உணர்வு பூர்வமா எழுதறவனுக்கு
ஒழுங்கா படம் எடுக்க தெரியாது...
படம் எடுக்கத்தெரிந்தவனுக்கு உணர்வுபூர்வமா எழுத தெரியாது....
இதுல மூனாவது ஒரு வகை ஒன்னு இருக்கு... எனக்கு மட்டும்தான் சினிமா தெரியும்.. மத்த
எவனுக்கும் எதுவும் தெரியாதுன்னு தனக்குதானே நினைச்சிக்கற அட்ராசிட்டி கூட்டம் ஒன்னு
இருக்கு....
உணர்வு பூர்வமா எழுதறதும்,
அந்த உணர்வு கெடாம படமா எடுக்கறது என்பது கத்தி மேல நடக்கற விஷயம்தான்... அப்படி லாவகமா
நடக்கறது என்பது ஒரு சிலருக்கே அமையும்....
வட்டியும் முதலும் வாசிக்கும்
போது, இவ்வளவு உணர்வு பூர்வமா இந்த ஆளு எழுதறானே...? இதை அப்படியே செல்லுலாய்டில் சிறை
பிடிச்சி அடைக்காக்க இந்த ஆளால முடியுமான்னு? யோசிச்சி இருக்கேன்...
பட் குக்கூ படத்தின் டிரைலர்
பார்க்கும் போது... அந்த கலை ராஜூ முருகனுக்கு கைவரபெற்று இருக்கின்றது என்பதை உணர
முடிகின்றது.. டிரைலர் முடியும் போது அந்த குச்சியால் தட்டும் சத்தம் என்னவோ செய்கின்றது
ராஜூ முருகன்.....
படத்தின் கிளைமாக்சில்
சோகத்தை பிழிய விட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ள முடிகின்றது.. காரணம் ஒன்றரை நிமிடத்தில்
அந்த மாற்று திறனாளிகள் இரண்டு பேருமே நம்மோடு அதற்குள் வாழ்ந்து விட்டுருக்கின்றார்கள்...
கடந்த காலத்தில் கஷ்டத்தை
ருசித்த ராஜூ முருகனும் இந்த குக்கூ திரைப்படம் மூலம் நல்பெயரும் புகழும் கிடைக்கப்பெற
எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டிக்கொள்கின்றேன். வாழ்த்துகள் Raju Murugan...
முத முறையா குக்கூ டிரைலர்
பார்த்து முடிச்சதும் சர சரன்னு மனசுல என்ன எனக்கு தொணுச்சோ... அதை கர கரன்னு எழுதி
பேஸ்புக்ல போஸ்ட் செஞ்சேன்... அதன் பிறகு பாடல் வெளியீட்டு விழாவுல கூட வண்ணதாசன் ஐயா அந்த 5ஆம் நம்பர் பிளாட்பாரம் 5ஆம் நம்பர் படிக்கட்டு தட்டும் ஒலியை குறிப்பிட்டு இருந்ததை
பாடல் வெளியீட்டு விழா வீடியோவில் பார்த்தேன்.
பொதுவாக டிக்கெட் புக் பண்ணி எல்லாம் இப்போது படம்
பார்ப்பது என்பது அரிதாகி விட்டது. காரணம் ஆனால் கடலூர் ஓடி நண்பர் முத்து வியாழனன்று போன் செய்தார்.
ஜாக்கி சத்தியம்ல மதிய காட்சிக்கு குக்கூ படத்துக்கு
டிக்கெட் இருக்கு... வரிங்களா-? இல்லைங்க.. வேலை இருக்கு நைட் ஷோன்னா பரவாயில்லை என்று சொன்னேன். நேற்று
காலையே
தேவியில் இரவு காட்சிக்கு இரண்டு டிக்கெட் புக் செய்தேன்.மனைவிக்கு போன் செய்து நைட்டுக்கு
படத்துக்கு போறோம் என்று சொல்லி விட்டு போனை
வைத்து விட்டேன்.
கருப்பு திரையில் சப்தங்களுடன்... நாம் யாரை பற்றிய படத்தை பார்க்க போகின்றோம்.. என்பதை சப்தங்கள் மூலம் உணர வைக்கின்றார். இயக்குனர்
..
