Fast & Furious6(2013) கோடை ஆக்ஷன் அதகளம்.


இந்த படத்தின்  5 ஆம் பாகம் பெங்களுர் ஊர்வசி தியேட்டரில் பார்த்தேன்...
சான்சே இல்லை... இந்த படம் அதையும்  முழுங்கி  ஏப்பம் விட்டு விட்டது என்றுதான சொல்ல வேண்டும்..  சான்சே இல்லை.. என்ன ஒரே குறை இந்த படத்தை  இந்த முறையும் பெங்களூர் ஊர்வசியில் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம்தான் எனக்கு....
===========
Fast & Furious6(2013) படத்தின் ஒள்லைன்.

போலிஸ் டிபார்ட்மென்ட் பெரிய டானை பிடிக்க கிரிமினல்களிடம் உதவி கோருவதுதான் படத்தின் ஒன்லைன்.

========================
Fast & Furious6(2013) படத்தின் கதை என்ன?


பார்ஸ்ட் பியூரியஸ்  படத்தின் கைத எல்லோரும் அறிந்த கதைதான் தான்.. 

இந்த  பாகத்தில் கிரிமினல் தொழிலை விட்டு விட்டு வின்டீசல் குழு இதுவரை அடித்த பணத்தை வைத்து உலகின் பல்வேறு பகுதிகளில் என்சாய் செய்து கொண்டு இருக்கின்றது... 

பவுல்வால்கருக்கு குழந்தை  பிறக்கின்றது... லண்டனின் புறநகரில்   வாழ்கின்றார்கள்... லண்டனில் ஷா என்ற தீவிரவாதி மிலிட்ரி வாகனத்தை தகர்க்கின்றான்... அவனை பிடிக்க போலிஸ் ஏஜென்ட்  ராக் புகழ் Dwayne Johnson வின்டீசல் குழுவின்  உதவியை நாடுகின்றான்..


. இதில் வெற்றி பெற்றால் பொதுமன்னிப்பு வழங்குகின்றேன் என்று வாக்கு கொடுக்கின்றான்... ஷா என்ற கொடியவனை பிடித்தார்களா என்பது படத்தின் மீதி ஆக்ஷன் அதகள கதை.


===========================
படத்தின் சுவாரஸ்யங்க்களில் சில...


படம் ஆரம்பம் முதல் முடிவு வரை ஆக்ஷன் அதகளம்தான்.  பின்னி பெடலெடுகின்றார்கள்...


உங்கள்  குழுவின் உதவி தேவை என்றதும் குழு உறுப்பினர்களை  காட்டும் போது   கைதட்டல் கதை பிளக்கின்றது...


போன முறை ரயில் பைட் என்றால் இந்த முறை டாங்கி பைட்.... படம்முழுக்க இரவு  பின்னனியில் எடுத்து இருப்பதால் ஒளிப்பதிவளார் பெண்டு நிமிர்ந்து போய் இருக்கும்..


கிளைமாக்ஸ் பைட் கார்கோ விமானம் என்பதால் ஆக்ஷனுக்கு பஞ்சம் இல்லை ஆனாலும் அந்த ரன்வே பாரிவில் இருந்து செங்கல்பட்டு தூரம் இருக்கும் என்ற அளவுக்கு அவ்வளவு நேரம் விமானம் ஓடும் ரன்வேயில்  நடக்கின்றது.. சினிமாதானே நம்பித்தான் ஆக வேண்டும்...
===================
படத்தின் டிரைலர்.================
படக்குழுவினர்   விபரம்.

Directed by Justin Lin
Produced by
Neal H. Moritz
Vin Diesel
Clayton Townsend[1]
Written by Chris Morgan
Based on Characters 
by Gary Scott Thompson
Starring
Vin Diesel
Paul Walker
Dwayne Johnson
Michelle Rodriguez
Jordana Brewster
Tyrese Gibson
Chris Bridges
Sung Kang
Luke Evans
Gina Carano
John Ortiz
Music by Lucas Vidal
Cinematography Stephen F. Windon
Editing by
Christian Wagner
Kelly Matsumoto
Studio
Original Film
One Race Films
Distributed by Universal Pictures
Release date(s)
May 7, 2013 (London premiere)
May 24, 2013 (International)
Running time 130 minutes
Country United States
Language English
Budget $160 million
Box office $13.8 million
===============
பைனல் கிக்.
ஆக்ஷன் பிரியர்களுக்கு இந்த கோடையில் பின்னி பெடலெடுக்க வந்து இருக்கும் அற்புதமான ஆக்ஷன் சித்திரம்.  குடும்பத்துடன் பார்க்க  வேண்டிய ஆக்ஷன் சித்திரம்.. படம் பார்க்கும் போது சிறுவர்களுக்கு இந்த  காட்சிகள் உண்மை  இல்லை என்று உணர்த்துங்கள்....

டோன்ட் மிஸ் இட்.... காதில் பூ சுற்றும் காட்சிகள் அதிகம் இருந்து பார்ஸ்ட் கட்டிங்கில் காது பூ பற்றி கவலை பாடமால் இந்த படத்தை பார்க்க வைத்து இருக்கின்றார் இயக்குனர்... பெங்களூரில் இருப்பவர்கள் இந்த படத்தை  தயவு செய்து ஊர்வசி தியேட்டரில் பாருங்கள் என்று உங்களை  வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கின்றேன்.. அந்த அனுபவத்தை முடிந்தால் இங்கே பகிருங்கள்....

===================


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
 

5 comments:

 1. இவ்வளவு படமும் நீங்க எப்பதான் பாக்கறீங்க பாஸ்..

  ReplyDelete
 2. சார் அது பவுல் இல்லைங்க...பால் தான்...தமிழில் அப்படி பவுல் எனத்தான் எழுதவேண்டும் என்று விதி யிருப்பதாக தெரியவில்லை.

  ReplyDelete
 3. மகிழன் எழுதிட்டா போச்சி...

  நன்றி அருள்.


  கலியபெருமாள்.. தினமும் ஒரு படம் பார்த்தவன் நான்.. ஆனா இப்ப மிக குறைவு என்ன செய்ய??

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner