Sundarapandian-2012/ சுந்தரபாண்டியன்... திரைவிமர்சனம்.



தமிழ்சினிமாவின் சூட்சமத்தை தெரிந்து கொண்டு வித்தை காட்டும் இயக்குனர்களில் சசிக்குமாரும் ஒருவர்...
அவர் தயாரிப்பில்  அவர் நடித்து , அவரது உதவியாளர் பிரபாகரன்  இயக்கிய படம்தான் சுந்தரபாண்டியன்...


சசிக்குமார் படங்களில் இருக்கும் பொதுவான தன்மையை பார்த்து விடலாம்...
முக்கியமாக நேட்டிவிட்டி எந்த ஊரோ அந்த ஊருக்கு போய் படம்புடிக்கறப்பவே பாதி ஜெயித்தது போலத்தான்...எங்க எடுத்தாலும் நேட்டிவிட்டி மிஸ் ஆகாது..


so நேட்டிவிட்டி மிஸ் ஆக கூடாதுன்னா? சினிமாதனம் எந்த பிரேம்லயும் வந்துடக்கூடாது இல்லையா? குட்.. அதேதான்... படத்துல எந்த காட்சியிலும் செட் அமைச்சி ஷூட் பண்ணவே மாட்டாரு... 

படத்தோட டார்கெட் ஆடியன்ஸ் பி, சி என்பதால் முக்கியமாக தென்மாவட்டத்து இளைஞர்கள் என்பதால்   நட்புக்கு முக்கியத்துவம்  ரொம்பவே உண்டு... காரணம்.. சென்னையில் பிரண்ட் கூப்பிட்டா முக்கியமான வேலை இருந்தா நாளைக்கு வரேன்னு சொல்லுவானுங்க... அங்க  கூப்பிட்டா போறும் சாப்பிட்ட சாப்பாட்டை கூட அப்படியே  வச்சிட்டு வா மச்சி போலாம்னு கிளம்பிடுவானுங்க... அப்படி நட்புக்கு உயிரையே கொடுக்கற இடத்துல துரோகம் கலந்தா அதுவும் பச்சை துரோகம்... படம் பார்ப்பவனுக்கு வயிறு எரியாது..-?. yes.. அந்த பச்சை துரோகம்தான்  படத்தோட அடிநாதம்..


.படத்துல பெரியவங்களுக்கு மதிப்பு கொடுக்கற கேரக்டர் ஒன்னு கண்டிப்பா இருக்கு... அது ஹீரோவா இருக்கலாம் அல்லது வில்லனா கூட இருக்கலாம்...காதல் மட்டுமே பேஸ் அதை  சுற்றிதான் எல்லாமே....


காரணம் காதல் மறுக்கப்பட்ட தேசம்... இங்க இருக்கற எல்லாருக்குமே  தான் காதலிக்கப்படனும்னு ஆசை இருந்தாலும்... ஜாதியும், மதமும் பெரிய தடையா இருக்கு... அப்ப  இந்த தமிழ்நாட்டுல எத்தனை பேரு  காதலிக்க அலஞ்சி இருப்பான்... எத்தனை பேரு காதல்ல தோத்துபோய் இருப்பான்... சோ அதனால் காதல்தான் மெயின் மேட்டர்....


ஷாட்டுங்க  பொதுவா  லென்தியா வைப்பாங்க... ஆனா இந்த படத்துல  அப்படி எந்த ஷாட்டும் இல்லை... அப்படி இருந்து இருக்கலாம் நான் சரியா கவனிக்காம போய் இருக்கலாம்... பட் இந்த படத்தை  ஏ பிலம் பை சசி அப்படின்னோ ஏ பிலிம் பை சமுத்துரகனி என்று இருந்தாலோ  நிச்சயம் அந்த லெலன்தி ஷாட் கம்போசிஷன் நிச்சயம் இருக்கும்.  உதாரணத்துக்கு சுப்ரமணியபுரம் கிளைமாக்சை சொல்ல்லாம்...... இக்பேக்ட் இந்த படத்துல கூட  சசிக்குமாரை வெறுப்பு ஏத்தி பைக்கில்  வேகமா போகும் மூன்று பேர் ஆக்சிடென்ட் ஆகும் அந்த காட்சிக்கு முன்ன கேமரா  பேருந்து முன் பக்கம் இருக்கும் வெறும் ரோட்டில் டிராவல் ஆகும்… அதே போல எம்ட்டி   பிரேம்ல  சப்ஜக்ட் பிரேம் என்ட்ரி ஆகும்…


படத்துல கண்டிப்பாக ஒரு குத்து பாட்டு  நிச்சயம் அது திருவிழ கொண்டாட்டத்தை பேஸ் பண்ணியதா இருக்கும்.. காரணம்…கிராமத்து என்டர்டெயின்மென்ட் எப்பவுமே  கோவில் திருவிழாதான்..


கதை  நான்கு நண்பர்கள் என்றுதான் கதை ஆரம்பிக்கும்.... அதில் ஒரு கேரக்டர்   நம் வயிற்றை பதம் பார்க்கும் காமேடி கேரக்டர், அது கஞ்சா  கருப்பாவோ அல்லது சூரியாவோ இருக்கலாம்... அதே போல படத்துல சின்ன  சின்ன  கேரக்டர் இயல்பா செய்யற சேட்டை மூலமா காமெடி  நிச்சயம் இருக்கும்...


நட்பும், காதலும் தென்மாவட்டத்து  இளைஞர்களின் கலாச்சாரம்  மற்றும் வாழ்வியல் பின்னனி என்பதால்….. காதல் மற்றும் நட்பை  மையமாக வைத்து ஒரு பஞ்சு டயலாக் கண்டிப்பாக இருக்கவேண்டும்... உதாரணத்துக்கு  எதிரி குத்தினதை கூட சொல்லலாம்... ஆனா  நண்பன் குத்தினதை உயிரே போனாலும் சொல்லக்கூடாது ....

 பொதுவா படத்துல வரும் கேரக்டர் ஏதாவது ஒன்னு ரஜினி ரசிகரா இருப்பாங்க...கமலை புடிக்காது காரணம்... அவர்  ஸ்டைல் கிடையாது.. முக்கியமா ரஜினி போல சிகரேட் ஸ்டைலா பிடிச்சது இல்லை... so அதனால கமல் நாக் அவுட்...


 பாடல் காட்சிகளில்  வரும் மாண்டேஜ் ஷாட்டுகளில்  ரசனையில் பின்னி இருப்பார்கள்….80 களில் வெளி வந்த இளையராஜாவின் பாட்டை ஏதாவது ஒரு காட்சியில்  நுழைத்து  விடுவார்கள்… இப்படி சசிக்குமார் படங்களில் இருக்கும் பொதுவான பண்பு இந்த படத்திலும் உண்டு….ஆனாலும் ரசிக்க வைத்து இருக்கின்றார்கள்…. எப்படி என்றால்  இந்த விமர்சனத்தின் முதல்  இரண்டு பாராக்களை  வாசிக்கவும்.


தன்னோடு உதவியாளர்  பிரபாகரன் சொன்ன கதை பிடித்து போனாதால் இந்த படத்தை தயாரித்து இருப்பதான சொல்லுகின்றார் சசி. 


 சரி  அப்படியே சுந்தர பாண்டியன் படத்தோட  ஒன்லைன் என்னன்னு பார்த்துடுவோம்.
==============

நண்பர்களின் வஞ்சக சூழ்ச்சியை வென்று காதலியை கரம் பிடிக்கும் ஒரு தென்மாவட்டத்து இளைஞனின் கதை..

==============

சுந்திரபாண்டியன் படத்தோட கதை என்ன?

ரஜினி போல தன் நடை உடை பாவனையோட வலையவரும் சசி அந்த ஊரோட பெரிய  தலைகட்டு மகன்.. ஒரே புள்ளை... அதனால ஊருல சண்டித்தனம்  செஞ்சிகிட்டு திரிஞ்ச்சாலும், இரக்க சுபாவம் ரொம்ப ஜாஸ்தி...

 நண்பணோட காதலுக்கு உதவ போக அந்த பொண்ணு சசிக்குமாரை க காதலிக்கறேன் சொல்லிடுது...

 இதுக்கு நடுவல அந்த பொண்ணு போற   பஸ்ல நடக்கும் சின்ன கைகலப்பில் கொலை ஒன்னு நடந்துடுது...சசி  ஜெயிலுக்கு போறார்... நண்பர்களுக்காக உதவ போய் வம்பில் மாட்டிக்கொண்ட சசி ஜெயிலில் இருந்து வெளியே வந்தாரா?

 தன்னை காதலிக்கும் பெண்ணை கரம் பற்றினாரா? கொலைப்பழியை எப்படி துடைத்தார் என்று  மீதியை வெண் திரையில் பாருங்கள்..

=================

 படத்தோட சுவாரஸ்யங்கள்..


சுப்ரமணியபுரம் கதையை வேற டைப்புல பின்புலம் மாத்தி சொன்னா எப்படி இருக்கும்? அப்படித்தான் இந்த படமும் இருக்கின்றது என்றாலும்… அதை பிரசன்ட் பண்ண விதத்தில் நிமிர்ந்து உட்கார வைத்து விடுகின்றார் சசி உதவியாளர் இயக்குனர் பிரபாகரன்.



முதல் மூன்று நிமிடம் வரும் உசிலம்பட்டி பற்றிய காட்சிகள்.. அந்த ஊரை பத்திய சின்ன டாக்குமென்ட்ரி போல ரொம்ப சிறப்பா செய்து இருக்கின்றார்.. இயக்குனர் பிரபாகர்.
 முதல் பாதியில் எதை பற்றியும் யோசிக்காத அளவுக்கு சாதாரண ரசிகனில் இருந்து ஏ  கிளாஸ் ரசிகன் வரை காட்சிகளிலும் கதை சொல்லும் விதத்திலும்  கட்டிப்போடுகின்றார் இயக்குனர்..


முக்கியமாக பேருந்து காட்சிகள் அத்தனையும் சின்ன சின்ன ஹைகூ. அதிலும் அப்புகுட்டி கேரக்டர் சான்சே இல்லை.. நன்றாக செய்து இருக்கின்றார்.. அது போல பல  கேரக்டர்களை நான் எங்கள் ஊரில் பார்த்து இருக்கின்றேன்.


படத்துல எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர் சசியோட அத்தை பொண்ணா வரும் அந்த தெற்றுப்பல் பெண்மணி…. மற்றும் அந்த சீண்டல்   பேச்சு…. இது போல என் கிராமத்தில் இன்னும் பச்சையாக கூட பேசுவார்கள்..ஆனால் ஒரு போதும் எல்லை மீறியது கிடையாது.. பேச்சு ஒரு போதை… அதில் மட்டுமே காமம் இருக்கும் காதல் இருக்கும்.. மற்றபடி  உடல் தேவை பற்றி ரெண்டு பேரும் யோசிக்க மாட்டாங்க…  சான்சே இல்லை  அந்த கேரக்டர்.


அப்புறம் சசியோடம அப்பத்தா கேரக்டர்… அப்புற்ம் சசி அப்பா கேரக்டர்.. தில்லா பொண்ணு வீட்டுல போய் வெள்ளையும் சொள்ளையுமா பொண்ணு கேட்கும் இடம்.. தண்ணி கொடும்மான்னு கேட்டதும் அந்த பெண் கண்களில் நீரோடு தண்ணி கொண்டு வந்து கொடுக்கும் இடம் எல்லாம் நெகிழ வைக்கும் இடங்கள்..


ரைட்டு மெயின்  மேட்டருக்கு வருவோம்..சசி கொடுத்த பாத்திரத்துக்கு நன்றாகவே பொருந்தி  இருந்தாலும் சில இடங்களில் அந்த முத்தல் முகம்… அல்லது  மெச்சூரிட்டியான முகம்… சம் டைம் காதல் காட்சிகளில்  காதல் வயப்படும்  போது  நம்மால்  சட்டென ஏற்றுக்கொள்ள முடியவில்லை.



லட்சுமி மேனன்  the girl next door போல இருக்கின்றார்...சான்சே இல்லை.. நன்றாக்க நடிக்கவும் செய்கின்றார்... இவர்தான் கும்கி படத்தோட ஹீரோயின்...


பரோட்டா சூரி படத்துக்கு படம் தன் நடிப்புலயும் காமெடி சென்சு டைமிங்கிலேயும் பின்னோ பின்னுன்னு பின்னரார்.. முக்கியமா பஸ்ல அவரும் சசிக்குமாரும் அடிக்கும் சேட்டைகள் இடைவேளை வரை படம் பார்க்கறவங்க கவலையை மறக்க வைக்குதுன்னா பார்த்துக்கோங்க...


படத்தோட ஒளிப்பதிவு ரொம்ப அற்புதம்  பசங்க  படத்தோட கேமராமேன் பிரேம்குமார்தான் இந்த படத்துக்கும் கேமரா...பேருந்து காட்சிகளிலும்  கிராமத்து காட்சிகளிலும் பூந்து விளையாடி இருக்கின்றார்..

 காதலியோடு முதல் முறையாக பைக்கில் சசியும் லட்சுமிமேன்னும்  பைக்கில் செல்லும் காட்சிகள்  அதன் பின் வரும் மாண்டேஜ் காட்சிகள் மிக அற்புதம்.

இசை ரகுநாதன் பாடல்கள் பெரிதாய் மனதில் நிற்கவில்லை என்றாலும்  பாடல்காட்சிளில் வரும் மாண்டேஜ் காட்சிகள் ரசிக்கும் படி  எடுத்து இருக்கின்றார்கள்....

=========
படத்தின் டிரைலர்..


==========
படக்குழுவினர் விபரம்.

Directed by Prabhakaran
Produced by M. Sasikumar
Starring
Sasikumar
Lakshmi Menon
Vijay Sethupathi
Soori
Music by N. R. Raghunanthan
Cinematography Premkumar
Studio Company Production
Release date(s)
14 September 2012[1]
Country India
Language Tamil


=================
பைனல் கிக்..




சுப்ரமணியுபரம் தோசையில் மசாலா வைத்து மசாலா தோசையாக்கி இருக்கின்றார்கள்....ஆனால் நல்ல டேஸ்ட்....கடப்பாரையில் ஓங்கி நட மண்டையில் அடிபட்டு ஒரு ஆழமான கத்தி குத்து வாங்கி  சண்டை போடுவது எல்லாம் 80 களில்  வந்த ரஜினி மற்றும் டிராஜேந்தர்  படத்தின் பாதிப்பை கிளைமாக்சில் உணர முடிந்தது... நேட்டி விட்டியோடு எடுக்கப்பட்ட படத்தில்  கிளைமாக்ஸ் சண்டை ரு திருஷ்ட்டி.. மற்ற படி சுந்திரபாண்டியன் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்....


நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
 

9 comments:

  1. "நிச்சயம் அந்த லெலன்தி ஷாட் கம்போசிஷன் நிச்சயம் இருக்கும்.
    உதாரணத்துக்கு சுப்ரமணியபுரம் கிளைமாக்சை சொல்ல்லாம்......"

    அந்த ஷாட் . .

    the day i became a woman

    என்ற ஈரான் படத்தில் வரும் ஷாடடின்

    அப்பட்டமான காப்பி . . .

    "மெரினா படத்தோட கேமராமேன் பிரேம்குமார்தான "

    இது தவறான தகவல்




    சினிமா . . ஒளிப்பதிவு . . .விமர்சனம் . . .

    என இயங்கும் நீங்கள் இது போன்ற பிழையான தகவல்கள்

    அளிப்பது அதிர்சியாக உள்ளது

    ReplyDelete
  2. வாழ்க்கை என்பது கரடு முரடான பாதை. ஆனால் அதை அழகுற வைப்பது நம்மை கடந்து போகும் நம் இதயத்தை தொட்ட நாம் ரசித்த அழகிய தருணங்கள். (உதாரணம்: 'யாழினி அப்பா' பதிவுகள்). அந்த அழகிய தருணங்களை 'வாழ்கையே சலிப்பு" என்ற மேம்போக்கான எண்ணத்தால், ரசிக்க தவறினால் இழப்பு நமக்கு தான். ஆக வாழ்கையின் நிஜ வெற்றியும் களிப்பும் நிறைவும் ஏற்பட சிறிய நிகழ்வுகளையும் ரசித்து பாராட்டும் யுக்தி இன்றி அமையாதது.

    இப்போது வாழ்க்கையை திரை படத்துக்கு ஒப்பிட்டால் நீங்கள் சுமாரான படங்களிலும் வரும் நல்ல தருணங்களை எப்படி இனம் கண்டு ரசித்து மகிழ்வுற வேண்டும் என்று கற்று தருகிறீர்கள். அதனால் நல்ல ரசிகர்களை உருவாக்குகிறீர்கள். இது மிகவும் ஆரோக்கியமான நிலை.

    மாறாக சினிமாவை வைத்து வயிறு வளர்க்கும் சிலரே 95 % தமிழ் படங்களை அது சரியில்லை இது சரியில்லை என்று விமர்சனம் செய்வது வாழ்க்கை மீது பட்டினத்தார் பாடியது போன்றது.

    தமது சினிமா அறிவும், தரமிடலும் மிக உயர் நிலையில் உள்ளது என்று பலருக்கு புரிய வைப்பதாக நினைத்து என்னை போன்ற சாதாரண ரசிகைகளிடம் இப்போ வரும் தமிழ் படங்களின் தரமே சரியில்லை என்னும் மன நிலையை உருவாக்கி, தியேட்டருக்கு போய் பணம் குடுப்பதே வீண் வேலை என்றாக்கி விடுகிறார்கள். பின் யாரும் தியேட்டருக்கு வருவதில்லை என்று பொறுமுவதில் என்ன பயன்? சினிமா உலகம் சிறக்க வேண்டுமானால் முதலில் நல்ல ரசிகர்களை உருவாக்க வேண்டும் எனபதை ஏனோ மறந்து விடுகிறார்கள்

    ஒரு கண்ணாடி குவளை. பாதியளவு தண்ணீர். உங்கள் விமர்சனம் "ஆஹா பாதி தண்ணீர்" என்று மகிழ்வுற வைக்கிறது. சில அதி மேதாவிகளின் விமர்சனம் "பாதியளவே நிறைந்திருக்கிறது" என்று சலிப்படைய வைக்கிறது.

    தொடரட்டும் உங்கள் சிறப்பான விமர்சனங்கள்!

    ReplyDelete
  3. Do you know that usilampatti documentary makes more , cast problem in that area.

    ReplyDelete
  4. After reding your your post, I have decided to watch the film today itself. The way you presented this post is simply superb. That's Jackie. Best Wishes.

    ReplyDelete
  5. அண்ணே தப்பா எடுத்துக்காதீங்க... நீங்கே சொல்ற சென்னை நண்பர்கள் ஹை கிளாஸ் கோஷ்டிகள், அவங்க ரொம்ப கம்மிதானே.அது மட்டும் இல்லாம..சென்னையிலே குடி ஏறியவர்கல்தான் இப்ப சென்னையே.....அப்படி இருக்கும் போது சென்னையிலே கூப்பிட்டா வர மாட்டானுங்க...ஊருலே கூப்பிட்டா வருவானுங்கன்னு சொல்றது சரியா? முகமே தெரியாத உங்களக்கும், நீங்கள் சொல்லி பல பேருக்கு தன்னால முடிஞ்ச உதவிகள் செய்றவங்க சென்னையில் வாழும் நண்பர்கள் தானே . நான் உங்க ரசிகன் ஆனா சென்னைவாசிதான் , நீங்களும் தான் !!!!!

    ReplyDelete
  6. அண்ணே தப்பா எடுத்துக்காதீங்க... நீங்கே சொல்ற சென்னை நண்பர்கள் ஹை கிளாஸ் கோஷ்டிகள், அவங்க ரொம்ப கம்மிதானே.அது மட்டும் இல்லாம..சென்னையிலே குடி ஏறியவர்கல்தான் இப்ப சென்னையே.....அப்படி இருக்கும் போது சென்னையிலே கூப்பிட்டா வர மாட்டானுங்க...ஊருலே கூப்பிட்டா வருவானுங்கன்னு சொல்றது சரியா? முகமே தெரியாத உங்களக்கும், நீங்கள் சொல்லி பல பேருக்கு தன்னால முடிஞ்ச உதவிகள் செய்றவங்க சென்னையில் வாழும் நண்பர்கள் தானே . நான் உங்க ரசிகன் ஆனா சென்னைவாசிதான் , நீங்களும் தான் !!!!!

    ReplyDelete
  7. இருக்கும் ஏழெட்டு கதைகளத்தான் திரும்பத் திரும்ப எடுக்குறாங்க. உண்மைதான். ஆனா அதை ஒரேயாளு எடுக்குறப்போதான் லேசா அலுப்பு தட்டுது.

    படம் பாக்கலாம்னு சொல்றீங்க.

    ஒன்னே ஒன்னு. சசிகுமார் தோற்றத்துக்கு ஏத்த பாத்திரங்களா தேர்ந்தெடுத்தா நல்லது. இல்ல... இப்பிடியேதான் நடிப்பேன்னு தொடர்ந்தா.. சரி. நல்லாயிருக்கட்டும்.

    ReplyDelete
  8. அருமையான விமர்சனம் அண்ணே



    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner