உப்புக்காத்து...21 (முல்லை, அனிதா,ரசனை)


ரசனை என்பது என்ன?


அதை யார் கற்றுக்கொடுத்து இருப்பார்கள்...  எப்போதில் இருந்து இப்படி ஒரு பார்வை தோன்றி இருக்கும்?என்று  நேற்று  யோசித்துக்கொண்டு இருந்தேன். சமுக கட்டமைப்பின்  ஊடாக வாழும் போது சமுகம் பாதி கற்றுக்கொடுக்கின்றது. ... சமுகம் முதலில் பொதுவான ரசனையை கற்றுக்கொடுக்கின்றது... நிறைய பேர் அந்த பொது ரசனையிலேயே வாழ்ந்து வீழ்ந்து விடுகின்றார்கள்.. 


தனிப்பட்ட ரசனையை பலர் நம்மில் வளர்ந்து கொள்வதே இல்லை.. 
முழு நிலவு வெகு அழகாக இருக்கின்றது என்பது பொதுவான ரசனை விதி... ஆனால் ஒரு நாள் முக்கா நிலவு  மிக அழகாக  அன்றைக்கு என்று பார்த்து மிக அழகாக தெரிந்து தொலைக்கும்.. ஆனால் முக்கா நிலவு அழகு என்று  சொல்லி விட்டால்...? நம் ரசனையை குறைத்து மதிப்பிட்டு விடுவார்கள் என்று நினைத்து தன் ரசனையை வெளிப்படுத்திக்கொள்ள  பலர் விருப்புவதில்லை.. பலர் தங்கள் ரசனையை கூட சமுகம் எதையும் நினைத்து விடக்கூடாது என்று நினைத்து வாழ்கின்றார்கள்..


மற்ற அழகான நடிகைகளை கம்பேர் செய்யும் போது   ஜுலியாராபார்ட் மொக்கை பிகர்.. ஆனால் ஏதோ ஒரு அழகு அவரிடம்  இருக்கின்றது என்று பொதுவான  ரசனை ஏற்றுக்கொண்டு இருக்கின்றது.. ஆனால் சதிலீலாவதி படத்தில் கோவை சரளா ரொம்ப அழகு என்று நாம் சொன்னால் மற்ற படங்களை கம்பேர்  செய்து நம்மை குறைத்து  மதிப்பிட்டு விடுவார்களோ? என்று சொல்ல வந்த சின்ன   ரசனை  விஷயத்தை கூட நம்மில் பலர்   மறைத்து விடுகின்றார்கள்...ஆனால எனக்கு தெரிந்து என் ரசனை எப்போதில் இருந்து ஆரம்பித்தது..  பிடித்த பாட்டு பிடித்த உடை, பிடித்த உணவு, பிடித்த இடம், பிடித்த புத்தகம், பிடித்த வரி.... ஆனால் எனக்கு தெரிந்து சினிமாவில் எனக்கு ரசனையையும், பார்க்கும்  பார்வையையும் கற்றுக்கொடுத்தவர்கள் இரண்டு பெண்கள்... அவர்கள்  என் பள்ளி  தோழிகள் என்றால் அது மிகையில்லை  என்று சொல்லலாம்..
நான் கடலூரில் திருப்பாதிரிப்பூலியூரில்  இருக்கும் ராமகிருஷ்ணா உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தேன்... அந்த பள்ளி கோ  எஜிகேஷன்.. இரண்டு வரிசையாக ஆண்கள் உட்கார்ந்து இருப்போம்.. அதே போல பக்கத்தில் இரண்டு வரிசையில் பெண்கள் உட்கார்ந்து இருப்பார்கள்...அனிதா முல்லை என்ற இரண்டு பெண்களில் அனிதா பள்ளிக்கு பக்கத்தில் இருக்கும் அக்கிள்நாயிடு தெருவில் இருந்து பள்ளிக்கு வரும் பெண்.. அவள் ஒரு கிருஸ்த்துவ பெண்... பொட்டு எல்லாம் வைத்துக்கொள்ளமாட்ட்டாள்.. ஓவல் ஷேப்பில் முகம் இருக்கும். கொஞ்சம் கருப்பாக இருப்பாள்...
 முல்லை  ஐயர் பெண்.... 


கூத்தப்பாக்கம் விஜயலட்சுமி நகர் எக்ஸ்டென்ஷன் நகரில்  இருந்து பள்ளிக்கு வருபவள்... பூமா டீச்சர் ரிலேஷன் என்று தெரியும்... ரெண்டு பேரும் ஒன்றாகத்தான் பள்ளிக்கு வருவார்கள்...
பள்ளியில் யாராவது பேசினால் பேர் எழுத சொல்லி இருந்தார்கள்..  முல்லை நன்றாக சுட்டிகையாக இருப்பாள்.....நான் பேசினேன் என்று எனது பெயரை முதன் முறையாக ஆங்கிலத்தில் கரும்பலகையில் எழுதிய பெண்  முல்லைதான்..


Thanasekar  என்று எழுதி இருந்தாள்... எப்படி அவளுக்கு ஆங்கிலத்தில் பெயர்  எழுத தெரிகின்றது என்று நான் குழப்பிக்கொண்டு இருந்தேன். காரணம் என் பெயரை ஆங்கிலத்தில் எனக்கு சரியாக எழுத வராது.. முன்றாம் வகுப்பில் அப்படி எழுதியது இன்றைக்கும்  எனக்கு ஆச்சர்யம்தான்...திருவிளையாடல் சரஸ்வதி சபதம் போன்ற படங்கள் மட்டுமே பார்த்தால்தான் தன் பிள்ளை யோக்கியமயிறாக வளரும் என்று என் அம்மா தப்பு கணக்கு போட்டு எட்டாம்வகுப்பு வரை கந்தன் கருனை, திருவருட்செல்வர்தான் அதிகம்  நான்  திரும்ப திரும்ப பார்த்த படங்கள்...எப்போதாவது அத்தி பூத்தது போல சில படங்களை அழைத்து போவார்கள்.. ஆனால் அம்மா எல்லா படத்தையும் பார்த்து விடுவார்.


  அனிதா, முல்லை சிமென்ட் தரை வீட்டில் இருந்து பள்ளிக்கு வருபவர்கள்... ஆனால் நான்  சாணித்தரை மொழுகிய  வீட்டில் இருந்து பள்ளிக்கு வருபவன்.. ரசனை  வேறுபாடு படிப்பு போன்றவைகளில் நிறைய வேறுபாடுகள் இருந்தன இருவரில்  முல்லையை கண்டால் சற்று மிரட்சி அடைவேன் காரணம்.. பயங்கரமாக  மிரட்டுவாள்.


ஆனாலும் அவர்கள் இரண்டு பேரும் பேசிக்கொள்வதை நான் வாய்  பிளந்து வேடிக்கை பார்த்து இருக்கின்றேன்.. அவர்கள் எப்படி  யோசிக்கின்றார்கள்...? யார் இவர்களுக்கு இப்படி பேச  கற்றுக்கொடுக்கின்றார்கள்.. எங்கிருந்து இப்படி எல்லாம்  யோசித்து பேசுகின்றார்கள்... என்று எனக்கு  ஆச்சர்யமாக இருக்கும். கேர்ள்ஸ் டாக்  ரொம்பவே எனக்கு சுவாரஸ்யத்தை அதிகபடுத்தியது என்பேன்.நான் இப்பவும் அப்பவும் மக்கு பிள்ளைதான்...சலங்கை ஒலி வந்த நேரம்...1983   படத்தை பற்றி பெரிய அளவில் பேச்சுக்கள் இருந்த  நேரம்...


நான் திருவருட்செல்வரை 12 முறை சின்ன வயதில் இருந்து   பார்த்துக்கொண்டு இருந்த நேரம்...  சலங்கை ஒளி படம் எப்படி இருக்கும் ?  என்ற கவலை எல்லாம் எனக்கு இல்லை.. அப்போது  நான் ரஜினி ரசிகன் என்பதால்  எனக்கு கமல் படம் ஓடமால் இருந்தால்  போதும்   என்று கடவுளை வேண்டிக்கொண்டு இருக்கின்றேன்..


மறுநாள் பள்ளியில் முல்லை மற்றும் அனிதா இருவரும் சலங்கை ஓலி பார்த்து விட்டு வந்த கதையையும்.. அந்த படத்தில் இருக்கும் சில நடன  காட்சிகளையும் ரசித்து சிலாகித்தனர். எனக்கு கமல் படத்தை பற்றி சொன்னதால் எனக்கு  கோபம் கோபமாக வந்தது.. தலைவ் படத்தை பத்தி ரசிச்சி சொல்லலை கமல் படத்தை பற்றி அப்படி என்ன சிலாகிப்பு...?ச்சே கமல் கிணத்து மேல ஆடற டான்ஸ் இருக்கே.. சூப்பரா இருந்துச்சி இல்லை...முல்லை எனக்கு மழையில ஜெயப்பிரதா பொட்டு வச்சிகிட்டு அழுதுகிட்டே ஓடி வந்து , கிணத்துல விழப்போற கமலை தாங்கி  பிடிப்பா... அப்ப கமல் அவ மொகத்தை பார்த்துட்டு , மழையில அவ  பொட்டு  நனையும்.. அது நனையாம இருக்க அப்படியே கையை நெத்தியில வச்சி  அப்படியே நடந்து வருவாங்க... பொட்டு அழிஞ்சிடக்கூடாதுன்னு கமல் அழைச்சிக்கினு வர்ரதும், அதுக்கு பின்னாடி வரும் ரகமும் செமையா இருந்துச்சி...


  அம்மா எனக்கு நிறைய கதைகள் சொல்லி இருக்கின்றாள்..  பார்த்து  விட்டு வந்த சினிமாவை கதையாக சொல்லி இருக்கின்றாள்..  ஆனால் அனிதா,முல்லை இரண்டு பேரும் ஷாட் பிரிச்சி ஒரு சீனை சொன்னது போல மிக ரசனையாக சொன்னது  இல்லை..ஒருவேளை அப்படி சொன்னால்  எனக்கு என்ன புரிய போகின்றது என்று அம்மா நினைத்து இருக்கலாம்.
முகுமூடி படத்து பதிவில் எனக்கு நேற்று ஒரு பின்னுட்டத்தை நிஷா என்ற பெண் எழுதி இருந்தார்.....ஐயா உங்கள் விமர்சனம், வலை தளங்களில் வந்த விமர்சனகளில் மிகவும் ஆழமானதாக படுகிறது. சில முற்றும் சினிமா தெரிந்த வித்தகர்கள் மேலெழுந்த வாரியாக திட்டுவதையே விமர்சனமாக எழுதுகையில், உங்கள் விமர்சனம் சினிமா தெரியாதவனையும், ரசித்து சினிமா பார்க்க கற்று கொடுக்கிறது. டைரக்டரின் தனித்துவம் பற்றிய உங்கள் கவனிப்பு அபாரம். நான் அதை அப்படியே ஏற்று கொள்கிறேன் என்பதல்ல இதன் பொருள். ஆனால் உங்கள் கருத்தை தர்க்க ரீதியாக முன் வைத்து என்னை சிந்திக்க வைத்து இருக்கிறீர்கள். வெறும் திரைகதை சரியில்லை என்று அடித்து விட்டு போகையில் யாருக்கு என்ன பயன். எந்த விதத்தில் சரியில்லை, எப்படி இருந்திருக்க வேண்டும் என்று சொல்லும் போது தான் விமர்சகரின் ஆளுமை புலப்படுகிறது. இல்லை என்றால் 'நல்லா பாத்துக்குங்க... நானும் ரவுடி தான்' நிலை என்று தான் கொள்ள வேண்டும். தொடரட்டும் உங்கள் அர்த்தமுள்ள விமர்சனகள். வாழ்த்துக்கள்!


 முதல் ரசனையை என்னுள் விதைத்தவர்கள்  அவர்கள் இரண்டு பேரும்தான் என்பேன்.. கடனெழவே என்று படம் பார்த்துக்கொண்டு இருக்கும் போது காட்சிகளை  மேலும் ரசிக்க பார்க்க கற்றுக்கொடுத்துவர்கள் அவர்கள் இரண்டு  பேரும்தான்.. அனிதாவின் ஆண்மை கலந்த குரலும் முல்லையின் கீச்சிக்குரலும் இன்னும் என் நினைவு  அடுக்குகளில் தேங்கி இருக்கின்றன.... இன்றைக்கு எனக்கு வரும் பாராட்டு கடிதங்களின் முதல் வித்து என் அம்மா என்றாலும்,ரசனையை  வேறு ஒருபார்வையில் ரசிக்க கற்றுக்கொடுத்தது  முல்லையும், அனிதா  இருவரும் என்றால் மிகையில்லை...


அதன்  பின் 5 ஆம் வகுப்புக்கு  மேல்... அவர்கள் வேறு பள்ளிக்கு சென்று  சேர்ந்து விட்டார்கள்...  அதன் பிறகு அனிதாவை நான் பார்க்கவேயில்லை... நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது,முல்லையை தாவணியில் பார்த்தேன் ...காதோரம் இருக்கும் முடிகள்  வியர்வையில் குளித்து, கன்னத்து பக்கம்  வியர்வை  ஒற்றை கோடாய் தாவாங்கட்டை நோக்கி இறங்கி கொண்டு இருக்கும் போது அவளை பார்த்த்தோடு சரி..


அனிதா, முல்லை இருவரும் இப்போது எப்படியும் 35 வயதை கடந்து இருப்பார்கள்..  எப்படி இருப்பார்கள் என்று தெரியவில்லை.. அவர்களை இந்த வயதில் பார்த்து  என் சின்னவயது நினைவு  அடுக்கில் பதிந்து போன ரசனை பெண்களை  நான் கைவிட விரும்பவில்லை.. ஆனால்   நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் கரம் பற்றி  நெகிழ்ச்சியாக நன்றி சொல்லவேண்டும் என்று ஆசை.............

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

10 comments:

 1. இருக்கலாம், ரசனைகளை நமக்குள்ள விதைக்கறவங்கனு வித்தியாசமா சொல்லிருக்கிங்க, நிறைய பள்ளி நினைவுகளை தூண்டி விட்டுருக்கிங்க, அவங்களுக்குலாம் போன் பன்ன போறேன். நன்றி

  ReplyDelete
 2. அனிதா, முல்லை வாழ்க! அவர்களை நினைவு வைத்து நன்றிகாட்டும் நீங்களும்!

  மிக நல்ல, நெருக்கமான எழுத்து இது.

  ReplyDelete
 3. // அனிதா, முல்லை இருவரும் இப்போது எப்படியும் 35 வயதை கடந்து இருப்பார்கள்.. எப்படி இருப்பார்கள் என்று தெரியவில்லை.. அவர்களை இந்த வயதில் பார்த்து என் சின்னவயது நினைவு அடுக்கில் பதிந்து போன ரசனை பெண்களை நான் கைவிட விரும்பவில்லை..

  //

  அண்ணே, முன்பு ஒருமுறை ஜூ.வி யில் வாரம் ஒரு முறை ஒரு பிரபலமானவர் எழுதும் "காதல் படிக்கட்டுகள்" என்ற தொடர் வந்தது. அதில் ஒரு வாரத்தில் கலைஞர் எழுதினார். அந்தக் கட்டுரையில் அவர் இளம் வயதில் காதலித்த பெண்ணைப் பற்றி வர்ணித்துவிட்டு 'இப்போது அவள் எங்கோ ஒரு இடத்தில் இருக்கலாம்..எப்படியும் 70 வயதுகளின் இறுதியில் இருப்பாள். சின்ன வயதில் நான் ரசித்த அந்த குண்டு கன்னங்களும்,அந்த விழிகளைகளையும் இப்போது நான் பார்க்க விரும்பவில்லை" என்று குறிப்பிட்டு இருப்பார். இந்த இடுகை அதை நினைவூட்டுகிறது!

  # கிளாஸ் போஸ்ட் ஃபிரம் ஜாக்கி.

  ReplyDelete
 4. jackie anna you are teaching a new lesson in every post

  ReplyDelete
 5. சூப்பர் தலைவரே! ஒரு நிமிடம் பள்ளிக்கால நினைவுகளையும் என் பால்ய சினேகிதிகளையும் கண் முன்னால் நடமாட வைத்துவிட்டீர்கள். என் போன்ற சாமான்யனுக்குப் பிடித்த ரசனை உங்களுடையது.

  அற்புதம்..! நன்றி!

  ReplyDelete
 6. சூப்பர் தலைவரே! பால்ய சினேகிதிகளை கண்முன் நடமாட வைத்துவிட்டீர்கள். என் போன்ற சாமான்யனின் இரசனை உங்களுடையது.. அதுதான் கொண்டாடுகிறோம்.!

  அற்புதம்...நன்றி!

  ReplyDelete
 7. En palli thozhi vanaja priyavai(vp) nabhagapaduthi vittirgal jacki, thnx. keep goin.

  ReplyDelete
 8. நல்ல பதிவு ஜாக்கி அண்ணா.....

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner