சொந்த ஊர்
கடலூருக்கு போன வியாழன் வெள்ளி சென்று
இருந்தேன்..
அப்பாவை பார்த்தேன்...ஊரில் ஐயனாரப்பன் கோவிலுக்கு பொங்கல் வைக்கும் விழா...
வருடத்தில் சித்திரை மாதத்தில் நடக்கும் இந்த
பொங்கல் விழாவுக்கு சென்னை வந்த பிறகு வருடா வருடம் சென்று விடுவேன்.
என்
பால்யங்கள் பார்த்த இடங்கள் அவைகள்...
படிக்க, கதை பேச என்று ஒரு ரம்மியமான சூழலை ஊருக்கு ஒதுக்குபுறமான அந்த ஐயனாரப்பன் கோவில்
கொடுக்கும் கடலூரில் இருந்து ரயிலில்
கெடிலம் பாலம் தாண்டும் முன் இடப்பக்கம்
புளியமரங்கள் சூழ இந்த ஐயனாரப்பன் கோவில்
இருக்கும்.
அதே போல
அனைமோடு என்று ஒரு இடம்...கடலூரில் இருந்து ரயில் கெடிலம் ஆற்று பாலத்தை தொடும்
முன் 100 மீட்டருக்கு ஆலமரம் அரமரம் வேப்பை மரம் என்று அந்த இடமே மிக அற்புதமாக
காட்சி அளிக்கும்...பாலத்து காவலுக்கு ஒரு காவலாளி இருப்பார்... எப்போதாவது
செல்லும் ரயிலுக்கு பச்சை கொடி காட்டுவார்... மற்ற நேரங்களில் அந்திப்ழமும் ஆலம் பழம் காக்கை குருவி சத்தம்
என்று அந்த இடமே களைகட்டும்....
விழுப்புரம்
மயிலாடுதுறை மார்கத்தில் பயணித்த பல பேர் அந்த இடத்தை பார்த்து
இருப்பார்கள்...கடலூரில் இருந்து சென்றால்
பாலத்தின் தொடக்கத்திலும், வரக்கால்பட்டில் இருந்து கெடிலம் பாலத்தை ரயிலில்
தாண்டினால் பாலத்தின் முடிவிலும் அந்த இடம் இருக்கும்... ஆனால் இன்று அகலரயில்பாதை போடுகின்றேன் என்று அந்த
இடத்தை அழித்து விட்டார்கள்.. பொட்டல் வெளியாக இருக்கின்றது... பசுமை பூத்துக்குலுங்கும் சோலை போல இந்த இடம் ஒரு
காலத்தில் இருந்தது என்று சொன்னால் நம்ப
வாய்ப்பில்லை..
10 வருடங்கள்
ஆகி விட்டது அப்பா அந்த கோவிலுக்கு சென்று
,வீட்டிலேயே இருக்கின்றாரே என்று அவரை அந்த கோவிலுக்கு அழைத்து சென்றேன். அந்த கோவிலில் பெரிய குதிரை ஒன்று இருக்கும்...
ஊருக்கு ஒதுக்குபுறமான ரயில்வே லைனை ஒட்டி இருக்கும் கோவில் அது......20 வருடங்களுக்கு முன் அந்த
கோவிலுக்கு செல்ல மரவள்ளி. மல்லாட்டை கொள்ளிகளை தாண்டிதான் அந்த கோவிலுக்கு செல்ல
முடியும்.. ஊருக்கு எல்லையில் ஐயனாராக
அவர் இருந்தார்... ஆனால் இன்று அவரை சுற்றி கான்கிரிட் காடுகள் அதிகம் முளைத்து விட்டன...
ஆறு மணிக்கு
பெட்ரேமாக்ஸ் வெளிச்சத்துல பொங்க கூடை கிளம்பிடுச்சின்னா அங்க ஒரு பய இருக்க மாட்டான்... அவ்வளவு கும்மிருட்டா
இருக்கும் இப்ப அப்படி இல்லை... அன்னைக்கு எங்க ஊர்ல 30 குடும்பம்தான் இன்னைக்கு
3000 குடும்பத்துக்கு மேல இருக்கு.. அதனால கோவிலுக்கு நிறைய வெளி ஆட்கள் வருகின்றார்கள்...ஒரு ஒருவருஷம்
ஊருக்கும் போகும் போது புது முகங்களை பார்க்கலாம்...
குதிரை
அருகில் நின்று பேசிக்கொண்டு இருக்கும் போது ஒரு இளம் பெண்ணும் அவள் அம்மாவும்
அந்த பெரிய குதிரையின் காலில் ஏதோ பேப்பர்களை கட்டினார்கள்... நான் அப்போது பெரிய
கவனத்தை அவர்கள் மீது வைக்க வில்லை...
கொஞ்ச நேரம்
கழித்து என் அத்தை மகன் தாமோதரன் அந்த
பேபரை பார்த்து விட்டு வந்தான்...
என்ன தாமோ? விபூதி குங்குமம் மடிக்க
வச்சி இருக்காங்களா? இல்லை ஸ்ரீ ராமஜெயம் போல எதாவது 1008 தடவை எழுதி
இருக்காங்களா,?
இல்லை பேப்பர்ல
எதுவும் எழுதலை... விபூதி குங்குமம் கூட மடிக்க முடியாது... பேப்பர் எல்லாம் பொத்த பொத்தலா இருக்கு... பிரேய்லி
எழுத்துன்னு நினைக்கிறேன் என்றான்...
யார் கட்டி
இருப்பாங்க ? என்ன வேண்டுதலோ? என்று சொல்லும் போது ஒரு அம்மா என் பொண்ணுதான் கட்டினா என்று என்னிடம் சைகை
காண்பித்தார்கள்...
நாங்கள் அமைதியானோம்
அந்த இளம்
பெண்ணுக்கு இரண்டு கண்ணும் தெரியவில்லை...அவள் தம்பியின் உதவியோடு அந்த பெரிய குதிரையை சற்றி வந்தாள்... எனக்கு சட்டென
எல்லாம் உடைந்து விட்டது...
முதல் முறையாக
பிரெய்லி எழுத்தில் ஒரு வேண்டுதல், ஒரு கோரிக்கையை நான் பார்க்கின்றேன்... அந்த
அம்மாவிடம் வானத்தை காட்டி எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று சைகையில் சொன்னேன்.
அவள் கை பிடித்து அவள் அம்மா அழைத்து சென்றார்.
என்ன கோரிக்கையாக இருக்கும்? என்ன வேண்டுதல்? கண்
பார்வை கிடைக்க வேண்டும் என்றா? திருமணம்
நடக்க வேண்டும் என்றா? என்னை என் இங்க படைச்ச என்றா? குடும்பத்துக்கு பாராமா நான் இருக்கனுமா ஐயனாரே
என்றா? என்னவாக இருக்கும் அந்த வேண்டுதல்? எனக்கு மண்டைக்குள் இந்த கேள்விகள்தான் திரும்ப திரும்ப ஓடிக்கொண்டு இருந்தன...
எனக்கு பெரிதாய்
கடவுள் நம்பிக்கை இல்லை... ஆனால் ஒரு சக்தி இருக்கின்றது.. அதற்கு உருவம் கொடுத்து
வணங்குகின்றோம் அவ்வளவே.. அந்த சக்தியை
வணங்குகின்றேன்.. கண்ணுக்கு தெரிந்த சக்தி சூரியன்... அதுக்கு தினமும் ஒரு ஹாய்
சொல்லி விட்டு அடுத்த வேலை பார்க்க போய் விடும் ரகம். மன அமைதிக்கு கோவிலுக்கு
சென்று கோரிக்கை அதிகம் வைக்காமல் வெளிவரும்
ரகம்.
‘சிலர்
கோவிலுக்கு போய் சாமி முன் நின்று அவர்கள்
பாட்டுக்கு வேண்டிக்கொண்டு இருப்பார்கள்...
சில கஷ்டகாலங்களில் நிறைய வேண்ட வேண்டும் என்று சாமி முன்னாடி போய் நின்றால் கூட எனக்கு
எதுவும் தோனது அப்படியே பிளாங்கா இருக்கும்... கடைசியா உனக்கு தெரியாதைதையா நான் சொல்லிடபோறேன்
பார்த்துக்கோ என்று சொல்லிவிட்டு வந்துவிடுவேன்.
ஆனால் முதன்
முறையாக ஐயனாரப்பன் கோவிலில் ஆரத்தி
எடுக்கும் போது பிளாங்காக இல்லாமல் வேண்டினேன்... இறைவா அந்த பெண்ணின் கோரிக்கையை நிறைவேற்று என்று... அந்த பிரெய்லி
எழுத்து கோரிக்கைகள் நிறைவேற நீங்களும்
வேண்டிக்கொள்ளுங்கள் அந்த முகம் தெரியா பெண்ணுக்காக...பிரார்த்தனைகளுக்கு வலு
உண்டு... நாங்க இங்க உட்கார்ந்துக்கிட்டு பிரார்த்தனை பண்ணா நடந்துடுமா? என்ற
கேள்வி தேவையற்றது..
நம்பிக்கை
அதானே எல்லாம்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS..

கொள்ளி , மல்லாட்டை ... ம்ம்ம்ம் எனக்கும் ஊர் ஞாபகம் வந்துட்டுது ....
ReplyDeleteVery nice entry.
ReplyDeleteI believe that the unforeseen force that we call as almighty is all around us and is perceived in various forms based on people's level of maturity.
I hope that the blind girl's rightful prayers come true.
இன்றைக்கு என் முகநூல் பக்கத்தில் கருப்பண்ணசாமி குரித்து எழுதி இருக்கிறேன். கோ இன்சிடென்ட் :)
ReplyDeletehope her prayers will be answered soon
ReplyDeleteAnbe sivam , helping mind is divine
ReplyDeleteநானும் பிராத்திக்கிறேன்... அவரது வேண்டுதல்கள் எதுவாயினும் நிறைவேற பிராத்திப்போம்
ReplyDeleteஉணர்வுகள் எல்லாருக்கும் ஒன்றுதானே..அடுத்தவர்களுக்காக வேண்டிக்கொள்வதிலும் ஒரு அலாதி இன்பம் இருக்கத்தான் செய்கிறது.
ReplyDeleteபுளியமரங்கள் சூழ ஐயனார் கோயில் மனதுக்கு குளிர்சியாக இருக்கின்றது.
ReplyDeleteஇளம் பெண்ணுக்காக வேண்டுகின்றேன்.
வாரி வழங்கும் இயற்கை சிலரை வஞ்சித்தும் விடுகிறது. எனக்காக இறைவனிடம் பெரிதாக வேண்டிக் கொண்டதில்லை. இன்று அந்தப் பெண்ணுக்காக வேண்டிக் கொள்ளப் போகிறேன். அவள் கோரிக்கை நிறைவற பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteGood one jackie. Salute to your belief and pray for that girl.
ReplyDeleteபெண்ணுக்காக வேண்டுகின்றேன்.
ReplyDeleteGOD will fulfill her dreams.My prayers too.
ReplyDelete