மயிலை ராயர் மெஸ்

  



வறுமையை விரட்டி பசி ஆறியவனுக்கு ருசி இரண்டாம் பட்சம்தான்...
பறக்கும் ரெயில்  வேலை 1994 ஆம்  ஆண்டு நடக்கும் போது ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம்  இரும்பு தூக்கி உழைச்சா...40 ரூபாய்... மாசம் புல்லா..... வேலை இருந்தா பிரச்சனை இல்லை..ஆனா பத்து நாள் பாஞ்சி நாள்தான் வேலை இருக்கும்.
அடுத்த பாஞ்சி   நாளைக்கு என்ன பண்ணறது...??

 சாப்பாட்டுக்கு யார்க்கிட்ட போய் தலை சொறிந்து  நிற்பது என்ற பயம்....அதனாலே காசை விசிறி செலவு செய்யாமல்  நினுக்கி நினுக்கி செலவு செய்வேன்...

மதிய சாப்பாட்டுக்கு....  12 மணிக்கே பசி எடுத்துக்கும் எப்படி ஒரு மணி ஆவும்ன்னு பார்த்துட்டு  சாப்பாட்டுக்கு ஓடுவோம். டன் கணக்கு இரும்பை  ....தோள்ள  வச்சி தூக்கி  இரண்டாவது மாடிக்கு தூக்கி கிட்டு போவனும்... பகபகன்னு பசிக்கும் ஓத்தா  ருசியாவது  மயிராவது சோறு எங்க கிடைக்கும்னு ஓடுவோம்.

திருவல்லிக்கேணி பேருந்து நிலையத்தை  தாண்டி கண்ணகி சிலைக்கு போகும் முன்  ஒரு  பக்கிம்காம் கெனாலுக்கு போடப்பட்ட பிரிட்ஜ் இருக்கும்..  அந்த பிரிட்ஜ் ஓரத்தில் ஒரு பெண்மணி தட்டுசோறு விற்றுக்கொண்டு இருப்பாள்...

ஒரு  கூடையில் சாப்பாடு இருக்கும்... சில்வர் தட்டில் ஆவி பறக்க  அரை தட்டு சாப்பாடு போட்டு மீன் குழம்பு ஊற்றினால் உழைப்பு தந்த களைப்பில் நொடியில் சாப்பாடு  காணமல் போய்விடும்... அவள் கட்டுமஸ்தான அன்னலக்ஷ்மி.. என்னை அவளுக்கு பிடிக்கும்...சாராயம் சாப்பிட்டு விட்டு, கஞ்சா அடித்து விட்டு வெட்டிக்கதை பேசிக்கொண்டு ஓத்தா வெட்டுவேன் சொருகுவேன் என்று   அலட்டிக்கொண்டு இருப்பவர்கள் மத்தியில் சாப்பிட்டு விட்டு தட்டு அலம்பி வைத்து விட்டு செல்வேன்.. அதனால் என்னை அந்த பெண்மணிக்கு ரொம்பவே பிடிக்கும்.

 அடுத்து  கால் தட்டு சாப்பாடு போட்டு ரசம் ஊற்றும்...ஒரு பெரிய  கருவாடு துண்டை கொடுக்கும்... சாப்பிட்டு விட்டு மாநிலக்கல்லூரி  மதில் ஓரத்தில் கீற்றால் வேயப்பட்ட தற்காலிக கூரை  வீட்டில் இருக்கும்  பாயில் ஒரு பத்து நிமிடம் கிடந்தால்  சொர்க்கம்   கண்ணில் தெரியும்....


பார்ன் இன் சில்வர்  ஸ்பூன்  வளர்ப்பு வளராத காரணத்தால் ஓட்டல் ஓட்டலாக ருசி பார்க்கும் அனுபவத்தை நான் பெற்றதே இல்லை..பசிக்கு சோறு...இப்போது ஒரளவுக்கு சம்பாதிக்க ஆரம்பித்த பிறகுதான் கொஞ்சம் ருசி கேட்கின்றது...அதுவும் சரியான   விலைபட்டியலோடு இருந்தால்...


 கற்பாகம்பாள் மெஸ் சென்றேன்...தயிர்சாதம் மட்டும் இருக்கின்றது என்றார்கள்.. எவ்வளவு என்றேன்.. 50 ரூபாய் என்றார்கள் .. உடனே எழுந்து  வந்து விட்டேன்.. ஆனால்  யாழினிக்கு தயிர்சாதம் என்றால் கொள்ளை  பிரியம்  யாழினிக்காக இந்த  நிலைப்பாடு எதிர்காலத்தில் மாறலாம்.. டெய்லிமா போய் தின்னறோம்.. ஒரு  நாளைக்கு தானே என்று சப்பக்கட்டு கட்டி தயிர் சோத்துக்கு 50 ரூபாய் தந்து விட்டு வரலாம்.


சரி விஷயத்துக்கு வரேன்...


எனது வாழ்வின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிப்பவர்... நண்பர் நட்ராஜ்... என் ஆதார்ச எழுத்தாளர் பாலகுமாரனின் உதவியாளர்... திரைப்படம் இயக்குதல் அவர் கனவு எதிர்பாராத விபத்து காரணமாக காலில் அடிபட்டு வீட்டில் மூன்று மாதமாக கூண்டுப்பறவையாக முடங்கி கிடக்கின்றார்... தற்போது எழுந்து நடக்க ஆரம்பித்து இருக்கின்றார்... சரி அவரை  சென்று பார்த்து விட்டு வரலாம் என்று  சென்ற போது ...

ஜாக்கி மயிலை செட்  ஆயிடுச்சா.???

ஓகே ஏதோ போவுதுங்க...

போரூர் வீடு வாடகைக்கு விட்டாச்சா..?

இல்லைங்க....

ஏன்...

எங்க வீட்டுக்க்கிட்ட  நிறைய வீடு இப்ப கட்டிட்டாங்க... டபுள் பெட்ரூம் எட்டாயிரத்துக்கு போவுது... பட் நம்ம வீடு ஆயிரம் ஸ்கொயர் பீட்.. டிரபிள் பெட்ரூம் கணக்கு ஹால் மட்டும் எட்டுக்கு 30 அடி நீட்டு... பெரிய ஹால் ஒன்பதாயிரம் ஒன்பதாயிரத்து 500 வந்தா விடலாம்ன்னு இருக்கேன்... டிஎல்எப்ல வேலை பார்க்கற பேச்சிலர் பசங்க கேட்கறாங்க.... பொம்பள பசங்களும் கேட்குதுங்க..12 ஆயிரம் வரை  கொடுக்கறோம்ன்னு சொல்லறாங்க...  கண்பார்வையில  இருந்தா கண்டிப்பா விடுவேன்... பட்..  நாம தூரத்துல இருந்தா  அது  சரிவாராது... 

பேமிலியா  வரட்டும்ன்னு இருக்கேன்.... முக்கியமா பொன் வித்யாசரம், மில்லேனியம்,ஒமேகாவுல புள்ளைய சேர்த்துட்டு வீடு வேணும்னு வருவாங்க.. அவுங்களுக்கு வெயிட்டிங்..

28  ஆயிரம் ரூவா ஹோம் லோன்.... அது இல்லாத மயிலை வீட்டு வாடகை குடும்ப செலவுன்னு டயிட்டா போவுது.. பட்... அலச்சல் இல்லை...டெய்லி இரண்டு பேரும்  போக வர 50 கிலோ மீட்டர் பைக்கில பறப்போம்.... இப்ப அது இல்லை... ரொம்ப ரிலாக்சா இருக்கு...

கபாலி கோவிலுக்கு போனிங்க போலருக்கு எப்பியில  போட்டோ போட்டு இருந்திங்க,.. பார்த்தேன்..

 ஆனா எங்க வீட்டுக்கு பின் பக்கம் இருக்கற முண்டகன்னியம்மாளை இன்னும் போய் பார்க்கலை என்றேன்...

 என்று பேச்சு  நீண்டுக்கொண்டு போனது...

சரி ராயர்மெஸ்ல சாப்பிட்டு இருங்கிங்களா..? என்றார்..

 கேள்வி பட்டு இருக்கேன் பட் போனதில்லை....

போய்  சாப்பிட்டு பாருங்க... ருசியில பின்னுவான்....

அப்படியா? எங்க இருக்கு... 

நீங்க எங்க இருக்கிங்க....?

மாதவபெருமாள் கோயிலுக்கு பக்கத்தில்....

லஸ் சிக்னலில் இருந்து டுவேர்ட்ஸ் சந்தோம் சர்ச் போற ரோட்டுல... செகன்ட் லெப்ட்...மயிலை கோழிபிரியாணி கடைன்னு முனையில இருக்கும்... அந்த  லெப்ட்டுல போனா லெப்ட்டுல ஒரு மசூதி இருக்கும்..  அதுக்கு பக்கத்துல ஒரு பழைய காலத்து மாடிவீடு ஒன்னு இருக்கும்... அதுக்கு எதிர்த்தாப்புல சின்ன சந்து போவும்.. அதுல கடைசியல  ராயர் மெஸ் இருக்கு...

கண்டிப்பாக அங்க சாப்பிட்டு பாருங்க....ருசியில பின்னுவான்...

அந்தவழியா நிறைய வாட்டி போய் இருக்கேன்... அங்கதான் இருக்குன்னு தெரியாம போச்சே...?

துக்ளக் சோ இருக்காரு இல்லை...

ஆமாம்...

அவரு காலையில ஆறு மணிக்கு பொங்கல்  சாப்பிட அங்க வருவார்ன்னா  பார்த்துக்கோங்க...

அந்த ஆளுக்கிட்ட இருக்கற பணத்துக்கு இது போன்ற சாதாரண மெஸ்சுல வந்து சாப்பிடுவாரா என்ன? என்று மனதில் யோசித்தேன்....  நான்   அசைவ உணவு  பிரியர் என்றாலும்  எங்க ஆள் கூட சேர்ந்ததில் இருந்து சைவ உணவுகளை  தவிர்க்க  முடியால் உண்பதாலும்.. அந்த ஓட்டலை யாழினி அம்மாவுக்கு யாழினிக்கும் அறிமுகப்படுத்திவைக்க மனதில் குறித்துக்கொண்டேன்...

ஆறு மணிக்கு பொங்கல் சாப்பிட ஒருத்தர் வருவது ...??? சரி போய் பார்த்து விடுவது என்று முடிவு செய்து விட்டேன்.

கடந்த சனிக்கிழமை மதியம் சென்றேன்..,

 இந்த  சந்தில் இருக்கும் மெஸ்சுக்கு அவ்வளவு மவுசா? என்றே நினைத்துக்கொண்டே   மெஸ் என்று சொல்லக்கூடிய இடத்தை பார்த்தேன்.. எனக்கு மயக்கமே வந்து விட்டது... காற்றோட்டம் இல்லாத குறுகாலான  ஓன்டிக் குடித்தன இடத்தில்  மெஸ் இருக்கின்றது.
ஒருவர் துண்டுக்கட்டிக்கொண்டு  வாழை  இலை கழுவிக்கொண்டு இருந்தார்.. நான் மதிய சாப்பாட்டுக்கு போய் இருந்தேன்.. எந்த கூட்டமும் இல்லை.. ஆனால் வாழை  இலை கழுவிக்கொண்டு இருந்தார்...

சார் என்ன  இருக்கு??-

இப்ப எதுவும் இல்லைங்க..

காலையில   ஆறு மணியில் இருந்து பத்து மணி வரைக்கும்,  சாயங்கலாம் மூனு மணியில் இருந்து ஆறு மணி வரைக்கும்தான் வியாபாரம்... ஒன்லி டிபன் அயிட்டம்தான்..

சாயந்திரம் மனைவி பிள்ளையை ராயர் மெஸ்சுக்கு  அழைத்து சென்றேன்.

நாலே நாலு டேபிள்  மூன்று பேர் வேலை  செய்கின்றார்கள்... சின்ன இடம்.. கூட்டம் அதிகம் வந்தால்  நகர முடியாது .. அப்படியான  இடம்.. சமையல் அறையில் இருக்கும் புகை வெளியே செல்ல தமிழக காங்கிரஸ் போல தவியாய் தவித்துக்கொண்டு இருந்தது.

அடை, போன்டா, ராவா தோசைகள் ஆர்டர் செய்தேன்... பொட்டுக்கடலை சட்டினி தாலிக்காமல் ஊற்றினார்கள்  ஊர்மணம்  எட்டிப்பார்த்தது.  முக்கியமாக சாம்பாரில் வசியம் வைத்து  இருக்கின்றார்கள்...

இந்த ருசியை கும்பகோணம், பக்க ஓட்டல்களிலும் மாமி மெஸ்களிலும் உணர்ந்து இருக்கின்றேன்...

கார சட்டினி என்று பச்சையாக பச்சை மிளகாய் அரைத்து விட்டது போல இருந்தது... அடைக்கு அப்படியே சுர் என்று இருந்தது.. குழந்தைக்கு வேண்டாம் காரம்... அவ தாங்கமாட்டா.... என்று  சட்டினி ஊற்றியவர் எச்சரித்தார்....ஸ்டராங்க சக்கரை கம்மியா  காபியை  மனைவி ஆர்டர் செய்தாள்....

ஆறரை மணிக்கு வியாபாரம் குளோஸ்... ஆறு மணி  நேரம்தான்  வியாபாரம்...சின்ன  பேப்பரில் என்ன சாப்பிட்டோம் என்று எழுதி கணக்கு போட்டு பணம் வாங்கி  மீதி சில்லரை கொடுக்கின்றார்கள்..

ஞாயிற்றுகிழமை காலையில் மட்டுதான் என்றார்கள்..

   நேற்று காலை  ஞாயிற்றுக்கிழமை ஒன்பது மணிக்குதான் போனேன்.... நன்றாக தூங்கி  விட்டேன்...


டஸ்டர் கார்.... ஆடி எல்லாம் வெயிட் செய்துக்கொண்டு இருந்தது.. புடவை நன்றாக இறக்கி தொப்புள் தெரிய  கொசுவ்ம் கலையாமல் இருக்க பட்டாபிளை கிளப்  பின்னிட்ட ஆண்டி டஸ்டரில் பார்சல் வாங்கி ஏறிப்போனார்.. விலை உயர்ந்த  கார்கள் நிறுத்த இடம் இல்லாமல் தவியாய் தவித்துக்கொண்டு இருந்தன.....

 சந்தில் பார்த்தேன்...

அமெரிக்கன் தூதரகம் எதிரில் நம் எதிரில் அலட்டிய  பெண்கள் எல்லாம் ரோட்டில் அனாதையாக  பிளாட்பாரத்தில் நிற்பது போல  நின்றுக்கொண்டு வெயிலை சபித்துக்கொண்டு நிற்பார்களே... அப்படி வெளியே நின்றுக்கொண்டு இருந்தார்கள்.... அதுவும் குடும்பம் குடும்பமாக... முக்கால் பேன்ட் போண்டு டீ ஷர்ட்டு போட்ட யுவதிகள் பீட்டரில் வெளுத்துக்கட்டிக்கொண்டு இருந்தார்கள்.

சாப்ட்வேர் ஆண்கள் கண்ணாடி அணிந்து நேற்று சத்தியத்தில் பார்த்த நோவாவை பிரித்து மெய்ந்தார்கள்..

 என்னால் நம்பவே முடியவில்லை.. இந்த துக்கடா ஓட்டலுக்கு இப்படி ஒரு மவுசா??? அது மட்டுமல்ல செட்டு  பொண்ணுங்க குடும்பத்தோட வந்து வெட்டு வெட்டுன்னு வெட்டறாங்க...

 கல்யாண பந்தி போல  ஒரு பேட்ச் முடிந்த உடன் அடுத்த பேட்ச் உட்கார்ந்து கொண்டு இருந்தது.  ஒரு டேபிளுக்கு நாலு பேர் என்று  16 பேர்  உள்ளே உட்கார்நது சாப்பிடலாம்... நெருக்கி உட்கார்ந்தால் 20 பேர்.... அவ்வளவுதான் ராயர்  தாங்குவார்...

அது மட்டும் இல்லை..  பார்சலுக்கு ஒரு  கூட்டம் வெயிட் பண்ணிக்கொண்டு இருந்தது... நான் நாலாவது பேச்சில் இருந்தேன்... ஒரு பேச் பார்சலுக்கு எழுதி காசுவாங்கி  பொட்டலம் போட்டு என்று ராயர் மெஸ் பிசியாக இருந்தது.. பொங்கல் இல்லை என்றார்கள் நான் திரும்பி வந்து விட்டேன்...

 இது போன்ற ஓட்டல்களை கவுர குறைச்சலாக பார்க்கும் இளைய சமுகம்... இங்கே எந்த அலட்டலும் இல்லாமல் சாப்பிடுவது பார்க்க சந்தோஷமாக இருந்தது...

சில மாதங்களுக்கு முன்தான் விலை பட்டியலை திருத்தி அமைத்து இருக்கின்றார்கள்... அந்த புகழுக்கு ரேட்டி நிறைய வைத்து காசு பார்க்கலாம்,...  அப்படி எல்லாம் இல்லாமல் மற்ற ஓட்டல்களை கம்பேர் செய்யும் போது விலை குறைவு ருசி அதிகம்.

 இன்று காலை பொங்கல் வாங்கி   சாப்பிட்டேன்... நல்ல ருசி.. இந்த ருசியை கடலூரில் திருப்பதிரிப்பூலியூர் போலிஸ்ஸ்டேஷன் அருகே இருக்கும் பாடலி சிற்றுண்டி சாலை அய்யர் ஓட்டலில் இந்த ருசியை சிறு வயது முதலே  அனுபவத்து இருக்கிறேன்... அதே ருசி...

 என்ன பெரிய ருசி பொல்லாத ருசி என்று பொங்கல்  ரெண்டு வில்லால் வாயில் போட்டு விட்டு ராயர்மெஸ்சில் யாராவது விதாண்டவாதத்துக்கு கேட்கலாம்...

ருசி உணவில் இல்லை....

ருசி அங்கே இருக்கும் மனிதர்களிடத்தில் இருக்கின்றது...

அங்கே இருக்கும் பழமைதான் என்னை பொருத்தவரை பெரிய ருசி...

இப்ப இருக்கற கடையில ஒரு பொருள் கேட்டுப்பாருங்க... ஓத்தா காதுல ஈயத்தை காச்சி ஊத்தினது போல யார் ஊட்டு  எழவோன்னு காதுல விழாதது போலவெ  இருப்பானுங்க...

காரணிஸ்வரர் கோவில் பக்கத்துல ஒரு ஸ்டேஷனரி கடை...அஞ்சு ரூவா பேனா இருக்குமா-? கடையில யாரும் இல்லை... கடை சாத்தப்போற நேரம். நான்  அவசரமா கேட்கறேன்...  

அந்த தத்தி புத்தகம் படிச்கிக்கிட்டு இருக்கு...

 இருக்கு இல்லைன்னு சொல்லக்ககூட இப்போதைய மனிதர்களுக்கு தெரிவதில்லை...அவர் புத்தகத்தில் இருந்து கண்  எடுத்து என்ன என்று வினவ முற்ப்படும் போது எனது  பின்பக்கத்தை காட்டிய படி விறு விறு என நடக்க  ஆரம்பித்தேன்...

சனிக்கிழமை மதியம் அந்த ஆளு என்னை  பார்த்தாரு...  அதுக்குள்ள சினேகம்...

 என்ன சார் இவ்வளவு லேட்...

பொங்கல் தீந்திடுச்சே....

பார்சல்ன்னா ஒரு கால்மணி நேரம் ஆவும் சார்....

யாரையும்  பெரிய புடுங்கி போல அலட்சியப்படுத்தவில்லை... அதே மரியாதை... அதே பழமை... கொஞ்சம் கூட புதுமைக்கு மாறவில்லை.. இன்வர்டர் தவிர...

எல்லோரையும் அலட்டல் இல்லாமல் சரிசமமாய்  மதித்து புசிக்க உணவு தருவதுதான்  ராயர்மெஸ்சின் வெற்றி.

மயிலை வந்தால்  அருன்டேல் தெருவில் உள்ள 75 ஆண்டுகால பழமை கொண்ட  ராயர்மெஸ்சில் அவசியம் சாப்பிடவும்... ருசி அங்கே வரும் மனிதர்களை  நடத்தும் விதத்தில் ,கவனிக்கும் விதத்தில்,  அந்த பழமையில் ஒளிந்து  இருக்கின்றது...


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

=======



நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

 

13 comments:

  1. ராயர் மெஸ் போன்றே நல்ல சுவை ! !

    ReplyDelete
  2. Actor Nagesh used to come regularly & it is good one as u said the human touch is the Positive point

    ReplyDelete
  3. ராயர் மெஸ்! கேள்விப்பட்டிருக்கிறேன்! அருமையாக பகிர்ந்து கொண்டீர்கள்! வரும்போது பார்க்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  4. தங்களது வாழ்க்கையின் கடுமையை எழுதியது மனதை நோகடித்துவிட்டது.
    ஆனால் இளமையின் வறுமையில் கிடைத்த அனுபவங்கள் வாழ்க்கையின் எதிர் கால்த்தில் .கவனமாக நடக்க உதவும்.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete
  5. 'எங்க ஆள்' என்ன அருமையான அன்பு தோய்ந்த வார்த்தை.!!! 'உங்க ஆள்' அதிர்ஷ்டசாலி என்றால், நீங்கள் அதி அதிர்ஷ்டசாலி என்பேன். நான் 60 இல் மந்தைவெளியில் வளர்ந்தவன். நிறைய ராயர் கபே அனுபவித்தவன். பதிவுக்கு நன்றி. !! ராஜாமணி :)

    ReplyDelete
  6. அண்ணா அருமையான பகிர்வு இது.
    நான் போன ஏப்ரலில் வந்து இங்கே அருமையான டிபன் காபி சாப்பிட்டேன்.விலை நியாயமானது,ருசி மதுரை பிராமணர் ஓட்டல்களின் ருசி போல எனக்குத் தெரிந்தது.சாரு இது பற்றி நிறைய எழுதியுள்ளார்.தன் வீட்டுக்கு யாரேனும் வந்தால் அங்கே சென்று சாப்பிடவும் சொல்லுவார்.

    ReplyDelete
  7. உங்கள் வாழ்க்கையிலிருந்து மற்றவர்கள் கற்றுக்கொள்ள நிறைய விஷயம் இருக்கும் போல...

    ஜாக்கி நான் மாமிசப் பட்சினி எதாவது நல்ல அசைவ மெஸ் பற்றி சொல்லுங்கள்...

    ReplyDelete
  8. ருசி அங்கே வரும் மனிதர்களை நடத்தும் விதத்தில் ,கவனிக்கும் விதத்தில், அந்த பழமையில் ஒளிந்து இருக்கின்றது...

    Well said Jackie..

    When I come to india next time, I will go there and eat..

    ReplyDelete
  9. பகிர்தலுக்கும் கருத்துக்கலுக்கும் மிக்க நன்றி நண்பர்களே.

    ReplyDelete
  10. Anna..
    yesterday ungala, anniya pappava pathi neriya neram pesikittu irunthom., Next month 2 nal chennai varatha plan... oru nal evening veettukku varatha plan. romba veyil chennaiyila entru poivittu vanthavanga ellam sollranga.. Vacation start ayiduvhinna... Intha masam virudhunagar trip.Confirm anathukku appuram phone pannrenna... 3 perum cochin vanganna...

    ReplyDelete
  11. yes, we are very old customer of ராயர் மெஸ்..

    try Gomathi Mess. It best in Myalapore. It near Ramesh Stores in Madaveli Market (opp to Subham Marriage hall) It work in same timing as ராயர் மெஸ்

    VS Balajee

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner