சமீபத்தில் மனதை கொள்ளை கொண்ட திரையுலக பெண்கள்...


பரினிதி சோப்ரா...


சுதேசி  ரொமான்ஸ் பார்த்த நாளில் இருந்து இந்த பெண்ணின் முகம்  அவ்வப்போது நினைவில் வந்து போய்க்கொண்டு இருக்கின்றது... 

இந்தி படங்களில் காஜலுக்கு பின் எனக்கு மிகவும் பிடித்த பெண்மணியாக  இந்த பெண் இருக்கின்றார்... அதற்கு  அவர் ஏற்று  நடிக்கும் பாத்திரங்களும் அவருக்கு  இந்த அளவு வளர்ச்சியை பெற்றுக்கொடுத்து இருக்கின்றது என்பதுதான் உண்மை....

உதட்டு முத்தம் என்பது இந்திய மற்றும் தமிழ் சினிமாக்களில் தீண்டதகாத செயலாகவே  காலம் காலமாக புறம்தள்ளிவருகின்றது.....ஆனால்  சென்னை  மெரினா கடற்கரையில் பகல் நேரத்திலேயே  உதட்டு முத்தம் சர்வசாதரானமாகியும் இன்னும் தமிழ் சினிமா ரொம்பவே யோசிக்கின்றது..... 

உடலுறவு  செய்வது போல டான்ஸ் மூவ் மென்ட்டை பார்த்து தொலைப்பதற்கு ரொமான்சுக்கு மிக முக்கியமான முத்தத்தை  உதட்டில் கொடுக்கும் காட்சிகளை  பார்த்து விட்டு போகலாம்... அதில் ஒன்றும் பெரிய கலாச்சார சீர்கேட்டினை இந்தியா சந்திக்கும் என்று எனக்கு தெரியவில்லை... எல்லா ஆங்கில சேனல்களிலும் உதட்டு முத்தம் வரவேற்பரைக்கு வந்து கொடுத்துக்கொண்டு இருக்கும் போது...... சரி விடுங்க...  அது கலாச்சார காவலர்களின் கவலை.... 

பரினிதா விஷயத்துக்கு வருவோம்.

முக்கியமாக இந்த  பெண்ணின்  நடிப்பு சான்சே இல்லை....

 முக்கியமான ஹசி தோ பசி இந்தி படத்தில் இந்த பெண்ணின் பர்பாமென்சில்   ஆச்சர்யப்படுத்திவிட்டார்... மாத்திரை போட்டுக்கொண்டு திரியும் இன்டலெக்சுவல் கேரக்டர்...

 சான்சே இல்லை....

 காதலாகட்டும் காமமாகட்டும் அல்லது தந்தையுடனான  நேசமாகட்டு பர்பாமென்சில் பின்னி இருக்கின்றார்... அந்த பார்வை.. எப்படி பார்த்தால் பாவமாக இருக்கும்  எப்படி பார்த்தால்  பார்ப்பவனுக்கு போதை எற்றும் ஏன்று தெரிந்து  வைத்து இருக்கின்றார் பரினிதா... அந்த  இரண்டு கண்கள்  அவருடைய ஸ்பெஷல்....

பரினிதி ...

 நடிகை பிரியங்கா சோப்ராவின் கசின்....

ஹரியானா பெற்றடுத்த கலைதாயின் செல்லமகள்....

 இங்கிலாந்தில் உள்ள பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கல்லூரியில்  டிரிபில் டிகிரி வாங்கி பைனான்ஸ் துறையில் ஹானர்ஸ் பட்டம் பெற்றவர். 25 வயசுதான் ஆவுது...  இதுவரை இந்த பொண்ணு  நடிச்சி வெளிய வந்து இருக்கும் படம்  நாலே நாலுதான்... ஆனா விருதுகளை வாங்கி குவிச்சி இருக்கு...

யாஷ் ராஜ் பிலிம்சில் அக்கவுண்ட் பக்கம் வந்துட்டு அப்படியே டிராக் மாறி நடிக்க வந்த பொண்ணு....

சும்மா நான்  அப்படி நடிக்க மாட்டேன்... இப்படி நடிக்கமாட்டேன் என்று   உதார் விடும் ரகம் அல்ல.. ஆனால் பாத்திரத்தை உணர்ந்து நடிக்கின்றார்... ஹசித்தோ பசி படத்தில் கண் கலங்க வைத்து விடுகின்றார்.... இன்னும் இந்த பெண் பல உயரங்களை அடைவார் என்ற  நம்பிக்கை இருக்கின்றது...

கவர்ச்சியாக யார் வேண்டுமானலும் நடிக்கலாம் ... ஆனால் பாத்திரம் உணர்ந்து நடிப்பது என்பது  ஒரு சிலருக்கே கை வரும்... உதாரணத்தக்கு மவுனகீதங்கள் படம் வந்த போது சரிதா பாக்கியராஜ்  பொண்டாட்டியாவே வாழ்த்துடுச்சின்னு எங்க  கிராமத்துலேயே பொம்பளைங்க பேசி  நான் கேட்டு இருக்கேன்...  அது மாதிரி இந்த  பொண்ணு பர்பாமென்ஸ்ல பின்னுது...

 இதுவரைக்கு  நாலு படம்தான் நடிச்சி இருக்கும் அதோட கசின் பிரியங்கா சோப்ராவை விட அதிகமான  அவார்டுகளை வாங்கி குவிச்சி இருக்கு....


வாழ்த்துகள்

பரினிதி சோப்ரா.

======
அடுத்து ஆஹா கல்யாணம் வாணிக்கப்பூர்....


டெல்லி பொண்ணு...சப்பாத்தி வளர்ப்பு... சும்மா கின்னுன்னு ஒரு கேஷூவல் லுக் விட்டா பசங்க வௌவௌத்து போயிடுவானங்க.

சான்சே இல்லை... நெடு நெடுன்னு சத்யராஜ் போல உயரம்...

டான்ஸ் ஆட வந்துட்டு  காதல் கொண்டேன் சோனியா போல கடமைக்கு ஆடவில்லை... அவ்வளவு எணர்ஜி.. ஆஹா கல்யாணத்துல  அசத்தினாலும்... சுதேசி ரோமான்ஸ் திரைப்படத்தில் நடிப்பிலும் லிப் லாக் காட்சிகளிலும்  அசத்தி இருக்கின்றார்.


இவ்வளவு எனர்ஜட்டிக்காக ஒரு பெண்ணை திரையில் பார்த்து வெகு நாள் ஆகி விட்டது... நிறைய பிரேம்களில் நடிக நடிகைகள் கடனெழவே என்று ஆடி பார்த்து இருக்கலாம்..ஆனால்  வாணி பொறி கலக்க என்ர்ஜியாக உற்சாகமாக ஆடி இருக்கின்றார்....  அந்த பிரேம்களை பார்க்கையிலேயே உற்சாகம் உங்களுக்கு தன்னால் ஒட்டிக்கொள்ளும் தன்மை கொண்டவை... அவ்வளவு எனர்ஜி... முக்கியமாக இரண்டாவத கல்யாண பாடலில் வாணியின் ஆட்டம்  செம.


படம் பார்த்து நான்கு வாரத்துக்கு மேல் ஆகி   விட்டது.. ஆனாலும் உடம்பில் இன்னும் வாணி ஜுரத்தின் அறிகுறி  உடம்பில் இன்னும் மிச்சம் இருக்கின்றது...  காதில்  கம்மல் இல்லை, பூ இல்லை... நெற்றியில் பொட்டு இல்லை....பழமை வாதத்தில் திளைத்து போன  தமிழ் ரசிகனை அசரடிக்கும்  எந்த அடிப்படை அழகும் இல்லை....உதாரணத்துக்கு ஒல்லயாக வரும் நடிகர்கள் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க... கொஞ்சம் பூசினார் போல குண்டடிப்பார்கள்...  ஆனால் வாணியிடம் அப்படி  எந்த லட்சனமும் இல்லை.... பெரிய நெற்றி, ஒல்லியான உடல்வாகு.... சத்யராஜே ஆப் பீட் ஸ்டூல் போட்டு ரொமான்ஸ் செய்யும் உயரம்,.. 

ஒல்லியான தெகம்.. தெகிலான வயிறு.. சிரித்தால்   உதடு சற்றே கோனால், பெரிய நெற்றி, பல  பிரேம்களில் கம்மல் இல்லை... பெரிய நெற்றியல்  பொட்டு இல்லை... முக்குத்தி  இல்லை.... இருந்தாலும்  வாணியை தமிழ் ரசிகனுக்கு பிடித்து போகின்றது....

நடித்த படங்கள்  இரண்டே இரண்டுதான்....


வாழ்த்துகள் வாணி.

=======

அடுத்ததாக இந்த கலர்ஸ் டிவி சிரியலான Na Bole Tum Na Maine Kuch Kaha சீரியல் பாலிமர் தொலைகாட்சியில் டப்பிங் ஆகி ஒளிபரப்பாகி வருகின்றது.... நெஞ்சம் பேசுதே என்ற பெயரில் ஒளிப்பரப்பாகும் இந்த சீரியலில் மேகாவாக நடிக்கும் இளம் விதவை அகன்க்ஷா அசத்தி இருக்கின்றார்...


 முகத்தில் இருக்கும் மென் சோகம்   இளம் விதவை கதாபாத்திரத்தில்   நடித்த இந்த பெண்ணின்  வெற்றி... தொடர்ந்து சீரியல்  பார்க்கவில்லை என்றாலும்   அவ்வப்போது எப்போதாவது கண்ணில் படும் வேலையில்  சேனல் மாற்றாமல் இருக்க அகன்க்ஷாவும் ஒரு காரணம்...


வாழ்த்துகள் அகன்க்ஷா


=========
அப்புறம் விஜய் டிவி டிடி...

கேஷூவல் டாக்..

 எந்த செலிபிரிட்டி வந்தாலும் அதே உற்சாகம்.... அதே பிரண்ட்லி நஸ்...  அப்படி ஷோ பண்ணறது கஷ்டம் ,... காரணம் எல்லாரையும் புடிச்சிடாது.. சில பேரை பார்த்தாலே  இவங்க கூட அரைமணி நேரம் பேசியாகனுமான்னு  நம்ம முகதே காட்டிக்கொடுத்துடும்... ஆனா அதே உற்சாகம் யாரக இருந்தாலும்... அந்த எனர்ஜி...  அல்லது அவரது 14 வருட அனுபவத்தால்  இது சாத்தியமாகி இருக்கலாம்..
டிடி கேமராவுக்கு முன்ன நின்னு ஆங்கர் பண்ண முதல் அவுட்டோர் புரோகிராம்... அல்லது  மொத காம்பியர் செஞ்ச புரோகிராம்.... சென்னை சிதம்பர கிரிக்கெட் ஸ்டேடியத்தில்  நடந்த ,நட்சத்திர கிரிக்கெட்டான்னு யாராவது தெரிஞ்சவங்க  கேட்டு சொல்லுங்கப்பு...


வாழ்த்துகள் டிடி


ச்சே வாழ்த்துகள்.


 விஜய் டிவி டிடி  
பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

3 comments:

 1. DD அளவுக்கு அதிகமா பேசும் பொண்ணு. சிரித்தால் மிகைபடுத்தி தான் சிரிக்கும். செயற்கை தன்மை தனியாக தெரியும்... உற்று கவனித்து பாருங்கள்.

  ReplyDelete
 2. அண்ணே பரிநிதியை டச் பண்ண வேணாம்.. அது என் ஆளு (மாசா விளம்பரம் பாக்குறதே அதுக்காகத்தான்)
  அப்பால இதுகளையெல்லாம் அடுத்த சாய்ஸில் வச்சிருக்கேன்.
  - ரஞ்ச்ச்சனாவில் நடித்த (ஸ்ப்ரைட் விளம்பர தேவதை) ஒன்சைட் லவ் கேரக்டர் மற்றும் பேர் & லவ்லியில் வரும் யாமி கவுதம்.

  ReplyDelete
 3. Mr Jackie Sekar

  Very well said ... I can't agree with you anything better. After Kajol, Parineethi is one of the very few naturally talented actresses... Have you watched her debut in Ladies Vs Ricky Bahl... she was a real cracker...

  Vani Kapoor is another great find,..

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner