Barfi!-2012/உலகசினிமா/இந்தியா/ பர்ஃபி/ ஊமைக்காதல்.



ஹலோ ஜாக்கி சார்...

மெட்ராஸ்பவன் சிவக்குமார் பேசறேன்..

சொல்லுப்பா... பர்பின்னு ஒரு படம் வந்து இருக்கு..  நிச்சயம்  அந்த படம் பார்க்கனும்.. நீங்க ரொம்ப ரசிப்பிங்க.. என்று   சிவக்குமார் சொன்ன போது கூட நான் நம்பவில்லை.. உலகதரத்தில்  இந்த படம்  இருக்கும் என்று....? 

நன்றி சிவக்குமார்....................நல்ல படத்தை  போன் பண்ணி சொன்னதுக்கு...

பர்சூட் ஆப்  ஹாப்பினஸ் படம் பார்த்துட்டு ஒரு சின்னா நாட்டை வச்சிகிட்டு கண் கலங்க வச்சிட்டானுங்க்ளேன்னு நினைச்சி பீல் பண்ணி இருக்கேன்...  இது போல ஒரு பில் குட் மூவிக்கள் நிறைய இந்திய சினிமாவில் வர வேண்டும் என்று ஏங்கியது உண்டு...

 அந்த குறையை அப்ப அப்ப   நிவர்த்தி  செய்யும் விதமாக அவ்வப்போது படங்கள் வந்து கிட்டுதான் இருக்கு... அந்த வரிசையில் பர்பி.....


கேன்சர் வந்து  பரலோகம் போயிடுவாருன்னு சொல்லி படம் இயக்கிக்கொண்டு இருக்கும் போது பெட் ரெஸ்ட் எடுக்கனும்னு சொல்லிட்டாங்க.,.. பெட்ல இருந்துகிட்டே  தான் இயக்கி கிட்டு இருந்த படத்தை போன் மூலமாவே தன் அசிஸ்டென்டுங்க கிட்ட இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் சொல்லி, மிச்ச சொச்ச படத்தையும் இயக்கி படத்தை முடிச்சி கொடுத்த இயக்குனர்  அனுராக் பாசு இயக்கி வெளிவந்து இருக்கும் படம்தான் பர்பி..


மனுஷனுக்கு இருக்கற பெரிய கொடுப்பனை என்னவென்னறால் கம்யூனிகேட்  பண்ணற வித்தையை கத்துகிட்டதுதான்... அந்த வித்தை மட்டும் கத்துக்கலைன்னா நாமளும்  பத்தோட  பதினொன்னா ஒரு ஜீவராசியா இந்த பூமியில வாழ்ந்து  மறைஞ்சி போயிருப்போம்... பட் அந்த கம்யூனிகேஷன்தான் பல கலைகளை வளர அடிப்படை காரணமா இருந்துச்சி... தன் எண்ணவோட்டத்தை எதிராளிக்கு  தெரிவிக்கும் அடிப்படை விஷயத்திலேயே  பிரச்சனை என்றால்..? அது ரொம்ப பெரிய கொடுமை  அல்லவா?- வாய் பேச முடியாத காது கேட்காமல் வாழ்வது  பெருங்கொடுமை அல்லவா?


தமிழி சினிமாவில் வாய் பேச முடியாதவரின் பிரச்சனைகளை வெகு அழகாக சொல்லிய மொழி திரைப்படம் ஒரு உலக சினிமா தரம் என்றால்  இந்தி சினிமாவில் இந்த பர்பி திரைப்படத்தை சொல்ல்லாம்... இந்த இரண்டு  திரைப்படத்துக்கும் உள்ள அடிப்படை ஒற்றுமை என்னவென்றால் இரண்டு திரைப்படமுமே அழ வைக்காமல் மெல்லிய  நகைச்சுவை உணர்வோடு காதல் படமாக அமைந்ததுதான்....


==================

  பர்பி படத்தின் ஒன் லைன்...

வாய்பேச முடியாத காது கேட்காத இளைஞன் வாழ்வில் இரண்டு பெண்கள் குறுக்கிடுகின்றார்கள்....இரண்டு பெண்களில் யாரோடு தன் வாழ்க்கை பயணத்தை தொடர்கின்றான் என்பதே இந்த படத்தின் ஒன்லைன்.

===================
பர்பி படத்தின் கதை என்ன?

ரன்பீர் கப்பூர் (பர்பி) வாய் பேச முடியாத காதும் கேட்காத குறைபாடு கொண்ட இளைஞன்..தன் அப்பாவோடு டார்ஜிலிங்கில் வசிக்கின்றான்.. நிச்சயதார்தம் நடந்த கையோடு டார்ஜிலிங் வரும்  இலியானவோடு காதல் பூக்கின்றது...ஆனால்  அந்த காதலை தலை முழுகி இலியானா தனக்கு பார்த்த பையனை திருமணம் செய்து கொள்கின்றார்....

ரன்பீர் அப்பா கார் டிரைவராக வேலை  செய்யும்   பணக்கார வீட்டு பெண்  பிரியங்கா சோப்ரா (ஜில்மில்) ஆட்டிசம் குறைபாடு கொண்டவர்... சின்ன வயதில் இருந்தே பழக்கம் என்றாலும் ஒரு கட்டத்தில் பிரியங்கா சோப்ராவை  கடத்துகின்றார்..  போலிஸ் ரன்பீரை தேடுகின்றத ஏன் கடத்துகின்றார்.. எதற்கு கடத்துகின்றார்..-? வெண்திரையில் பாருங்கள்..


===================
நிறைய போராட்டத்துக்கு அப்புறம் ஒரு மனுசன் ஒரு வெற்றியை  வெறியோடு கொடுத்தா எப்படி இருக்கும்? அதுக்கு ஒரு நல்ல உதாரணம் இந்த படம்...  கேன்சரில் இறந்து  விடுவார்..அனுராக் பாசு  ஆட்டம் குளோஸ்ன்னு நினைச்சிகிட்டு இருக்கும் போது, ஓத்தா என்னைக்கு வேண்டுமானாலும் நான் செத்து போவேன்.. அதுக்கு முன்ன என் படத்தை பாருடா வெண்ணைங்களான்னு  உலகதரத்துக்கு ஒரு அற்புதமான படத்தை கொடுத்த அனுராக் பாசுவுக்கும் அவர் தன்னம்பிக்கைக்கு  கோடி நன்றிகள்... மற்றும்  ஒரு விரைப்பான மிலிட்ரி சல்யூட்....


சிலபேரை முதல் பார்வையில் புடிக்கவே புடிக்காது.. தெலுங்கு ஹீரோ மகேஷ் பாபுவை எனக்கு பிடிக்காது.. சம்பார் போல.......... மீசை இல்லாம அமுல் பேபி கணக்கா இருக்கான்.... இவன் எல்லாம் எப்படி ஹீரோ ஆனான்னு நான் நக்கல் விட்டு இருக்கேன்..ஆனா ஒரே ஒரு படம் பார்த்தேன்... இன்னைக்கு  வரைக்கும் மகேஷ் பாபுக்கு தமிழ்நாட்டுல இருக்கற நிரந்தரஃபேன்ஸ்ல நானும் ஒருத்தன்... அந்த படம் அத்தடு..


 அதே போலத்தான் ரன்பீர் கப்பூர்... என்னடா கூர்க்கா பெத்த பயபுள்ளை போல இருக்குன்னு எனக்கு சுத்தமா இவனை புடிக்காது.. பட் இந்த பர்பி படம்  இந்த பயபுள்ளை ரசிக்க  வச்சிடுச்சி.. அந்த  அளவுக்கு பய நடிப்புல பூந்து விளையாடுறான்.. படத்துல ரன்பீர் கொடுக்கும் சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்ஸ் சான்சே இல்லை.... பல வருடத்துக்கு இந்திய இளம்பெண்களின்  தூக்கத்தை கெடுக்கப்ப போகும் கடன்காரன் இந்த பயதான்னு படம் பார்க்கும் போதே பக்கத்துல உட்கார்ந்து படம் பார்த்த பொண்ணுங்களை வச்சே என்னால கணிக்க முடிஞ்சிடுச்சி. எதுக்கு என் வாழ்க்கையில் குறுக்க வந்து எனக்கு முத்தம் கொடுத்து ஆசையை தூண்டினேன்னு செய்கையில் நடிக்கும் காட்சியில் ரன்பீர் பின்னி இருக்கார்


இடுப்பான இலியானாவா  இது என்று மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு  நடிப்பு... முக்கியமா ரன்பீர், இலியானா டார்ஜிலிங் லவ் போர்ஷன்ஸ் சான்சே இல்லை.. முக்கியமா அந்த உதட்டு முத்தம் கியூட்  கவிதை இலியான செமையான மார்டன் லுக்.......அதே போல ஆப்டர் மேரேஜ் புடவை கட்டி பெரிய பொட்டு வச்சி டிபிக்கல் இந்தியன் ஒய்ப்பா செமை வித்யாசம்.
பிரியங்கா சோப்ரா...முதல்ல  இந்த கேரக்டரை அனுராக் கஷ்யப் ஒய்ப் நம்ம பாண்டிச்சேரி பொண்ணு  கல்கி நடிச்சி இருக்குன்னுதான், படம்  கால் வாசி ஓடும் போது  கூட   நினைச்சிகிட்டு இருந்தேன்.. 

ஆனா இந்த படத்துல அந்த புள்ளை எப்படி வரும்?- பிரியங்கா வாச்சேன்னு அப்புறம்தான் கண்டுபிடிச்சேன்... காரணம் இரண்டு பேருக்கும் பல்லு, வாய் ஒரே மாதிரி இருக்கும்...  அதன் பிரச்சனை.. பட் பிரியாங்க நடிப்பு  அற்புதம் இந்த வருட பிலிம் பேர் ஆவார்டு அம்மனிக்குதான்...தனக்குதான் ரன்பீர்ன்னு இலியானாகிட்ட  வார்த்தையில  சொல்லாம அவன் முன்ன வந்து மறைச்சி கிட்டு நிக்கறது ஏ கிளாஸ்.

.
இந்த படம் இலியான பாயின்ட் ஆப் வியூவுல கதை சொல்லறது போலவும் நான் லீனியர்ஸ்டைல் திரைக்கதையாகவும் இந்த படத்தை நம்ம கிட்ட பிரசன்ட் பண்ணி இருக்காங்க.,.


இந்த படத்துல படம் முழுக்க விரவி  கிடக்கும் காமெடி இந்த படத்தை பார்க்ஸ ஆபிஸ்ல நம்பர் ஒன் பொசிஷன்ல வச்சி இருக்கு...பட் அந்த காமெடிக்கு கூட  சார்லி சாப்ளின் காமெடிகள் பல இடத்துல உதவிஇருக்கு....


எனக்கு  இந்த படத்துல வரும் போலிஸ் இன்ஸ்பெக்டர் கேரக்டர் ரொம்பவே இயல்பா ரசிக்க வச்சி இருக்கார்...


படத்துல  பக்கம் பக்கமான வசனம் இல்லைவே இல்லை.. விஷவல பல  காட்சிகள் சொல்லி இருக்காங்க.. அதே போல நம்ம ஊர்  கேமராமேன் ரவி வர்மன்  நிறைய ஷாட்டுகளில் அசத்தி இருக்கார்... நம்ம பொள்ளாச்சி   லொக்கேஷன் பலதை படத்துல  மேட்ச் பண்ணி இருக்காங்க..    வெல்டன் ரவி வர்மன்.

ரன்பிர் மற்றும் இலியானா போர்ஷனில் அவள் ரயில் ஏறி செல்வதும் அந்த லேம்ப் போஸ்ட்டில் இடித்து விழுவதும்  சைக்கிள் டயர் தனியா சுற்றிக்கொண்டு இருப்பதோடு முடித்து  டைரக்டர் பெயர் போட்டால் அது பக்காஷார்ட் பிலிமாகி இருக்கும். 


பாடல்கள் மற்றும் பின்னனி இசை ரசிக்க வைக்கின்றது. பிரிதம் அசத்தி இருக்கின்றார்... முக்கியமாக மே கியாக் கரும்... சாங் சான்சே இல்லை..


இந்த படம் எல்லாருக்கும் பிடிக்கும் சின்ன வயசுல நீங்க செஞ்ச எல்லா குறும்பும் படத்துல  காட்சிகளா வருது.. அப்ப நீங்க ரசிப்பிங்களா மாட்டிங்களா?


ரன்பீர் வயல்ல பிரியா ஒன்னுக்கு அடிக்கும் போது  கிராமத்து  வாசிகள்  லொள்ளும் அதுக்கு ரன்பீர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்.. அதே காட்சியில் இன்ஸ்பெக்டர் மாட்டும் காட்சியும்,  குளிக்கும் இடத்தில்  நிர்வாண சாமியார் அளப்பரையும் வயிற்றை பதம் பார்க்கும்.. 




1978 ல கதை நடக்கறது போல  காட்சி..கரி என்ஜின் எல்லாம் வருது...  விளம்பரம் ஹோர்டிங்லாம் வருது.. பட் ரயில் பெட்டிங்க செம  ஹைடெக்கா இருக்கு...

நிறைய காட்சிகள் உலக படத்துல இருந்து உருவி இருக்காங்க... அந்த தெரு விளக்கு உடைக்கற சீன் ஏதோ ஒரு படத்துல பார்த்து இருக்கேன்.. நியாபகம் வந்தா சொல்லறேன்......

==============
படத்தோட டிரைலர்..



===================


படக்குழுவினர் விபரம்.


Directed by Anurag Basu
Produced by Ronnie Screwvala
Siddharth Roy Kapoor
Written by Anurag Basu
Narrated by Ileana D'Cruz
Starring
Ranbir Kapoor
Priyanka Chopra
Ileana D'Cruz
Rupa Ganguly
Music by Pritam
Cinematography Ravi Varman
Distributed by UTV Motion Pictures
IBC Motion Pictures
Release date(s)
14 September 2012
Country India
Language Hindi
Budget 30 crore



==============
தியேட்டர் டிஸ்கி...


இந்த படத்தை சத்தியம் எஸ் 2  தியாகராஜாவுல ஸ்கீரின் 2வுல பார்த்தேன்.. எனக்கு ரெண்டு பக்கத்திலேயும் முன்னாடியும் பின்னாடியும் பொண்ணுங்க... எனக்கு பக்கத்து சீட்டுல ரெண்டு இந்திகாரிங்க... சோ ஸ்வீட்  சோ ஸ்வீட்டுன்னு மூச்சுக்கு முன்னூறு தரம் சொல்லி என்  உயிரை வாங்கிட்டாளுங்க... லாரியில போகும் போது பிரியங்கா ஸ்கர்ட் நவுந்து தொடை தெரியறதை ஒரு கிராமத்தான் முறைச்சி பார்க்க...ரன்பீர் மூடி விட்டு விட்டு தன் பேண்ட்டை இழுத்து  முட்டிவரை காட்டி......... பாரு பாருன்னு சொல்லும் போது இந்த  பிகருங்க சிரிச்சாளுங்க..... பாருங்க.. ஜென்மத்துக்கு  அந்த சிரிப்பை மறக்க மாட்டேன்.. படம் பார்க்க போகும் போது தியேட்டர்ல பாருங்க இந்த  காட்சிக்கு பொண்ணுங்க ரெஸ்பான்சை....

எனக்கு பக்கத்துல ஸ்லீவ்ல உட்கார்ந்த பொண்ணு செமை பிகர்... காண்டிப்பா. அவன் புருசன் நிச்சயம் கொடுத்து வச்சவன்.. காரணம் அவளோட ரசனைகள்..... செமையா படத்தை ரசிச்சா.... அவ ரசனையோடு சேர்ந்து பயணிக்கு புருஷன் கிடைக்காட்டியும் பரவாயில்லை.. அந்த ரசனையை குழி தோண்டி பொதைக்காத  புருசன் கெடைக்கனும்னு நாம எல்லாரும் அவளுக்காக  வேண்டிக்குவோம்... 

முக்கியமான காடசிகளில் எல்லாரும் சிரிக்க இந்தி புரியாம அடுத்தவன் வாயை பார்த்து எதுக்கு சிரிச்சான்னு குழம்பி பல சீன்களை விட்டு விடுவேன்.. அது போல இல்லாம முழுபடத்தையும் ரசிச்சி பார்க்க வியாழக்கிழமை ஆனா சப்டைட்டில் போட்டு அசத்தும் சத்தியம் நிர்வாகத்துக்கு நன்றி..

தியேட்டர்  இண்டீரியர்  சூப்பரோ சூப்பர்.... ஒன்னுக்கு போற இடத்துல இருக்க பேசின்.. ஏன் இம்மா தாழ இருக்கின்னு என் புத்திக்கு விளங்கலைப்பா...?

================
பைனல் கிக்.


உலக தரத்துக்கு இணையான ஒரு இந்திய சினிமான்னு  ரொம்ப  தைரியாம இந்த படத்தை சொல்ல்லாம்..ராப்பகலா உழைச்ச குழுவினருக்கு பாராட்டுகள்.. இந்த படத்தை அவசியம் பார்த்தே தீர வேண்டும்..  அதுவும் குடும்பத்துடன்..அனுராக் பாசுவுக்கு ஸ்பெஷ்ல் நன்றிகள்... நிறைய பள்ளி பருவத்து காட்சிகளை நியாபகபடுத்தியடிமைக்கு... மீன்டும் ஒரு காதல் கதை , மூன்றாம் பிறை போன்றவை நினைவுக்கு வரும்... அதனால் என்ன????


=========


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

11 comments:

  1. வழக்கம் போல் விமர்சனம் மிக சிறப்பு ஜாக்கி சார்

    ReplyDelete
  2. செம ஜாக்கி. ப்ளஸ்ல திட்டிக்கிறேன்:)

    ReplyDelete
  3. பர்ஃபி தேக்னெகேலியே மன் கர்த்தா ஹை....

    டொரண்ட் மில்கையா ஹை ! !

    ஆப் கா விமர்சன் பகுத் அச்சா ஹை ! !

    ReplyDelete
  4. பிரியங்காவின் நடிப்பிற்கு தேசிய விருது கிடைக்கும் என நினைக்கிறேன். இந்த வாரம் கரீனா கபூரின் 'ஹீரோயின்' ரிலீஸ். 'தி டர்ட்டி பிக்சர்' வித்யா பாலனை ஓவர் டேக் செய்வாரா என்று பார்க்கலாம். எஸ் 2 டிஸ்கி இன்டரஸ்டிங் :)

    ReplyDelete
  5. //ஒன்னுக்கு போற இடத்துல இருக்க பேசின்.. ஏன் இம்மா தாழ இருக்கின்னு என் புத்திக்கு விளங்கலைப்பா...?//

    எஸ் 2 பெரம்பூரிலும் இப்படித்தான். புதுமைய புகுத்த ஒரு அளவே இல்லை போல.

    ReplyDelete
  6. கருத்தை பகிர்ந்து கொண்ட அத்தனை பேருக்கும் நன்றி ஹை....

    ReplyDelete
  7. beautiful film awesome performance music amazing

    ReplyDelete
  8. அந்தப் பேசின் சின்னப்பசங்களுக்கு பாஸ்...

    ReplyDelete
  9. Plz see Lovers Concerto(2002) (Korean Film) sir... i think after u might feel about ur review ... sry...

    ReplyDelete
  10. Plz see Lovers Concerto(2002) (Korean Film) and Charlie Chaplin films after that u might feel about ur review.. sry...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner