Welcome to the Punch-2013/ இங்கிலாந்து/ காத்திருக்கும் டிடெக்டிவ்


திட்டனாலே நம்மளால  பொறுத்துக்க முடியாது...
அதுவும் காலை உடைச்சி வாழ்க்கையை கேள்விக்குறியா ஆக்கினவனா நாம என்ன செய்வோம்...? கோவில் கட்டி கும்பிடவா முடியும்.  ஒக்காலி கிடைச்சா அவன் காலை  எப்படி உடைக்காலாம்ன்னு கணக்கும் போடும்... இதுதான் மனிதனோட மனசு. அப்படி ஒரு குற்றாவளி காலை உடைக்க துடிக்கற போலிஸ்காரனின் கதைதான் இந்த திரைப்படம்.

==========

Welcome to the Punch-2013/ படத்தின் ஒன்லைன்.

கைல கிடைச்சி தப்ப விட்ட குற்றவாளியை வெறியோட தேடும் ஒரு போலிஸ்காரனின் கதை.
=============

Welcome to the Punch-2013 படத்தின்  கதை என்ன?

Max Lewinsky (McAvoy)  ஒரு  டிடெடிக்டிவ்... ஒரு பேங்க் கொள்ளையில குற்றாவளிகளை பிடிக்க போகும் போது காலில் குண்டு அடிபட்டு காலில்  நீர்  கோர்த்துக்கொண்டு வாழ்வில் படாதபாடு படுகின்றான்... இந்தநிலைமைக்கு காரணமான அந்த பேமானி மட்டும் கையில் கிடைச்ச சட்னி தாண்ட என்று ஒவ்வோரு  நாளும் அந்த  குற்றவாளியை பிடிக்க ஏங்கிகொண்டு இருக்கின்றான்... 

அந்த குற்றவாளி  Jacob Sternwood (Strong) புறநகர்ல ஜாலியா தனி வீட்டுல ஓய்வு எடுத்துக்கிட்டு இருக்கான்... இது நடந்து மூன்று வருஷம் ஆயிடுச்சி.. ஜேகப் பையன் குண்ட்டிபட்டு  நகரத்துல  செத்துடுறான் புள்ளை பாடியை பார்க்க ஜேக்கப் வரான்... கால் வலியோடு மேக்ஸ் வன்மத்தோட  ஜேகப்பை  பிடிக்க காத்தக்கிட்டு இருக்கான்... இரண்டு பேரும் நடக்கும்  சேசிங்.... மீதி படம்...
==============

படத்தின் சுவாரயங்களில் சில...

 படத்தோட பத்து நிமிஷம் பார்வையாளரை நிமிர்ச்த உட்கார வைக்கும் படம் ஜெயிக்கும் என்பது விதி...   இதனை ஹூக் என்றும் சொல்லுவார்கள்... படம் ஆரம்பித்த பத்து நிமிடம் ஆக்ஷன் அதகளம்தான்.. முக்கியமா அந்த பேங்க் ராப்பரி... அந்த ஸ்டைல்...  பைக்கில் தப்பிக்றதும் அதனை மேக்ஸ் கண்டு பிடித்து துரத்துவது...வண்டி சவுண்ட் கேட்காம தள்ளக்கிட்டு போறது எல்லாம் அசத்தல் ரகம்.


 சாரா என்ற  டிடெக்ட்டிவ் பெண் பாத்திரத்தில்  நடித்து இருக்கும் Andrea Riseborough படத்துக்கு பெரிய ரிலிப்... கையில் சின்ன சின்ன ஹின்ட் களை எழுதிக்கொண்டு துப்பறிவுது நன்றாக இருந்தாலும் அந்த  கேரக்டர் அல்பாயிசில் போய் விடுகின்றது.


இரண்டு எதிரிகள்  ஆனால்  இவர்களுக்கு காமனான இன்னோரு எதிரி என்று படம் சூடு பிடிக்கின்றது... இதுக்கு மேல சொன்ன படம் பார்க்கற சுவாரஸ்யம் போயிடும் என்பதால் விடு ஜூட்.

================
 படத்தின் டிரைலர்.

================
படக்குழுவினர் விபரம்.


Directed by Eran Creevy
Written by Eran Creevy
Starring James McAvoy
Mark Strong
Andrea Riseborough
Studio Worldview Entertainment
Distributed by Momentum Pictures
Release date(s)
24 February 2013 (Glasgow Film Festival)
15 March 2013
Running time 99 minutes
Country United Kingdom
Language English
Budget $8.5 million
Box office $7,034
==================
படம் பற்றி கதாபாத்திரங்கள்.

=========
பைனல் கிக்.
 இந்த படம் சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது... அரைச்சமாவு என்று சொல்ல வாய்ப்பு   இருக்கின்றது. பட் படம் எனக்கு பிடித்து இருக்கின்றது... பார்க்கவேண்டிய படம் என்று சொல்லுவேன்..
========

படத்தின் ரேட்டிங்
பத்துக்கு ஐந்து.
===============
பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

3 comments:

  1. முன்னெல்லாம் வாரம் ஒரு முறையாவது உங்கள் அக்மார்க் மனம் நெகிழும் ஏதாவது ஒரு பதிவு எழுதுவீர்கள் ..ஆனால் இப்ப கொஞ்ச நாளாய் அது மிஸ்ஸிங்..தொடர்ச்சியாக வெறும் வேற்றுமொழி படங்களின் விமர்சனங்களையே படித்து வருவது கொஞ்சம் சலிப்பு தட்டுவது போல் உள்ளது..இது என்னுடைய தனிப்பட்ட தாழ்மையான கருத்து.தவறிருந்தால் மன்னிக்கவும்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner