Vehicle 19 (2013)- வாடகை காரில் வந்த வினை.
சில நேரத்துல நாம  சும்மா சிவனேன்னு போனாலும் எங்கயோ போற  மாரியாத்தா,
என் மேல வந்து ஏறாத்தான்னு  சில சம்பவங்கள் நடக்கும்...  நாம என்ன முயற்சி செஞ்சாலும் அதுல இருந்து நாம தப்பவே  முடியாது... ஆப்பு  வச்சிட்டா வலிக்குதோ விலிக்கலையோ வெளியே வரும் வரை அமைதிக்காக்க வேண்டியது நம்ம பொறுப்பு.
=======================
Vehicle 19 படத்தின் ஒன்லைன்.
ஒரு வாடகை காரில் ஏறும் முன்னாள் கைதி  எப்படி அந்த வாடகை காரில் பிரச்சனையை சந்திக்கின்றான் என்பதுதான் கதை.
=================
Vehicle 19 படத்தின் கதை என்ன?


 பவுல் வால்கர்... அமெரிக்க சிறை கைதி.  விடுதலை ஆகி வெளிய வந்ததுமே  சவுத் ஆப்பிரிக்காவில் இருக்க எக்ஸ் ஒய்ப்பை பார்க்க வருகின்றார்... பொண்டாட்டியை பார்க்க டாக்சி புக் பண்ணாறர்... அந்த டாக்சி டேஷ் போர்டுல ஒரு போன் இருக்கு.. அதுல ஒரு குரல் பவுல்வால்கரை  மிரட்டுது... அதன் படி நடக்க ஆரம்பிக்கின்றான்... அந்த காரோட  பின் சீட்டுல ஒரு பெண்ணை வேற கடத்தி வாயில துணிக்கட்டி வச்சி இருக்காங்க.. எப்படி பவுல் அந்த வலையில மாட்டினான்... அந்த பெண் யார்?  பொண்டாட்டியை சரியான நேரத்துல போய் சந்திச்சானா, வெண்திரையில் காணுங்கள்.
=====================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில..


இந்த படத்தோட ஒன் ஆப்த புரொட்யூசர் பவுல் வால்கர்... ஏதோ கணக்கு  காட்ட எடுக்கப்பட்ட படம் போல தோன்றுகின்றது..

பாஸ்ட் பியுரியஸ், இன் டு த புளு படங்களில் பார்த்த பவுல்க்காக இந்த படத்தை பார்த்தால் சில இடங்களில் பொறுமையை ரொம்பவே சோதிக்கின்றார்கள்.... 


படம் முழுக்க  கார் டிரைவிங் சீட்டில் உட்கார்ந்து  கொண்டே இருந்தால் படம் பார்க்க அலுப்பாக இருக்குமா? இருக்காதா?


 சின்ன சின்ன சுவாரஸ்யங்கள் படத்தை பார்க்க வைக்கின்றன...
=============
படத்தின் டிரைலர்..


========================
படக்குழுவினர் விபரம்

Director: Mukunda Michael Dewil
Writer: Mukunda Michael Dewil (screenplay)
Stars: Paul Walker, Naima McLean, Gys de Villiers

=============
பைனல்கிக்..
இந்த படம் டைம் பாஸ் திரைப்படம்... காரணம் காரில் ஹீரோ உட்கார்ந்து கொண்டு ஓட்டிக்கொண்டே இருந்தால் எப்படி இருக்கும்?


படத்தோட ரேங்க்.


==============நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

 

5 comments:

 1. அன்புடையீர்.வணக்கம்.
  முன்பெல்லாம் அடிக்கடி தங்களது பதிவுகளை எனது மெயிலுக்கு அனுப்பிக்கொண்டு இருந்தீர்கள்.
  ஆனால் தற்போது அவ்வாறு அனுப்பித் தருவது இல்லையே.ஏன் எனத் அறிந்துகொள்ளலாமா?
  நன்றி வணக்கம்
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்
  snrmani@rediffmail.com

  ReplyDelete
 2. எல்லா மொழிபடங்கள் பற்றியும் எழுதி அசத்தி வருகிறீர்கள்..பிற மொழி படங்களைப் பார்த்து விமர்சனம் எழுதுவதற்கெல்லாம் கொஞ்சம் பொறுமை வேண்டும்..

  ReplyDelete
 3. dear jackie,
  please review "Human centipede" and "The martyrs" movie. both the movies disturbs a lot. I had already made a note for u...

  ReplyDelete
 4. Hi Jackie
  I am reading your blog for a long time and like all the articles. Planning to meet you one day.
  bye
  Lakshmi Narayanan Ayyasamy
  9600055973

  ReplyDelete
 5. அன்பின் தேவதாஸ் அப்படி யாருக்கும் அனுப்பியது இல்லை...

  நன்றி கலியபெருமாள்..

  சிவா... நேரம் இல்லை.. நேரம் இருக்கும் போது பார்த்து விட்டு எழுதுகின்றேன...டிரைலர் மட்டும்தான் பார்த்து இருக்கின்றேன்.

  அய்யாசாமி கண்டிப்பாக சந்திப்போம்.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner