ANNI FELICI-2013/உலக சினிமா/இத்தாலி/கலைஞனும் மனைவியும்


இந்த பொம்பளைங்களுக்கு  புருசன்காரன்  மேல எப்ப சந்தேகம் வரும் தெரியுமா?


சரியா ரெண்டு புள்ளை பெத்ததுக்கு அப்புறம்.... அதுவரை கணவன்  மானே பொண்மானே தேனேதான்..  அதுவும் கரெக்ட்டா புள்ளைங்க நடக்க ஆரம்பிச்சி... ஒன்னனாவது ரெண்டாவது படிக்கும் போதுதான் இந்த சந்தேகம் அதிகம் வரும்... அது காதல் கணவனா  இருந்தாலும் சரி...  பெரியவங்களால கை பிடிச்ச கணவனா இருந்தாலும் சரி.

 புருசன்காரன்  கல்யாணம் ஆன புதுசுல  காஞ்ச மாடு  கம்புல  பாய்ஞ்சா போல  பாயிறான்...

ச்சே நாம அந்த அளவுக்கு அசத்தறோம்ன்னு பொண்ணுக்கு  ஒரே சந்தோஷம். அதுக்குள்ள புள்ளை உருவாயிடுது.. அது  பொறந்துது வளரும் வரை ஆடிக்கு ஒரு நாள் ஆம்மாவாசைக்கு ஒரு நாள் ஜாலிலோ ஜிம்கானா.....

 அப்புறம் இன்னோரு புள்ளை....   அது பொறந்து அதுக்கு சூத்து துணி அலசி ரெண்டையும் வளர்க்கறதுக்கு பாடாத பாடு படவேணும்... அப்ப காமத்துல மேல நாட்டத்தை விட ரெண்டு பேருடைய கொட்டத்தை  அடக்கறதுதான் ரெண்ட பேருக்கும் நேரம்  சரியா இருக்கும்....

இந்த கட்டத்துல வெளித்தெருவுக்கு போற மனுஷன்... எங்காயவாது ஏதாவது லிங்க் ஆயி மெட்டர் பண்ணி சில பேர் வெளியே வரான்... சில பேர் ரெண்டாவது சம்சாரம்ன்னு செட்டில் ஆகிடறான்...சில பேர் தலை சிலுப்பிக்கிட்டு வெளிய வந்துடறான்...

ஆனா இது போல கதைகளை கேட்கும்  பொண்டாட்டிங்களுக்கு எப்படி இருக்கும்.. வாழ்க்கையே உன்னை நம்பி ஒப்படைச்சவளுக்கு வயிறு எப்படி எறியும்???

புள்ளைங்க  வளர்ந்தாச்சி...  அப்ப  பொண்டாட்டியோட உடல் தேவையை அதாவது காஞ்ச மாடு கம்புல  பொறன்ட அளவுக்கு முன்ன போல இல்லேன்னாலும் ... அப்ப அப்ப மானே தேனே பொன் மானேவாவது போட்டு.... நேரம் கிடைக்கும் போது எல்லாம் பொண்டாட்டிகாரி  சம்மதத்தோட காமத்துல ஈடு பட்ட  எந்த  பிரச்சனையும் இல்லை..குழந்தை அழுகை, முத்திர துணி நாத்தம், பால்ஸ்மைல், இப்படின்னு ஆண் வெளகி இருக்கான் பாருங்க... ஆம்பளை... அந்த  கேப்பை அப்படியே  அவன் மெயின்டெயின் பண்ணுவான்...


பட்  அந்த  கேப்பை விடாம... ஒரு ஆண்தான்   பொண்டாட்டியை கொஞ்சி  தாஜா பண்ணனும்... ஆனா இதை பொண்டாட்டி செய்யனும்ன்னு ஆண் நினைக்கறான்.. 


புள்ளைங்கல வளர்க்கறது.. பீரியட்ஸ்,  சமையல்ன்னு  இது போன்ற பிரச்சனைகளை சந்திக்கற  மனைவிக்கு... செக்ஸ் இந்த டைம்ல ரெண்டாம் பட்சம்தான்... ஆனா முதல் பட்சம் அப்படின்ற அளவுக்கு மாத்தறது ஒரு ஆணோட கடமை. அதை பல ஆண்கள் செய்யறதே இல்லை...
இதுதான்  பிரச்சனைக்கு அடி நாதம்...


வெளியில போய் ஓட்டல்ல சாப்பிட்டு ஆண் சொல்லற காரணம்.. முன்ன போல நான் படுக்க கூப்பிட்டா அவ வர்றது இல்லை.. எப்ப பார்த்தாலும் புள்ளையை கட்டிக்கிட்டு அழுறா  நான் என்ன செய்யறது.. அதான் ஒட்டல்ல சாப்பிட்டுட்டேன் என்று சொல்கின்றான்..


அப்ப சமைச்சி போட்டு , பிள்ளை பெத்து, உனக்கு ஜட்டி துணி மொதக்கொண்டு துவைச்சி போட்டா..? நீ என்னை விட்டு விட்டு எவளோ ஒரு சிரிக்கி கிட்ட போய் வருவ.. ??? என்று கேள்வி எழுப்புகின்றாள்..  மனைவி....


நான் ஒன்னும் உனக்கு சளைச்சவ இல்லைன்னு பொண்டாட்டி முடிவு எடுக்கும் போது பல பிரிச்சனைகள் வீட்டில் முளைக்கின்றது.... இப்படியான பிரச்சகைகளை சந்திக்காத குடும்பங்களே இல்ல்லைன்னு சொல்லலாம்...
 சார் நீங்க  சொல்லறது போல இல்லை.. நாங்க ஆதர்ச  தம்பதிகள்....
வாழ்த்துகள்...


 பட் இந்த ஒரு புள்ளி  இருக்கு இல்லை... புருசன் பொண்டாட்டிக்குள்ள சண்டை வரும் அந்த புள்ளியில் இருந்து ANNI FELICI-2013 என்கின்ற  இந்த இத்தாலி படத்தின் கதை தொடங்குது...


அவன் ஒரு கலைஞன்...

1970ல இத்தாலி ரோம்ல ஒரு  ஆர்ட்டிஸ்ட் இருக்கான்...

யோவ் இரு....

என்ன...?

 நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன்... வருசலா...ஆர்ட்டிஸ்ட்டுங்க... படமா எழுதி தள்ளக்கிட்டே வர்ர...???

 என்ன பண்றது... அப்படியான படம்தான் ரீசன்டா கண்ணுல படுது.. நான் என்ன செய்ய? ஆமாம் இல்லை...! ஆர்ட்டிஸ்ட் அண்டு த மாடல் ஸ்பேனிஷ் படம்... அப்புறம் ஆர்ட்டிஸ்ட் மலையாள படம்... இப்ப இத்தாலி படம்....  சில நேரத்துல இப்படி அமைஞ்சிடறதுண்டு...

சரி சொல்லு..  படிக்கறோம்.


1970ல இத்தாலி ரோம்ல ஒரு  ஆர்ட்டிஸ்ட் இருக்கான்... 

அவனுக்கு  ஒரு மனைவி   ரெண்டு புள்ளைங்க...

ஜாலியான வாழ்க்கை... ஒரு பெரிய  ஸ்டூடியோ வச்சி இருக்கான்... இண்டர்நேஷனல்  அளவுல எக்ஸிபிஷன் வச்சி கலக்குனும்ன்னு ஆசை....
ரெண்டுமே  ஆம்பளை பசங்க... ரெண்டும்  படு சுட்டி...


ஒரு நாள் அப்பாவோட ஸ்டூடியோவுக்கு வரானுங்க... அங்க என்னடான்னா அப்பா ஒரு பொண்ணோட நிர்வாணத்தை  பிளாஸ்ட் ஆப் பாரிஸ்ல பதிய வச்சிக்கிட்டு இருக்கான்..  இதை பார்த்த  பசங்க கிட்ட சொல்லியே அனுப்பறான்... தோ  பாருடா... உங்க ஆத்தாக்காரிக்கிட்ட போய் நான் நிர்வாணமா ஒரு ஆர்ட்டிஸ்ட்டை பிரதி எடுத்தேன்னு வத்தி  வைக்காதிங்கடான்னு சொல்லி  அனுப்பும் போதே போய் வத்தி வச்சிடறானுங்க..


 பொண்டாட்டி காரி கேட்கறா....

யோவ் என்னவிட அவ அப்படி என்ன அழகான்னு...? ஒரு ஆர்ட்டிஸ்ட் என்ன பதில் சொல்ல முடியும் சொல்லு....


எப்பயுமே...  வேலையையும் வீட்டையும் போட்டுக்கொழப்பிக்கொள்ளக்கூடாது இல்லையா? அப்படித்தான்  அந்த ஆர்ட்டிஸ்ட் இருக்கான்... 

ஆனா அவன்  பொண்டாட்டி இருக்காளே....  சிந்து பைரவி  சிவக்குமார்  பொண்டாட்டி போல கலை ஞானம் அந்த அளவுக்கு அவக்கிட்ட இல்லை... இருந்தாலும் நானும் புருசனுக்கு ஹெல்ப் பண்ணறேன்னு டார்ச்சர் கொடுக்கறா....


உதாரணத்துக்கு தன்னோட எக்ஸ்பிஷனுக்கு வராதேன்னு  சொல்லிட்டு  வெளியுருக்கு போவான்.. புருசனுக்கு சர்ப்பிரைஸ் கொடுக்கறேன்.. சொல்லிட்டு ரெண்டு புள்ளைங்களையும் அழைச்சிகிட்டு போவா...


 அங்க   ஆறு பொண்ணுங்க முழு நிர்வாணமா இருக்க... அதுக்கு நடுவுல அவன் புருசன்  நிர்வாணமா உட்கார்ந்துக்கிட்டு பெயிண்டிங்ல ஒரு ஒர்க் பண்ணிக்கிட்டு இருப்பான்.. அதையும் போய் கெடுத்துடுவா. எழு பேர்க்கு சைன் பண்ணணுதுக்கு ஒரு ஆள நிர்வாணமா வரனும் யாரும் போகலை.. சரி புருஷனுக்கு நல்லது செய்யதான் போவா... ஆனா  அதையும் பத்திரிக்கையில் எழுதி அவனுக்கு கெட்ட பேர் வந்துடும்...


அவன்  மூட் ஆப்ல இருக்கும் போது என்னைதானே  லவ் பண்ணறேன்னு சொல்லி டார்ச்சர் பண்ணி..  உனக்கு  நான் சளைச்சவ இல்லைன்னு நினைச்சி ஒரு லெஸ்பியன் பொண்ணுக்கூட  கனெக்ஷன் வச்சிக்கிட்டு... இரண்டு பேரும் டைவர்ஸ் செய்யற நிலைக்கு போக.... அப்புறம் ரெண்டு பேரும்  சேர்ந்தாங்களா என்பதுதான் கவித்துவமான கதை.


 படத்துல ரொம்ப  ரொம்ப என்ஜாய் பண்ணது அந்த ரெண்டு  குட்டி வாண்டுங்கதான்... அதுங்க பண்ணற சேட்டை.. அப்பா அம்மா ரெண்டு பேரும் மகிழ்ச்சியா இருந்தாலும்  இரண்டு பேருமே நடிக்கறாங்கன்னு  சொல்லி நீங்க ரெண்டு பேருமே ஆஸ்ஹோல்ன்னு சொல்லி தற்கொலை முயற்சி செய்யறது...


அம்மா லெஸ்பியனா ஆயிட்டான்னு சின்ன  வாண்டு சபையில பேசிக்கறது... எல்லாம் எனக்கு ஆச்சர்யம்.. நாமதான் புள்ளைங்களுக்கு எதுவும் தெரியாம மக்குஅ மாதிரி வயசுக்கு வந்து வளர்த்து தொலையறோம்....


 இதே போல  அந்த பையனுக்கு வாங்கி கொடுக்கும் அந்த கால வீடியோ கேமரா  அதை வைத்துக்கொண்டு அந்த பையன் எடுக்கும்  காட்சிகள்.. சின்ன பெண்களடன் அவன் அப்பன் போல பெயிண்ட் அடித்து மகிழ்ச்சியில் திளைப்பது என்று படம் முழுக்க ஜிகர்தண்டாதான்.

புருஷனுக்கும்  பொண்டாட்டிக்கும் ஒரு இன்ட்டிமசி இருக்கும் இல்லை... அப்படி ஒரு காட்சி கார்ல ரெண்டு பேரும் மேட்டர் பண்ண  ஆரம்பிக்கும் அந்த காட்சியில்  மனைவியாக நடித்த பெண் அசத்தி இருக்கின்றார்.. முக்கியமாக நாக்கை வைத்துக்கொண்டு செய்யும்   அந்த சின்ன சேட்டை கவிதை.

அப்பாவும் அ ம்மாவும் முத்தம் கொடுத்துக்கொள்வதை பார்க்கும் சின்ன வாண்டு உதட்டை முத்தா கொடுப்பது போல வைத்துக்கொண்டு சேட்டை பண்ணுவது.... படத்துல கடைசி  காட்சியில் சின்ன பையன் அப்பா அம்மா  ரெண்டு பேரும் என்ன பண்ணறாங்கன்னு போய் பார்த்துட்டு வரலாம்ன்னு சொல்ல வேணாம் அவுங்களை டிஸ்டர்ப்  பண்ணாத அவுங்களே இன்னும் சில மணி  நேரங்களில் சரிப்படுத்திக்குவாங்கன்னு சொல்லறது என்று அசத்தி இருக்கின்றார்கள்..


======
படத்தின் டிரைலர். 18+


========
படக்குழுவினர்  விபரம்Directed by Daniele Luchetti
Written by Daniele Luchetti, Sandro Petraglia, Stefano Rulli, Caterina Venturini
Starring Kim Rossi Stuart, Micaela Ramazzotti
Music by Franco Piersanti
Cinematography Claudio Collepiccolo
Editing by Mirco Garrone
Distributed by Cattleya
Release dates
7 September 2013 (TIFF)
3 October 2013 (Italy)
Running time 100 minutes
Country Italy
Language Italian=========

பைனல்கிக்.


 கண்டிப்பாக வயதுக்கு வந்தோருக்கான திரைப்படம் படத்தில் நீயூட் மாடல்கள் அவுத்து போட்டு கிலி ஏற்ப்படுத்துவார்கள்..  கண்டிப்பாக கணவன் மனைவி, காதலன் காதலி போன்றோர் அவசியம் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று  கேட்டுக்கொள்கின்றேன்...  இந்த படம் கண்டிப்பாக பார்க்கவேண்டிய திரைப்படம். இத்தாலி என்றாலே  நம்ம ஊர் அம்பாசிட்டர் போல  சின்ன வெர்ஷனில் மஞ்சள் கலர்களில் 1980, களில்  பயண்படுத்திய கார்கள் இந்த படத்தில் நிறைய..  அசத்தி இருக்கின்றார்கள்.... அந்த பசங்க படத்துக்கு  பெரிய பலம்..  நிறைய வீட்டு பிரச்சனைகளை சரிப்படுத்துவது பிள்ளைகளே....  என்பதை இந்த படம் சொல்கின்றது..


=====

படத்தோட  ரேட்டிங்

 பத்துக்கு எழு.,

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

2 comments:

  1. இணையத்தில் சினிமா விமர்சனம் எழுதுபவர்களைச் சினிமாத் துறைக்கு எதிரிகள் மற்றும் குற்றம் செய்பவர்கள் போல் சித்தரித்து , நிஜ வில்லன்கள் என்று ஒரு பத்திரிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்கள் இதற்குத் தயவு செய்து(அவர்களுக்கு) விளக்கம் தர உங்களால் முடியுமா?

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner