சரியாக முன்று வருடத்துக்கு முன்,...
இந்த நாளுக்கு முதல் நாளில்தான் டெலிவரி
டேட் டாக்டர் கொடுத்து
இருந்தார்கள்….. யாழினி என்ற பெயரை மட்டுமே ஆறு மாதத்துக்கு முன் தேர்வு செய்து விட்டு ஆண் குழந்தை பிறந்தநாள் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்தோம்…
பெண் குழந்தை பிறந்து இருப்பதாக சொல்லி யாழினியை என் கையில் கொடுத்தார்கள்…..
நேற்றுதான் அவள்
பிறந்தது போல இருக்கின்றது… அதற்குள் மூன்று
வருடங்கள் ஆகி விட்டது…
ஒன்றரை
வருடங்கள் வேலைக்கு போகாமல் அவளை பார்த்துக்கொண்டது நல்ல அனுபவம்…. ஏங்க… புள்ள ஆய் வருதுன்னு சொல்லுது.. அப்படியே மரக்கட்டை போல
உட்கார்ந்து கிட்டு இருக்கிங்க…
ஆய் எல்லாம் போய்… கழுவி தொடச்சி விட முடியாது என்று என்னால்
உட்கார முடியாது என்று மற்ற தகப்பன்களை போல சொல்ல முடியாது.… மூன்று தங்கைகளை வளர்த்தவன் என்பதால் எனக்கு அவளை வளர்க்க நான் சிரமபடவேயில்லை…
மயிலை 63வர் விழாவில்
யாழினிக்கு நைட்ரஜன் அடைக்கப்பட்ட சோட் பீம்
பலூன் வாங்கி கொடுத்தேன்.
டேய் பீம்… எவ்வளவு
அலட்டுவே… இப்பபார்த்தியா..? எங்கிட்ட மாட்டிக்கிட்ட….
சமத்தா இருக்க கத்துக்கோ.. என்று யாழினி பலம் பொருந்திய பீமை மிரட்டிக்கொண்டு இருந்தாள்…டேய் ஒன்னை இங்க விட்டா பேன் இறக்கை உன் தலையில அடிச்சிடும் என்று சாமி அறையில் விட பீம் பலூன் நைட்ரஜன் கேஸ் உதவியோடு உத்திரத்தின் ஓரம் போய் எங்களை முறைத்து பார்த்துக்கொண்டு தலை கவிழ்ந்து கிடந்தது.
அவள் பேசிக்கொடுக்கும் பல்புகள்.. அதிகம்… அவளுடன் அதிகம்
நேரம் செலவிடுவதால் முன்பு போல எழுத கூட முடியவில்லை…
எந்த பள்ளியில் வேண்டுமானாலும் படிக்க வைக்கலாம்
என்பது என் எண்ணம்… இந்த பள்ளியில்தான் தன் மகள் படிக்க வேண்டும்… எடுகேஷன் ஸ்டேண்டேர்டு
எல்லாம் நான் பார்ப்பேன் என்கின்றாள் என் மனைவி…
இந்த விஷயத்துல நீங்க தலையிடாதிங்க என்று சொல்லிவிட்டாள்… அவள் நினைத்த பள்ளியில் பிள்ளைக்கு இடம் கிடைக்க… கபாலியையும் மாதவ பெருமாளையும் வேண்டிக்கொண்டு இருக்கின்றாள்….
மயிலை சாய் பாபா
கோவில் அருகில் இருக்கும் பிஎஸ் பள்ளியில் உள்ள லிஸ்ட்டில் யாழினி பெயர் இல்லை என்று கண்ணில்
இருந்து கண்ணீராக வழியவிட்டாள் என் மனைவி … அன்று
இரவு சாப்பிடவில்லை…..எப்படி இப்படி இருக்க முடியும்… ஒரு பள்ளியில் இடம் கிடைக்க இவ்வளவு போராட்டமா? அழுகை எல்லாம் வருமா? என்று இந்த கிராமத்தானுக்கு ஆச்சர்யம்…
எந்த பள்ளி என்று இன்னும் முடிவாகவில்லை. பார்ப்போம்…
யாழினிக்கு
எதுவாக இருந்தாலும் என்னிடம் பகிர்ந்து
கொள்ள வேண்டும்… சின்னன சின்ன விஷயமாக இருந்தாலும்
என் பாராட்டை அவள் எதிர் பார்த்து வளர்கின்றாள்…
ஒரு கோர்வையாகவே
எழுதவில்லை… தோன்றியதை எழுதிக்கொண்டு இருக்கின்றேன்
இரண்டு நாளைக்கு
முன்
எனக்கு உடம்பு
முடியவில்லை…இரண்டு நாளைக்கு முன் நான் படுக்கையில்
படுத்து இருக்கும் போது எனக்கு போர்வையை போத்தி விட்டதோடு மட்டுமல்லாமல் ….. அப்பா …..சமத்தா தூங்கு என்றுஅப்படியே மென்மையாக
தட்டிக்கொடுத்து என்னை தூங்க வைத்தாள்…
அப்படி குழந்தை…. சட்டென தாயாக
மாறியது அந்த புள்ளியில்தான்…
யாழினிக்கு இன்று
பிறந்தநாள்…
பெங்களூரிவில்
இந்த வருடம்…
வழக்கம் போல உங்கள் ஆசிகளையும் வாழ்த்துக்களையும்…
அவளுடைய மெயில் ஐடிக்கு அனுப்புங்கள்…
Yazhinijackiesekar@gmail.com இல் உங்கள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்… பெரியவளாக ஆனதும் அந்த வாழ்த்துகள் அவளுக்கு உற்சாகத்தை கொடுக்கட்டும்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்( யாழினிஅப்பா)
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
யாழினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎல்லா வாய்ப்புகளும் பெற்றுப் பல்லாண்டு பல்லாண்டு வாழ அவளை வாழ்த்துகிறேன்.
ReplyDeleteWISH U MANY MANY HAPPY RETURNS OF THE DAY YAZHINI
ReplyDeletehappy birthday wishes and blessings to yazhini thangam. nalla schoolil koodiya viraivil chellathukku idam kidaikka engalathu manamaarntha prarthanaigal.
ReplyDeleteanbudan
meenakshipriyasundar
அழகு செல்லம்,,,,,,, HAPPY BIRTHDAY YAZHINI
ReplyDeleteBIRTH day wishes to yazhini
ReplyDeleteMany more happy returns of the day yazhini.May god bless you...
ReplyDeleteHapay Birthday Yazhini
ReplyDeleteயாழினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்....
ReplyDeleteBelated birthday wishes to dear yazhini kutty
ReplyDeleteShabby birthday
ReplyDeleteHabby birthday
ReplyDeleteBelated birthday wishes to Yazhini pappa. Girls are always adding memories to our life.
ReplyDeleteயாழினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteயாழினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteWishing a very happy birthday to your dearest daughter.
ReplyDelete