சமுக
வலைதளங்களில் அந்த கார்ட்டுனை பார்க்கும் போது
எல்லாம் மிக வெறுப்பாய் இருக்கின்றது...
என் வாழ்நாளில்
இதுவரை எத்தனையே நக்கல் கார்ட்டுன்களை
பார்த்து இருக்கின்றேன்.. ஆனால் இவ்வளவு கீழ்த்தரமான கார்ட்டுனை பார்த்தது இல்லை.
நான்காம் கட்ட
ஈழ போர் நடந்த சமயத்தில் கூட தமிழக
பத்திரிக்கைகளில் ஏமதர்மராஜா மற்றும் கிங்கரர்கள் போல ராஜபக்சேவை சித்தரித்து படங்களையும் கார்ட்டுனையும்
வெளியிட்டு இருந்ததே தவிர்த்து இப்படி ஒரு கேவலமான கார்ட்டுனை தமிழக பத்திரிக்கைகள் ஏதும் வெளியிட்டு
இருக்கவில்லை...ஒரு போதும் ராஜபக்சேவின் அந்தரங்கம்
அவ்வளவு கோபத்திலும் மீறப்படவில்லை...
அவர்கள் அப்படித்தான்... எப்போதுமே அவர்கள்
துவேஷ உணர்வோடுதான் நம்மையும் நம் நாட்டையும் அணுகி கொண்டு இருக்கின்றார்கள்.. அட தமிழர்களை பார்த்தால் கூட பரவாயில்லை ...அவர்களை பொருத்தவரை இந்தியர்கள் அத்தனை பேரையும் எதிரியாகத்தான்
பார்க்கின்றார்கள்...
சின்ன
நாடு கிழக்கு ஆசியாவில் வல்லரசு அளவுக்கு வளர்ந்து இருக்கும் நாட்டின் பிரதமரையும், ஒரு மாநில முதல்வரையும்
இவ்வளவு கேவலமாக சித்தரிக்க முடியுமா? முடியும் என்று லக்பிமா என்ற சிங்கள பத்திரிக்கை
கொக்கரித்து இருக்குகின்றது.... சின்ன
சின்ன எதிர்புகளை காட்டிய நம் முதல்வர் மீதே இவ்வளவு காழ்ப்புணர்ச்சியோடு இருக்கும்
போது, அங்கே இருக்கும் தமிழ் பெண்களின்
நிலையையும் தமிழர்களின் நிலையையும்
நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கின்றது...
அவர்களுக்கு எவ்வளவுதான் கொட்டிக்கொடுத்தாலும்
அவர்கள் பாகிஸ்தானுடனும் சீனாவுடனும்தான் நட்பு பாராட்ட விரும்புகின்றார்கள். இதை
புரிந்து கொண்ட ஒரே இந்திய பிரதமர் இந்திராகாந்தி மட்டுமே...
பாரதிராஜா
இயக்கிய பசும்பொன் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும்.. தன் அம்மாவின் இரண்டாம் தாரத்து பிள்ளைகளான , விக்னேஷ் மற்றும்
பொன்வண்ணனை தன் தம்பிகளாக பிரபு ஏற்றுக்கொள்ளமாட்டார்... ஆனால் அவர்களை வில்லன்கள் அடிக்கும் போது, உள்ளே
புகுந்து அவர்களை அடித்து தன் தம்பிகைளை காப்பாற்றி விட்டு, பிரபு ஒரு
டயலாக் கை கோபத்தோடு சொல்லுவார்.....
என் தம்பிகளை நான் அடிப்பேன், திட்டுவேன்...
அதை எவனும் கேட்கக்கூடாது... என் தம்பிகளை எவன் அடிச்சாலும் நான் கேட்பேன்டா?
என்று சொல்லுவார்..
நமக்குள்
ஆயிரம் கருத்து மோதல் இருக்கலாம்... சண்டை
சச்சரவுகள் இருக்கலாம்... ஆனால் இவ்விதமான போக்கை ஒருபோதும்
கண்டும் காணாமல் செல்ல முடியாது... இது வண்மையாக கண்டிக்கதக்கது....
கேலி செய்யவும் கிண்டல் செய்யவும் ஒரு வரை முறை
இருக்கின்றது.. இது ஆபாசத்தின் உச்சம்..அந்த
பத்ரிக்கையின் கார்ட்டுன் பக்கத்தை
வெளியிட்டு இருக்கலாம்.. ஆனால் அந்த காட்டூன் பலர் பார்க்கும் போது , வரைந்து வெளியிட்டவர்களின் வெற்றிக்கு துணை போனது போல இருக்கும்...
எந்த பெண்ணை சித்தரித்தாலும் அது கண்டிக்க
தக்கதே.. இருப்பினும் நம் மாநில முதல்வரை நினைத்து பார்க்க முடியாத அளவில்
சித்தரித்து இருப்பதை வண்மையாக நாம் அனைவரும் கண்டிக்கவேண்டும்....
காவிரி நதி நீர்
ஆணையத்தை கூட்டுவதில் கூட ரொம்ப மெத்தனம் காட்டுகின்றார் என்று சுப்ரீம் கோர்ட்டே
குட்டு வைத்த பிரதமர்தான்...தமிழ்நாட்டு தமிழர்களை மாற்றந்தாய்
மனப்பாண்மையோடு அணுகக்கூடியவர்தான்.... இருந்தாலும்....? மீண்டும் பசும்பொன்
படத்தில் பிரபு தன் தம்பிகளுக்காக வில்லனிடம் பேசும் வசனத்தை ஒரு முறை படித்து படிக்ககவும்
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
வன்மையான கண்டனங்கள்
ReplyDeleteஇந்த கேவலத்தை எந்த காலத்திலும் மறக்க மாட்டேன் இதற்கு சரியான பதில் சொல்லியாக வேண்டும்.
Deleteமிகச்சரியான சாடல் ஜாக்கி அண்ணே!
ReplyDeleteபடத்தை வெளியிடாததன் மூலம் உங்கள் உண்மையான அன்பும், அக்கறையும் வெளிப்பட்டிருக்கிறது..!!
where is the cartoon bro????
ReplyDeleteமனித தன்மையற்ற அரக்கர்கள் தாங்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்கள்
ReplyDeleteஇந்த அநாகரீகமான கார்ட்டூனுக்கு எனது கண்டனங்களும்
வன்மையான கண்டனங்கள்
ReplyDeleteவன்மையான கண்டனங்கள் ! ! அந்த பத்திரிகைக்கு எப்படி நமது கண்டனத்தை தெரிவிப்பது ??? சொல்லுங்களேன் ஜாக்கி ! !
ReplyDeleteஅண்ணே இவன் தான் அதை கீறிய புறம்போக்கு...
ReplyDeletehttps://www.facebook.com/hasantha.wijenayake
முள்ளிவாய்க்காலில் இறந்த பெண் போராளிகளின் ஆடைகளை அவிழ்த்துப் பார்த்தவர்கள்- சிங்கள நாட்டு இராணுவ வீரர்கள். இவர்களைத்தான் நண்பன் என்று இந்தியா அரசு( மன்னிக்கவேண்டும் காங்கிரஸ் அரசு) ஆதரவு வழங்குகிறது.
ReplyDelete140000க்கு மேற்ப்பட்ட ஈழத்தமிழர்களைக் கொன்று அழித்தது. ஒரு ஈழத்தமிழனாவது ராஜபக்சாவினை அருவருக்கத்தக்கமாதிரி இப்படியான கேலிச்சித்திரத்தினை வரையவில்லை.
மாண்புமிகு தமிழக முதல்வரை கேவலமாக வரையப்பட்ட கேலிச்சித்திரத்தைப் பார்த்து மிகுந்த வேதனைப்படுகிறேன்.
முள்ளிவாய்க்காலில் இறந்த பெண் போராளிகளின் ஆடைகளை அவிழ்த்துப் பார்த்தவர்கள்- சிங்கள நாட்டு இராணுவ வீரர்கள். இவர்களைத்தான் நண்பன் என்று இந்தியா அரசு( மன்னிக்கவேண்டும் காங்கிரஸ் அரசு) ஆதரவு வழங்குகிறது.
ReplyDelete140000க்கு மேற்ப்பட்ட ஈழத்தமிழர்களைக் கொன்று அழித்தது. ஒரு ஈழத்தமிழனாவது ராஜபக்சாவினை அருவருக்கத்தக்கமாதிரி இப்படியான கேலிச்சித்திரத்தினை வரையவில்லை.
மாண்புமிகு தமிழக முதல்வரை கேவலமாக வரையப்பட்ட கேலிச்சித்திரத்தைப் பார்த்து மிகுந்த வேதனைப்படுகிறேன்.
- கந்தப்பு
முதல்வரை ஒரு 'சண்டியர்' போல் வேட்டியை மடித்து கட்டியது போல் சித்தரிக்க பட்டுள்ளது என்று ஒரு பேச்சுக்கு வைத்து கொண்டாலும், பிரதமரை மிகவும் கீழ் தரமாக சித்தரித்து தமிழர்கள் மட்டுமல்ல, முழு இந்தியர்களையும் கேவல படுத்தி இருக்கிறார்கள். இதுக்கு அவர்கள் சிங் மூஞ்சியில் காறிதுப்பி இருக்கலாம். ஆனால் ஒன்று. இப்போது கூட சிங்குக்கு வெட்கம், மானம், சூடு, சொரனை எதுவும் வராது. வாயை மூடி மௌனமாக இருப்பார். நமக்கு கொதிக்கும் ரத்தம் கூட அவருக்கு கொதிக்காது.
ReplyDeleteஇந்தியாவின் நட்பு நாட்டினர் என்று சொரணையற்ற சர்தார் இருக்கிறரோ?
Deleteவன்மையான கண்டனங்கள் .
ReplyDeleteநமக்குள் ஆயிரம் கருத்து மோதல் இருக்கலாம்... சண்டை சச்சரவுகள் இருக்கலாம்... ஆனால் இவ்விதமான போக்கை ஒருபோதும் கண்டும் காணாமல் செல்ல முடியாது... இது வண்மையாக கண்டிக்கதக்கது....
ReplyDeleteகீழ்த்தரமான செயல் புரிந்த அந்த பத்திரிகைக்கு எனது வன்மையான கண்டனங்களையும் தெரிவிக்கிறேன் ..
ReplyDelete//ஆனால் அந்த காட்டூன் பலர் பார்க்கும் போது , வரைந்து வெளியிட்டவர்களின் வெற்றிக்கு துணை போனது போல இருக்கும்.//..
மிக்க நன்றி ஜாக்கி .
கடுமையான கண்டனத்திற்குரியது
ReplyDeleteஅந்த பத்திரிக்கைக்கு வன்மையான கண்டனங்கள்.
ReplyDeleteஜாக்கி அன்னே அந்த படம் எங்கு உள்ளது என லின்க் தரலாமே.எப்படிதான் உள்ளது பார்வைக்கு.
Dear Jackie,
ReplyDeleteI saw the cartoon as well. It was a worst treatment for any one. They have no respect for India and our people.
They should have respected them least for their age.
Krishna
சிங்கள நாய்களுக்கு இரத்தத்தில் ஊறியது வக்கிரம்,எனினும் இது வன்மையாக கண்டிக்கமட்டும் அல்ல சரியானதண்டனைக்கும் உரியது !
ReplyDeleteசிங்கள நாய்களுக்கு இரத்தத்தில் ஊறியது வக்கிரம்,எனினும் இது வன்மையாக கண்டிக்கமட்டும் அல்ல சரியானதண்டனைக்கும் உரியது !
ReplyDeleteகடும் கண்டனங்கள்...
ReplyDeleteநிச்சயமாக, இது கடந்தவாரம் இந்தியாவில் தமிழ் துவேஷவாதிகள் யாத்திரிகர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலின் எதிர்விளைவே... ஒரு மாபெரும் தேசத்தின், மாபெரும் மாநிலத்தை(இலங்கையை விட பன்மடங்கு ஜனதொகையிலும் பரப்பளவிலும் பெரிதானது தமிழகம்) ஆளும் முதல் பெண்மணிக்கே இவ்வாறான கீழ்த்தரமான எதிர்ப்பை இங்குள்ள சிங்கள துவேஷ வாதிகள் காட்டுகிறார்களே?
அச்சம்பவத்தின் எதிர்விளைவை இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி, ஈழ தமிழர்கள் எவ்வாறெல்லாம் அனுபவிக்க வேண்டியிருக்கும்?
நாங்கள் அனுபவிக்கின்றோம்...
நிச்சயமாக, இது கடந்தவாரம் இந்தியாவில் தமிழ் துவேஷவாதிகள் யாத்திரிகர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலின் எதிர்விளைவே... ஒரு மாபெரும் தேசத்தின், மாபெரும் மாநிலத்தை(இலங்கையை விட பன்மடங்கு ஜனதொகையிலும் பரப்பளவிலும் பெரிதானது தமிழகம்) ஆளும் முதல் பெண்மணிக்கேஇவ்வாறான எதிர்ப்பை இங்குள்ள சிங்கள துவேஷ வாதிகள் காட்டுகிறார்களே? அச்சம்பவத்தின் எதிர்விளைவை இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி, ஈழ தமிழர்கள் எவ்வாறெல்லாம் அனுபவிக்க வேண்டியிருக்கும்?
ReplyDeleteநாம் அனுபவிக்கின்றோம்...
இதேபோல் சோனியாவையும் கேவலப்படுத்தும் நாள் வெகுதொலைவில் இல்லை.. எப்போதுதான் இந்த (காங்கிரஸ் அரசு) முண்டகலப்பைகள் தெரிந்துகொள்ள போகிறதோ!!!!
ReplyDeleteகீழ்த்தரமான செயல் புரிந்த அந்த பத்திரிகைக்கு எனது வன்மையான கண்டனங்களையும் தெரிவிக்கிறேன் ..
ReplyDeleteகீழ்த்தரமான செயல் புரிந்த அந்த பத்திரிகைக்கு எனது வன்மையான கண்டனங்களையும் தெரிவிக்கிறேன் ..
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteஸ்ரீலங்கா மஞ்சள் பத்திரிகையை வன்மையாக கண்டிக்க வேண்டும்.