அழகு என்றால் அப்படி ஒரு அழகு…
அந்த பெண் சிம்ரன் போல நடிகை இல்லை ஆனால்
சிம்ரன் திரையில் வந்தால் தேமே என்று உட்கார்ந்து இருக்கும் ரசிகர் கூட்டம் இந்த பெண் திரையில் வந்தால் கை கட்டி உட்கார்ந்து
இருக்காது. திரையில் வந்தாலே கை தட்டல் காதை
பிளக்கும். அதுவும் ஒரு விளம்பர படத்துக்கு
அதில் நடித்த மாடல் நடிகைக்கு கைதட்டல் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?
நம்புங்கள்… அந்த விளம்பரம் பாண்டிச்சேரி ஸ்ரீ லக்ஷிமி ஜூவல்லர்ஸ் விளம்பரம். பாண்டி கடலூர் போன்ற தியேட்டர்களில் இந்த விளம்பரத்தை பார்க்க ஒரு பெரிய ரசிகர் கூட்டமே இருந்தது..
அந்த விளம்பரத்தை யூடியூபில் தேடி சலித்து விட்டேன்
. புது விளம்பரங்கள்தான் இருக்கின்றது… அந்த கடையின் உரிமையார்கள் கையில்தான் அந்த
விளம்பரம் இருக்கும் அந்த விளம்பரத்தை வலையேற்றினால் நன்றாக இருக்கும். அந்த பெண் பார்க்க த கேர்ள்
நெக்ஸ்ட் டோர் போல இருப்பாள்…. ஆர்பாட்டமில்லாத அழகு…. அப்படி ஒரு அழகை அதன் பின் இப்போதுதான் சமீபத்தில்
பார்த்தேன்…
யூடீயூபில்
நெஞ்சோடு சேர்த்து என்ற மலையாள பாடலை பார்த்த
போது அசந்து போனேன்.. அதே போல ஆர்பாட்டம் இல்லாத அழகோடு ஒரு பெண் பெயர் அந்த பாடலில் அந்த பெண் காட்டும் எக்ஸ் பிரஷன்கள்
எல்லாம் அசத்த ரகம்.. அதை பற்றி விரிவாய் ஒரு பதிவு எழுதி இருக்கின்றேன் அது உங்கள் பார்வைக்கு….
திடிர்ன்னு
அந்த ஜோடியே ஒரு முழு நீள திரைப்படத்தில் நடிக்கும் போது இன்னும் எனக்கு ஆர்வம் அதிகமாயிடுச்சி.. அதனாலே இந்த படத்தை பார்க்க
வேண்டும் என்று நினைத்தேன்….
இப்ப படத்துக்கு வருகின்றேன்…. நேரம் ரெண்டு வகைப்படும்.. ஒன்னு நல்ல
நேரம் மற்றது கெட்ட நேரம்.
நண்பருக்கு பணம் கொடுக்க வேண்டும்… மூன்று லட்சம்… மிக மோசமான வட்டிக்கு வாங்கி சொன்ன
நேரத்துக்கு அவருக்கு கொடுத்து விட்டேன்… ஆனால் வட்டிக்கு வாங்கினேன் அல்லவா.. அது கூட்டி போட்டு அது படுத்தும் பாடு என்னை தூங்க விடாமல் செய்து
கொண்டு இருக்கின்றது…
வட்டிக்கு பணம் வாங்குவதும் வட்டி கட்டுவது போல
கொடுமை இந்த உலகத்தில் எதுவும் இல்லை. சரி அது ஒரு பக்கம் கிடக்கட்டும்…. ரொம்ப நாள் கழித்து எழுதலாம்ன்னு உட்காந்தேன்.
சிஸ்டம்
திருப்பி ஊத்திக்கிச்சி…
ஊருக்கு
போயிட்டு வீட்டுக்கு வந்ததில் இருந்து எனக்கு
இரும்பல்… யாழினிக்கு ஜூரம், வீடடம்மாவுக்கு
முடியலை, தங்கச்சி குழந்தைக்கு காலில் பிரச்சனைன்னு சென்னைக்கு வந்து ஒரு வாரம் அலைச்சல்…
வந்தா
எல்லாம் வரிசையா வரும்ன்னு சொல்லுவாங்க…. அப்படி வரிசையா பிரச்சளை ஒருத்தனை ஒரு நாளில்
துரத்தினா அவன் என்ன செய்யவான்.
=============
நேரம் படத்தின்
ஒன்லைன்…
கெட்ட நேரம்
பிடித்து ஆட்டும் ஒருவன் அதில் இருந்து எப்படி
விடுபடுகின்றான் என்பதுதான் இந்த படத்தின் ஒன்லைன்.
=================
நேரம்
படத்தின் கதை என்ன?
வெற்றிக்கு வேலை இல்லை.
தன் தங்கை திருமணத்துக்கு வட்டி ராஜா என்ற கொடுகோலனிடம் வட்டிக்கு பணம் வாங்குகின்றான்
வெற்றி… இரண்டுமாதம் வட்டி ஒழுங்காக கட்டுகின்றான்… ஆனால் மூன்றாம் மாதம் பணம் கட்ட முடியாமல் தவிக்க நண்பன் பணத்தை புரட்டிக்கொடுக்கின்றான்….
வட்டி ராஜா பாவ புண்ணியம் எல்லாம் பார்க்க மாட்டான். புரட்டிய பணத்தை ஒருத்தன் அடிச்சிக்கிட்டு போயிட்டான்…..ஒருவாரம்
பணம் கட்ட வில்லை என்பதால் வட்டி அசல் இரண்டையும் சாயங்காலம் அஞ்சி மணிக்கெல்லாம் கொடுக்க
டைம் பிக்ஸ் பண்ணறான். இதுக்கு நடுவுல காதலி
வேணி அவ வீட்டை விட்டு வெளிய வந்து நடு ரோட்டு நிக்கறன் போன் பண்ணறா….
இரண்டு மாசத்துக்கு முன்ன கல்யாணம் பண்ணி கொடுத்த மச்சான் டவுரி பணம் 50,000 வேணும் உங்க ஊர்லதான் நிக்கறேன் போன் பண்ணறான்…
வட்டி ராஜா வெற்றியை தேடிக்கிட்டு இருக்கான்… வட்டி பணம் பிட்பாக்கெட் அடிச்சிட்டாங்க…
வெற்றி வட்டிராஜாகிட்ட இருந்து எப்படி தப்பிச்சான் ???????????????? வெண்திரையில் காணுங்கள்…
=================
படத்தின்
சுவாரஸ்யங்களில் சில.,..
இப்ப எல்லாம்
என்ன தின்னுட்டு இப்படி படம் எடுக்கறானுங்கன்னு
தெரியலை … எல்லா படமும் முக்கியமா எங்ஸ்டர்
எடுக்கற எல்லா படமும் பிச்சி உதறது… தியேட்டர்ல போய் படத்தை பார்க்கனும்ன்னுற ஆர்வத்தை ஏற்ப்படுத்தறாங்க…
வாழ்த்துகள்
திரு அல்போன்ஸ் புத்திரன். அற்புதமான படத்தை கொடுத்து இருக்கிங்க…எடிட்டிங் திரைக்கதை
எழுதி அற்புதமா இயக்கி இருக்கின்றார்….
நாயகன் நிவின்
நடிப்பு கணக்கச்சிதம் வேலை தேடும் இளைஞன் பார்த்திரத்துக்கு கனகச்சிதம்..
நஸ்சிரியா
சான்சே இல்லை… அசத்தி இருக்கார் …
முக்கியமா முதல் லவ் மான்டேஜ் சாங்குல இரண்டு பேருமே அசத்தி இருக்காங்க...
அந்த சின்ன சின்ன மூவ் மென்ட்ஸ் அசத்தல்.
சிம்ஹா…
தேர்ந்து எடுத்த நடித்தால் தமிழ் சினிமாவுக்கு அடுத்த தலைமுறை நாசராக மாற வாய்ப்பு அதிகம்… புது
புது அர்த்தங்கள் குட்டி பையன் கணேஷ் போன்ற தோற்றம்… கறி எடுத்து கடிக்கும் போது பல்
இடுக்கை நோண்டும் போதும் அசத்தரல்…
நாசர்
செம நச் என்ட்ரி… தொய்வான இடத்தில் நாசர் வருகை படத்துக்கு பெரிய ரிலிப் என்று சொல்லலாம்.
முக்கியமா 96 பிரேம்ல் ஸ்டைலா மொபைலைதூக்கி போட்டு பிடித்து நடக்கும் அந்த ஸ்டைல் நச்.,
ரொம்ப
நாளைக்கு அப்புறம் சார்லி…. நல்ல நடிகன் சார்… அவரை யூஸ் பண்ணிக்கோங்க… நாகேஷ் ஒதுக்கி
வச்சது போல இவரையும் ஒதுக்கி வைக்க வேண்டாம்.
அல்போன்ஸ்
புத்திரனின் எடிட்டிங் செம ஷார்ப்…
96 பிரேம்ல நிறைய
நச் ஷாட்டுங்க.. அது சரியான பிக் அப் காட்சிகயில் யூஸ் செய்து அசத்தி இருக்காங்க.,
ராவ டயலாக் படம் முழுக்க இருந்தாலும் … எங்கடா நம்பர்… டச்.. போன்…. எவ்வளவு பத்தாயிரம்.. ச்சே
பத்தாயிரம் போன் நம்பர் இல்லை… என்று சொல்லும் இடங்கள்…
மூன்று
மணி நேரத்தில் ஒரு மயிறும் தனி மனிதனால் எது‘வும் புடுங்க முடியாது… அப்படி புடுங்கினால் நம்பகதன்மை
இருக்காது என்பதை உணர்ந்த புத்திரன்… நேரத்தை துணைக்கு அழைத்து இருக்கின்றார்.,.
கலைத்து
போட்ட கேரக்டர்கள்… மிக அழகாக சீட்டு ஆடுவது போல கையில் சேர்த்து கடைசியில் விசிறி
போல சீட்டு கட்டு கதாபாத்திரங்களை சேர்த்து
வைக்கின்றார்… புத்திரன்… அந்த எக்சலன்ட் திரைக்கதைக்கு ஒரு ஷொட்டு.
====================
படத்தின்
டிரைலர்
=============
படக்குழுவினர்
விபரம்
Directed by Alphonse Putharen
Written by Alphonse Putharen
Starring Nivin Pauly
Nazriya Nazim
Simhaa
Music by Rajesh Murugesan
Cinematography Anand C. Chandran
Editing by Alphonse Putharen
Studio Winner Bulls Films
Distributed by Malayalam
LJ Films
Tamil
Red Giant Movies
Release date(s) Malayalam
10 May 2013
Tamil
17 May 2013
Running time 110 minutes
Country India
Language Malayalam
Tamil
Written by Alphonse Putharen
Starring Nivin Pauly
Nazriya Nazim
Simhaa
Music by Rajesh Murugesan
Cinematography Anand C. Chandran
Editing by Alphonse Putharen
Studio Winner Bulls Films
Distributed by Malayalam
LJ Films
Tamil
Red Giant Movies
Release date(s) Malayalam
10 May 2013
Tamil
17 May 2013
Running time 110 minutes
Country India
Language Malayalam
Tamil
===========
பைனல்
கிக்
அவசியம் பார்த்தே தீர வேண்டிய திரைப்படம் இந்த திரைப்படம்.
டோன்ட் மிஸ்..
முகமதுன்னு
ஒரு பையன் சாட்டுல வந்தான்…
ஏன்
எழுதலை ஒரு வாரமாச்சி?
சிஸ்டம் வேற ஊத்திக்கிச்சி..
அண்ணே
நான் படத்தக்கு போறேன்… என் லேப்டாப் கே7 ரிசப்ஷன்ல கொடுத்துட்டு போறேன்,. வாங்கிகோங்க…
சிஸ்டம் ரெடியானதும் கொடுத்தா போறும்…
எனக்கு
என்று லேப்பில் ஒரு போல்டர் ரெடி செய்து பாஸ்வேர்டு
மோபைலுக்கு அனுப்பி வைத்தான்….
இதை ஏன் சொல்லறே என்றால் காரணம் இருக்கு…
சென்னைக்கு செக்யூரிட்டிக்கு வேலைக்கு வந்து ஏமாற்றபட்டு நடு
ரோட்டில் நின்றவன்.. நான்.. படத்தின் முடிவில் ஒரு டயலாக் வரும்…
நேரத்துல
ரெண்டு வகை இருக்கு…
ஒன்னு கெட்ட
நேரம்.. ஒன்னு நல்ல நேரம்.. கெட்ட நேரம் முடிஞ்சா நல்ல நேரம் கண்டிப்பா வரும் என்று
முடிப்பார்கள்..
சிஸ்டம்
ஊத்திக்கிச்சி…
முகம்
தெரியாது எப்படி இருப்பான் கூட தெரியாது…. என் லேப் வச்சிக்கோங்கன்னு எப்படி சொல்ல
முடியுது???
கெட்ட
நேரம் வந்தா நல்ல நேரம் கண்டிப்பா வரும்.. ஆனா வெயிட் பண்ணணும்… மூன்று மணி நேர படத்துல
கெட்ட நேரம் வந்து உடனே நல்ல நேரமும் வந்துடுது.
ஆனா வாழ்க்கையில மூன்று வருஷம் கூட ஆவும் முப்பது
வருஷம் கூட ஆவும்… சியான் விக்ரம் ரவிதேஜா எல்லாம் 40 வயநுலதான் சாதிச்சாங்க.. பட்
வெயிட் செய்யனும்… நல்ல நேரம் வர… ஆனா கண்டிப்பா வரும்… நிச்சயமா வரும்…
========================
என்ன தவம் செய்தனை...
==========================
ஹாய் ஜாக்கி அண்ணே,
வணக்கம்
நீங்கள் நலமா? யாழினி நலமா?
நான் உங்கள் ரசிகன். ஆனால் உங்களுக்கு மெயில் அனுப்பியதில்லை. இப்பொழுது தான் முதல் மெயில் அனுப்புகிறேன்.
நான் உங்கள் எழுத்துக்கு ரசிகன், உங்கள் எழுத்தில் உள்ள நேர்மை மற்றும் உண்மைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் . எழுதுவதை எந்த காரணம் கொண்டும் விட்டு விட வேண்டாம் என்று உளமார கேட்டு கொள்கிறேன்.
உங்கள் எழுத்து படிக்கும் பொது பக்கத்து வீடு காரரிடம் நேரில் பேசுவது போல உள்ளது. அவ்வளவு நெருக்கமாக உணர்கிறேன் .
உங்கள் ரசிகன் என்ற உரிமையில் ஒன்று கேட்கிறேன், ஏன் ஒரு பத்து நாள்களாக எழுதவில்லை? ஏதேனும் உடம்பு சரி இல்லையா அண்ணே?
உங்களுக்காக ஆண்டவனிடம் வேண்டி கொள்கிறேன், தயவு செய்து இருஅண்டு நால்களுக்க் ஒரு முறை ஒரு சின்ன பத்தியாவது எழுதுங்கண்ணே.
இப்படிக்கு உங்கள் அன்பு ரசிகன்
சந்திர சேகரன் .
==========================
ஹாய் ஜாக்கி அண்ணே,
வணக்கம்
நீங்கள் நலமா? யாழினி நலமா?
நான் உங்கள் ரசிகன். ஆனால் உங்களுக்கு மெயில் அனுப்பியதில்லை. இப்பொழுது தான் முதல் மெயில் அனுப்புகிறேன்.
நான் உங்கள் எழுத்துக்கு ரசிகன், உங்கள் எழுத்தில் உள்ள நேர்மை மற்றும் உண்மைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் . எழுதுவதை எந்த காரணம் கொண்டும் விட்டு விட வேண்டாம் என்று உளமார கேட்டு கொள்கிறேன்.
உங்கள் எழுத்து படிக்கும் பொது பக்கத்து வீடு காரரிடம் நேரில் பேசுவது போல உள்ளது. அவ்வளவு நெருக்கமாக உணர்கிறேன் .
உங்கள் ரசிகன் என்ற உரிமையில் ஒன்று கேட்கிறேன், ஏன் ஒரு பத்து நாள்களாக எழுதவில்லை? ஏதேனும் உடம்பு சரி இல்லையா அண்ணே?
உங்களுக்காக ஆண்டவனிடம் வேண்டி கொள்கிறேன், தயவு செய்து இருஅண்டு நால்களுக்க் ஒரு முறை ஒரு சின்ன பத்தியாவது எழுதுங்கண்ணே.
இப்படிக்கு உங்கள் அன்பு ரசிகன்
சந்திர சேகரன் .
==================
சந்திர உனக்காய் இந்த பதிவு....... சந்தோஷமா..--??
சந்திர உனக்காய் இந்த பதிவு....... சந்தோஷமா..--??
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
============
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
கண்டிப்பா நல்ல நேரம் வரும் ஜாக்கி சார்,,,,,,, Don't Worry Sir... Weakly Once கண்டிப்பா எழுதுக்க சார். My Regards to Yazhini Baby....
ReplyDeleteஅந்த படக்குழுவினர் எல்லோருக்கும் நல்ல நேரம் வந்துடுச்சு போல... உங்களுடைய எழுத்து நடை எனக்கும் பிடிக்கும் அண்ணே.
ReplyDeleteஜாக்கி அண்ணே
ReplyDeleteஎதிரே பார்க்கல அண்ணே, முதல் கடிதம் அனுப்பின கொஞ்ச நேரத்துலையே உங்க கிட்டேந்து போன் கால், வாவ் அண்ணே இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ரொம்ப நாளைக்கு அப்புறமா.
உங்க கிட்ட பேசின சந்தோஷமே பெரிசாய் இருக்க, நீங்க நான் எழுதின கடிதத்தை உங்க பிளாக் போஸ்ட் ல போட்டுட்டிங்க.
அண்ணே அதுல வேற எனக்கு சந்தோஷமா ன்னு கேட்டு இருக்கிங்கள்ளே, சரி தான் போங்க நான் கொஞ்ச நாளைக்கு வானத்தில தான் நடப்பேன் போங்க.
அண்ணிக்கும் என்னுடைய வணக்கத்தையும் யாழினிக்கு என்னோட வாழ்த்தையும் சொல்லிடுங்க அண்ணே.
இப்படிக்கு உங்கள் அன்பு தம்பி
சந்திர சேகரன்
In TV they put one song repeatedly. adhu yena paatunu konjam alasunga bossu? onnumae puriyala adhu....
ReplyDeleteஅற்புதம்
ReplyDeleteபட விமர்சனம், டிரைலர் நன்றி.
ReplyDeletethanks for review
ReplyDeleteநன்றி பிரபு...
ReplyDeleteநன்றி பெருமாள்
நன்றி கிருஷ்ணமூர்த்தி.
நன்றி மாதேவி
நன்றி அருள்.
நன்றிணு சந்திரா.,