அதனால்தான் சினிமா திரைக்கதைகள் மனிதனின் அடிப்படை ரசனை மற்றும் நெகிழ்ச்சிகளை வைத்து பின்னப்படுகின்றது..
இந்த பார்முலாவை ஓரளவுக்கு
ஸ்மெல் பிடித்து படம் எடுப்பவர் தெலுங்கு இயக்குனர் சேகர்கம்முல்லா.
சேகர் கம்முல்லா.....
தெலுங்கு சினிமாவின் மரியாதைக்குறிய இயக்குனர் என்று பெயர் எடுத்தவர்.. மெக்கானிக்
இன்ஜினியரிங் படித்து விட்டு சினிமாவில்
சாதிக்க வேண்டும் என்று தெலுங்கு சினிமாவுக்கு கைலியை வரிந்து கட்டிக்கொண்டு படம் எடுக்க வந்தவர்...
தெலுங்கு ஏ
சென்ட்டர் ஆடியன்சால் கொண்டாடப்படும் இயக்குனர்
சேகர் கம்முல்லா...
பெரிய
பெரிய மாஸ் தெலுங்கு ஹீரோக்கள் மரியாதையாக குறிப்பிடப்படும் இயக்குனர் சேகர் கம்முல்லா.....பொது மேடையில் தெலுங்கு
சினிமாவின் பெருமைக்குறிய இயக்குனர் என்று மாஸ் ஹீரோ மகேஷ் பாபு பாராட்டிய
இயக்குனர் சேகர் கம்முல்லா...
ஆனந்,
கேதாவரி, ஹேப்பிடேஸ் லீடர் என்று இதுவரை 5 படங்கள் இயக்கி இருந்தாலும் பெரிய தோல்வியை
இவர் படங்கள் சந்தித்தது இல்லை..
வாழ்வில் நாம்
தவறவிடும் சின்ன சின்ன ரசனைகளை
தேடிப்பிடித்து செல்லுலாய்டில் சிறை பிடிப்பதில் சேகர் கம்முல்லா
கெட்டிக்காரர்.
முதலில் யார்
டைரக்டர் என்று தெரியாமல் ஆனந் என்ற தெலுங்கு படத்தை பார்த்தேன்.. அந்த படம் மிக
மென்மையாக என் அருகில் வந்து கதை சொன்ன
படம்... மற்ற தெலுங்கு படங்களில்
இருந்து அந்த திரைப்படம் வேறு பட்டு காட்டியது..ரத்தம், வன்முறை, கத்தி கபடா,
போன்றவற்றை எடுத்து தூக்கி துரப்போட்டுவிட்டு கதை சொன்ன விதம் எனக்கு ரொம்பவே பிடித்து விட்டது.
அதன் பிறகு கோதாவரி....
குமுதம் இந்த படத்தை பாருங்கள் என்று சுட்டிகாட்டியது... சான்சே இல்லை... பீல்
குட் மூவியா இந்தாளு கொடுத்து
தொலைக்கிறானே எப்படி? என்று யோசித்து
யோசித்து குழம்பி போய்
இருக்கின்றேன்.
சேகர் கம்முல்ல்லா படங்களின் அடிப்படை
ஒற்றுமையை நாம் சின்னதாக 16 எம் எம்
ரீலில் பார்த்து விடலாம்...
மிடில்கிளாஸ் அப்பர் மிடில் கிளாஸ்
கேரக்ட்டர்கள்தான் இவர் திரைப்படங்களின் பெரும்பலான கதை நாயகர்கள்..
கண் உருட்டி,
போட்டி உருவும் வில்லன்கள் யாரும் இவர் படத்தில் இடம் பெற்றதே
இல்லை....சூழ்நிலைகள்தான் இவர்
படத்தில் வில்லனாக கோலோச்சும்.
யுவன்
யுவதிகள்தான் இவருடைய டார்கெட் ஆடியன்ஸ்.... அதனால் படத்தில் இளமை ததும்பும்...
ஒரு ஆண் ஒரு
பெண்ணை எப்படி எல்லாம் ரசிப்பான்.. அது எல்லாம் காட்சிகளாக இருக்கும்..
பொதுவாக
கம்முல்லா நாயகிகள் வளைவான இடுப்பு, குழைவான வயிறு, உறுத்தாத மார்பு நெடு நெடு
உயரத்தோடு இருப்பார்கள்...
புடவை கட்டிய
காட்சி நிச்சயம் கண்டிப்பாக இருக்கும்...
அதே போல ஆப்சாரியில் நிச்சயமாக ஒரு
மாண்டேஜ் ஷாட்டிலாவது கண்டிப்பாக ஒரு
காட்சி இருக்கும்.
இவர் படத்து நாயகிகள்.....கண்டிராஸ்ட்டான உடை
போட்டு லோ ஹீப்பில் இயல்பாய் நடந்து வருவார்கள்... படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அந்த ஒரு ஷாட்டிலேயே காமம் தலைக்கேறி நிற்கும்..
உதாரணத்துக்கு
ஹேப்பிடேஸ் படத்தில் தமன்னா சிவப்பு
சாரியில் மழையில் நனைந்து வரும் கிளைமாக்ஸ் காட்சி....
அதிகாலை பனி,பனித்துளி இருக்கும் புல்லின் நுனி,
குளித்து விட்டு ஈரத்தலையில் துண்டு கட்டி மங்களகரமாக வரும் நாயகி, மழையில்
தலைமுடி சிலுப்பிக்கொண்டு 48 பிரேம்சில் பளிர் சிரிப்புடன் குலுங்க குலுங்க
மகிழ்ச்சியாக ஓடும் நாயகி, கழுந்து, புறங்கை, செண்டைகால் போற் இடங்களில் பூத்து
இருக்கும் வியர்வை துளிகள்...மெல்லியதாக வெளி தெரியும் பிரேசியர் பட்டை, என்று தன்
நாயகிகள் மூலம் கிரக்கத்தை ஏற்ப்படுத்துவார் கம்முல்லா....
வெளியூர் காரில்
செல்லும் போது நாம் என்னவெல்லாம் செய்வோம்
குறிப்பாக மலைபிரதேசங்களுக்கு செல்லும் போது....? நல்ல இயற்கை காட்சி வந்தால் காரை விட்டு இறங்கி
விடுவோம், சின்ன கடைகிளில் டீ குடிப்போம், போட்டோ எடுத்துக்கொள்வோம்.ஓடையில் கால்
குழுவுவோம், பாசி படந்து இருக்கும் சுவர் அருகில் புகைபடம் எடுத்துக்கொள்வோம்...
எல்லாம் இவர் படத்தில் மாண்டேஜ் ஷாட்டுகளில் வைத்து இருப்பார்...
ரைட் 16 எம்
எம் ரீலில் கம்முல்லாவை பற்றி பார்த்தாகி விட்டது.. தற்போது அவர் இயக்கி வெளி
வந்து இருக்கும் லைப் ஈஸ் பீயூட்டிபுல் படத்தை பற்றி தற்போது பார்ப்போம்...
ஒரு லட்சம்
சதுர அடியில் படத்துக்கான ஆடிஷன் விளம்பர ஹோர்டிட்ங்குகள்..
அரைமணிக்கு ஒரு முறை ரேடியோவில் ஆடிஷன் விளம்பர அலறல்கள் என்று சலித்து புடைத்து,
கல், குருனை போன்றவை நீக்கி தேர்வு
செய்ப்பட்டவர்களுக்கு பயிற்சி கொடுத்து எடுத்தப்படம் இது..
===============
சூழ்நிலைகளால்
தனது சொந்த ஊரை விட்டு நகரத்தில் தாத்தா
பாட்டி வீட்டில் தங்கி படிக்க வரும் நாயகனும் அவன் தங்கையும் எவ்வாறு நகர வாழ்வை
எதிர்கொள்கின்றார்கள். என்பதுதான் கதையே..
==================
Life Is Beautiful படத்தின் கதை என்ன??
கணவரை இழந்த
அமலா. அவருடய மகன் சீனு, இரண்டு மகள்களை ஹைதராபாத்தில் உள்ள தாத்தா பாட்டி வீட்டிற்கு
அனுப்பி அங்கேயே படிக்க சொல்கிறார். மூவரில் சீனு இன்ஜினியரிங் பைனல்,
அவரது பெரிய தங்கை
சத்யா டாக்டருக்கு படிக்கவிருப்பவள், கடைக்குட்டி சின்னி மெட்குலேஷன் பள்ளியில் சேர்ந்து படிப்பை தொடங்க
இருக்கின்றார்... இவர்கள் மூவரும் ஹைதராபாத்தில் செட்டிலாகிறார்கள்.
இவர்கள் இருக்கும் காலனிக்கும் பக்கத்தில்
இருக்கும் பணக்கார காலனிக்கும் எப்போதும் தகராறு. காலனியில் சீனுவின் முறைப்பெண் பத்மா இருக்க,
இருவருக்கும் காதல். சீனு வரும் அதே நாளில் புதியதாய்
குடிவரும் லஷ்மி எனும் ஏழை பெண்ணுக்கும் நாகராஜு என்ற லோக்கல் பையனுக்கும் காதல்
அரும்புகின்றது....
அதே காலனியில் அபி என்ற பையன் தன்னை விட வயது அதிகமான பணக்கார
காலனி பெண்ணான ஸ்ரேயோவை காதவிக்கின்றான்...சீனு,நாகராஜ்
, அபி மூவரும் நட்பாகின்றார்கள்...இவர்களுக்கும் பணக்கார காலனி பசங்களுக்கும்
எப்போதும் தகராறு நடக்கின்றது... இவர்களின் மூவரின் காதல் என்னவாயிற்று?
என்பது
மீதிக்கதை...
====================
படத்தின்
சுவாரஸ்யங்களில் சில..
புதுமுகங்களை
தன் படத்தில் அதிகம் அறிமுகப்படுத்தும் இயக்குனர் கமனுள்ளா.... லீடர் படம் முடிந்த உடன் இந்த படத்தை அறிவித்தார்...
இந்த படத்தில் நடிக்க ஆர்வமுள்ள டீன்
ஏஜ்காரர்கள்.. லட்சத்துக்கு மேற்ப்பட்டவகள் தங்கள் சுய விபரத்தை
தெரிவித்தார்கள்...
எட்டுமாதம் ஆடீஷன் நடத்தி சலித்து சலித்து ஆட்களை தேர்ந்து
எடுத்தார்கள்...புதுமுகங்கள் என்று சொல்ல முடியாத அளவுக்கு அனைவரும் மிக சிறப்பாக
நடித்து இருக்கின்றார்கள்...
சீனு
கேரக்டரில் நடித்து இருக்கும் அபிஜித் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும்
நடிக்க பெரிய ஸ்கோப் இல்லை.. ஒரே
மாதிரியான சிரிப்பையும் மேனாரிசங்களையும்
படம் முழுக்க சலிக்க சலிக்க
வழங்குகின்றார்.
சீனுவின் மாமா
பெண்ணாக பத்து கேரக்டரில் நடித்து
இருக்கும் ஷாகூன் மிக சிறப்பாக நடித்து இருக்கின்றார்... தெலுங்கு சினிமாவுக்கு
புது வரவாக வந்து இருக்கும் நிச்சயம்
பெரிய அளவில் வரு வாய்ப்பு இருக்கின்றது... சீனு தன்னிடம் வெளிப்படையாக காதலை சொல்லுவான் என்று ஏங்கும் இடங்களில் மிக அழகாக
நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார். செமையான
ஹாட்டு பிகர் மச்சி...
தெலுங்கானா நாகராஜ் கேரக்டரில் நடித்து இருக்கும் சுதாகர் நடிப்பில் பின்னி இருக்கின்றார்.. தியேட்டரில் அவர்
பேசும் வசனங்களுக்கு கைதட்டலை அள்ளுகின்றார்...
அபி
கேரக்டரில் நடித்து இருக்கும் கவுஷிக்
நல்ல எதிர்காலம் இருக்கின்றது.. தன்னை விட வயது முதிர்ந்த ஸ்ரேயோவை காதலிக்கும்
இடங்களில் கைதட்டல் பெற்றாலும் விமானத்தில் ஸ்ரேயுவுடன் அவருக்கு கிடைக்கும்
எதிர்பாராத உதட்டு முத்தம் மற்றவர்கள்
வயிற்றில் புகையை கிளப்பும் காட்சி...
வெகு
நாட்களுக்கு பிறகு முன்னாள் கதாநாயகி அமலா
நடித்து இருக்கின்றார்...கொஞ்சம் வயதானாலும் அப்படியே இருக்கின்றார்.. சில
காட்சிகள் வந்தாலும் நெஞ்சில்
நிற்கின்றார். என்னதான் இருந்தாலும் அக்னிநட்சத்திரம் படத்தில் ஏணியில் ஏறி ஒரு
எலி ரெண்டு எலி மூனு எலின்னு சொன்ன பிகரா
இது.. என்று கண்ணீர் வர வைக்கின்றார்..
ஜாய்ஸ் ஜே
மேயரின் பாடல்கள் எ ஒன் ரகம் என்றாலும் ஹேப்பிடேஸ் பாடல்களை கேட்பது போலவே
இருக்கின்றன...
ஒளிப்பதிவு விஜய் சி குமார்..டூர் செல்லும்
காட்சிகளாகட்டும், மழை காட்சிகளாகட்டும் அசத்தி இருக்கின்றார்.. முக்கியமாக நாயகி பத்துவின்
குளோசப் காட்சிகளில் சான்சே இல்லை... மழை
படத்தில் நிறைய காட்சிகளில் வருவதால் நிறைய
காட்சிகள் ரம்யமாக இருக்கின்றன...
ஒரு கோடிக்கு
தோட்டா தரணி போட்ட செட்... நல்லா இருந்தாலும் பல காட்சிகளில் செட்டுன்னு நல்லா
தெரியுது பாஸ்.....
===========
படத்தின் டிரைலர்...
===============
படக்கழுவினர்
விபரம்.
Directed by Sekhar Kammula
Produced by Sekhar Kammula
Chandrasekhar Kammula
Written by Sekhar Kammula
Starring
Shriya Saran
Anjala Zaveri
Amala Akkineni
Abhijeet Duddala
Sudhakar Komakula
Kaushik
Shagun
Zara Shah
Music by Mickey J Meyer
Cinematography Vijay C. Kumar
Editing by Marthand K. Venkatesh
Studio Amigos Creations
Distributed by Ficus (Overseas)
Release date(s)
September 14, 2012
Country India
Language Telugu
================
பைனல் கிக்.
படம் பீல்
குட் மூவியாக இருந்தாலும்.. சேகரின் முந்தைய படமான ஹேப்பிடேஸ் படத்தின்
காட்சிகளையும் கேரக்டர்களையும் பல காட்சிகள் நினைவு படுத்துகின்றன.
சீனு
கிரிக்கெட் விளையாடும் காட்சியில் காட்டிய விறு விறுப்பை படம் முழுக்க கொண்டு
சென்று இருக்க வேண்டும்.. பணக்கார காலனி ஏழை காலனி காட்சிகள் டெம்ப்ட் படம்
முழுக்க இருந்து இருக்க வேண்டும்.. நிறைய
சவால்கள் அந்தரத்தில் தொங்கி நிற்பது
திரைக்கதை பல வீனம்.
லைப்ஈஸ்
பீயுட்டி புல்.... பழைய மொந்தையில் பழைய கள்.... படம் பீல் குட்டாக இருந்தாலும் பெட்டர் லக் நெக்ஸ் டைம் சேகர். ஒரு முறை கண்டிப்பாக இந்த படத்தை பார்க்கலாம்..
பார்க்கவேண்டிய படம்.,
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
===============
குறிப்பு...பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
===============
2008 ஆம் ஆண்டில் பிளாக் ஆரம்பித்து, தமிழ் டைப் தெரியாமல் அவதிப்பட்டுக்கொண்டு இருந்த போது... தொடர்ந்து மனதுக்கு பிடித்த திரைப்படங்கள் எழுதிட வேண்டும் என்று ஆவல் இருநதாலும் தமிழ் டைப் தெரியாத காரணத்தால் முக்கி முனறி ஹேப்பிடேஸ் படத்தின் விமர்சனத்தை மூன்று மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்து டைப் அடித்து எழுதி போஸ்ட் செய்தேன்.. டிக வலிக்க தடவி தடவி அடித்தும் அந்த போஸ்ட்டில் எனக்கு திருப்தி இல்லை...அந்த லிக்கைதான் கீழே கொடுத்து இருக்கின்றேன்..
நான் இந்த பிளாக்கில் எழுதிய முதல் சினிமா விமர்சனம்ஹேப்பிடேஸ்தான்.. ... ஒரு சினமா விமச்னம் எப்படி இருக்கவேண்டும் என்ற எந்த கண்டென்டும் இல்லாமல் அடித்து போஸ்டட் செய்தால் போதும் என்று ஆர்வத்தில் அவசர அவசரமாக எழுதி போஸ்ட் செய்த விமர்சனம் அது...ஒரே ஒரு கமேன்ட்... பாரதிதாஸ் என்ற உடுமலைபேட்டை தம்பி போட்டு இருப்பார்.. அவர் இன்று வரை தொடர்ந்து இந்த தளத்தை வாசித்து வருகின்றார்.......சேகர் கம்முல்லாவுக்கு இந்த ஜாக்கிசேகருக்கும் ஏதோ ஒரு பட்டர்பிளை எபெக்ட் இருக்கவேண்டும்... நினைத்த பார்த்தால் மலைப்பாய் இருக்கின்றது...
இன்னும் கூட ஹேப்பிடேஸ் படத்தினை சிலாகித்து மறு முறை எழுத வேண்டும் என்று மனது அடித்துக்கொள்கின்றது.... கணக்கு வழக்கு இல்லாமல் எப்போது பார்த்தாலும் மனது சதோஷமாக வைக்கின்ற படம் அது...
எனது பிளாக்கின் முதல் சினிமா விமர்சனம்...http://www.jackiesekar.com/2008/04/happy-days.html
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
good review . . .
ReplyDeleteBeautiful...Both the Movie and ur Review !
ReplyDelete