PALERI MANIKYAM: ORU PATHIRAKOLAPATHAKATHINTE KATHA-2009-உலகசினிமா/மலையாளம்/அப்பாவி பெண்ணின் நடு நிசிக்கொலை கதை.




 இந்த படத்தையும் போஸ்டரையும்  இரண்டு வருடங்களுக்கு  முன்னால்  பார்த்து இருக்கின்றேன்...
இது ஏதோ பேமிலி டிராமா என்ற அளவில் இந்த படத்தை  புறந்தள்ளி இருக்கின்றேன்... போஸ்ட்ர் டிசைனில் இருக்கும் த மிட்நைட்  மர்டர் ஸ்டோரி என்று எழுதி இருப்பதை நான் கவனிக்கவேயில்லை....

ஏதோ பெரிசா மலையாளத்துல ஜீலேபி சுட்டு வச்சி  இருக்கானுங்க என்று இந்த டிவிடியை புறந்தள்ளி இருக்கின்றேன்... பட்...


2009 கிருஸ்மஸ் தினத்தன்ற இந்த படம் ரிலிஸ் ஆகி இருக்கின்றது...2010 இல் இணையத்தில் இருப்பவர்கள் இந்த திரைப்படத்தை பற்றி ஏன் எழுதவில்லை அல்லது எழுதி என் கவனத்தக்கு வராமல் சென்று விட்டதா என்ற தெரியவில்லை... அப்படி ஒரு அட்டகாசமாக சுதேசி கிரைம் திரில்லர்....


 கிரைம்  திரில்லரை நேசிப்பவர்கள் அவசியம் இந்த திரைப்படத்தை காணுங்கள் என்று பைனல்கிக்கில் பரிந்துரைக்காமல்  இப்போதே சொல்லி  விட்டேன்.,.. நண்பர்களே....

தம்பி... ரமேஷ்  ஒரு  சினிமா ஆர்வலன்.... படம் பார்த்த  அடுத்த நொடி என்னை படம் பார்க்க  சொல்லி  நச்சரிக்க வைப்பதுதான் அவன் வேலை... அவன்  நச்சரிக்க வைத்து பார்க்க சொன்ன படங்கள் இதுவரை சோடை போனதில்லை... அண்ணே   மிராக்கிள்  இன் செல்நம்பர் செவன்  கொரிய படம் பாருங்க....  பாருங்க... என்று படுத்தி எடுத்தான்..  ஒரு வாரத்தில்   ஒன்பது முறை  படம் பார்க்க சொல்லி போன்  செய்து படுத்தி எடுப்பான்.... அப்படித்தான் இந்த படத்தையும் பார்க்க சொல்லி படுத்தி எடுத்தான்.... அவன் பார்க்க சொல்லும் படங்கள்... அடுத்த நொடியே விமர்சனம் எழுத தூண்டுபவையாக இருக்கும்....

(நன்றி தம்பி ரமேஷ்)



  இது ஒரு உண்மைக்கதை ஆனாலும் அதை எடுத்துக்கொண்டு விளக்கி  சொல்லும் இடத்தில்தான் இயக்குனர் ரஞ்சித் வென்று விட்டார்...


தமிழகத்தில் நடந்த பிரபல கொலைவழக்குகள் பற்றி நிறைய புத்தகங்கள்  வெளி வந்து இருக்கின்றன... இங்கே மனிதர்களை புனித பிம்பங்கலாய் மட்டுமே பதிவு செய்து வைத்து இருக்கின்றோம்.... எந்த பிரபலத்துக்கும் மைனஸ் பற்றிய பதிவுகளை பதிவு செய்து வைப்பதேயில்லை....அதனாலே அந்த புனித பிம்ப தேன் கூட்டின் மீது கல் எறிய படைப்பாளிகள்   நிறையவே யோசிக்கின்றார்கள் அதனாலே இது போன்ற  படைப்புகள்  சாத்தியமற்று போகின்றது... கட்டற்ற சுதந்திரம்  மட்டுமே நல்ல படைப்புகளை   உருவாக்கும்.... சரி விஷயத்துக்கு வருவோம்.

இந்த திரைப்படம் உருவான கதை ரொம்பவே சுவாரஸ்யம்....



வடக்கு கேரளாவில்  கோழிக்கோட்டுக்கு  அருகே இருக்கும் பல்லேரி கிராமத்தில்  நடு இரவில் ஒரு இளம் பெண்  கொடுரமாக ரேப் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகின்றாள்...... அவள் பெயர் மாணிக்கம். புருட்டல் ரேப் மர்டர்.....20 வயது இளம்பெண்  கிராமம் பரபரப்பாகின்றது....


ஆனால்  அந்த கொலையை   ஊர்காரர்கள்  மூடி  மறைக்க முயற்சி செய்கின்றார்கள்.  ஆனால்  அந்த ஊரில் இருக்கும் கம்யூனிஸ்ட்டுகள் அந்த பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொல்லி... சந்தேகத்தின் பேரில் மூவர் அரெஸ்ட் செய்யப்பட்டு ... கொலை வழக்கை போலிசார் திறம்பட விசாரிக்கவில்லை என்று கூறி  கொலையாளிகளை ரிலிஸ் செய்து விடுகின்றது..

 மாவட்ட அமர்வு நீதி மன்றம்... அந்த சின்ன கோர்ட்.. அந்த பெண்ணி கொலைக்கான உண்மையை கண்டுக்கொள்ளாமலே... அதாவது அந்த அப்பாவி  பெண்ணுக்கு நீதி கிடைக்காமலே அந்த கொலைகேஸ் அந்த அமர்வு நீதிமன்றத்தின் சவ பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டு விடுகின்றது....

ஆனால்  உண்மைகள்  ஒரு போதும் உருங்குவதில்லை.. அது மாமங்கம் ஆனாலும் உண்மை வெளிவந்தே தீரும்...


ஊரில் பொதுவாக எது நடந்தாலும் எல்லோருக்கம் தெரிந்து விடும் முக்கியமாக  கிராமத்தில் எல்லோருக்கும் யாரை யார் வைத்து இருக்கின்றார்கள்...  எத்தனை கொழுந்தன் அண்ணியை விட்டு வைக்கவில்லை.. மருமகளிடம் விளையாடி அருவா மனையால் வெட்டு வாங்கி விந்தி விந்தி நடக்கும் மாமனார்கள் வரை எல்லாக்கதையும் தெரியும்... 

முக்கியமாக புருஷனுக்கு தெரிந்தே...  பணம் இருக்கும் ஊர் பெருசுகள் அவர்களின் மனைவிகளிடம்   விளையாடுவார்கள்...சுப்ரமணிபுரம் படத்தில்  லைட்டு செட்டு போடுறவன்  வீட்டு ஊப பெரிசு போகுமே அது போல.. எல்லாருக்கும் எல்லா விஷயமும்  தெரியும் ... ஆனாலும் வெளியே வெள்ளையும் சொல்லையுமா  நடப்பாங்க... ஆக்ஷுவல எப்ப உண்மை தெரியும்ன்னா....   ஊர்ல பணம் இருக்கும் பெரிசுங்க  பொண்ணுங்க கிட்ட விளையாடிட்டு ஒரு நாள் மண்டையை போடும் போது..  புருஷன் குத்துக்கல்லாட்டம் இருக்க சொல்லவே.. அங்கே சொத்துக்கு  சக்காளித்தி சண்டை போடுவாளுங்க...

ரைட்... டாபிக் எங்கேயோ போவுது இல்லை...

கொலை   நடந்த பெலரியில்  சரியாக ஒன்பது வருடத்துக்கு பிறகு 1959 ஆம் ஆண்டு ஒரு பையன் பொறக்கறான்...  அவன்  பேரு ராஜீவன் .. பத்து வருஷத்துக்கு முன்ன நடந்த கொலையை  கண்டிப்பா  கிராமத்தில் இருக்கும் பொது ஜனம் கண் காது மூக்கு வச்சி  பேசினாலும், உண்மை என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்தே இருக்கும் . 


முக்கியமாக  அங்கே வாழ்ந்த கம்யூனிஸ்ட்டுகளுக்கு நன்கு தெரிந்து இருக்கும் பணபலம்முள்ள மனிதரை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது   அல்லவா?- ரைட்... அந்த உண்மைகள் கண்டிப்பாக வாய் பேச்சோடு  போகாமல் ராஜீவன்  காதுகளிலும் பரபபரப்பாய் விழுகின்றது...  அந்த கொலை பற்றி நிறைய தகவல்களை சேகரிக்கின்றான்.. இயல்பிலியோ கவிதை எழுதும் திறன் படைத்த ராஜீவன்... இந்த கொலை மற்றும் இன்ன பிற  தகவல்களை எல்லாம்  சேகரித்து  நாவலாக PALERI MANIKYAM: ORU PATHIRAKOLAPATHAKATHINTE KATHA.. என்ற பெயரில் எழுதி வெளிவருகின்றது...



(அரை நூற்றறாண்டுக்கு முன் நடந்த மாணிக்கம் கொலையை   நாவலாக அச்சில் ஏற்றியவர்...T. P. Rajeevan)


அந்த நாவலை படித்த  இயக்குனர் ரஞ்சித் கிஞ்சித்தும் மாற்றம் செய்யாமல்  அதே நாவல் பெயரில் இந்த படத்தை எடுக்கின்றார்.

1950 ஆண்டு இந்த கொலை  நடக்கின்றது...   கேஸ் சம்பந்த பட்ட எல்லோரும் பண பலத்தை வைத்து வெளியே வந்து விட்டாலும்... அந்த  மூடி மறைக்கப்பட்ட கொலையாளி யார் என்ற  ஒத்தைக்கேள்வியோடு நாவல் பயணிக்கின்றது..


1950 ஆண்டு வாழ்வியல் முறையும் காஸ்ட்யூமும் படக்குழுவினர் கண் முன் நிறுத்துகின்றார்கள்... நாவலைவிட திரைப்படமாக எடுப்பதில் தான் பெரிய  பிரச்சனை இருக்கின்றது... எழுதி  விடலாம் என்ன வேண்டும் என்றாலும் எழுதலாம்.,.. ஆனால் காட்சியாக ஒரு   பிரேம் வைக்க நாக்கில் நுரை தள்ளி விடும்.... அந்த சவாலை அனாயசமாக எதிர்கொள்கின்றார்கள் படக்குழுவினர்.....


மம்முட்டி( ஹரிதாஸ்) ஒரு டிடெக்டிவ்.. அவருடைய  தோழி கிரைம் அனாலிஸ்ட்  ரெண்டு பேரும் பெல்லரி வருகின்றார்கள்... ஏன் வருகின்றார்கள் என்ற  கேள்வியை மம்முட்டியே தன் வரலாறு  கூறுவது போல கூறுகின்றார்...

 இந்த கொலை  கேசை கண்டு பிடித்து  பழிக்கு பழி வாங்குவது என் நோக்கம்  அல்ல... ஆனால் நான் பிறந்த அதே இரவில் அப்பாவில் பெண்   மாணிக்கம் கொலையாகின்றாள்.. அந்த கொலையாளி யார் என்று யாருக்கும் தெரியவில்லை...  


உண்மை தெரிந்தவர்கள் பலர் இறந்து போய் விட்டார்கள்..  அந்த கொலைக்கு சம்பந்தமில்லாதவர்கள் இரண்டு மூன்று பேர்  வாழ்கின்றார்கள்...   ஆனாலும் அந்த படுபாதக செயலை செய்தது யார் என்று நான் கண்டுபிடிக்க வேண்டும் என்று  மம்முட்டி சொல்வதும்... அத்துவானக் காட்டில் கண் கட்டி விட்டது போன்ற இந்த கேசின் முடிச்சிகளை எப்படி அவிழ்க்கின்றார்கள் என்பதுதான் படத்தின் சுவாரஸ்யம்... 


 ராஜீவன் மட்டும் மற்ற இளைஞர்களை போல இந்த கொலைக்கேசை கேள்வி பட்ட உடன்  சாரயாம் கள்ளு குடித்து மனைவியோடு செட்டில்  ஆயிருந்தால்.. நாம் கொலையான மாணிக்கத்துக்கு வருத்தப்பட்டு இருக்க போவதில்லை.. அதை மிக அழகான நாவலாக ஆக்கிய காரணத்தால்தான் இன்று அரை நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த அப்பாவி மாணிக்கத்தின் வாழ்கைக்கும் அவள் மரணத்திற்கும் இன்று வருத்தப்படுகின்றோம்..


பிளாஷ் பேக்கின் ஊடே மம்முட்டியும் நின்று கொண்டு கதை சொல்லும் உத்தி அருமை.... அந்த விஷயத்துக்கு ரஞ்சித்துக்கு  வாழ்த்துகள்... ஏதாவது  ஒரு படத்தில்  இன்ஸ்பயர் ஆகி இருந்தாலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.


 கல்யாணம் ஆகி ஏகப்பட்ட கணவுகளுடன்  படகில்  வந்த  மாணிக்கம்..... எண்ணி பதினோராம் நாள்   சவமாக பனை ஓலை சுற்றப்பட்ட பாயில் மார்ச்சுவரிக்கு போஸ்ட் மார்டத்துக்கு செல்லும் காட்சிகள் வயிற்றை பிசையவைப்பவை.

 மூன்று வேடங்களில் மம்முட்டி கலக்கி இருக்கின்றார். கூடவே வரும் வேலாயுதமும் சான்சே இல்லை...

சுவேதா  மேனன் ஒரு நடிப்பு   ராட்சசிதான்.. சந்தேகமேயில்லை.... அம்மா கேரக்டரிலும்   இளமையான கேரக்டரிலும் அசத்தி இருக்கின்றார்.... சின்னதா பார்த்தா சின்னதா இருக்கார்... பீப்பாவாய் பார்த்தால் அப்படியும் இருக்கின்றார்...  என்ன நடிப்பு....-- ? என்ன நடிப்பு ... சான்சே இல்லை.. 

முக்கியமாக காமத்தில்  இரண்டு பேருமே  மூழ்கும் முன் மம்முட்டி சாரயம் குடித்து விட்டு காலால்  தொப்புளில் இருந்து மார்பு கச்சை வரை கால் போய் அந்த முடிச்சை அவிழ்க்கவும் இதற்கு  மேல் பொறுக்க முடியாமல் அப்படியே உட்கார்ந்து விடும்   அந்த காட்சி  ஒன்று போதும்... உருண்டு புரண்டு விழ  தேவையேயில்லை.


 இரண்டு பேரின் காமம் எத்தனை அப்பாவிகளை கொள்ள வழிவகுக்கின்றது..?


   மாணிக்கமாக நடித்த பெண்...  நன்றாகவே நடித்து இருக்கின்றார்... மம்முட்டி தோழியாக நடித்தவர்.. எல்லா ஷாட்டிலும் சிகரேட்டுடன் இருக்க வேண்டும் என்று யார்  ஐடியா  கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. சில காட்சிகள் தினித்தது  போல இருந்தது... அதே போல போலிஸ் நாய் மோப்பம் பிடிக்காமல் மழுங்கி மழுங்கி  நிற்க போலிஸ் அந்த நாயை வேண்டும் என்றே   இழுத்துக்கொண்டு ஓடும் அந்த காட்சிகள் மைனல் ரகம்.. மற்றபடி 1950, ஆம் ஆண்டு கால கட்டத்தை, உடை  சிகை அலங்காரங்கள் மூலம்  கண்  முன்  நிறுத்துகின்றனர்.


பார்பர் கேரக்டரில் அசத்தும் சீனுவாசன்... தனக்கு என்று  எதுவும் பெற்றுக்கொள்ளாமல்  அந்த மர்டர் கேசை  வைத்து பத்து ஏக்கர் நிலத்தில் பள்ளியை விரிவு படுத்தும் கம்யூனிஸ்ட் என்று பல கேரக்டர்கள் நெஞ்சில்  நிற்கின்றார்கள்.


===========
படம் வாங்கிய விருதுகள்.
Kerala State Film Awards
Best Film – A.V. Anoop and Maha Subair
Best Actor – Mammootty
Best Actress – Shweta Menon
Best Makeup Artist – Ranjith Ambadi, George (Mammootty)
Asianet Film Awards
Best Director – Ranjith
Millennium Actor – Mammootty
Vanitha Film Awards[12]
Best Director – Ranjith
Best Actor – Mammootty
Best Supporting Actress – Shweta Menon
Surya Film Awards[13]
Best Actor – Mammootty
Best Actress – Shweta Menon
Best Background Score – Bijibal
Best Make-up – George

====
 படத்தின் டிரைலர்.



======
படக்குழுவினர்

Directed by Ranjith
Produced by A. V. Anoop
Maha Subair
Screenplay by Ranjith
Based on Paleri Manikyam: Oru Pathirakolapathakathinte Katha 
by T. P. Rajeevan
Starring Mammootty
Mythili
Shwetha Menon
Sreenivasan
Gowri Munjal
Music by Sharreth
Bijibal
Cinematography Manoj Pillai
Editing by Vijay Sankar
Distributed by Varnachithra Big Screen
Release dates
5 December 2009
Running time 155 minutes
Country India
Language Malayalam

======
பைனல்கிக்.

 டிடெக்ட்டிவ் படங்கள்  மலையாளத்தில் அதிகம் .. ஜெய்சங்கர் படத்தோடு துப்பறியும் படங்களுக்கு தமிழில்  மவுசு குறைந்து விட்டது.. தெகிடிக்கு முன் எனக்கு சட்டென  நினைவுக்கு வரும் டிடெக்ட்டிவ்  படம்..  விசு மற்றும்  எஸ்வி சேகர் பேக்கு போல நடிக்க டெல்லிகணேஷ் வில்லன் பாத்திரம் ஏற்று நடித்த படம்தான் எனக்கு நினைவுக்கு வருகின்றது... ரொம்ப ரொம்ப  அற்புதமான திரைப்படம் இந்த திரைப்படம் அவசியம் பார்த்தேதீரவேண்டிய திரைப்படம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை... மேமரிஸ் ஆப் மர்டர் கொரிய படத்துக்கு பிறகு என்னை அசத்திய சு தேசி திரைப்படம் இது என்று நினைக்கின்றேன்.
வெல்டன் ரஞ்சித்.


=====


 படத்தோட ரேட்டிங்.

 பத்துக்கு எட்டு

===========
  பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.



நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

5 comments:

  1. ஏற்கெனவே இது குறித்து எழுதியிருக்கிறேன் ஜாக்கி
    என் பக்கத்தையெல்லாம் நீங்க படிச்சாத்தானே?
    http://asifmeeran.blogspot.ae/2010/06/blog-post_24.html

    ReplyDelete
  2. விசு மற்றும் எஸ்வி சேகர் பேக்கு போல நடிக்க டெல்லிகணேஷ் வில்லன் பாத்திரம் ஏற்று நடித்த படம்தான் எனக்கு நினைவுக்கு வருகின்றது... /////நெஜமாவே தெரியலியா இல்ல இதுல எதும் குறியீடு இருக்கா...அந்த படம் பெயர் சிதம்பர ரகசியம்... ராஜ் டி.வி. குழுமத்தின் ஏதாவது ஒரு சேனல்ல இந்த படம் ஓடிக்கிட்டே இருக்கும் ...

    ReplyDelete
  3. அண்ணாச்சி... இப்பதான் வாசிச்சேன்... ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க... இனிமே பழைய பதிவுகளை புரட்டி பார்க்கின்றேன்... மிக்க நன்றி..

    ReplyDelete
  4. Anna...
    Drishyum Pakkalayanna..
    CBI Dairy Kurippu ( 6 series) irukkunna.. Parunganna...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner