PHILIPS AND THE MONKEY PEN-2013-/உலக சினிமா/மலையாளம்/ மந்திர பேனாவும் சிறுவனும்.
 எத்தனை பேர் வீட்டுல  எட்டாவது படிக்கும் வரை ...
சரஸ்வதி சபதம்,  திருவிளையாடல், கந்தன் கருனை, திருவருட்செல்வர், மாயாபஜார், வேதாள உலகம்.... போன்ற படங்களை  மட்டும் பார்க்க வைத்து உயிரை எடுத்து இருக்கின்றார்களா?
எங்க ஆத்தா நான் உருப்பட வேண்டும் என்று இப்படித்தான் என்னை படுத்தி எடுத்தாள்..... நான் எட்டாவது லீவில் சுதந்திரமாக பார்த்த திரைப்படம்  ரஜினி நடித்த விடுதலைதான்...

 எங்க  வீட்டில் நான் ஒரே பையன் என்பதாலும் உருப்பட வேண்டும் என்பதாலும்  ஒழுக்கத்தோடு வளர வேண்டும் என்பதாலும் வெறும் சாமி படங்கள் மட்டுமே பார்க்க என் அம்மா  அனுமதி அளித்து இருந்தார்... ஆனால் மீசை முளைக்கு பருவத்தில்  அப்படியே ரிவர்சாகி கடலூர் முத்தைய்யா தியேட்டரில் சாமி படங்கள் மட்டுமே அதிகம் பார்க்கும் அபாக்கியவான் ஆனேன்...

பள்ளிகளில் நல்லொழுக்க வகுப்பு என்று ஒன்று நடக்கும் நீதிகதைகள் மற்றும்  நல்லொழுக்க கதைகள் அதிகம் இடம் பெறும்.. அது மட்டுமல்ல... அப்போது பிரசித்த பெற்ற பாலமித்திரா மற்றும் அம்புலி மாமா போன்ற புத்தக கதைகள்  நேர்மையாக இருப்பவன்தான் இந்த உலகத்தில் ஜெயிப்பான் என்று சொல்லி தந்தன... ஆனால் அப்படியான கதை சொல்லிகளும்  கூட்டுக்குடும்ப கிழவன் கிழவிகளையும் நாம் இழந்து  விட்டு.. தனி மரம் தோப்பாக மாறும் என்று கனவு காண்கின்றோம்....

 பள்ளிகளில் படிக்கும்  போது பிள்ளைகளுக்கு நீதியும் நேர்மையும்  ஒழுக்கமும் வளர வேண்டும் என்று  கடந்த தலைமுறை  பெற்றோர் படாத பாடு பட்டனர்.. ஆனால் இந்த தலைமுறையில் தத்தேரியாக போய் தொலை என்று ஸ்பிரே எல்லாம் அடிக்காமல் ...நண்பனாக நம் தோளில் கை போட்டு பேசுகின்றார்கள். அதைதான் இந்த பிலிப்ஸ் அன்டு த மங்கி பெண்   மலையாள திரைப்படம் விரிவாக பேசுகின்றது.


 படம் முழுக்க  கவித்துவமான காட்சிகள்... கொஞ்சம் லேக் இருந்தாலும்...  கண்டிப்பாக இந்த படம் போற்றுதலுக்கு  உரிய படம்...

முகநூலில் நண்பர் கணேஷ் டி  நிரோ... இந்த படத்தை பற்றி பகிர்ந்து கொண்ட குறிப்புகள்  எனக்கு ஏற்ப்புடயைதே...
philips and the monkey pen சமீபத்தில் நான் பார்த்த மலையாள திரைப்படம்.


உங்கள் கால்கள் பள்ளி பருவத்தை நோக்கி பயணப்படும் இந்த படம் மூலமாக......இந்த படம் கண்டிப்பாக உங்கள் ஆரம்ப கால பள்ளி வாழ்க்கைக்கு கொண்டு செல்லும்.தங்க மீன்கள் தமிழில் வணிக படம் அல்லாமல் எடுக்கப்பட்ட நல்ல படம் ஆனால் மிகை நடிப்பு எனக்கு பிடிக்கவில்லை.ஒரு பாடலை தவிர...மற்றபடி படம் மிகைப்பு தன்மையான படம்.ஆனால் philips and the monkey pen படம் மிகை நடிப்பு இருக்கும் ஆனால் அது தெரியாத அளவுக்கு திரை கதையும் நாயகனின்நடிப்பும் அமைந்துள்ளது தான் இதன் தனி சிறப்பு.சின்ன வயதில் சொல்லி கொடுக்கும் நல்ல பழக்கங்களை எளிமையாக நாம் கற்க மாட்டோம் என்பது இந்த வயதில் தான் நமக்கு புரிகிறது.இந்த படத்தின் நாயகன் philips மற்றும் அந்த monkeypen நமக்கு சொல்லும் எளிமையான பாடம் நாம் வாழ்க்கைக்கான படம் தவறாமல் பாருங்கள் மிகவும் அருமையான படம்

என்று  நண்பர் கணேஷ் பகிர்ந்து இருந்தார்.. இந்த படத்தை வெகு நாட்களுக்கு முன்னே  கேள்விப்பட்டு படத்தை  பார்த்து விட்டேன் ஆனால் எனக்கு இப்போதுதான் எழுத நேரம்  கிடைத்தது

சுட்டி சிறுவனாக  Sanoop Santhosh அசத்தி இருக்கின்றான்.. சான்சே இல்லாத  நடிப்பு... அவனுடைய தகப்பன் மற்றும் தாயாக ஜெயசூர்யா மற்றும் ரம்யா நம்பீசன்  நடித்து இருக்கின்றார்கள்...
மழை காலத்தில் ஒரு பள்ளியில் அத்து மீறி ஒரு சிறுவர் கூட்டம் நுழைகின்றது... ஏன் நுழைகின்றது எதற்கு நுழைகின்றது என்பதில் கதை சொல்ல தொடங்குகின்றது... இந்த படத்தை முதல்  காட்சியிலேயே நம்மை நிமிர்ந்து உட்கார வைப்பது கேமரா கோணங்கள்தான் அசத்தி இருக்கின்றார்கள்... அதே போல Sanoop Santhosh ன் வீட்டின் தேர்வு இருக்கின்றதே.. ரம்யம்... அப்படி ஒரு  லோக்கேஷன் வீட்டில் வாழ வேண்டும் என்று படம் பார்க்கும் போதே மனதில் ஆசை துளிர்த்து விடும்...


   இஇந்த திரைப்படத்தில் கடவுள் வருகின்றார்... சின்னதான் நெகிழ்ச்சியான பால்ய காதல் இருக்கின்றது... குறும்பு கொப்பளிக்க வைக்கும் சிறுவர்களின் நடவடிக்கைகள்... முக்கியமாக...  பேசினால் பேர் எழுத சொல்லி விட்டு ஆசிரியர் சென்று இருக்கு... முதலில் பிலிப்ஸ் பெயர் எழுத பரக் என்று சத்தமிட்டு குசு  விட்டு விட்டதாக  முன்னாடி பையனை கொளுத்தி விட எல்லோரையும் பேச வைக்கும் அந்த நிகழ்வு அனைவரது பால்ய காலத்தையும் நினைவு படுத்தும்.


 முக்கியமா  குருப் போட்டோ எடுக்கும் போது கடிதம் கொடுக்கும் காட்சியும் அதுக்கு பின்னனி இசையும்.. எடிட்டிங்கும் சான்சே இல்லை... முக்கியமா கடிதம் பெற்றதும் அந்த பெண்ணின் ரியாக்ஷன்.
 அதே போல அவன் நட்பை ஏற்றுக்கொண்டு அந்த நாளை நினைவு படுத்த கேமர கிளிக் போல கையில் சைகை செய்யும் இடம் கவிதை...
 விளையாட்டாய் ஆசிரியர், மாணவர்கள் பிரச்சனையை கையாளுகின்றார்கள்... கொட்டடிக்கு மாடு  அடைத்து  செல்வது போல பள்ளி வாகனங்களில் மாணவ மாணவிகளை வெற்றிலை கவுலி போல அடுக்கி பள்ளிக்கு அழைத்து செல்லதீர்கள் என்று விழிப்புணர்வை இந்த திரைப்படம் ஏற்ப்படுத்து கின்றது..
மங்கி பெண்  பின்னே ஒரு பேன்டசி கதை.... அதில் கடவுள் வருகின்றார்..  செல்லுலாய்டில்  போர் அடிக்காமல் ஒழுக்கத்தை போதிக்கின்றது  இந்த  படம்... ஆசிரியர்கள்  தங்கள் மாணவ செல்வங்களுக்கு இந்த படத்தை போட்டு காட்டுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
எதற்கு எடுத்தாலும் பிள்ளைகளை அடிமைகள் போல நடத்தும் கணக்கு டீச்சர்...  அவர் மனம் மாறும் கனங்கள்.
தாத்தாவுடன்  பேரன்  வம்புக்கு இழுக்கும் காட்சிகள் என்று  நெகிழ வைத்து இருப்பார்கள்.

சப்டைட்டிலில் இந்த படத்தை மாணவர்களுக்கு விளக்கினால் இன்னும் சவுகர்யம்..  அது மட்டுமல்ல..  இந்த படம் விரைவில்  மொழிமாற்றம் செய்யலாம் என்று தயாரிப்பு தரப்பு  நினைப்பதாக ஒரு தகவல்
அதே   போல.... இந்த படம்  கேரளாவில்  பாக்ஸ்  ஆபிஸ் கலெக்ஷனையும் அள்ளிகுவித்தது...


கேமராமேன் Neil D'Cunha சிங்கிள் பிரேமாக இருந்தாலும் ரசித்து எடுதது இருக்கின்றார்... அதே போல பசங்களிட்ம் நன்றாக வேலை  வாங்கி இருக்கின்றார்.. இயக்குனர்  Rojin Thomas      மற்றும்  Shanil Muhammed.. 

முக்கியமாக பொக்கை பையன்.. கண்ணாடி பையன் போன்றவர்கள் நன்றாகவே  நடித்து இருக்கின்றார்கள்


 படத்தின்  கிளைமாக்ஸ் யூகிக்க  முடிந்தாலும் குழந்தையாக மாறும் போது அனைத்தையும் மறந்து விடுகின்றோம்...
======
  படத்தின் டிரைலர்.
=======
படக்குழுவினர் விபரம்.

Directed by Rojin Thomas
Shanil Muhammed
Produced by Sandra Thomas
Vijay Babu
Written by Rojin Thomas
Starring Master Sanoop Santhosh
Jayasurya
Remya Nambeesan
Mukesh
Vijay Babu[1]
Music by Rahul Subrahmaniam [2]
Cinematography Neil D'Cunha
Editing by Prejish Prakash
Distributed by Friday Tickets & PJ Entertainments Europe
Release dates
7 November 2013
Running time 140 minutes
Country India
Language Malayalam
=======
பைனல்கிக்.

 எவ்வளவோ கழிச்சடையான படங்கள் வரட்டும்... ஆனால் அத்தி பூத்தது போல இது போன்ற திரைப்படங்கள் தமிழில் கண்டிப்பாக வர வேண்டும்....தாரே ஜமீன் பர்  திரைப்படத்துக்கு  பிறகு ஒரு கவித்துவமான திரைப்படம்  இது என்றால்  அது மிகையில்லை.
கொஞ்சம் லேக் இன்னும் சுருக்கி இருக்கலாம்.. இரண்டரை மணி நேரம் பபடம் கொடுக்க வேண்டும் என்று எந்த நிர்பந்தமும் இல்லை.. இந்த படம் குழந்தைகளுடன் பார்த்தே தீரவேண்டிய திரைப்படம்.=======
படத்தோட ரேட்டிங்.
பத்துக்கு ஏழு.,
========
பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

5 comments:

 1. Sanoop Santhosh is the brother of sanusha santhothosh (Renigunta Fame)

  ReplyDelete
 2. படத்தின் டிவிடி வாங்கிவிட்டேன்,ஆனால் இன்னும் பார்க்கவி்ல்லை.
  உங்கள் பதிவு படம் பார்க்கும் ஆவலை உருவாக்குகிறது.

  ReplyDelete
 3. ஜாக்கி நார்த் 24 காதம் படம் பார்த்தாச்சா.பார்க்கவில்லை என்றால் உடனே பாருங்க ஃபகத் ஃபாசில் அசத்தியிருக்காரு...

  ReplyDelete
 4. தகவலுக்கு நன்றி கேரளாக்காரன்.


  கார்த்தி அந்த படம் எப்போதோ பார்த்து விட்டேன்.. ஆனால் எழுத நேரம் கிடைக்கவில்லை. கண்டிப்பாக எழுதுகின்றேன்.

  ReplyDelete
 5. Hello Jackie Anna,

  Fahad Fazil Nadicha "Oru Indiyan Pranaya Kada" Padam Parthuttu Oru Review Eludhavum Pleas Aduvum Onga Stylila.

  Online Story

  Fahad Fazil (Ayman Siddharth) Oru Local Politician Aaha Try pandraru.
  Amala Paul (Ayren Guardner) Canadian Citizen Documentary Video Shoot Pandrathukkagha vendi Indiavukku Varra.(aana Ava Varradu Vera Oru Vishyathukkaga Adhuthan Twist)
  Ivanga Rendu perukkum Eppadi Love Vanduchi appdeennu Solra Padam.Chansey Illa Director Satyan Antikad Supera Oru Romantic Movie Koduttirukkarau........

  Pleas Eluthunga...

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner