MOEBIUS-2013—18+/உலகசினிமா/ கொரியா/ கிம் கி டுக்


கொரியாவில் இந்த படத்தை  முற்றிலும் தடை செய்த விட்டார்கள்...
காரணம்  அதீத வன்முறை மற்றும் செக்ஸ் காட்சிகள் இருப்பதால்....

கடந்த வருடம்  செம்படம்பர் மாதம் இந்த திரைப்படம் வெளியானது... உலகம் முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்ப்படுத்தியது...ஸ்பிரிங் பால்   சம்மர் பார்த்தவர்கள் எல்லாம் ஆடி போனார்கள்....  

சரிடா கொரியாவில் மட்டும்தான் தடையா என்றால் இவருடைய  முந்தைய படங்களில் ரெக்கார்டுகளை புரட்டி பார்த்தால் ஏதாவது ஒரு வகையில் எல்லா படத்துக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய  நாடுகளில் பஞ்சாயத்து மற்றும் விவாவதங்கள் நடந்துக்கொண்டுதான் இருக்கும்....

எப்படி இந்த ஆள் இப்படி ஒரு படத்தை யோசித்தான் என்று.... திருவனந்தபுரம் பிலிம் பெஸ்ட்டிவலிலும் இந்த திரைப்படம் அதிர்வலையை ஏற்ப்படுத்தியது  என்பதில் ஐயம் இல்லை...

இதே படத்தை  இந்தியாவில் இந்தி சினிமாவில் எடுக்கலாம் என்று யோசிப்பார்கள்.. ஆனால் தமிழில் இரண்டு தலைமுறைக்கு வாய்ப்பே இல்லை...

 கிம் கி டுக்...  என்ன சொல்கின்றார் என்றால்...  என்னை தூற்றுங்கள் கொண்டாடுங்கள்.. ஆனால் எதையும் நான் என் தலையில் ஏற்றிக்கொள்ள மாட்மடேன்..நான் என்ன நினைக்கின்றேனோ.... அதை கண்டிப்பாக சொல்லுவேன் என்பதாகத்தான் அவருடைய படங்கள் இருக்கும்....

அதனால்தான் திருவனந்த புரத்தில் நடந்த பிலிம் பெஸ்ட்டிவலுக்கு  கிம் கி டக்  நேரில் வருகை தர சேட்டன்கள் கொண்டாடி தீர்த்து விட்டார்கள்...

(திருவனந்த புரத்தில் சேட்டன்கள் பிடியில் கிம்)


 சரி கதை என்னன்னு பார்த்துடுவோம்..

 அப்பா அம்மா வயதுக்கு வந்த பையன்...


ஒரு சுபயோக சுப தின ராவுல ...அப்பா அதே தெருவுல  பேக்கிரி வச்சி இருக்கற பெண்ணை  கார்ல வச்சி மேட்டர் பண்ணிடறான்... இதை வேவ்வேறு கோணத்துல அம்மா, பையன்   ரெண்டு பேருமே இந்த காட்சியை பார்த்துடறாங்க...


அம்மாகாரிக்கு வீட்டுல நான் இருக்கும் போதே உனக்கு வேற கேட்குதா
...? எல்லாம்  உன்கிட்ட லுல்லா இருக்கற தைரியம்தானேன்னு கோவத்துல  பொங்கறா?
புருஷனை செக்சுகு கூப்பிடற.. அவன் வரலை... சரின்னு பையனை போய் பார்த்தா  அவள் கை அடிச்சிக்கிட்டு மெய்மறந்து கிடைக்கறான்...

பிக்காலி பயலுங்களா-? இந்த சமாசர்ரத்தை வச்சிக்கிட்டுதானே எங்களை பாடாய் படுத்துறிங்கன்னு... காய்கறி நறுக்க கத்தி எடுத்துக்கிட்டு போய்  புருசன் லுல்லுவை கட் பண்ணி அவனை ஜிரோவாக்க போறா.... ஆனா அவன் சுதாரிச்சிக்கிட்டு தள்ளி விட்டுடறான்... அப்புறம்  ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார்  கோவில் ஆண்டிதான்.... டார்கெட் பையன்...  அங்க போய் அவனது ஆண் குறியை அறுத்த தனியா எடுக்க... பையன் அலற....


அப்பன் ஓடி வந்து பார்த்தா... அம்மாக்காரி  பையன் ஆண் குறியை கையில வச்சிக்கிட்டு இருக்கா... புடுங்க ஓடினா.. டாமல்ன்னு வாயில போட்டு மென்னுடற...

 சார்...  இதெல்லாம் நம்ம ஊர்ல சாத்தியமே இல்லையே?-...

ஏன் இல்லை...? இல்லை ஏன் இல்லைங்கறேன்.....

மனைவி மீது சந்தேகம்... இரண்டு குழந்தைகளை வெட்டிக்கொன்ற அப்பன்... கணவன்  மீது சந்தேகம் பிள்ளைகள் மீது அம்மிக்குழவி போட்டு சாகடித்த தாய்ன்னு பேப்பர்ல படிச்சி  இருப்போம்...

 எப்பயுமே  அதீத கோவத்தின் வெளிப்பாட்டினை  நமக்கு மேல இருக்கறவன் கிட்ட காமிக்க முடியலைன்னா என்ன  செய்வோம்... நமக்கு கீழ வேலை பார்க்கறவனை போட்டு காலி பண்ணிடுவோம் இல்லை..

 உதாரணத்துக்கு நீங்க பண்ண புராஜக்டுக்கு ஓத்தமட்டு உங்க பாஸ் விடுறார்ன்னு வச்சிக்கோங்க... நாம என்ன செய்வோம் காது முழுக்க அந்த ஓத்தாமட்டை வாங்கி கிட்டு வந்து அப்படியே நமக்கு கீழ ரிப்போர்ட் பண்ணறவங்க கிட்ட  காப்பி பேஸ்ட் பண்ணுவோம் இ ல்லை... அது போலத்தான்.,.

வீட்லயே திடிர்ன்னு சண்டை வந்தா... நடுவுல குட்டி பசங்க எதாவது கேட்டுச்சின்னா வள்ளுன்னு கடிச்சி வைப்போமே அது போலத்தான்.. இது.. ஆனா இந்த அம்மா  கடிச்சி வைக்கற இடமும் அதை  கரகரன்னு மென்னு தின்னறதும்தான்... 
அதிர்ச்சிக்குள்ளாக்குது...


பொண்டாட்டி மேல உள்ள கோவத்துல  எந்த தப்பும் அறியாத குழந்தைகளை வெட்டி போடறதை  பேப்பர்ல படிக்கறோம்.. ஆனா இது போல  வரும் போது  ரொம்ப அதிர்ச்சிக்குள்ளவது போல  ஆகிடுறோம்..

 பட்.. ஆண்குறி இல்லை என்றால்.. ஆண் என்ற அகம்பாவம் அழிக்கப்பட்டு என்ன விதமான பிரச்சனைகளை இந்த மனித சமுகம் சந்திக்கும் என்பதை  அதன் பிறகு விலாவரியா காட்டுகின்றார்.. கிம்கிடுக். முடிவு என்ன என்பதை வெண்திரையில் காணுங்கள்.

 சரியோ தப்போ... ஏன் எதுக்கு என்ற விவாதங்களை இந்த  திரைப்படம் நிறைய ஏற்ப்படுத்தும்... அதுதான் கிம்மின் நீண்ட நாளைய வெற்றி..

=========
படத்தின் டிரைலர்.


=============
 படக்குழுவினர் விபரம்.


Directed by Kim Ki-duk
Written by Kim Ki-duk
Starring Jo Jae-hyun
Release dates
3 September 2013 (Venice)
5 September 2013 (South Korea)
Running time 90 minutes
Country South Korea
Language Korean



=========
பைனல்கிக்..

 கண்டிப்பாக வயதுக்கு  வந்தோருக்கான திரைப்படம் இது... பார்க்க வேண்டிய திரைப்படம்தான்... பார்த்தே தீர வேண்டும் என்று சொல்லமாட்டேன்... நம்ம   சென்னை பிலிம் பெஸ்ட்டிவலில் இந்த படம் போட்டார்களா? இல்லையா என்று தெரியவில்லை...  அப்படி இந்த படம் சென்னையில் திரையிட்டால் என்ன  மாதிரியான அதிர்வலையை  ஏற்ப்படுத்தியது போன்ற விஷயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்... முதல் முதலாக பேஸ்புக்கில் இந்த படத்தை பார்த்து பகிர்ந்து கொண்ட இயக்குனர் வசந்தபாலனுக்கு நன்றி. முக்கியமாக படத்தில் ஒரே ஒரு டயலாக் கூட இல்லை....


===========
 படத்தோட ரேட்டிங்


 பத்துக்கு ஆறு.
========

பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.



நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner