ARTIST-2013/உலகசினிமா/மலையாளம்/சுயநல ஓவியன்உறவுகளில் எந்த உறவு புனிதமானது என்று யாராவது  சொல்ல முடியுமா-?
எந்த உறவும் புனிதம் என்று தலைக்கு மேல் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாட முடியாது...சூழ்நிலைகள்தான்  எல்லாவற்றையும் தீர்மாணிக்கின்றன என்பததான்  நிதர்சன உண்மை.

காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டு கடைசி வரை வாழ முடியாத பல ஜோடிகளை நாம பார்த்து இருக்கோம்.

 பேப்பர்ல படிச்சி இருப்போம் காதலன் வீட்டு முன்  காதலி அல்லது கர்பவதி காதலி தர்ணா... என்று படித்து இருப்போம்... அப்படி தர்ணா இருந்து  அவனை  திரும்பவும் கல்யாணம் செய்துக்கொண்டவனிடம் எப்படி மனம் விட்டு பேசி சிரிக்க முடியும்?
 எப்படி அவனை  காதலுடன் பார்க்க  முடியும்... ச்சி தூ என்று தன்னை  ஒதுக்கியவனை எப்படி சேர்த்துக்கொள்ள  முடியும்....  ---??? ஆனால்  உலகம் பெரும்பாலான நேரங்களில்  அப்படித்தான் இருக்கின்றது...

 ச்சீ என்று ஒரு ஆண் சென்றாலோ... அல்லது பெண் சென்றாலோ? கெஞ்சிக்கொண்டு  பின்னே செல்வது  நடந்துக்கொண்டுதான் உள்ளது....  ஒரு கட்டத்துக்கு மேல் அது ஏற்ப்புடையது  அல்ல என்பது என் கருத்து.....


விதி படத்துல சொல்லறது போல ஆண்களில் எல்லாரும் யோக்கியபுருஷர்கள் அல்ல...  சின்சியராக காதலித்து விட்டு, வீட்டில் பிரச்சனை  அதனால் வேறு கல்யாணம் செய்துக்கொண்டேன் என்று எத்தனை  ஆண்கள் சொல்லி இருக்கின்றர்கள்...  அப்படி  பிரிந்த அத்தனை   பெண்களும் போராட முற்பட்டால்    தெரு தெருவாக பெண்கள்  போராட்டதில்  நிற்க  வேண்டியதுதான்...

 அன்பாய் பழகி விட்டு, உயிருக்கு உயிராய் பழகிவிட்டு, உடல் ரீதியாகவும் பழகிவிட்டு  ஒரு ஆண் தனக்கு  பிடிக்கவில்லை என்றாலோ.... ? அல்லது பெண் பிடிக்க வில்லை  என்றாலோ... திரும்புவும்  எனக்க வாழ்க்கை கொடு என்று மன்றாடி  வாழும் அடிமை வாழ்க்கையில்  எனக்கு உடன் பாடு இல்லை.... முடிந்த வரை சேர்ந்து வாழ முயற்சிப்போம் ஒரு கட்டத்தில்  எல்லை மீறி   போகும் போது நாம் அதில் இருந்து விடுவித்துக்கொள்வதுதான்  சிறந்த வழி.

 தம்பதிகளில் இரண்டு  பேரில் ஏதோ ஒரு  பிரச்சனையில் மனக்சப்பு என்று  வைத்துக்கொள்வோம்.... முடிந்தவரை அந்த பிரச்சனையை இரண்டு பேரும் சேர்ந்து சரி செய்ய இரண்டு பேருமே முனைய  வேண்டும்... அப்படி முடியவில்லை என்றால்  பிரிந்து விடுவது உத்தமம்.

உதாரணத்துக்கு பிரியதர்ஷன் லிசி தம்பதிகள் 25 வருடத்துக்கு  பிறகு பிரிய போகின்றார்கள் என்று செய்தி வந்தது.. சில  நாட்கள் கழித்து நாங்கள் பிரியவில்லை ... பிரச்சனையை பேசிதீர்த்துக்கொண்டோம் என்ற அறிக்கை விட்டார்கள்...
  கமல், சரிகா ரெண்டு பேரும் இப்போது பிரிந்துதான் வாழ்கின்றார்கள்... ஆனால் ஒருவரை பற்றி  ஒருவர் யாரிடமும் புலம்பவில்லை....  என் வாழ்க்கையை கெடுத்து  விட்டான் என்று அலறவில்லை....

விட்டுக்கொடுத்து வாழ்வது ஒரு வகை... கடைசி வரை விட்டுக்கொடுக்க முடியாமல் வாழ முடியாத சூழல் வரும் போது எத்தனை  காதலாக இருந்தாலும் பிரிந்து செல்வதே உத்தமம்  என்பதுதான் படத்தின் ஒன்லைன்...
ஒரு தலைக்காதலாக ஒருவளை காதலித்து விட்டு அவள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக கழுத்தை அறுத்து சாவடித்து விட்டு செல்வத எந்த வகையில் ஏற்ப்புடையது...? பிடிக்க வில்லை என்றால் பிரிந்து செல்லல் உத்தமம்.

பஹத் பாசில் ஒரு ஓவியக்கல்லூரியில் படிக்கும் மாணவன்  பஹத் பாசில்( மைக்கேல்) உடன் படிக்கின்றாள் காயத்திரி... இரண்டு பேருக்கும்  வெவ்வேறு விதமான எதிர்கால திட்டங்கள் என்றாலும் மைக்கேலின் ஓவியத்தின் மீது.. அவன் ஓவியத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மீதும் காதல் கொள்கின்றாள்..


மைக்கேலுக்கு தெரிந்தது ரசிப்பது , வாழ்வது, சுவாசிப்பது , ஒன்னுக்கு இருப்பது, பேலுவது எல்லாம் ஓவியமே... பாத்ரூமில் தண்ணி தெளித்து அதில் மார்டன் ஆர்ட் ஏதாவது  தெரிகின்றதா? என்று பார்க்கும் வெறித்தனமான  கலைஞன்... யாருக்ககாகவும் தன் சுதந்திரத்தை அடகு வைக்காதவன்... அவன்  வாழ்க்கையை அவன் வாழும் ரகம்  கூட சேர்ந்து வாழமுயற்சித்தால்.. நான்  உன்னை ஒன்றும் அழைக்கவில்லையே என்று சொல்லும் ரகம்... குழந்தை, பெண், காமம் எந்த சென்டிமென்டும் அவனுக்கு ஏற்ப்புடையதல்ல...

காமம் பிடிக்கும் ஆனால் அதுக்காக வாழ்நாள் புரா அந்த பெண்ணுக்காக கட்டுப்பட்டு கிடக்க அவன் மனம் ஒப்பாது... அவனின் அந்த ஆட்டிடுயட்டுக்காகவே அவனை விரும்புகின்றாள் காயத்திரி.

எதிர்பாராத விதமாக  விபத்தில் கண் இழக்கின்றான்... மைக்கேல்...  ஆனாலும் அவன்  அப்படியேத்தான் இருக்கின்றான்...

அவனுக்ககா காய்த்ரி உடல் பொருள் ஆவி  அத்தைனையும் விட்டுக்கொடுக்கின்றாள்... ஆனால் அவன்  நிலைபாட்டில் மாற்றம் மின்றி இருக்கின்றான்.. இரண்டு பேரும் ஒரு புள்ளியில் இணைந்தார்களா இல்லையா என்பதே கதை.
மைக்கேலாக பஹத் வாழ்ந்திருக்கின்றார்... மனிதர் படத்துக்கு படம் மெருகு ஏறி வருகின்றார்...

காயத்திரியாக அன் அகஸ்டின்..  மலையாள நடிகர் அகஸ்டின் மகள்... கேமராமேன் ஜோமன் ஜானின் மனைவி...  மலையாளத்தில் தட்டத்தின் மறையத்து,  சாப்பா கிருஷ்  தமிழில் பிரம்மன் போன்றவை இவரின் ஒளிஓவியங்களில் உருவானவையே.
 காயத்திரி பாத்திரமாகவே வாழ்ந்து இருக்கின்றார்... இந்த படத்தில்  பஹத்தை விட இவர் நடிப்பில் எக்ஸ்பிரஷனில் ஓவர்  டேக் செய்து விடுகின்றார்... சான்சே இல்லை....
மிக அழகான  கண்கள்.. சற்று பூசியது போன்ற உடம்பு....திரிஷா  நடப்பது போது அக்ளி  வாக்கிங்...

எனக்கு தெரிந்த இந்த  படத்தை தூக்கி நிறுத்துவது  அன் தான்.... ரொம்ப  இயல்பான  நடிப்பு.

 ஆர்ட்டிஸ்ட் படம்  நடித்து முடிந்துக்கொடுத்து விட்டு  இவரும் கேமராமேனும் திருமணம் செய்துக்கொண்டார்கள்.


ஓவியக்கலை சம்பந்தபட்ட திரைப்படம் என்பதால் ஒவ்வோரு பிரேம்களிலும் ஒரு காதலும் கவித்துவமும்  தெரிகின்றது.

 உறவு சிக்கல்களை இந்த படம் கலை போர்வையில்  பேச வைத்து இருக்கின்றார்  இயக்குனர்  Shyamaprasad .. வாழ்த்துக்கள்  Shyamaprasad

  டிரிம்ஸ் இன் பர்ஷியன் புளு என்ற நாவலின் திரைவடிவம்தான் இந்த திரைப்படம்....

==========
 படத்தின் டிரைலர்..

===
படக்குழுவினர் விபரம்Directed by Shyamaprasad
Produced by M. Mani
Screenplay by Shyamaprasad
Based on Dreams In Prussian Blue by Paritosh Uttam
Starring
Fahadh Faasil
Ann Augustine
Sreeram Ramachandran
Sidhartha Siva
Srinda Ashab
Music by Bijibal
Editing by Vinod Sukumaran
Studio Sunitha Productions
Distributed by Sunitha Productions
Release dates August 30, 2013
Country India
Language Malayalam

===
 பைனல் கிக்
இந்த படத்தின் மொத்தக்காட்சியையும் தூக்கி நிறுத்துவது  அந்த கிளைமாக்ஸ் சீனும்... அங்கே  காயத்திரி குரலில் வாய்ஸ் ஓவரில் வரும் டயலாக்குகள் இருக்கின்றதே... அதுதான் வாழ்க்கை பாடம் ... ஏதார்த்தம்... படம் என்னடா அப்படி முடியுது... என்று  நினைத்தாலும்   எந்த நாலு டயலாக் மொத்த படத்தையும் தூக்கி  நிறுத்திடறது... சோ சினிமா ரசிகர்கள்... உண்மை காதலர்கள், கணவன் மனைவிகள் இந்த படத்தை அவசியம் பார்க்க வேண்டுமாய்  கேட்டுகொள்கின்றேன்.
======
 படத்தோட ரேட்டிங்.

பத்தக்கு எழு.

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

6 comments:

 1. WATCHED IT , SUPERB ACTING BY ANN, I LOVE HER, AS USUAL FAHAD CLASS ACTING. SECOND HALF ANN IS EXTORDINARY PERFORMANCE.

  ReplyDelete
 2. Bahad Fazil improves day by day, film by film.. He showed that he is one of the hero, who respects story line..

  ReplyDelete
 3. ஒரு மாதத்துக்கும் முன் பார்த்தது , ஒரு நல்ல ஓவியம் போல்
  அழகான திரைப்படம் .

  ரசனையான விமர்சனம்

  ReplyDelete
 4. ஒரு மாதத்துக்கும் முன் பார்த்தது , ஒரு நல்ல ஓவியம் போல்
  அழகான திரைப்படம் .

  ரசனையான விமர்சனம்

  ReplyDelete
 5. நானும் இந்தப் படத்தைப் பார்த்தேன் ஜாக்கி. எனக்கு என்னவோ அவனுங்க நம்ம மயக்கம் என்ன திரைப்படத்தை லேசா மாத்தி இந்தப் படத்தை எடுத்த மாதிரி தோணுது.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner