Ethir Neechal-2013 /எதிர் நீச்சல்/ திரைவிமர்சனம்.வெற்றிவேண்டுமா ?
போட்டுபாராடா எதிர் நீச்சல் என்று பழைய  எதிர் நீச்சல் படத்தில் ஒரு பாடல் உண்டு... இந்த கதைக்கு அந்த பாடல் வரிகள் மிகவும் பொருத்தம்.


வழக்கமான மசாலாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக  தமிழ் சினிமா மீண்டு வருகின்றது... அப்படி என்றால் இந்த படத்தில் மசாலாவே இல்லையா? 

லொடுக்கு பாண்டி நான் சொல்லறத புரிஞ்சிக்கவேயில்லை  முந்திரிகொட்டை  போல கேள்வி மயிற கேட்கற..?


கொஞ்சம் கொஞ்சமா மாறிக்கிட்டு இருக்குன்னு சொல்லறேன்...


உதாரணத்துக்கு இந்த படத்துக்கதையை எடுத்துக்கிட்டு போய் எந்த பெரிய ஹீரோக்கிட்ட சொல்லி இருந்தாலும் நோ சொல்லி இருப்பாங்க... பாழப்போன இமேஜ்ல வளர்ந்தவங்க...இப்படி ஒரு கான்சப்ட்டோட  ஒரு பெரிய ஹீரோக்கிட்ட  டைரக்டர் போய் கதை சொல்லி இருந்தா கீழே இருப்பது போல உரையாடல் இருந்து இருக்கும்...


சார் இந்த படத்துல உங்க கேரக்டர் பேர் குஞ்சித பாதம்... எல்லாரும் ஷாட்டா குஞ்சின்னு கூப்பிடுறாங்க...


நான் ஒன்னை ஒம்மாலன்னு கூப்பிடுவேன்... இடியட் என் ஆபிஸ் விட்டு எழுந்து வெளிய போடான்னு வெரட்டி விட்டு இருந்தாலும் ஆச்சர்யம் அடைய தேவையில்லை.


இப்படி  ஒரு கதைகளத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் போன்றவர்கள் நடிக்க ஒப்புக்கொண்டதுக்கு மிக்க நன்றி... இத்தனைக்கு சிவகார்த்திகேயன் யாருக்கும் தெரியாத நபர் அல்ல....பப்ளிக் பிகர் ... அவருக்குன்னு ஒரு ரசிகர் கூட்டம் இருக்கு.. அப்படி இருந்தும் இந்த படத்தில்  குஞ்சிதபாதம் என்ற பெயரில் நடிக்க ஒப்புக்கொண்டு, கடைசிவரை இமேஜ் வட்டத்தில் சிக்காமல் நல்ல  கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கவேண்டுமாய்  தமிழ் சினிமா சார்பில் கேட்டுக்கொள்ளுகின்றோம்.


நண்பர் நட்ராஜ்ஜெகநாதன் தனது முகநூலில் எதிர்நீச்சல் படகுழுழுவினருக்கு வாழ்த்து  தெரிவித்து இருந்தார்....  அது உங்களுக்காக,..

பெயரில் என்ன இருக்கிறது. பெயரைக் காப்பாற்றிக் கொள்வதில்தான் பெருமை இருக்கிறது என்பது திரு. ஜெயகாந்தனின் வரிகள். புனைப்பெயர் எனக்கு எதற்க்கு நல்லது கெட்டது இரண்டையும் என் சொந்தப் பெயரிலேயே செய்துகொள்ள விரும்புகிறேன் என்பது திரு. பாலகுமாரனின் வரிகள். இதனை ஒரு கதையாக்கி வெற்றிபெற்றிருக்கும் எதிர்நீச்சல் அணிக்கு வாழ்த்துக்கள்.வழக்கம்போல இனிய நண்பர் வேல்ராஜுக்கும்.


முகநூலில் இந்த வரிகளை பார்த்த பின்தான் அந்த கான்செப்ட் வித்தியாசமாய் இருப்பதை பார்த்து அன்று இரவே படத்துக்கு சென்றேன்.


பெயரில் என்ன  இருக்கின்றது.... எல்லோருக்குமே இரண்டு பெயர் இருக்கும்... ஆனால் எனக்கு ஒரே ஒரு பெயர்தான்...தனசேகரன்... அதையும் ஊர்ல முழுசா கூப்பிடாமா தனுசுன்னு கூப்பிடுவாங்க...ஆனால் எனக்கு ஏன்  செல்லபெயர் இருக்கவில்லை என்று நான்  நினைத்து இருக்கின்றேன்...நடிகர் ஜாக்கிசானின் கடுமையான உழைப்பு காரணமாக   ஜாக்கிசேகர் என்று எனக்கு நானே பெயர் வைத்துக்கொண்டுவிட்டாலும் அதனை பிளாக் எழுதும் போது பயண்படுத்திய போதுதான்  பலருக்கு அந்த பெயர் தெரியவந்தது.


ஆனால் தனசேகரனை தனேசேகர் என்று அழைத்தால் எனக்கு ஏனோ பிடிப்பதில்லை... அந்த ரன் சேர்த்து கொஞ்சம் அழுத்தமா அழையுங்கள் என்று என் நெருங்கிய நண்பர்கள் இடத்தில் சொல்லியதுண்டு....


படத்தை அப்படியே லைட்டா அலசிடலாம்.


==============
எதிர்நீச்சல் படத்தின்  ஒன்லைன்


வெற்றிவேண்டுமா ?போட்டுபாராடா எதிர் நீச்சல் இதுதான் படத்தோட ஒன்லைன்..


=============
 எதிர் நீச்சல் படத்தின் கதை என்ன?


சிவகார்த்திகேயன்( குஞ்சிதபாதம்) பாயிண்ட் ஆப் வியுல  நரேட்டிவ் ஸ்டைலில் கதை தொடங்குகின்றது. குஞ்சிதபாதம் என்ற சாமி பெயரை தனக்கு வைத்து விட்டதால் இளம்பருவத்தில் இருந்து வாலிப பருவம் வரை படும் துயரங்கள் காரணமாக பெயரை ஹரிஷ் என்று வைத்துக்கொள்ளுகின்றார்...பிரியா ஆனந்  சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் கிராஸ் பண்ணி காதலிக்க துவங்கும் போது, சிவா எதிர் நீச்சல் போட  துணிகின்றார்? ஏன் திர்ன்னு துணிஞ்சி தொலையுனும்? படத்தை பாருங்க..பாஸ்

============
படத்தின் சுவாரஸ்யங்கள்.

படத்தோடமுதுகெலும்பு சிவகார்திகேயன்...

ஏதாவது ஒரு பொறம் போக்கு, சத்தியம் தியேட்டர் பைக் பார்கிங்கில் சிவகார்த்திகேயன் கிராஸ் செய்ய....ஏய் குஞ்சி என்றோ...!  இவ்வளவு பெரிய குஞ்சா என்று அவரை பார்த்தோ ? அல்லது குஞ்சி  என்ன சைஸ் என்றோ நக்கல்  விட வாய்ப்புகள் அதிகம்...ஆனால் பக்குவமனிதர்கள் புறந்தள்ளிவிட்டு சென்று விடுவார்கள்... சிவாவும் அப்படியே... ஆனால் இப்படி நக்கல்விட அநேக வாய்ப்பு இருந்து இந்த படத்தில் நடித்தமைக்கு  வாழ்த்துகள் சிவா...


பிரியா ஆனந், 180 படத்துல ஒரு பிரஷ்நஸ் இருந்துச்சி.. பட் இந்த படத்துல அப்படி இல்லை... ரொம்ப டல்லா இருக்கார்.... பட் உடம்பை இன்னும் கின் என்று வைத்து இருக்கின்றேன் என்று ஒரு பாடல் காட்சியில்  வெளிப்படுத்துகின்றார்.


 படத்தில் நந்திதா  மற்றும் அப்பா எப்பிசோட் சங்கர் பட பாணி என்றாலும் நன்றாகவே இருந்தது...முக்கியமாக 100 மீட்டர் ஓட்ட பந்தியத்தில் ஜெயிப்பதும், ஷூவை  கழட்டிப்போட்டு விட்டு வெறியாக ஓடுவது என்று கலக்கி இருக்கின்றார்.


படத்தில் திடிர் என்று  அனிருத்,தனுஷ்,நயன்தாரா என்று சர்பிரைஸ்  விசிட் கொடுக்கின்றார்கள்.. கும்பகோணத்து வெத்திலைய கொடுடா பாடலில் ஆடுவது போல இடுப்பை வெட்டி ஆடுகின்றார்.  நயன் இன்னும் ஒரு ரவுண்டு வருவாருன்னு தெரியுது...


கேமரா வேல்ராஜ் .....மாரத்தான் பெங்களுர் ஷாட்  மற்றும் சென்னை ஷாட்டுகள் ரசிக்க வைக்கின்றன... திருநீர்மலை, திரிசூல மலை என்று  சென்னையை சுற்றி சுற்றி எடுத்து இருக்கின்றார்கள்...


லோ பட்ஜெட் படம் என்பதை முடிவு செய்து படத்தை எடுத்து இருக்கின்றார்கள்..இருப்பினும் இது போன்ற  நல்ல கதைகளுக்கு வாய்ப்பு கொடுத்து புதியவர்கள் வளர வழி செய்யும் தனுஷ் போன்ற நடிகர்களுக்கு மிக்க  நன்றி.


இசைஅனிருத்... இரண்டு  பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னனி இசை ஊரில் தன் பெண் ஜெயித்த விஷயத்தை பேப்பரில் காட்டுவது...மளிகைகடை காட்சிகளின் பொது பின்னனி இசை அற்புதம் என்றாலும்,1990களில் ஏஆர்ரகுமான் விளம்பரங்களுக்கு அடித்த ஜிங்கில்ஸ் போல இருக்கின்றது..


புதியவர் இயக்குனர் துரைசெந்தில்குமார்  முன்பாதியில் வித்யாசமான கதையோடு ஜெயித்து இருக்கின்றார். காதல் தொப்பை போல வந்தா போகாது... காதல் கால்டாக்சி போல கூப்பிட்டாதா வரும் போன்றவை  நச்....


=============
படத்தின் டிரைலர்.
=============
படக்குழுவினர் விபரம்

Directed by R. S. Durai Senthilkumar
Produced by Dhanush
Written by R. S. Durai Senthilkumar
Screenplay by R. S. Durai Senthilkumar
Story by R. S. Durai Senthilkumar
Starring Sivakarthikeyan
Priya Anand
Nandita
Music by Anirudh Ravichander
Cinematography Velraj
Editing by Kishore Te.
Studio Wunderbar Films
Distributed by Vendhar Movies[1]
Release date(s)
1 May 2013
Running time 129 minutes
Country India
Language Tamil
Budget 6 crores
Box office 17 crores


=============
பைனல்கிக்.

இந்த படம் பார்க்கவேண்டிய படம்...பெயர் பிரச்சனை போன்ற நிறைய சின்ன சின்ன வெளியே சொல்ல முடியாத பிரச்சனைகள் நிறைய இருக்கின்றது.. அதனை அறிவுரைமாதிரி சொல்லாமல் லைட்டாக ஹீயுமரோடு  சொல்லி இருக்கின்றார்... இயக்குனர் இது போன்ற வித்தியாசமான கதையோடு அடுத்த படத்திலும் துரையை எதிர்பார்க்கலாம்.. குடும்பத்தோடு பார்க்கவேண்டிய திரைப்படம்... முக்கியமாக  படத்தின் முடிவில் போடும் பூளுபர் ஷாட்ஸ் சூப்பர். வாழ்த்துகள் எதிர்நீச்சல் படக்குழுவினருக்கு.
==============


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ....
.EVER YOURS... 

6 comments:

 1. vanakkam Danasekaran anna..pagirvukku nanri.

  ReplyDelete
 2. விமர்சனத்துக்கு நன்றி.

  ReplyDelete
 3. Nice Review Jackie Sir....உடம்பை பார்த்துகொள்ளுங்கள் ஜாக்கி சார்..... My regards to yazhini baby.....

  ReplyDelete
 4. நல்ல உழைப்பு , திறமை ஒருஅடிமட்ட கிராமத்துகாரன் மேல வருணும் மிக கடினம் உடம்பு நம்ம கையில் ,வாழ்த்துக்கள் -ஜாக்கி

  ReplyDelete
 5. நல்ல உழைப்பு , திறமை ஒருஅடிமட்ட கிராமத்துகாரன் மேல வருணும் மிக கடினம் உடம்பு நம்ம கையில் ,வாழ்த்துக்கள் -ஜாக்கி
  கதிரேசன் -ஆக்ஸ்போர்ட்

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner