ஆட்டம் இன்னா
ஆட்டம்... அப்படி ஒரு ஆட்டம்....
 ஒக்காலி அப்படி ஒரு ஆட்டத்தை எவனும் ஆடிக்கூட பார்த்து
இருக்க மாட்டனுங்க..ஆனா எத்தனைவருசத்துக்கு  ஒரு மனுஷனால ஆட முடியும் ?
எல்லாத்துக்கும் ஒரு எல்லை
இருக்கனும் இல்லையா? வயசாயிடுச்சி ரிட்டெயர்மென்ட் ஆகனும் இல்லையா?
 சரி கவர்மென்ட்
வேலைக்கு சரி... 
தாதா அல்லது டான் வேலைக்கு எப்படிய்யா ரிட்டயர்மென்ட் ஆகறது...?? 
மனுஷன் ஆகித்தான் ஆகனும்.. எத்தனை வருஷம்தான் துப்பாக்கி, ரத்தம், உயிர் பயத்தோட வாழறது...  ???சரின்னு  அல்லக்கைங்களுக்கு  ஏரியா பிரிச்சி கொடுத்து  ரிட்டையர் ஆகியாச்சி.... 
புள்ளைய கூட்டிக்கிட்டு ஷாப்பிங் போலாம்ன்னு  அழைச்சிக்கிட்டு போறான்... கார்ல பாட்டை
போட்டுக்கிட்டு ஜாலியா அப்பனும் புள்ளையும் பாட்டை பாடிக்கிட்டு போறாங்க....  
ஷாப்பிங் 
காம்ளக்ஸ்ல காரை பார்க் பண்ணலாம்ன்னு நினைக்கும்  போது பையன் 
சொல்லறான்...
அப்பா வித்தை காட்டிக்கிட்டு இருக்காங்க... நான் போய்
பார்த்துட்டு வந்துடறேன்னு... 
சரின்னு புள்ளைய இறக்கி விட்டு காரை பார்க்
பண்ண  போனா, இளையராஜா போல அவிங்க ஊர்ல
ராக்கண்ணு பகல்கண்ணு முழிச்சி  மெட்டு
போட்ட  .அந்த பாட்டை  அதாவது கார்ல வரும் போது அப்பனும்
புள்ளையும்  சேர்ந்து பாடின பாட்டை
மெய்மறந்து  கேட்டுக்கிட்டு
இருக்கான்...  ஏன்னா பாட்டு முடிய
போவுது...
பாட்டு முடிச்சிடுச்சி கையில் சின்ன பேகை எடுத்துக்கிட்டு
இறங்காறான்.... ஒரு கார் வந்து நிக்குது மெஷின் கண்ணை எடுத்து சரமாரியா  நிராயுதபாணியான  அவனை  எட்டு பேர் சேர்ந்த சரமாரியா சுடறாங்க... 
இத்தனைக்கு அவன் டானா
இருக்கும் போது எதிர்ல நிக்க பயந்தவன்க எல்லாம் இப்ப முகமூடி போட்டுக்கிட்டு
சுடறானுங்க....ஒரு குண்டு ரெண்டு குண்டு இல்லை.... மொத்தம் 22 குண்டு.....ஒரு  குண்டு வாயை கிழிச்சிக்கிட்டு போவுது...
ரத்த  சகதியா உதவிக்கு யாரும் இல்லாம
மயக்கமாகின்றான்..  
கார் பார்க் பண்ணிட்டு
வர வேண்டிய அப்பா எங்கன்னு புள்ளை நடுத்தெருவுல நிக்குது... 
என்ன நல்ல ஒப்பளிங்
தானே...???? படம் பார்க்கனும்னு ஆர்வம் இருக்கு தானே...? 
இப்படித்தான் 22 புல்லட்
படத்தின் முதல் காட்சி ஓப்பன் ஆகுது.
=============
22 Bullets-2010/ பிரெஞ்சு/ படத்தின்
ஒன்லைன்  என்ன?
ஓய்வு பெற்ற ஒரு டானை கொல்ல முயற்சிக்கறாங்க.. அவன் எப்படி
பழிக்கு பழி வாங்கினாங்க என்பதுதான் ஒனலைன்.
===========
22 Bullets-2010/ பிரெஞ்சு/ கதை என்ன???
ஜேன் ரீனோ (சார்லி மேட்டி) பெரிய டான் ... ஏரியா பிரிச்சி
கொடுத்துட்டு மூன்று வருஷம் பொண்டாட்டி புள்ளையோட சந்தோஷமா இருக்கான்... 
எட்டு
பேர் 22 புல்லட்டை அவன் உடம்புல கார் பார்க்கில, சந்தனம் கன்னத்துல  தடவறது 
போல தடவிட்டு போய்ட்டானுங்க.. டோனி அவனோட பழைய பிரண்டு அவன்தான் இதுக்கு
காரணம்ன்னு  தெரியுது...  இதுல ஜேன் சைடுல கரீம்ன்னு ஒரு பிரண்டை
இழக்கின்றான்... 
இந்த பிரச்சனையை
இன்வஸ்ட்டிகேட் பண்ணற பொம்பளை போலிஸ் ,அவ புருசனை ஜேன்தான் டானா இருக்கும் போது கொன்னு
வச்சான்ன்னு  ஒரு பேச்சு உலா வருது...
அவ  யார் கொண்ணாங்கன்னு கண்டு பிடிக்கற வேலையோட இந்த வேலையையும் சேர்த்து செய்யறா.....
எப்படி  அந்த எட்டு பேரை  ஜேன் பழி வாங்கறான் என்பது மீதிக்கதை.
================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில.
ஜேன் ரினொவுக்கு இது மாதிரியான பாத்திரங்கள் வெல்லக்கட்டியை
எடுத்து  நக்கி பாக்கறது போல...  அசத்தி இருக்கின்றார்..
22 புல்லட் பாயர அந்த காட்சியும் அவர் வாய் கிழியற அந்த
ஷாட்டும் சான்சே இல்லாத பிக்சரைசேஷன்.
பாவம் பார்த்து 
எதிரி ஆள  விட்ட குத்தம்..
ஜேன்  ஆளை பிடிச்சி கட்டி போட்டு மூஞ்சில
மிதிச்சி கொன்னு, மாரை புளந்து நாயை விட்டு கடிச்சி கொதற வைப்பது எல்லாம்  பயத்தின் உச்சம் என்றாலும் டிடெயிலாக
காட்டாமல்   காலால் உதைப்பதை மட்டும்
காட்டி இருப்பது புத்திசாலிதனம்...
 படத்தின் சின்ன
சின்ன டுவிஸ்ட்  படம் நெடுகிலும்...
குடும்பத்து மேல கையை வைக்கறவன் கோழைன்னு டயலாக் வரும் போதே குடும்பத்தை  கடத்த போறான் என்பது தெரிந்து விடுகின்றது.
 போலிஸ் வீடியோ
கேமரா பொருத்தி கண்கானித்தாலும் ரகசியம் சொல்ல பாட்டு சவுண்டை அதிகபடுத்தி  ரகசியம் சொல்வது  அசத்தல் என்றாலும் பழைய டெக்னிக்.
போட்டோகிராபி படத்துக்கு 
பெரிய பலம்... முக்கியமா அந்த பைக் சேசிங் நச்சுன்னு எடுத்து
இருக்காங்க.... 
உண்மைசம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட நாவிலின்
திரைவடிவம்தான் இந்த திரைப்படம்...
வழக்கமான பழிவாங்கும் கதைதான்... இது போன்ற திரைப்படங்களை
நிமிர்த்தி உட்கார்ந்தி வைப்பது இயக்குனரின் பங்கு மிக முக்கியமானது... Richard Berry தன் வேலையை மிக சிறப்பாக
செய்து இருக்கின்றார்.
=========
 படத்தின் டிரைலர்.
==========
படக்குழுவினர் விபரம்.
 Directed by	Richard Berry
Alexandre de la Patellière
Matthieu Delaporte
Éric Assous
Produced by	Luc Besson
Pierre-Ange Le Pogam
Screenplay by	Eric Assous
Richard Berry
Based on	L'immortel 
by Franz-Olivier Giesbert
Starring	Jean Reno
Kad Merad
Richard Berry
Marina Foïs
Jean-Pierre Darroussin
Joeystarr
Music by	Klaus Badelt
Cinematography	Thomas Hardmeier
Release date(s)	
24 March 2010
Running time	115 minutes
Country	France
Language	French
Budget	€ 18 000 000
Box office	€ 19 189 854
===============
பைனல்கிக்.
இந்த படம் பார்க்கவேண்டிய படம்...
 டான் படங்கள் எடுக்க
வேண்டியவர்கள் இந்த படத்தையும் அதன் மேக்கிங்கையும் பார்ப்பது நல்லது.,... நிறைய
வன்முறை காட்சிகள் இருக்கும் காரணத்தால் 18 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் இந்த படத்தை
பார்க்க  பரிந்துரைக்கின்றேன்...ஆக்ஷன் பட
விரும்பிகள் டோன்ட் மிஸ் இட்.
 ரேட்டிங்...
பத்துக்கு ஆறு மதிப்பெண்கள்...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...







 
 
bossu naan ungala Rendu padam parunganu thodarndhu solitu irukaen.neenga paaka maatenu adam pudikireenga....
ReplyDelete1). Human centipede.
2). The martyrs.
idha paathutu unga vimarsanam kudunga bossuu pls......