Side Effects (2013 film)அமெரிக்கா/கொலையும் செய்வாள் எமிலிஉங்களுக்கு தலை வலிக்கின்றது…
மனசும் வலிக்கின்றது என்ன செய்வீர்கள்.. ஒரு மாத்திரையை போட்டு முழுங்கிட்டு மோட்டுவாலையை பார்த்துக்கிட்டு இருப்பிங்க அல்லவா?
 அப்படித்தான் அவளுக்கு மனசு சரியில்லை.. அதனால டிப்ரஷன்  மாத்திரையை போட்டுக்க்கிட்டு  படுத்துக்கிட்டா…


 புருசன் வீட்டுக்கு வந்தான் ஆசையா அவ கிட்ட வந்தா , சான்ட்விச் கடையில தக்காளி கட் பண்ண ஒரு கத்தி வச்சி இருப்பானுங்களே… ஸ்லைஸ்,  ஸ்லைசா  தக்காளி அறுப்பானுங்களே  அந்த கத்தியை  அவ வச்சி இருக்கா கிட்ட வந்த புருசன் வயித்துல  கிர்னி பழத்துக்கு நடுவுல குத்தறது போல ஒரு சதக்…  பயத்துல அதிர்ச்சியா பார்த்தவன்  மார்ல ஒரு சதக்…. திரும்பி உஉயிர் பிழைக்க ஓடலாம்ன்னு பார்த்தா நட்ட நடு முதுகுல ஒரு சதக்… அபூர்வ சகோதரர் அப்பா கமல்முதுவுல கத்தி இருக்குமே அது போல  நடு முதுவுல  கத்தியோட கால் 911 ன்னு சொல்லிக்கிட்டே செத்து போறான்…

போலிஸ் வந்து விசாரிக்குது… எனக்கு எதுவுமே தெரியாது தூங்கி எழுந்து பார்த்தா என் புருசன் செத்துக்கடக்கறான்னு சொன்னா எப்படி இருக்கும்? அப்படித்தான் சொல்லறா?


 சரி என்ன கதைன்னு இப்ப  பார்த்துடலாம்.
=================================
Side Effects (2013 film) படத்தின் ஒன்லைன் என்ன?

மன அழுத்தத்துக்கு மாத்திரை போட்டவ அந்த மாத்திரை எபெக்ட்ல புருசனை கொலை பண்ணிட்டா கேஸ் ஆகுமா ஆகாதா? இதுதான் ஒன்லைன்
====================================
Side Effects (2013 film) படத்தின் கதை என்ன-?


 எமிலி , மார்ட்டின் புருசன்  பொண்டாட்டி,  மார்ட்டின்  நாலு வருஷம்  மாமியார் வீட்டுல  இருந்து சமீபத்துலதான் ரிலிஸ் ஆனான். எமிலி எருமை புருசன் ஜெயில்ல இருக்கும் போது இரண்டு முறை தற்கொலை முயற்சி செய்யுது….. காரணம் டிப்பரஷன் சொல்லுது.. அதுக்கு மாத்திரை வேறு எடுத்துக்குது… அந்த மாத்திரை சைடு எபெக்ட்தான்  இதுன்னு டாக்டர்ங்க  நினைக்கறாங்க.. அவளோட டாக்டர் ஜோனதன்  அவளுக்காக பரிதாபபடறார்.. இந்த நேரத்துல நைட்டு தூக்கத்துல புருசனை கத்தியால சதக் சதக் வேற.. டாக்டர் ரொம்பவே அந்தே பெண்ணுக்க பீல் பண்ணறான்… ஜெயில்ல வேற  எமிலியை  போட்டுடறாங்க….. அவ ரிலிஸ் ஆகறாளா இல்லையா என்பதுதான் மீதி படம்..

=============================================


இந்த படத்தோட டைரக்டர் யாரு தெரியுமா? எஸ் என்னோட மோஸ்ட் பேவரைட் டைரக்டர் Steven Soderbergh…. ஓஷன் 11 ,12, 13 டைரக்ட்  பண்ண அதே ஆளுதான்…


‘ஓஷன்  படம் போல பெரிய நட்சத்திர கூட்டம் இல்லை… நாலே நாலு முக்கிய கேரக்டர்… அதை வச்சிக்கிட்டு செமையான திரில்லர்…

 எமிலி கேரக்டருக்கு Steven Soderbergh சரியான கேரக்டரை  தேர்ந்து எடுத்து இருக்கின்றார் என்றே நினைக்கின்றேன்.. படம் முழுக்க சோகமாக பரிகொடுத்தது போல Rooney Mara வின்  நடிப்பு தேர்ந்த நடிப்பு…. சான்சே இல்லை… 


Jude Law டாக்டர் வேஷத்துல  கலக்கி இருக்கார்…. சான்சே இல்லை விட்டு புடிக்கும் அந்த காட்சிகள்… முக்கியமாக சால்ட் வாட்டடர், ஜூலியா யார் போன்ற கேள்விகள்  கேட்கும் போது  படம் கலக்கோ கலக்கு  என்று கலக்குகின்றது…

 படத்தின் ஒளிப்பதிவை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்… துரித்துக்கொண்டு இருக்காமல் திரில்லர் மூடுக்கு அசத்தி இருக்கின்றார்கள்.

படத்துக்கு பெரிய பலம்  இசை…. பயமுறுத்தும் டம்டும்ன்னு அடிக்காம மைல்டா… லைட்டா படம் நெடுகிலும்  வரும் அந்த இசைஅருமை..

படத்துக்கு முதலில் The Bitter Pill, என்று  பெயர் வைத்து படம் எடுத்து விட்டு கடைசியாக சைடு எபக்ட் என்று பெயர் வைத்தார்கள்..

வயசான கேத்ரின் ஜீட்டா  ஜோன்சை பார்க்கையில் மனம் கஷ்ட்டப்படுகின்றது….  பெரிய மாற்றம் பட் அந்த உதடு காட்டிக்கொடுக்கின்றது ரொம்ப பழக்க பட்ட உதடு போல இருக்கின்றதே என்று நினைத்தால் கேத்தரின் தான்…

 Steven Soderbergh படத்தோட ஓப்பனிங் மற்றும் குளோசிங் எப்படியும் ஒரு பன்ச் வைப்பார்… இந்த படத்துல  எமிலி  ஹவ் யூ டூடே? என்று கேட்க  பெட்டர், மச் பெட்டர் என்று சொல்ல................ கேமரா அந்த கட்டிடத்தை விட்டு வெளியே ஒய்டில் செல்ல ஒலிக்கும் பின்னனி இசையை ரிவைன்ட் பண்ணி  ரிவைன்ட் பண்ணி பார்த்து தொலைத்தேன்… ஐ லவ்யூ மேன் Steven Soderbergh….
===================
படத்தின் டிரைலர்,======================
படக்குழுவினர் விபரம்
Directed by Steven Soderbergh
Produced by Lorenzo di Bonaventura
Gregory Jacobs
Scott Z. Burns
Written by Scott Z. Burns
Starring Jude Law
Rooney Mara
Catherine Zeta-Jones
Channing Tatum
Music by Thomas Newman[1]
Cinematography Peter Andrews
Editing by Mary Ann Bernard
Studio Endgame Entertainment
Distributed by Open Road Films
Release date(s)
February 8, 2013
Running time 106 minutes[2]
Country United States
Language English
Budget $30 million[3]
Box office $60,288,363


==============================
படத்தின் மேக்கிங்


======================

பைனல்கிக்.
 இந்த படத்தின் இயக்குனர் Steven Soderbergh தேர்ந்த இயக்குனர்…. அவரது ஸ்டைல் மேக்கிங் இந்த படத்திலும் நச்…  மாலைவேளையில்  பல் நம நம என்று  இருக்கும்.. பட்டானி இருந்நதா கடிச்சி நமநமப்பை தீர்த்துக்கலாம் போல இருக்கும்… அது போல திரில்லர் படம் பார்க்கனும்ன்னு யாருக்காவது நம நமன்னு இருந்தா இந்த படத்தை கண்டிப்பா பார்க்கலாம்… கொஞ்சமும் ஏமாற்றாது.,.. இந்த படத்தை பார்க்கவேண்டிய படம்… கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம் என்றும் சொல்லலாம்…
 ======================
 படத்தோட ரேட்டிங்.

  பத்துக்கு எழு…. அதுவும்.. இயக்குனர் Steven Soderberghக்காக….


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.  
நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner