கண்டதும் காதல் கவுதம்வாசுதேவமேனன் படத்து, ஆண்
கேரக்டர்களுக்கு வேண்டுமானால் சாத்தியமாய் இருக்கலாம்...
ஆனால் உண்மையில் பெண்கள்
மிகவும் யோசிப்பார்கள்... அவர்கள் சூழ்நிலை அப்படி?
கண்டதும் காதல் பண்ணி பத்து நிமிஷத்துல மேட்டர்
முடிஞ்சி, தொடச்சிக்கிட்டு இவன் எழுந்து போயிடுவான்... அவள் வயித்தை புழுத்துக்கினு
வேகாத வெயில்ல அலைஞ்சி புள்ள பெத்து, நடு ராத்திரியில் புள்ள எழுந்து ஆய்
போனக்கூட இவனுங்க கழுவி விட மாட்டானுங்க..
மயிரே போச்சின்னு எனக்கு இன்னான்னு காலை ஆட்டிக்கிட்டு படுத்துக்கிட்டு
இருப்பானுங்க...
அதனால பொண்ணு
எப்பவும் நெருங்கும் ஆணை பார்த்தா பயப்படுவா.? பார்க்கற அத்தனை பக்கி பயல்களும்
படுக்க வைக்கற நோக்கத்தோட பார்க்கறா போல
ஒரு பயம் அவுங்களுக்கு இருக்கும்...
கறந்த இடத்தை நாடுதே கண் என்பது போல, எடுத்ததும்
மாரை தான் பார்க்கறானுங்க பக்கி
பயளலுங்க....எவனை நம்பறதுன்னு தெரியலை....?கண்ணை பார்த்து பேசுபவன்தான் நல்லவன்
என்று அவள் நண்பிகளால் அல்லது அவளுடைய புத்திசாலி அம்மாவால் சொல்லிக்கொடுக்கப்பட்டு
இருக்கும்...
சொல்லிக்கொடுத்ததை
ஆண்களை பார்க்கும் போது அவள் விஞ்ஞானி போல
பரிட்சித்து பார்ப்பாள்... அதனால் பெண்கள் ஒரு ஆணை பார்த்த வினாடி மிரள்வது இயல்பு....கண் பார்த்து பேசும் அத்தனை
பேரும் யோக்கியசிகமானிகள் அல்ல
என்பது அவளுக்கு காலமும் அனுபவமும் கற்றுக்கொடுக்கின்றது...ஒரு
ஆண் பெண்ணை நெருங்கினாலே நிறைய சந்தேகங்கள் எழுகின்றன... பயம் ஏற்படுகின்றது...
படபடப்பு அடைகின்றாள்.. சினேக சிரிப்பு
சிரித்தாலும் கலவரம்
அடைகின்றாள்...
அவன் தேகம்
அவள் மீது பட்டு விட்டால் அவ்வளவுதான் அவளின் நெற்றி வியர்வை அடித்த பவுடரையும் மீறி வலுவுள்ள குரோமோசோம்கள்
போல எட்டிப்பார்க்கின்றன. உள்ளங்கை பிசுபிசக்கின்றது....நிறைய மாற்றங்கள் அவள்
உடலில் நடக்கின்றது....ஆனால் இது எதுவும்
நடக்காத நகர பெண்களும் இருக்கத்தான்
செய்கின்றார்கள்...
அறிமுகம்
இல்லாத ஆணை பார்த்து மிரளும் பெண்
எப்படி அவனோடு சினேகமாகின்றாள்
என்பதை இந்த படம் சொல்கின்றது.
==============
ISHQ-2012-TELUNGU படத்தின்
ஒன்லைன் என்ன?
டெல்லியில்
இருந்து விமானம் மூலம் ஹைதரபாத் செல்லும் அறிமுகமில்லா ஆணும் பெண்ணும் காதல்வயப்படுவதே கதை.
=========
ISHQ-2012-TELUNGU படத்தின் கதை என்ன?
நிதின் (ராகுல்) நித்யாமேன்ன் (பிரியா) இரண்டு பேரும் டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஹைதரபாத்
வருகின்றார்கள்...முதல் அறிமுகம் அப்போதுதான்....
தவிர்க்க முடியாத வானிலை சூழல் காரணமாக விமானம் கோவாவில்
தரையிறங்குகின்றது.. இருவரும்
நட்பாகின்றார்கள்.... அடுத்த கட்டம் காதலை
சொல்லவேண்டியதுதான்.. ஆனால் ஏர்போர்ட்டில் நித்யா
அண்ணனை பார்க்கும்நிதின் வெறுத்து போகின்றான்... ஏன் என்பதை
வெண்திரையில் பார்த்து
தெரிந்தக்கொள்ளுங்கள்..
=================
படத்தின் சுவாரஸ்யங்கள்.
மாவு கரைத்து கரைத்து ரேகை தேய்ந்து போன காதல் கதைதான்..
ஆனால் அதை சொல்லிய விதத்தில் சோ கியூட் என்று சொல்லவைக்கின்றார்கள்.
ரொம்ப நாள்
ஆயிற்று காதலித்த கணங்களை நினைத்து பார்த்து அசைப்போட்டு... ஆனால் இந்த படம்
உங்கள் வாழ்வில் கடந்து போன காதல்கணங்களை நினைத்து பார்க்க வைத்து காதல் போதையில்
மிதக்க வைக்கும்....
2012 ஆம்
ஆண்டு தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படங்கள் மூன்று அதில் இந்த படமும்
ஒன்று...
சின்ன சின்ன
ரசனைகளை கோர்த்து மாலையாக்கி அதை காதல் கதைக்கு
நேர்ந்து விட்டு இருக்கின்றார்
இயக்குனர் விகரம் கே குமார்...
விஷூவல்
டிரீட் என்று சொல்வார்களே அதை இந்த
படத்தின் முதல் பாதி காட்சிகள் நிரூபிக்கின்றன.
டிராபிக் சிக்னலில் வளையல் கைகள், டேட்டு கால்கள், முகம்
பார்க்க ஏக்கம், ஆட்டோ டிரைவர் போங்கு,
குழந்தை மாடி பஸ்சில் இருந்து தரையில்
போட்ட டெட்டி பொம்மை, சிக்னல் கவுண்டிங், தரையில் விழுந்த தொப்பி, எதிரில் வழி மறிக்கும்
லோடு ஆட்டோ, ஏர்போர்ட்டில் முன்னே இருக்கும் பெண்ணின் இடுப்பு, நாயகியின் உதடு,
அது கொடுக்கும் ஏக்கம், உருண்டை கண்கள், சாஸ் லிப்ஸ்ட்டிக், நாயகியின் லேசான
மேடிட்ட அகன்ற வயிறு என்று விஷூவல்களில் அசத்தி இருக்கின்றார்கள்... படம் இடைவேளை
வரை இந்த அதகளத்தில் பயணிப்பதால் மனது எங்கும் பட்டாம் பூச்சி பறப்பதை லாஜிக்
மறந்து ரசிப்பதை மறக்க முடியவில்லை...
நிதின் சாமிங்
பாய்.. கியூட்டாக தன் பாத்திரத்தை செய்து இருக்கின்றார்.. ஆட்டோ டிரைவருக்கும்
அவருக்கும் நடக்கும் சைகை சம்பாஷனைகள் தூள்...
நித்யா மேனன்...
சான்சே இல்லாத ஒரு மாஸ்டர் பீஸ்... அந்த
கண்களும் குவிந்த உதடுகளும் அந்த எக்ஸ்பிரஷன்களும் சான்சே இல்லை...
ஒரு
பேட்டியில் இயக்குனர் லிங்கு சாமி சொல்லி
இருப்பார்.. ஒரு படத்தின் நாயகியை மிக அழகாக தேர்ந்து எடுத்து விட்டாலே படம் பாதி
வெற்றி என்று... அது உண்மைதான்.. ஆனால் சில பேரழகிகள் எக்ஸ்பிரஷனில் தேமே என்று
கோட்டை விட்டு படம் பாக்கும் நம்மை படுத்தி எடுப்பார்கள்..
பட்
நித்யா சான்சே இல்லை..
பிசி ஸ்ரீராம் கேமராவுக்கு வயதாகவில்லை...அக்னி
நட்சத்திரம் இளமை அப்படியே இருக்கின்றது... அதை முதல் கிளப்பாடலிலும் நிரூபித்து
இருக்கின்றார்..
தெலுங்கி
படத்தின் இயக்க விதியான நாயகியை துகில்
உறிக்கும் பாடல்கள் இந்த படத்தில் இல்லை அப்படியும் படம் சூப்பர் டூப்பர் ஹீட்... காரணம் படத்தில்
இருக்கும் சின்ன சின்ன ரசனை.
படத்தின் வெற்றிக்கு மிக முக்கியகாரணம் பின்னனி துள்ளல் இசை என்பதை மறுக்க முடியாது.
படத்தின்
இயக்குனர் விக்ரம் கேகுமார் டயலாக் இல்லாமல் வெறும் சுவாரஸ்யங்களோடு முதல் பாதியை நகர்த்தி இருப்பதில் அவர் திறமை
பளிச்சிடுகின்றது.. படத்தை அவசியம் பாருங்கள்.
=============
படத்தின்
டிரைலர்..
==============
படக்குழுவினர்
விபரம்
Directed by Vikram K. Kumar
Produced by N. Sudheer Reddy
Vikram Gowd
Starring Nitin
Nithya Menen
Ajay
Music by Anoop Rubens
Aravindh Shankar
Cinematography P. C. Sreeram
Editing by A. Sreekar Prasad
Studio Shresht Movies
Distributed by Multi Dimension Entertainment (P) Ltd
Release date(s)
February 24, 2012[1]
Language Telugu
Budget 9 Crores
Box office 24 Crores
========
பைனல்கிக்..
இந்த படத்தை அவசியம் பார்க்க பரிந்துரைக்கின்றேன்... காதல் செய்தவர்களும் செய்து
ஓய்ந்து போனவர்களும் இந்த படத்தை ஒரு முறைகண்டிப்பாக பாருங்கள் கண்டிப்பாக
பிடிக்கும்... இந்த படம் பார்த்தே தீரவேண்டிய படம் முதல் பாதி ரசனை காட்சிகளுக்காக....குடும்பத்தோடு பார்க்க
சிறந்த படம்....
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
Malayalam Movie Sprit & Celluloid rendum parunganna.. Nalla Movies...
ReplyDelete-Kavitha Saran
Cute couples. Cute love story. I already watched this movie.
ReplyDelete