi Bone Fracture ஆகி அவர்களை தற்சமயம் திருச்சி கே.எம்.சி. (K.M.C – Multispecialty) மருத்துவமனையில் வைத்து சிகிச்சை பார்த்து வருகிறேன். நிற்க.
அம்மா வார்டிற்க்கு வெளியே ஒரு சிறுவன் கடும் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளான். அவன் விபரம்.
*---------------------------------------------------------------------------------------------------------------------------*
பெயர் : ரா.சஞ்சய். வயது : 8 படிக்கும் வகுப்பு : 3 ஆம் வகுப்பு
பள்ளி : ஆதித்யா பிர்லா பொதுப்பள்ளி, ரெட்டிபாளையம்.
தகப்பனார் பெயர் : திரு.ராமசாமி,
தாயார் பெயர் : திருமதி. நித்யகல்யாணி.
இவர்கள் அரியலூர் மாவட்டம், ரெட்டிபாளையம் ஊரில் வசிக்கின்றார்கள். திரு.ராமசாமி அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்தில் கடைநிலை உழியராக வேலை பார்த்து வருகிறார். திருமதி. நித்யகல்யாணி அவர்கள் தனியார் பள்ளி ஒன்றில் குறைந்த சம்பளத்திற்க்கு ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு இரு ஆண் பிள்ளைகள். மூத்தவன் சந்தோஷ் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறான். இளையவன் தான் இந்த சஞ்சய். கடந்த 20.01.2014 அன்று பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த சஞ்சய் தனது ஆசிரியர் பணித்த ப்ரொஜெக்ட் செய்ய பாட்டில் ஒன்றை தேடியுள்ளான். பெற்றோர் வேலைக்கு சென்றிருந்ததனால் வீட்டில் அண்ணன், தம்பி இருவர் தவிர வேறு யாரும் இல்லை. அண்ணன் இன்னொரு அறையில் படித்து கொண்டு இருந்தான். சஞ்சய்க்கு கொடுக்கப்பட்ட ப்ரொஜெக்ட், பாட்டிலில் விதை போட்டு அது செடியாய் முளைப்பதை தினமும் கண்காணிக்க வேண்டும். பாட்டில் தேடி தேடி, ஒரு வழியாக கண்டு பிடித்தான் சஞ்சய், ஆனால் அது பழைய மண்ணெண்ய் ஊற்றி வைத்த பிளாஸ்டிக் பாட்டில், அதை ப்ரொஜெக்ட்டின் மேல் இருந்த ஆர்வத்தால் கவனிக்கவில்லை. பாட்டிலின் மேல் பகுதியை நீக்கி கீழ் பாகத்தில் விதை விதைக்க வேண்டும் என்பது சஞ்சயின் நோக்கம். மூடி கழற்றும் போது உள்ளிருந்த (எஞ்சியுருந்த) மண்ணெண்ய் சற்றே தலை, முகம், மற்றும் உடல் முழுதும் ஸ்பிரே ஆகியுள்ளது. அதைப் பற்றி கவலைப்படாமல் தனது ப்ரொஜெக்டில் முழு மூச்சாய் சஞ்சய் இறங்கியுள்ளான். மேல் பகுதி கத்தியில் அறுபடாமல் போகவே, சரி பிளாஸ்டிக் தானே நெருப்பில் காட்டினால் கட் ஆகி விடும் என நினைத்து தீப்பெட்டியை பற்ற வைத்தான் சஞ்சய். சற்றும் எதிர்பாரமல் உடல் முழுதும் தீ பற்றி கொண்டது. சத்தம் கேட்டு வந்த அண்ணன் செய்வதறியாது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்திருக்கிறான். செய்தி கேட்டு வீட்டுக்கு வந்த பெற்றவர்கள் உடனடியாக அரியலூர் மருத்துவமனையில் முதல் சிகிச்சைக்காக சேர்துள்ளார்கள். பின்னர் திருச்சி கே.எம்.சி மருத்துவமனையில் அன்றே (20.01.2014) உள் நோயாளியாய் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
மருத்துவர்கள் பரிசோதித்து அளித்த விவரம்.
தீக்காயத்தின் அளவு : 50% - 4th Degree
தலை. முகம், கை, கால் என எல்லா இடங்களிலும் தோல் முழுதும் பொசுங்கியதால், அதற்கு உடனடியாக Skin Crafting செய்ய வேண்டும் என்று சஞ்சயின் அப்பா தொடையில் இருந்து Skin எடுத்து patch செய்தனர். அதற்கு பின் சஞ்சயின் தோல் எடுத்து Plastic Surgery நடந்துள்ளது. இன்னும் முழுதாக குணமாக ஒரு வருடம் வரை ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மருத்துவமனை வார்டின் உள்ளே சென்று பேசும் போது, அமைதியாக இருந்தவன், திடீரென்று, ஒரு விசும்பலுடன் அழுததது என் இதயத்தை என்னவோ செய்ததது.
தலை, கை, கால் என எல்லா இடங்களிலும், காயத்தினால் புண் ஆகி இருப்பதானால்..மனதாலும், உடலாலும் மிகவும் சோர்ந்து காணப்படுகிறான் சஞ்சய். தன் மேல் உள்ள காயத்தினால் வரும் நாற்றத்தினால், சாப்பாடு வேண்டாம், வீட்டிற்கு போகலாம் என்று சொல்லும் அந்த சின்னம் சிறு உள்ளத்திற்கு அந்த கடவுளும், நாமும் தான் ஒரே நம்பிக்கை.
அவனது எதிர்காலம் நம் கைகளில்…
இதுவரை 4 லட்சம் வரை கடன் வாங்கி மருத்துவ செலவுகளை பார்துள்ளார்கள். திரு.ராமசாமியின் Office மூலம் இரண்டு லட்சம் மட்டுமே கிடைத்துள்ளது. மீதமுள்ள பணம் மற்றும் அவன் further treatment (Plastic Surgery) க்கு – இன்னும் 9 லட்சம் வரை தேவைப்படுகிறது.
உதவி செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய விபரம்.
திரு.ராமசாமியின் அலைபேசி : +91 89034 17291
A/c. No : 32240362390 – State Bank Of India. Reddipalayam branch, Ariyalur.
IFSC Code:- SBIN0012792
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

பகிர்ந்ததற்கு நன்றி. சஞ்சய்க்கு வலி குறையவும் நலம் பெறவும் பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteசின்னஞ்சிறு குழந்தை.... இந்த குழந்தை பூரண நலம் பெற ஆண்டவன் அருள் புரியட்டும்.
ReplyDeleteதற்சமயம் என்னால் ஒரு சிறு தொகை மட்டுமே அனுப்ப முடிந்தது. எனது பிரார்த்தனைகள்.

ReplyDelete