கதைக்கு ராஜூ முருகன்
எங்கேயும் அலையில... தான் பத்திரிக்கையில வேலை செய்யும் போது கட்டுரைக்கு ரெடி பண்ணும்
போது சந்திச்ச விஷயத்தை அவர் அசல்ட்டா திரைக்கதையாக்கி இருக்கின்றார்... இப்படி திரைக்கதையாக்கியதில்
ஒரு பெரிய நல்ல விஷயம்.. செஞ்சோற்று கடனையும்
தீர்த்து விட்டார்... விகடன் கண்ணன் எல்லாம் என்னதான் மாய்ந்து மாய்ந்து லட்சம் எடிஷனை
ரெடி பண்ணாலும் அவர் வேலை பார்க்கற ஆனந்த விகடன்லேயே ஒரு போட்டோ போட்டுக்க சாத்தியமே
இல்ல... பட் அவரை செல்லுலாய்டில் சிறை பிடிக்க
வைத்ததில் இருந்து , அவருடைய திரையுலக குரு
லிங்குசாமியை நடிக்க வைப்பதில் இருந்து செஞ்சோற்றுகடனை முதல் படத்திலேயே தன் திரைக்கதை மூலம் தீர்த்துக்கொண்டார்... அந்த ஒரு
டச்சிங்காக வெல்டன் அன்டு ஒன்டர்.
சட்டுன்னு தினேஷ் என்
மனசுல பச்சக்குன்னு ஓட்டிக்கனது எங்க தெரியுமா? கண்ணை மேல பார்க்கற நடிப்புல இல்லை...
கல்யாண வீட்டுல இளையராஜா பாட்டை பாடும் போது,ஒரு மாதிரி தலையை ஆட்டி
கைய ஒரு மாதிரி மடக்கனாம் பாருங்க...சான்சே இல்லை..
ஒரு டிவி பேட்டியில அட்டக்கத்தி தினேஷ் பேட்டிக்கொடுக்கறதுக்கு பக்கத்துல இருந்தவர் மீது சாய்ந்துக்கிட்டு தெனாவெட்டா பேட்டி
கொடுத்த போது சட்டுன்னு ஒரு எரிச்சல்.... பட்....
படம் பார்க்கும் போது அது ஆர்வக்கோளாறு என்றும் இன்னும் சின்ன பையானக இருக்கின்றார்
என்றும் உணர முடிந்தது. சான்சே இல்லை.. அசத்திட்டான்யா
மனுஷன்... கண்ணு தெரியாம கமல் மட்டும்தான் திரையுலகில் டெடிகேஷனாக நடிக்க முடியும்
என்று கடந்த தலைமுறையின் பிம்பத்தை சுக்கு நூறாக்கி இருக்கின்றான் குக்கூ படத்தின்
ஒவ்வோரு பிரேமிலேயும்.
அந்த பொண்ணு மாளவிகா...
மலையாள இறக்கு மதி.. ஏற்கனேவே மலையாளத்துல வழக்கு எண் படத்துல
அசத்திய பொண்ணு... இயக்குனர் பாலாஜி சக்திவேல் ரெக்மன்ட் செய்ய ராஜு முருகன்
அதை மோல்ட் பண்ணட்டார்... என்ன நடிப்பு..
தங்கள் வேதனையை மறைத்து கொள்ள சமுகத்தில் தங்களையும் ஒரு ஆளாக இருக்க வேண்டும் என்றுதான் நிறைய நக்கல் கலாய்ப்பில்
மாற்று திறனாளில்கள் ஈடுபடுவார்கள்... அவர்கள்
முகத்தில் அடித்தால் போல நேரில் சொல்லாவிட்டாலும்...
ங்கோத்தா நான் சொல்லை... நொண்டிக்கு
நூத்தி எட்டு குறும்புடா.... ஷீலா மாரு
எலுமிச்சை பழ சைசுக்கு இருக்குன்னு எப்படி
நக்கல் உடறான் பார்த்திய அந்த நொண்டிப் பு...........!
ஆனால் இவர்கள் பப்பாளியில்
இருந்து தேங்காய் வரை பேசி இருப்பார்கள்...
ஆனால் மாற்றிதிறனாளி நண்பர்களில் அப்படி பேசினால் தாங்காது.. காரணம்,.. உன்னை விட
நான் இந்த கடவுளால் நன்றாக படைக்க பட்டு இருக்கின்றேன்...
நீ பேச அருகதை இல்லை.. எனக்கு மட்டுமே பேச அருகதை
உள்ளது.. எனக்கு மட்டும்தான் கொம்பு இருக்கின்றது என்று கங்கனம் கட்டிக்கிட்டு கொண்டு இருப்பார்கள்.. உணர்வு என்பது யாவருக்கும் ஒன்றுதான் என்பதை உணராத மூடர்கள்...
அல்லது அப்படியே வளர்க்கப்பட்ட பொது புத்தியும் அதற்கு காரணமாக இருக்கலாம்.
மாற்றி திறனாளிகளின் காதல்... இரண்டு பேருக்குமே
இருக்கும் உணர்வு ஏக்கங்கள் விரசம் இன்றி செல்லுலாய்டில் சிறை பிடித்து இருக்கும் ராஜு முருகனுக்கு நன்றிகள்.
முக்கியமா அந்த பொண்ணை எந்த இடத்திலேயும்.. தப்பா ஒரு பிரேம் கூட
வைக்கலை.. ஷேர் ஆட்டோ ஜிலாக்கி
கொடி உடம்பை ரசிக்கின்றான் என்று ஒரு
ஷாட் வைத்து இருந்தாள் யாரும் எதுவும் கேட்டு
விட முடியாது... ஆனால் ஒரு கேக் வாங்கி பாதி கடிச்சிட்டு அதை கொடுத்து அவளை தின்ன வைக்க முயற்சிப்பது போல எடுத்த காட்சி கிளாஸ்..
டெர்மினேட்டர்ன்னு நினைக்கறேன்... சிறையில் இருக்கும் நாயகியை செக் பண்ணும் போது காமத்தை வெளிப்படுத்த நாயகி கன்னத்தை
அப்படி நக்குவான்.... அவ்வளவுதான்... அது போல
ஒரு காட்சி அமைப்பு...
படத்துல
ரொம்ப ரசிச்ச விஷயம் சந்திரபாபு இசைக்குழு
அப்படியே துருத்திக்கிட்டு இருக்காம இயல்பாக இருந்தது...
வினோத் ஓட்டலுக்கு அழைச்சிக்கிட்டு போய் கொடிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கறது...
பழைய துணியை அயர்ன் பண்ணி பேக்ல கொடுக்கும் போதும்,. சாப்பிடும் போது அதை எடுத்து செல்போன்ல போட்டு லைக் வாங்கறதை பப்ளிசிட்டி மைன்ட்ல செய்ற
அந்த ஷாட்டும் அதுக்கு கொடி வெதும்புற வெதும்பல்
இருக்கே.. சான்சே இல்லை...
படத்துல வரும் சந்திரபாபு கேரக்டர் சான்சே இல்லை.... அந்த டுருப்பு.. அஜித்து விஜய், எம்ஜிஆர்...
வாழ்ந்து இருக்கின்றார்கள்.. அதை விட எம்ஜிஆர் பிம்பத்துக்கு லைட்டிங் கம்மியான இடத்துல
நிக்க வச்சி... அப்படியே முன்னாடி நடந்து வரும் போது புல் லைட்டுக்கு வந்து அதுக்கு ஒரு சின்ன ஆர்
ஆர் போட்டு.... அப்படியே செயினை கழட்டி போடுறான்
பாரு மனுஷன்... அதுதான் எம்ஜிஆர் நிழலா இருந்தாலும் புத்தி வள்ளல்தன்மைன்னு சொல்லறதும்
அதை காட்சி படுத்திய விதமும் அருமை.. ஸ்டேஜ்ல வேஷம் கட்டிக்கிட்டு இருக்கும் போது...
மூனு லட்சம் பணம் கேட்டு எம்ஜிஆர் வேஷத்தோடு
வந்து செயினை கழட்டி கொடுத்து இருந்தா
கூட இவ்வளவு ரசனையா நெகிழ வைக்கறாப்பபோல இருந்து இருக்காது.
கிளிஷேவா இருந்து இருக்கும் ... அப்படி கிளிஷேவா எழுதி இருந்தா... இப்படி கொண்டாடி
அந்த ஷாட்டை எழுத போறது இல்லை....
டிரெயின்ல கண்ணு தெரியாதவங்க... விக்கற பொருள் எங்க வாங்கறாங்க.... எங்க கடனுக்கு கொடுப்பாங்க... எல்லாத்திலேயும்..
அவ்வளவு டீடெயில்.... மூர்மார்கெட்டின் இன்னோரு
பக்கத்தை புட்டு புட்டு வச்சி இருக்காப்புல... முக்கியமா கடை வச்சி இருக்கும்
பார்வையற்றவர்... என்ன தொள்ளாயிரம்தான் இருக்கு... நல்லா எண்ணி பாருங்க..1100 கொடுத்து
இருக்கேன் என்று கலாய்க்க... ஆயிரம் என்று ஒத்துக்கொள்ளும் காட்சிகள்.. அவருக்கு பிறந்த
குழந்தையை கொடி தடவி பார்த்து
குழந்தையின் லுல்லு அருகே கை வரும் போது
காட்டும் எக்ஸ்பிரஷன் மற்றும் பாடிலாங்வேஜ்....
அருமை.
ரிடிங் கிளாஸ்ல டிச்சர்
சொல்லிக்கொடுக்கறது ரம்பமாவும் அவ பேசறது மழை சாரல் போலவும் ஒலிக்கு முக்கியத்துவம்
கொடுத்து அழகாக்கும் காட்சிகள்...
தடவிதான் உணர வேண்டும்... அம்மா மொகம் பார்க்கவங்க பாருங்க என்று வெட்டியான் சொல்ல.... அம்மா முகத்தை தடவும் போது நமக்கு கண்ணிர் எட்டிப்பார்க்கின்றது.
செக்யூரிட்டி அண்ணன் சாப்பிட்டு
கொண்டு இருக்கும் போது இல்லை என்று சொல்ல..
எங்க அண்ணி வச்ச கருவாட்டு கொழ்ம்பு எனக்கு தெரியாதா என்று சொல்லும் காட்சி
நெகிழ்ச்சி. அதே போல அந்த அண்ணி முஞ்சி எங்ககேயோ
பார்த்த பழக்கப்பட்ட முகமா இருக்கேன்னு
நினைச்சேன்... கடைசியல அது தங்க மீன் டீச்சர்.
திணேஷ் கூட வரும் அந்த பார்வையற்ற இளைஞர் இளங்கோ...
மார்க் போடும் நண்பர் முகம் நிமிர்ந்து பார்க்காம ஆஸ்திரேலியா சட்ட ஒழுங்கை
பற்றி கவலை படும் அம்பி என்று அநியாயத்துக்கு
போகின்ற போக்கில் தட்டி விட்டு அசத்துகின்றார்
முருகன்.
அரசியல் நையாண்டிகள்
அருமை
ஜெனிவா மாநாடு என்று சொல்லும்
போது அரசியல் பேசாதே என்று மறுக்கும் சந்திரபாபு...
முக்கியமாக எனக்கு ஓம்
நமச்சிவாயம் கேரக்டர் ரொம்ப புடிச்சி இருந்துச்சி...
அது சட்டுன்னு டேய் அண்ணணுக்கு எல்லாம் வேல்யூ இல்லை... தம்பிக்குதான்
வேல்யூ அப்டேட்டா இருங்கடான்னு போகிற போக்கில்
கலாய்த்து வாருகின்றார்.
இரட்டை அர்த்தங்களை பளிசின்னு சொல்லாம... ஹலோ.. என்ன பிங்க்... ஸ்டாபெர்ரி வாசனையெல்லாமா வருது...?
செக்யூரிட்டி அண்ணன் நானும்
குடும்பத்துக்கு உழைக்கின்றேன் என்று சொல்ல அண்ணிக்காரி வயிற்றை தடவும் காட்சிகள்
கவிதை.
கேமரா கோணத்துக்கு வேணா எலக்ட்ரிக் டிரெயின்ல புட் அடித்து காதலை பில் பண்ணுவது போல ஷாட்டு எடுத்து இருக்காங்க... ஆனா எதாவது எலக்ட்ரிக்கல் போஸ்ட்டுல அடிச்சி திகேஷ் பிராணனை விட்டுடப்பபோறான்னு மனசு அடிச்சிக்குது
பாருங்க.. அது தான் அந்த கேரக்டர்கள் நம்ம மனசுல நல்லா உட்காந்துடுச்சின்னு சொல்லும்
காட்சிகள்.
பாட்டு சான்சே இல்லை... நிலவே.... சோறுட்டுதேன்னு சொல்லும் போது வயிறு குழச்சிடுச்சி. எல்லாம் சாங்கும்
அருமை... ஒளிப்பதிவில் டாப் ஆங்கிள் ஷாட்.. என்ஜின் டிரைவர் கேபின் ஷாட்.. முக்கியமா
மழை பேயும் போது காலியா இருக்கும் பிளாட்பாரம்..
என்று நிறைய கவிதையான காட்சிகள்.
இளையாராஜா பாட்டு கேட்கும் போது எல்லாம் நெகிழ வைக்குது..25 வருஷம் அந்த ஆளு இசை மட்டும் கேட்டு வளர்ந்த மனசு.. அதான் காரணம்.
படத்தின் குறை அதுவும் ராஜூ முருகன்தான்..
ராஜு படத்தின் ஆரம்ப காட்சிகளில் வரும் போது அருமை..
ஆனால் இடைவேளையில் தினேஷை கூட்டம் மொத்தி எடுக்கும் போது ஆட்டோகிராப் சேரன்
போல நிற்பதும்... சதர்ன் ரயில்வே லோக்கல் டிரெயின் டிக்கெட் கட்டிடத்துக்கு
மேல தினேஷ் இடம் கதை கேட்கும் காட்சிகளில்
கஞ்சி போட்ட சட்டை போல விறைப்பாய் உட்கார்ந்த கொண்டு கேட்பது.... லிங்குசாமி சாங் சிக்வென்ஸ் எடுத்துக்கொண்டு
இருக்கும் போது.. போன் வர விகடன் வாசகர் அந்த பொண்ணை பார்த்தேன் என்று சொல்லும் போது
என்னமாதிரி எக்ஸ்பிரஷன் கொடுத்து இருக்க வேண்டும்? ம்ஹூம்.... கொஞ்சம் நடிக்க பாஸ்
என்று சொல்ல வேண்டி இருக்கின்றது.. சில லாஜிக் மீறல்கள்... இது சினிமா தானே.. அப்புறம் லாஜிக் மீறல் இல்லைன்னே???
சான்சே இல்லை... படம்
ஒன்டர்.... அனைவரும் குடும்பதோடு தியேட்டரில்
போய் அவசியம் பாருங்கள்...
==========
படத்தின் டிரைலர்..
============
படக்குழுவினர் விபரம்
Directed by Raju Murugan
Starring Dinesh
Malavika
Music by Santhosh Narayanan
Cinematography P. K. Varma
Editing by Shanmugam Velusamy
Studio Fox Star Studios
The Next Big Film Productions
Release dates
March 21, 2014[1]
Country India
Language Tamil
===========
பைனல்கிக்.
ஒரே விஷயம்தான் படம் பார்க்கும் போது நினைச்சி இருந்தேன்... எவ்வளவு வேணா கஷ்டப்படட்டும் ஆனா அங்காடி
தெரு போல திரும்ப ஒரு கஷ்ட சூழல்ல அந்த ஜோடி மாட்டிக்கவே கூடாதுன்னு நினைச்சேன்........ ரஜினி, விஜய் படத்து ஜோடிங்களை
பார்த்து நாம என்னைக்கு கவலை கொண்டதில்லை.
காரணம்... ரஜினி விஜய் அவுங்களே பார்த்துப்பாங்க....
விளிம்பு நிலை மனிதர்களை யார் காப்பாத்துவா-?
திரைக்கதை எழுதிற இயக்குனர்தான் காப்பாத்தனும்...
அவுங்க என்னதான் கஷ்டப்பட்டாலும்
உண்மையிலே கால் போயிருந்தா கூட... லைட்டதான்
அடி பட்டுச்சி.... அதே அக்காடி தெருவுல நின்னுஜெயிச்சாங்கன்னு ஒரு பாசிட்டிவ் வைபரேஷனுக்கு
போயி இருந்தா..? இன்னும் அங்காடி தெரு படம்
பெரிய சக்சஸ் பண்ணி இருக்கும்... ஏம்பா படம் பார்க்கறவன் மனுஷன்தானே..?. எப்ப கதாபாத்திரங்களை
திரை அப்படின்றதை மறந்துட்டு.. நம்ம மனுஷங்கன்னு நினைக்க ஆரம்பிச்சிட்டோமோ... அவுங்க கஷ்டத்துக்கு
கால் வாசி படத்துலேயே உச்சிக்கொட்ட ஆரம்பிச்சிட்டோமே?
அப்பயே அவன் கூட டிராவல் ஆயிடுறோம் இல்லையா?
அதனால் படம் தொடங்கும் போது இருந்த உணர்வு
அவுங்க என்ன வேணா கஷ்டப்படட்டும் ஆனா அவுங்க ஜெயிக்கனும்... அப்படித்தான் நான் நினைச்சேன்..
அதையே டிரைலர் பார்த்துட்டு எழுதினேன்.
ராஜூ முருகன் பராவாயில்லை... மனுசன் கிளைமாக்ஸ்ல
பின்னிட்டான்... கொஞ்சம் சினிமா தனங்கள் இருந்தாலும்
.
ஏன் அவுங்க ஜெயிக்கனும்....???
காரணம் இருக்கு...
1994 வருஷம் சென்னை மவுன்ட் ரோட்டுல செக்கியூரிட்டி வேலைக்கு வந்து ஏமாற்றப்பட்ட மவுண்ட ரோடு புல்லா சாப்பாட்டுக்கு வழியில்லாத பிளாட்பாரத்துல
படுத்துக்கிட்டு தேவி அலங்கார் தியேட்டர்ல பிளாக்குல டிக்கெட் வித்து
வயிற்றை கழுவிக்கிட்டு இருந்தேன்.. அப்ப பிரபுதேவா வச்சி இந்து படம் எடுத்துக்கிட்டு இருந்தார்.. இதே தேவி
தியேட்டர் வாசல்ல காலையில் எட்டுமணிக்கு ஷூட்டிங்
பார்த்து இருக்கேன்.... அடுத்து என்ன செய்ய போறேன்..? அடுத்த வேலை சோறு எப்படி கிடைக்கும் என்ற விளம்பு
நிலைமனிதனாகிய நான் நின்னு இருக்கேன்.....
நான் ஓரளவு ஜெயிச்சி இருக்கேன்..
அதனாலதான் கஷ்டப்படறவன் கொஞ்சமாவது ஜெயிக்கனும்ன்னு நினைக்கறேன்..
அட நிஜ வாழ்க்கையில தோத்தே போயிருந்தாலும்
சினிமாவுல ஜெயிக்கட்டுமே....
யாழினி முழு படத்தையும்
பார்த்தா ... நான் என் மனைவி யாழினியோடு படம் முடிச்சி வெளியே வந்த போது சட்டென ஒரு சல சலப்பு.. ராஜு முருகன் தியேட்டருக்கு வந்து இருந்தார்...
யாரு நீங்க என்று நன்றாக பழகிய பின் கொம்பு வளர்ந்த விட்ட சில தமிழ்
திரைப்பட இயக்குனர்கள் போல இல்லாமல் என்னை அடையாளம் கண்டு கொண்டார்.... கலக்கிட்டய்யா என்று அணைத்து வாழ்தினேன்.. யாழினியை கொஞ்சினார்.. கூட்டம் அவரை மொய்க்க நான்... அங்கே இருந்து விலகினேன்.
அதே தியேட்டர்ல வண்டி பார்க்கிங் போய் வண்டி எடுத்தேன்.. யாழினியிடம் இந்த தியேட்டர்ல அப்பா பிளாக்ல் டிக்கெட் வித்து இருக்கேன் என்றேன்... யாழினி அப்படியாப்பா என்றாள் ஏதோ புரிந்த படி...
மனைவி சொன்னார்...
இந்த படம் தனக்கு மேலும் தன்னம்பின்க்கையை அதிக படுத்தி இருக்கின்றது என்றார்.. அதில் நிறைய உண்மை பொதிந்துள்ளது...
===========
படத்தோட ரேட்டிங்...
பத்துக்கு எட்டுரை.
=============
குறிப்பு...
தம்பி கார்க்கி பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்ட் நிலை செய்தியில்..... இந்த படத்தை ஜாக்கி சேகர் நல்ல படம் என்று பரப்புரை செய்வார் என்று சொன்ன நண்பர் ரவிக்கும் .....ஜாக்கிசேகர் அறிமுகபடுத்தும் படத்தை பார்த்து விட்டுதான் டொக்காக வேண்டுமா என்று உள்ளக்கிடங்கை வெளிப்படுத்திய கார்க்கும் என் நன்றிகள். இது போன்ற லட்சக்கணக்காக படங்கள் வெளி வந்தாலும் நல்ல படம் என்று பரப்புரை செய்வேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
ஃபீல் குட் விமர்சனம்...ஜாக்கி....செம...
ReplyDeleteதடவிதான் உணர வேண்டும்... அம்மா மொகம் பார்க்கவங்க பாருங்க என்று வெட்டியான் சொல்ல.... அம்மா முகத்தை தடவும் போது நமக்கு கண்ணிர் எட்டிப்பார்க்கின்றது # பார்த்தது
ReplyDeleteதல.. உங்கள் விமர்சனம் முதல் இரண்டு வரி படித்துவிட்டு இன்று மாலை AGSல் book பன்னிட்டேன். படம் பாத்துட்டு வந்து முழுசா படிக்கிறேன்.
ReplyDeleteதடவிதான் உணர வேண்டும்... அம்மா மொகம் பார்க்கவங்க பாருங்க என்று வெட்டியான் சொல்ல.... அம்மா முகத்தை தடவும் போது நமக்கு கண்ணிர் எட்டிப்பார்க்கின்றது.# பார்த்தது
ReplyDeleteSuper Review ...........unnal tha ippdi Elutha Mudiyum .....Jakie Anna
ReplyDeleteNICE REVIEW JACKIE SIR,,,,,,அப்படியே படம் பார்த்த உணர்வு !!!!!!!!!!!!!!!!!
ReplyDeleteநல்ல விமர்சனம் ,அருமை,
ReplyDeleteSuper film
ReplyDeleteபடம் பார்த்துட்டேன். புதுசா என்னத்த சொல்ல... அருமை. ஆனா பார்க்கும்போது இருந்ததை விட உங்கள் விமரசனத்து படித்த பின் இன்னும் அழகாக இருந்தது. தாஜ்மஹால் என்னதான் அழகா இருந்தாலும், Guid கூட வந்து அதை பத்தி explain பண்ணும்போது அது இன்னும் அழகா தெரியும். புரியாத பல விஷயங்கள் புரியும். அப்படித்தான் உங்கள் விமர்சனங்களும்.
ReplyDeleteKandippa intha padam pakkanum entru thonuthunna...
ReplyDeleteYou could have compared the performances of nasiruddin shah(sparsh)and sanjeevkumar (Koshish) and evaluate the performance of mr.dinesh.your review is laudable-vishwanath
ReplyDeleteபடம் பார்த்துவிட்டேன் ஜாக்கி.இந்த வருடத்தின் மிகச்சிறந்த படம் இதுவாகத்தான் இருக்கும் என்பதில் சிறிய சந்தேகமும் இல்லை...
ReplyDelete