sattai-2012-சாட்டை .திரைவிமர்சனம்



இந்த படத்தை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்..
உதாரணத்துக்கு.... நம்மவர் படத்தின் நகல் என்று சொல்லலாம்...எதுக்குய்யா இந்த  சமுத்ரகனிக்கு தேவையில்லாத வேலை...? என்று சொல்லலாம். அறிவுரையை படம் முழுக்க சொல்லிக்கிட்டே இருப்பிங்களா? அதுக்கு டாக்குமெண்ட்ரி எடுத்து இருக்கலாமே என்று கூப்பாடு போடலாம்..


 இதெல்லாம் சென்னையில் மெத்த படித்தவர்கள் அல்லது மெத்த சினிமா பார்த்து அலசிக்கொண்டு இருப்பவர்களிடம் இருந்து வரும் நியாமான விமர்சனம்.. அதில் தப்பில்லை... காரணம் அவர்கள் அப்படித்தான்.. சென்னையில் இருக்கும் பலருக்கும் செங்கல்பட்டில் இருந்து கன்னியாக்குமாரி வரை இருக்கும் கிராமங்களின் அவலங்கள் தெரிய நியாமில்லை...

 தென்மாவட்டத்தில்  ஒரு நாளைக்கு 12 மணிநேரம் மின்வெட்டு இருக்கின்றது.. ஆனால் சென்னையில் ஒரு மணிநேரம்தான்.. பகலில் ஒரு மணிநேரம் கரென்ட் போறது பிரச்சனை இல்லை.. ஆனால்  நைட்டு கூட கரென்ட் இல்லாம பொது மக்கள் படும் பாடு பற்றி நமக்கு என்ன பெரியதாய் அக்கறை.. நாம் சந்தோஷமா இருக்கோமா?  நமக்கு ஒரு  பிரச்சனையும் இல்லையே என்பதாகத்தான் சென்னைவாசிகளின் மனநிலை இருக்கின்றது.. அதனால் அது போலான  விமர்சனங்கள் வரத்தான் செய்யும்......


 என்  சொந்தங்களில் பலர் அரசு பற்றி ஆசிரியர்கள்... அந்த அரசு பள்ளியில்  நேர்மையானவர்களும் இருக்கின்றார்கள்... சேட்டு  போல பைனான்ஸ் பண்ணிக்கொண்டு,  பள்ளியின் வருகைபதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு வெளியே பண வசூல் செய்ய புறப்பட்டு விடும்  ஆசிரியர்கள் பல பேரை எனக்கு தெரியும்.  அப்படி பட்ட பிரச்சனைகளையும் எதிர்கால  கிராமபுறமாணவர்களுக்காக தன் முதல் படத்திலேயே இது போலான கதையை எடுத்து இயக்கி இருக்கும் இயக்குனருக்கு வாழ்த்துகள்... 

காரணம் நமது வேகமான வாழ்க்கை முறையில் நமது பிள்ளைகள்  பற்றியே நாம் கவலை படுவதில்லை, அரசு பள்ளிகள் எப்படி இருந்தால் என்ன? எப்படி    இல்லாவிட்டால் என்ன?  என்று  அவசரகதியில் ஓடிக்கொண்டு இருக்கின்றோம்...ஆனால் கிராமபுற அரசு பள்ளியில் நடக்கும் அடிப்படை பிரச்சனைகளை திரைக்கதையில் கொடுத்து முடிந்தவரை சுவாரஸ்யபடுத்த முயன்று இருக்கும் இயக்குனருக்கு என்  வாழ்த்துகள்.
================

சாட்டை படத்தின் கதை என்ன?


அரசு  பள்ளியில் மாணவர் சேர்க்கை ஏன்  குறைவாக இருக்கின்றது என்பதையும்? அதுக்கு காரணமான சில  ஆசிரியர்களையும் தயாளன் என்கின்ற சமுத்திரக்கனி எப்படி திருந்தி அரசு பள்ளிதரத்தை எப்படி உயர்த்துகின்றார்..... மாணவர்கள் அடிப்படை பிரச்சனைகளை எப்படி சமாளித்து  சரி செய்கின்றார்  என்பதுதான் சாட்டை படத்தின் கதை...

=================
படத்தின் சுவாரஸ்யங்கள்...
முதல் காட்சியில் யமாஹா பைக்கில்   கூலிங்கிளாஸ் அணிந்து வரும் சமுத்திரகனி நம்மவர் கமலை நினைவு படுத்தினாலும் நன்றாகவே நடித்து இருக்கின்றார். முக்கியமாக பிள்ளைகளுக்கு வகுப்பு எடுக்கும் காட்சிகளில் நல் ஆசிரியராக நம் கண் முன் நிற்கின்றார்.

பாஸ்ட் ரீடிங், மேமரி பவர் அதிகரிக்கும் பயிற்சி, தோப்ப்புக்கரணம் போட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்  என்பது போன்ற பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கும்  காட்சிகள் சுவாரஸ்யம்.
முக்கியமாக பெண்கள் பாத்ரூமை எப்படி இருக்கு என்று எட்டி பார்த்து தண்டனை அனுபவிக்கும்  மாணவனை பாராட்டி பேசும் காட்சிகள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.


 வெகு நாட்களுக்கு பிறகு ஜுனியா பாலைய்யா..... பள்ளி தலைமை  ஆசிரியராக நடித்து இருக்கின்றார்.. அவர் தம்பிராமய்யாவின் அதட்டல் உருட்டலுக்கு  பயப்படும் இடங்களில் நன்றாகவே இருக்கின்றன.....


தம்பிராமய்யா வட்டிக்கு பணம் கொடுக்கும் ஆசிரியராக நடித்து இருக்கின்றார்..  சில இடங்களில் கல கலக்கவும் வைக்கின்றார். பல இடங்களில் காட்டுக்கத்தல் கத்தி எரிச்சலை ஏற்ப்படுத்துகின்றார்.


பிளாக் பாண்டி, யுவன், சதிஷ் மகிமா போன்றவர்கள் மாணவர்களுக்கான பாத்திரத்தை சிறப்பாகவே செய்து இருக்கின்றார்கள்..யுவன் மற்றும் மகிமா சீண்டல்  காட்சிகளில் சில ரசிக்கும் படியே இருக்கின்றன.

இந்த சனியன் புடிச்சது என்னமா பாடுது பாருங்களேன்... என்ன குரல், என்ன...........? சரி விடுங்க பாட்டை மட்டும் ரசிங்க பயபுள்ளைங்களா?  செமையான ஹிட்டு...

டி இமானின் இசை படத்துக்கு பெரிய பலம்.. இரண்டு பாடல்கள் ஹீட் லிஸ்ட்டில் இருக்கின்றன..



லோ பட்ஜெட் படத்துக்கு  ஏற்றது போல எது தேவையோ அதை மட்டும் தனது ஒளிப்பதிவு மூலம்  காட்சிப்படுத்தி  இருக்கின்றார் கேமராமேன் ஜீவன்.

ஹீரோவா நடிச்ச பையனை பத்தி சொல்ல  ஒன்னும் இல்லை.. ஹீரோயின் ஒகே.. கிராமபுற பள்ளியில் ஒரு பெண் கல்வியை தொடர்வதே பெரிய விஷயம் என்று சுட்டிக்காட்டிய இடங்கள் அருமை. அதே போல அந்த வாத்தியார் டுவிஸ்ட் நன்றாகவே இருக்கின்றது.


இயக்கனர் பிரபு சாலமன் இந்த படத்தை தயாரித்து இருக்கின்றார்...  நல்ல சினிமா  கொடுத்தற்கு  நன்றி.


=============
படத்தின் டிரைலர்.

.
==========
படக்குழுவினர் விபரம்..


Cast: Ajmal Khan, P Samuthirakani, Swasika, Yuvan, Magima, Thambi Ramaiah

Direction: Anbazhagan

Production: Prabhu Solomon,John Mex

Banner: Shalom Studios

Music: Imaan

Genre: Drama

Duration: 2 hours 18 minutes

Release Date: 21 Sep 2012 

=============

பைனல்கிக்.
முதல் படத்துல நம்ம  கிராமபுற  பள்ளிகளின்  அவலத்தை சொன்னதுக்காக சின்ன சின்ன மைனஸ்க்களை இந்த படத்துல பெரிது படுத்த வேண்டாம்...அப்படியும் சொல்லனும்னா கலெக்டர் பக்ஷனுக்கு  தம்பி ராமய்யா கத்தி எடுத்துகிட்டு போறது எல்லாம் டூ மச்..
சினிமாவே தெரியாமல் எந்த லாஜிக்கும் இல்லாமல் , திரைக்கதை பற்றிய அறிவே இல்லாமல் படம் எடுத்தாலும்... என் சமுகத்துக்கு உருப்படியாக ஏதாவது ஒரு திரைப்படம் சேதி சொல்லுமானால் என்னை பொறுத்தவரை அது நல்ல திரைப்படம்.. அந்த வகையில் இந்த திரைப்படம் நல்ல திரைப்படம்....  கண்டிப்பாக  பார்க்கவேண்டிய திரைப்படம்... இந்த  திரைப்படத்தை பார்த்து ஒரு ஆசிரியர் தன்னை மாற்றிக்கொண்டாலும் படத்துக்குழுவினருக்கு  வெற்றியே..


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

14 comments:

  1. பார்த்து விடுவோம்...

    ReplyDelete
  2. "சினிமாவே தெரியாமல் எந்த லாஜிக்கும் இல்லாமல் , திரைக்கதை பற்றிய அறிவே இல்லாமல் படம் எடுத்தாலும்... என் சமுகத்துக்கு உருப்படியாக ஏதாவது ஒரு திரைப்படம் சேதி சொல்லுமானால் என்னை பொறுத்தவரை அது நல்ல திரைப்படம்"

    Well Said..

    ReplyDelete
  3. சென்னையில் ஒன் அவர் தான் பவர் கட்டா ? நானும் சென்னையில் தான் வசிக்கிறேன் , எந்த ஏரியா சார் நீங்க ? மிகைப்படுத்தப்பட்ட காட்சிளை தவிர்த்திருந்தால் , படம் இன்னும் அருமையாக இருந்திருக்கும் ... குறைகளை நாசூக்காக சொல்லியிருக்கிறீர்கள் , நல்ல விமர்சனம் ... என்னை பொறுத்த வரை சாட்டை - சடுதியில் தவறவிட்ட அடி ...

    ReplyDelete
  4. "இதெல்லாம் சென்னையில் மெத்த படித்தவர்கள் அல்லது மெத்த சினிமா பார்த்து அலசிக்கொண்டு இருப்பவர்களிடம் இருந்து வரும் நியாமான விமர்சனம்.. அதில் தப்பில்லை... காரணம் அவர்கள் அப்படித்தான்.."

    ”சொதப்பி படித்தவர்கள்..., சோக்குக்கு சினிமா பார்ப்பவர்கள்”
    அவர்கள் அப்படித்தான். விடுங்க ஜாக்கி.

    ”இந்த திரைப்படத்தை பார்த்து ஒரு ஆசிரியர் தன்னை மாற்றிக்கொண்டாலும் படத்துக்குழுவினருக்கு வெற்றியே..”

    மொத்தத்தில் இந்த சாட்டையின் விளாசல் சமூகத்தில் ஒரு சின்ன மாற்றத்தையேனும் ஏற்படுத்துமானால் மாபெரும் வெற்றியே. நன்றி.



    ReplyDelete
  5. nice stand to give an opinion if it is good for society then it is good movie nice stand hats off mr.yalini appa..

    ReplyDelete
  6. பிரச்சனைய யாருமே கண்டுக்காம போன எல்லாம் நல்லபடியா இருக்குணுல அர்த்தமாகிவிடும் ...பார்க்கவே முடியாத படங்களுக்கு மத்தியில் ஒரு நல்ல படம் வெளிப்பாடு ....

    ReplyDelete
  7. பிரச்சனைய யாருமே கண்டுக்காம போன எல்லாம் நல்லபடியா இருக்குணுல அர்த்தமாகிவிடும் ...பார்க்கவே முடியாத படங்களுக்கு மத்தியில் ஒரு நல்ல படம் வெளிப்பாடு ....

    ReplyDelete
  8. மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு என்பது மாவட்ட கலக்டராலோ, அல்லது ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரோ முடிவு செய்யும் விவரம் அல்ல.

    தமிழ் நாடு முழுவதும் சேர்ந்துதான் மேல் நிலைமை பள்ளி தலைமை ஆசிரியர் நியமனம் செய்வார்கள் என்று கேள்வி.

    கதையை பள்ளிக் கல்வி பற்றியைப் தெரிந்தவர்களிடம் சொல்லி விவரம் கேட்டு சரி செய்திருக்கலாம். உம். தவறான பதிவு
    டாக்டர் எல். கைலாசம்

    ReplyDelete
  9. மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு என்பது மாவட்ட கலக்டராலோ, அல்லது ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரோ முடிவு செய்யும் விவரம் அல்ல.

    தமிழ் நாடு முழுவதும் சேர்ந்துதான் மேல் நிலைமை பள்ளி தலைமை ஆசிரியர் நியமனம் செய்வார்கள் என்று கேள்வி.

    கதையை பள்ளிக் கல்வி பற்றியைப் தெரிந்தவர்களிடம் சொல்லி விவரம் கேட்டு சரி செய்திருக்கலாம். உம். தவறான பதிவு
    டாக்டர் எல். கைலாசம்

    ReplyDelete
  10. It looks like the movie is different and worth watching too.

    ReplyDelete
  11. //முதல் படத்துல நம்ம கிராமபுற பள்ளிகளின் அவலத்தை //

    ஜாக்கி ...சென்னையிலுள்ள(குறிப்பாக வட சென்னை) அரசுப்பள்ளிகளின்நிலையும் இப்படித்தான் இருக்கிறது.

    முப்பதைந்து வருடங்களுக்கு முன்பு ,நான் சென்னை பேசின் பிரிட்ஜ் மூலகொத்தளம் அருகிலுள்ள மாநகராட்சி பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்தேன்.

    சென்ற மாதம் அந்தப்பள்ளிக்கு எதேச்சையாக செல்ல நேர்ந்தது.35 வருடங்களில் பெரிய மாறுதல் தெரியவில்லை.ஆசிரியர்கள் மட்டும் சற்று வளமாக இருப்பதுபோல் தோன்றியது.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner