சிறு வயதில் நான் அணியும் உடைகள் சின்னதாக கிழிந்து இருந்தாலும் பெரியதாய் கிழிந்து இருந்தாலும் அதை பற்றி கவலை கொண்டதில்லை..
அவ்வளவு ஏன் அதை ஒரு விஷயமாக யோசித்தது கூட இல்லை. நேற்று எனக்கு பிடித்த டிசர்ட் போட்டுக்ககொண்டு வெளியில கிளம்பினேன்.. பட்டன் போடும் இடத்தில் லேசாக தையல் விட்டு இருந்தது..மனைவி அதை அணிந்து கொண்டு வெளி செல்ல வேண்டாம் என்றாள்..
ச்சே சின்னதா தையல் விட்டு இருக்கும் யாருக்கும் தெரியாது.. இவ்வளவு பெரிய உடம்புல இந்த இடத்தைதான் பார்க்கப்போறாங்களாக்கும் என்று எப்போதும் போல சொல்லித்தொலைக்க..
டைய்லர் கிட்ட
கொடுத்து தச்சி போட்டுக்கறதுல அப்படி
என்ன சோம்பேறிதனம் என்று ஓத்தாம்பட்டு
விட்டாள்.. வாங்கி கட்டிக்கொண்டு அந்த டி சர்ட்டை அவிழ்த்து போட்டு விட்டு
வேறு ஒன்றை அணிந்து வெளித்தெருவுக்கு சென்றேன்.
ஆனால் என்
நினைவுகளை சற்றே பின்னோக்கி செலுத்திய போது.. தீபாவளிக்கு எடுக்கும் ஒரு செட் துணியும், பள்ளியில் ஏழை
மாணவர்களுக்கு கொடுக்கும் இலவச உடுப்புகள்தான் அப்போதைக்கு என் மானத்தை மறைத்து
இருக்கின்றது...நடுவில் என் அம்மா
எனக்கு உடைகள் இல்லை என்றால் அப்பாவிடம் சொல்லி இரண்டு
டெரிகாட்டன் டிராயர்களை அப்பா வாங்கி
தருவார்..இப்போதைய பிள்ளைகள் போல அப்போது இததான் வேண்டும் என்று அடம்பிடித்து கெட்டு வாங்கியது இல்லை.. அவர்கள் கொடுப்பதைதான் போட்டுக்கொண்டு இருக்கின்றோம்.. அதிக பட்ச கோரிக்கை திண்டபண்டம் வாங்கி தரவேண்டும் என்று எப்போதாவது அழுது கோரிக்கை வைப்பதோடு சரி...
டிராயர்கள்
இப்போது போல அப்போது இருக்கவில்லை...
மெயின் பார்ட் இருக்கும் இடத்துக்கு இரண்டு பட்டன்.. அதுக்கு மேல் தொப்புள் அருகில் ஒரு பட்டன் இருக்கத்தை உறுதி
செய்ய இருக்கும்... அதன் பின் ஒரு கொக்கி.... இதுதான் அப்போதைய டிரவுசர்கள்.. அதே
போல இரண்டு வார் வைத்து தைத்து
இருப்பார்கள்...
பின்பக்கம் பெருக்கல் குறி போல இருக்கும்... பெண்கள்
பிரா பட்டையை சரி செய்துக்கொள்வது போல.... அடிக்கடி அதை தோளில் நிக்க வைக்க
படாத பாடு படவேண்டும்.. சில பசங்கள்.. ஒரு பக்கம் தொங்கி கொண்டு எதை பற்றியும்
கவலைபடாமல் நடப்பார்கள்.சிலர் இரண்டு
வார்களையும் தோளில் சரியாக போடாமல்
தொங்க விட்டுக்கொண்டு நடப்பார்கள்.
சரியாக சொல்வதென்றால் அழகி படத்தில் பிளாஷ் பேக்
போர்ஷனில் அந்தகால டிரவுசர்கள் பார்க்கலாம்.... அந் வார் பெரிய ரோதனையை கொடுக்கும்
சட்டை அதன் மேல் அணிந்து செல்லும் போது சட்டை உள்ளே வார் ஒரு பக்கம் இறங்கி
தொலைக்கும்.. செம ரோதனையை கொடுக்கும்...
அழகி படத்துல டமுக்கு டமுக்கு பாட்டுல ஒரு பையன் அந்த பச்சை கலர் டிரவுசர்
போட்டுக்கிட்டு வருவான்..
அந்த வார்
இல்லாம தைத்து கொடு என்று சொன்னால் அதை கூட காதில் வாங்கி கொள்ளமாட்டார்கள்..
அதில் இருக்கும் பிரச்சனையை என்ன
சொன்னாலும் அவர்களால் பிரிந்து கொள்ள்ள முடியாது..
அப்பா எனக்கு
வார் இல்லாம பெரிய பசங்க போட்டுக்கறது போல
வார் இல்லாத டிரவுசர் தச்சி கொடுங்க என்ற
கேட்ட போது...
கேட்டியா ஜெயா உன் புள்ளையாண்டான் சொல்லறதை...?
புள்ள தெறத்தை
பேல உட்டு பார்த்தாங்களாம்... அது
எதிர்க்க இருந்த புல்லை புடிச்சிகிட்டு எழுந்திருக்கும் போது பேண்ட பீ மேலயே உழுந்துச்சாம்.. அது தான்
உன் புள்ளையாண்டான் நிலைமை..போட்டுருக்கற
டிரவுசரையே தொலைச்சிட்டு வந்த மொண்டாட்ட ஓத்தது இது... அந்தளவுக்கு திரவிசு
எல்லாம் உனக்கு இல்லை... வார் வச்ச
டிரவுசரையே போட்டுக்கோ.. அதான் உனக்கு
நல்லது என்றார் என் அப்பா..
பொதுவாக டிரவுசர்கள் காக்கி கலரில் இருக்கும்...
ஏம்பா இந்த கலர்ல எடுத்து கொடுக்கறிங்க என்று கேட்டால்...-?
நீ பன்னி போல மண்ணுல போட்டு பொறட்டுவே.. அழுக்கு தாங்கனும்
இல்லை அதுக்குதான்... என்பார்..
அதே போல
காண்ட்டிராஸ்ட் கலர்களில்தான் டிரவுசர்கள் அதிகம் தென்படும்.. பச்சை , சிவப்பு,
மெரூன் போன்ற வண்ணங்களில் இருக்கும். லைட் கலர்களில் டிரவுசர்களை பார்ப்பது கடினம்
என்பேன்.
எப்படி பட்ட கிளாத்தில் டிரவுசர் வாங்கி கொடுத்தாலும், அதனை ஒரு வாரத்தில் பின்னால்
பக்கம் ஓட்டை விழ வைக்கும் வல்லமை
எங்களிடத்தில் உண்டு...ஆனால் அப்படி ஓட்டை விழுந்த தபால் பெட்டி டிரவுசரை
போட்டுக்கொண்டு பள்ளிக்கு போனால் வெட்கம் பிடிங்கி தின்ன பசங்க நெளிவானுங்க... அது கூட முதல் பிரியட்
முடியரை வரைதான்... முக்கியமா பொம்பளை புள்ளைங்க எதிர்ல ஏவனாவது பிள்ளால்
இருக்கும் ஓட்டையில் கடிதம் போல மடித்து பேப்பரை போட்டு விட்டால் ருத்திர தாண்டவம்
ஆடிவிடுவார்கள்.
லைட்டா கிழிசல்
விட்டாலே,, அம்மா எனக்கு வேறு புது டிரவுசர் கொடுத்து விடுவாள்... மத்தவங்க போல
என் டிரவுசர் அதிகம் கிழியாமல் இருக்கும் சூட்சமத்தை அம்மா எனக்கு
கற்றுக்கொடுத்தால்...
இரண்டு மாதத்துக்கு
ஒரு தபால் பெட்டி டிரவுசர் பிரச்சனை என்
வாழ்க்கையிலும் வந்து போனது..
இரண்டு மாசம்
கூட ஆகலை அதுக்குள்ள உன் புள்ளை அந்த
டெரிக்காட்டன் டிரவுசரை பின்பக்கம்
கிழிச்சி எடுத்துகிட்டு வந்துகிட்டு இருக்கு... சூத்துல ஏதாவது ரம்பம் கிம்பம்
வச்சி இருக்கா ..? எல்லா டிரவுசரையும்
இப்படி கிழிச்சி தள்ளறான்...?
பள்ளியில் சிமென்ட் தரை.. முன்னாடி நகர்ந்து
வாங்க என்று டீச்சர் சொன்னால் உடனே அப்படியே தரையில் உட்கார்ந்த படியே நகர்ந்து
போவோம்.. அதனால்தான் டிரவுசர் கிழிகின்றது என்று அம்மா கண்டுபிடித்து சொன்னால்......அதனால்
வாத்தியார் முன்னாடி நகர்ந்து வாங்கன்னு சொன்னா.. நீ எழுந்து போய் உட்காருப்பா
என்று கெஞ்சிக்கேட்டுக்கொண்டாள்..
நானும்
அன்றில் இருந்து முன்னாடி நகர்ந்து வாங்க என்று சொன்னால் எழுந்து போய் உட்கார
ஆரம்பித்தேன்.. சரி இந்த பொட்டை புள்ளைங்க பாவடை மட்டும் எப்படி பின்னாடி பக்கம்
கிழியாம இருக்குன்னு பார்த்தா? நகர்ந்து வரச்சொன்னா சிலதை தவிர பல பொண்ணுங்க எழுந்து போய்
முன்னாடி உட்காருவதை பார்த்து மிரண்டு
போய் இருக்கின்றேன்... இவளுங்க எல்லாம் பொறக்கும் போதே தெளிவாத்தான் இருப்பாய்ங்க
போல...
பொருளாதார மாற்றம் காரணமாக நிரம்பவே கிராமபுறங்களில் மாற்றத்தை கான முடிகின்றது... இப்போது எல்லாம்
தபால் பெட்டி டிரவுசர்கள் கண்ணில் படுவது மிக குறைவாகவே இருக்கின்றது...
அது போல டிரவுசர்களை பார்த்து மாமாங்கம் ஆகி விட்டது...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
வணக்கம்..ஜாக்கி..பழைய நினைவுகளை கண்முன் நிறுத்தி விட்டீர்.
ReplyDeleteகாக்கி ட்ரவுசர் தான் எனக்கும்..அதிகம் கிழிந்து இருக்கிறது.
நினைவுகள் நெஞ்சிலே...
ReplyDeleteஅண்ணே, உங்க டவுசர்ல பின்னாடிதான் கிழிஞ்சுது. எனக்கு டவுசர் பாக்கெட்தான் துணிதான் அதிகமா கிழிஞ்சுருக்கு.ம்ம் அதுவும் ஒரு சுகம் தான். (வேற ஒன்னும் இல்ல, பாக்கெட் ல சாக்பீஸ் நெறைய போட்டு வச்சுருப்பேன், அதான் சீக்கிரமா கிழிஞ்சு போச்சு!!!!)
ReplyDeleteJackie,
ReplyDeleteNice post. I don't recall wearing any worn out trousers. But, I can relate to the lack of options and limited number of outfits with your childhood.
Jackie,
ReplyDeleteNice post. I don't recall wearing any worn out trousers. But, I can relate to the lack of options and limited number of outfits with your childhood.
எங்க வீட்டுல எல்லாம் வார் வெச்ச கால்சட்டை வாங்கித்தர மாட்டாங்க. வார் இல்லாத கால்சட்டைதான். ஒரு முறை ஆசைப்பட்டு கேட்டும் கெடைக்கலை. தூத்துக்குடி பக்கம் டவுசர்னு சொல்ல மாட்டோம். அப்பல்லாம் கால்சட்டைதான். இப்ப என்னன்னு தெரியலை. அதேபோல எங்க பக்கத்துல வார் வெச்ச கால்சட்டைகளைப் பாத்ததும் இல்லை.
ReplyDeleteஎங்க வீட்டுல எல்லாம் வார் வெச்ச கால்சட்டை வாங்கித்தர மாட்டாங்க. வார் இல்லாத கால்சட்டைதான். ஒரு முறை ஆசைப்பட்டு கேட்டும் கெடைக்கலை. தூத்துக்குடி பக்கம் டவுசர்னு சொல்ல மாட்டோம். அப்பல்லாம் கால்சட்டைதான். இப்ப என்னன்னு தெரியலை. அதேபோல எங்க பக்கத்துல வார் வெச்ச கால்சட்டைகளைப் பாத்ததும் இல்லை.
ReplyDeleteha ha ha thalaippai paarthu perithaga siritthu vitten thalaivare nalla pagirvu..
ReplyDeleteha ha ha thalaippai paarthu perithaga siritthu vitten thalaivare nalla pagirvu..
ReplyDeleteகிராமத்து பள்ளி மாணவர்களின் ஏதார்த்தமான நிகழ்வுகள்
ReplyDeleteஉங்களது வாழ்விலும் அருமையாக சொன்னீங்க
வாழ்த்துக்கள் அண்ணே
Nice post Jackie. Keep going. Best Wishes.
ReplyDeleteவார் வச்ச காற்சட்டையை அணிந்து அதன் மேல் சட்டை அணிவதில் இருந்த ப்ராபளம் சுவையானது. அவசரமாக “ரெண்டுக்கு” போகணும்-ன்னா மேல் சட்டையை கழற்றியபிறகுதான் வாரை கழற்ற முடியும். அப்போ பசங்க படுகிறபாடு இருக்கே ! ! !
ReplyDeleteஎங்கம்மா எனக்கு "அருவாமனை குன்டி"ன்னு பேர் வச்சிருக்காங்க ஜாக்கி.
ReplyDeleteஎங்கம்மா எனக்கு "அருவாமனை குண்டி"ன்னு பேர் வச்சிருக்காங்க ஜாக்கி.
ReplyDeletenanum adhe kuttaiyile kedandha mattadan nanba.
ReplyDeleteநல்ல பதிவு ஜாக்கி... பத்தாவது படிக்கும் போது இந்த தபால் பெட்டி டிரவுசரால் ஒரு முறை மிகவும் அவமானப் பட்டு இருக்கிறேன். டெய்லரிடம் கொடுத்து ஒட்டு போட்டு மூன்று மாதங்கள் ஒப்பேத்தினேன்... அது ஒரு காலம் !!!
ReplyDeleteஜாக்கி அன்னே பதிவை படிக்கும் போதுஎன் பள்ளி வாழ்க்கை நியாபகம் வருவதை தவிக்க முடிவதில்லை .ஆனால் இது போல் கிழிந்த உடனே வேர டவுசர்ஆல்ரெடி ஸ்டாக்இருக்கும்.
ReplyDeleteஎன்ன புது டிரஸ்எடுக்கும் போது பேண்டு க்குதுணி எடுத்து விட்டு டைலரிடம் தைக்கும்போதுஒரு கேள்வி கேப்பாரு உனக்கு ஒரு பேண்டு வேனுமா?இல்லைரெண்டு டவு சர் வேனுமானு? நான் பரவா லில்லையே ரெண்டு கிடைகுதுனுஅப்படியே தைக்கு சொலிருவேன்.இதுலா என்ன பிரச்சனைனா அந்த பயபுல்லஜிபுக்கு பதிலா பட்டன வச்சுரும் அவசரதிற்க்கு பல சமயம் பிச்சுட்டு ஒன்னு கடிக்க போய்ருவேன்
same feelings,
ReplyDeletethans
அது ஒரு பொற்காலம், அப்படி எல்லாம் வளர்ந்து வந்தததுனாலே நம்பளுக்கு இப்ப ஒரு நிதானம் இருக்கு ஜாக்கி,
ReplyDeleteசெல் போன் தலைமுறைக்கு இதெல்லாம் கொடுத்து வைக்கவில்லை.