தெகிடி – சிறுகுறிப்பு வரைக...
தெகிடி என்றால் தென்னை மரத்துக்கு மேல் உள்ள குருத்தின் பெயர் தெகிடியாகும்...
தென்னை மரத்தின் குருத்தை தாக்கும்
நோய்க்கு பெயர் தெகிடியாகும். தெகிடி வந்தால்
தென்னை மரம் ஒழுங்காக குலை தள்ளாது... அதை நம்பி இருக்கும் குடும்பமும் நட்டாத்தில் தவிக்கும்... இதற்கு
சிபா கைகேயி தயாரிப்பில் உருவான டெமொக்ரான் பூச்சி மருந்தை தெளித்து தெகிடியை
கட்டுப்படுத்தாலாம்... தெகிடி கட்டுப்படுத்துவதன் காரணமாக எதிர்காலத்தில் தேங்காய் எண்ணெய் கட்டுப்பாட்டை தவிர்க்கலாம்...
இப்படியாக பள்ளி படிக்கும்
பொது தெகிடி குறித்து சிறு விளக்கம் கேட்டு
இருந்தால் இப்படித்தான் நம்ம ஆட்கள் எழுதி வைத்து இருப்பார்கள்...
என் மாமா நாதமுனி வாத்தியார்.. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் செயின் ஜோசப் பள்ளியில்
ஆசிரியராக பணி புரிந்தவர்.. பரிட்ச்சை பேப்பர்களை
திருத்தி எடுத்து செல்ல கட்டுக்கட்டாக வீட்டுக்கு
எடுத்து வருவார்... அதில் நிறைய பேர் கேள்விக்கு
சம்பந்தம் இல்லாத சொந்தக்கதை சோகக்கதையெல்லாம்
எழுதி வைத்து இருப்பார்கள்.... அதை படித்து சிரிப்பது பெரிய சுவாரஸ்யம்... படிப்பில் பெரிதாய் நாட்டம் இல்லை என்றாலும் தெரியாத விஷயத்தை கதை அடித்து எழுதி எனக்கு பழக்கமில்லை...
இரண்டு கேள்வியை ஆங்கில வினாவுக்கு எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் பதில் எழுதி பேப்பர் மடித்துக்கொடுத்து விட்டு வந்தவன். சரி இந்த படத்தின் தலைப்புக்கு அர்த்தம்தான் என்ன?,,
தெகிடி என்றால் என்ன?
எனக்கும் சத்தியமாக தெரியாது... படம் வெளிவரும் முன் இந்த படத்தின் டைட்டில் பிரபலமாக பலரும் பேச..... தெகிடி என்றால் என்ன??? என்று கூகுளில் தேடிய போது... தெகிடி என்றால்....“ மோசடி,” “ சூதாட்டம்” போன்றவை
அர்த்தமாக கொள்ளலாம் என்று தமிழ் டிக்ஷனரி சொல்லிக்கொடுத்தது...
ஒரு அழகான
தமிழ் தலைப்பை தேடி படத்தலைப்பாக வைத்த காரணத்துக்காக
டைரக்டர் ரமேஷூக்கு ஸ் பெஷல் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்வோம்.
முதலில் கொரிய திரைப்படமான கோல்ட் ஐஸ் திரைப்படத்தின் சாயலாக
இருக்குமோ? என்று எனக்கு டிரைலரை பார்க்கும் போதே ஒரு டவுட் ஓடியது.. அதனால் படத்தை பார்க்க போகலாமா?
இல்லையா என்று பெரும் குழப்பத்தில் இருந்தேன்..
நம்ம டேஸ்ட் அளுங்க யாராவது கால் பண்ணி படம் நல்லா இருக்கு ஜாக்கி மிஸ் பண்ணிடாதிங்க
என்று சொல்லுவார்கள் என்று வெயிட் பண்ணிக்கொண்டு
இருந்தேன்... ஒரு பயலும் மாலை ஏழு மணி வரை போன் செய்யவில்லை.. ஆனால் படம் ஏமாற்றது
என்று நம்பிக்கை வைத்து சங்கம் தியேட்டரில்
இரவு
காட்சிக்கு சென்றேன்...
தியேட்டரில் அம்மா கேபிள்
டிவி விளம்பரத்துக்கு டெல்லிகணேஷ் தன் கவர்மென்ட் பேமென்ட்டுக்காக சிறப்பாக நடித்துக்கொண்டு
இருந்தார்....
முதல் காட்சி... கல்லூரியில்
கிரிமினல் கிளாஸ் நடக்க ... அப்சர்வேஷன் பற்றி ஹீரோவிடம் புரபசர் கேட்க... கொரிய படமான கோல்ட்
ஐஸ் படத்தை நேட்டிவிட்டிக்கு தகுந்தது
போல மாற்றி சொன்னாலும், முழுக்கதையும் அப்படியே
அடித்து இருப்பார்களோ என்று பயந்து விட்டேன்.. பரவாயில்லை... ஓரளவுக்கு வேற வடிவத்துக்கு
இந்த திரைப்படம் சென்று விட்டது.... அதுவும்
நன்றாகவே சஸ்பென்ஸ் திரில்லராக படத்தை இயக்கி இருக்கின்றார் இயக்குனர் ரமேஷ்.. வாழ்த்துகள்..
லோக்கல் டிரைனில் பிட்டு புக் படிப்பது போல மறைத்து மறைத்து புதிய தலைமுறை இதழை படிப்பது போல விளம்பர படத்தில் படிப்பாரே அசோக் செல்வன்... அவர்தான் இந்த படத்தின் ஹீரோ... ரொம்ப
நன்றாக நடித்து இருக்கின்றார்... ஜனனி ஐயர் ஹீரோயின்... அவன் இவன் படத்துக்கு பிறகு சொல்லிக்கொள்ளும் படியான
கேரக்டர்.... அதே போல நம்பியன்னன் கேரக்டரில் வரும் நண்பர் கலகலக்க வைக்கின்றார்...
தியேட்டரில் இண்டர்வெல்
பிளாக்கில் ஹீரோ போனை எடுத்து ஹலோ என்று சொல்ல
.. இன்டர்மிஷன் என்று பெயர் போடும் இடத்தில்
விசில் தியேட்டரில் பறக்கின்றது...
அதே போல சென்னை மவுண்ட் ரோட்டில் எல்ஐசி தாண்டி ..... டாராபூர் போய் லெப்ட் எடுத்தால் தமிழ்நாடு
மின்சார வாரிய கட்டிடம் இருக்கின்றது.. அதற்கு எதிரில் இன்டர்வெல் பிளாக் எடுத்து இருக்கின்றார்கள்....
நிறைய இடங்களில் ஒளிப்பதிவு ரசிக்கும் படி இருக்கின்றது..
முதல் டைடில் கார்டு நிறைய
படங்களில் பார்த்ததுதான் என்றாலும் ரசிக்கும்
படி வைக்கின்றது...
யாராக இருக்கும் என்று யூகிக்கும் படி இருந்தாலும்
சில நாட்களுக்கு பிறகுக்கு வரும் டுவிஸ்ட் அசத்தல்தான்....
இன்னும் இந்த படத்துக்கு நிறைய உதாரணம் கொடுத்த என்னால் எழுத முடியும் , அப்படி எழுதினால் படத்தின் டுவிஸ்ட்
முதல் முறையாக பார்ப்பவர்களுக்கு படம் பார்க்க ஈர்ப்பு இருக்காது என்பதால்... இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்..
நல்ல படத்தை நீட்டி முங்காமல் போர் அடிக்காமல்
கொடுத்தமைக்கு வாழ்த்துகள்... அதே போல டயலாக்
அருமையாக இருக்கின்றது.. பொய் சொல்லறதுக்கு
யோசிக்கறதுல பாதி யோசிச்சலே உண்மையை சொல்லிடலாம்... எனக்கு மட்டும் ஏன் இப்படி
? சந்தோஷமா இருக்கும் போது பல பேர் இப்படித்தான் சொல்லறானுங்க.... என ரசிக்க வைக்கும்
டயலாக் படம் நெடுகிலும் இருக்கின்றது..
ஆனால் கெட்டவராக மாறியதுக்கான காரணத்தை சொல்லும் காட்சியில் வலு இல்லாதது பெரிய சருக்கல்....
=========
படத்தின் டிரைலர்.
===========
படக்குழுவினர் விபரம்
Directed by P. Ramesh
Produced by C. V. Kumar
Starring Ashok Selvan
Janani Iyer
Music by Nivas Prasanna
Cinematography Dinesh Krishnan
Editing by Leo John Paul
Studio Thirukumaran Entertainment
Vel Media
Running time 126 minutes
Country India
Language Tamil
================
பைனல் கிக்..
பீட்சா திரைப்படத்தை போல் இதுவும் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர்தான்....
படம் பார்க்க போனால் நிச்சயம் இந்த படம் உங்களை ஏமாற்றாது... கண்டிப்பாக இந்த திரைப்படம் சஸ்பென்ஸ் திரில்லர் ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடிக்கும். பார்க்க வேண்டிய திரைப்படம்...
===============
படத்தோட ரேட்டிங்
பத்துக்கு ஆறு...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
Thanks, Jackie.
ReplyDeleteஅண்ணே,
ReplyDeleteட்ரைலர் என்று சொல்லிவிட்டு இணைப்பை கொடுக்கவில்லையே?
இந்த படத்தை பற்றி தோழர் அதிஷா நேற்றிரவு சொன்னார்.
ஓக்கேதான், ஆனால் ரொம்ப ஸ்லோ என்பது அவரது கருத்து. நான் இன்று பார்க்க முயல்கிறேன்.
Thanks Jackie sir, for your quickest review.
ReplyDeleteThanks Jackie sir for your quickest review, so that we can see this movie in the theater.
ReplyDeleteநன்றி நாடோடி பையன்...
ReplyDeleteவிஸ்வா உண்மைதான் பட் எந்தளவுக்கு சுவாரஸ்யம் கொடுக்கறாங்களோ.. அந்த அளவுக்கு கொடுத்து இருக்காங்க.... டிரைலர் இனைச்சிட்டேன்...
நன்றி ஸ்ரீரினி
ReplyDeletepadam sumaarthaan Jackie. ethirpaartha alavukku illa.
ReplyDeletesuperb movie. hatsoff ramesh. nice camera work & neat screenplay.
ReplyDelete