கூடங்குளத்தில் சொந்த நாட்டு மக்களையே அடித்து
தும்சம் பண்ணி இருக்கின்றார்கள்…
அணு உலை குறித்து பொது
மக்களின் பயத்தை போக்குவது மத்திய மாநில அரசுகளின் கடமை… ஏற்கனவே போபால் விஷவாயு பிரச்சனையில் இந்திய
அரசு நடந்து கொண்ட விதத்தையும், சிவகாவி தொடர் வெடி
விபத்து உயிரிழப்புகளுக்கு இதுவரை எந்த நடவடிக்கையையும்
இதுவரை ஆண்ட எந்த அரசும் கடுமையான நடவடிக்கை எடுத்து உயிரிழப்பை கட்டுப்படுத்தவில்லை...
பாதுகாப்பு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.… 100 பள்ளி
குழந்தைகள் கும்பகோணத்தில் தீக்கிரையான போது பள்ளி
கல்லூரிகள் மீது என்ன கடுமையான நடவடிக்கையை ஏடுத்தார்கள்.. ??அப்படி எடுத்து
இருந்தால் பேருந்தில் இருந்த ஓட்டையில் ஒரு
குழந்தை விழுந்து எப்படி இறந்து போகும்?- எந்த பெரிய
விபத்து நடந்தாலும் மீண்டும் நடைபெறாமல் இருக்க எந்த
அரசும் கடுமையான நடவடிக்கை எடுத்ததே இல்லை என்பதே நிதர்சன உண்மை... நாளை மற்றோரு
நாளே என்று அரசுகள் கடந்து போனால் மக்கள்
வீதியில் இறங்கி போராடத்தான் செய்வார்கள். இல்லை இல்லை கடலில் இறங்கி கூட போராடத்தான் செய்வார்கள்...
======================
அதிமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஒடி
விட்டன…. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆறு மாதத்தில் மின்வெட்டை போக்குவோம் என்றார்கள். இன்னும் மின் வெட்டை சரி செய்த பாடில்லை… இதை எந்த ஊடகமும்
கேட்க வக்கில்லை… பல சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டு
இருக்கின்றன.. அது கூட பராவாயில்லை.. தென்மாவட்ட மக்கள் இரவில் நிம்மதியாக தூங்கி நாட்கள் ஆகின்றன என்று
புலம்பி தவிக்கின்றார்கள்..…மாற்றம் வேண்டிய மக்கள் ஏமாற்றம்
அடைந்ததுதான் பெருங்கொடுமை
=====================
திரும்பவும் பெட்ரோல் விலை 5 ரூபாய்க்கு ஏற்றப்போவதாக பெட்ரோலியா
நிறுவனங்கள் கொஞ்சிக்குலாவி அறிவிக்க இருக்கின்றன…
திரும்ப 78 ரூபாய் லெவலுக்கு போவும்ன்னு
நினைக்கிறேன்.. இருந்தாலும் வண்டி ஓட்டித்ன் ஆவனும் இல்லைன்னா லாஸ் ஆப் பே தான்...ஆனால்
எதுவும் சொல்லாமல் கொள்ளாமல் நேற்று இரவு
டிசலுக்கு 5ரூபாய் ஏற்றி விட்டார்கள்... இப்ப எல்லா ரேட்டும் குப்புன்னு ஏறும்
பாருங்க...
=============
கூடங்குள மக்கள் வாழ்வாதார பிரச்சனைக்கு
போராடிக்கொண்டு இருக்கும் போது ஸ்ரீரங்கத்தில் தொடர்ச்சியாக அன்னதான விழாவை இனிதே
நடத்தி நம்மை மெய் சிலிர்க்க வைத்து
இருக்கின்றார்... நம் முதல்வர் ஜெ அவர்கள்...பிடில் வாசிப்புக்கு பதில்
அன்னதானம் அவ்வளவுதான் பெரிய வித்யாசமில்லை...
==========================
மிக்சர்...
--
சாதாரணமாகவே ரோட்டுல ஆக்சிடென்ட்லு அடிபட்டு
விழுந்து கிடக்கறவனுங்களையே தூக்கி விடாம எறுமை மாட்டு சூத்துல மழை பெஞ்சது போல போவானங்க… பாரிஸ்
பிராட்வே பஸ் ஸ்டான்டுல பட்ட பகலில் பல பேர்
முன்னிலையில் ஒரு இளம்பெண் கொலை செய்யப்படுகின்றாள்… அவளை கொலை செய்த காதலன்
எல்லோருடைய எதிரிலேயும் தற்கொலை செய்து கொள்கின்றான்.. கேட்பார்
யாரும் இல்லை… நிச்சயமாக யாராவது
ஒரு ஆள் கேட்க போய் இருந்தால் நிச்சயம்
பல பேர் சேர்ந்து அந்த கொலையை தடுத்து நிறத்தி இருக்க முடியும்.. அல்லது அந்த பெண்ணுக்கு உடனே முதல்
உதவி செய்து இருந்தால் கப்பாற்றியாவது இருக்க முடியும்….
என்னதான் பெரிய புடுங்கி மயிறு போல நான் எழுதினாலும்,..
இந்த ஊரில் உதவி செய்யவே யோசிக்க
வேண்டியதாய் இருக்கின்றது…எங்கள் ஊராக இருந்தால் தோள்
கொடுக்க நிறைய இரண்டு பேராவது வருவார்கள் என்ன செய்ய?? ஒரு சிறிய சம்பவத்தில் உதவி
செய்ய போய் உபத்திரம் பெற்றது எனக்கு என்றைக்கும் மறக்காது. சென்னை போடா வெண்ணை
என்று சொன்னது அன்றுதான்..
========
தன் மனைவிக்கு பிரசவ வலி என்று விடியற்காலை
நாலே முக்காவுக்கு மாடி வீட்டு தப்பி
என்னை எழுப்பினான்.. பக்கத்தி வீட்டில்
கார் வாங்கிக்கொண்டு ராமச்சந்திராவுக்கு அரைமணியில் போய் விட்டோம்...
போனதும் முதலில் ஒரு சீட்டை கொடுத்து கவுண்டரில் பணம் கட்டி விட்டு வரச்சொன்னார்கள்.. 4 மணி நேரம்
அவசரகால பெட் வாடகை 750 என்று எழுதி இருந்தார்கள்.. இன்னும் டியூடேட் இருக்கின்றது.... தொடர்ந்து
அங்கே இருக்கும் ஒரு பெண் டாக்டரிடம்தான் மருத்துவம் பார்த்து
வருகின்றார்கள்...ஆனாலும் தொடாந்து எல்லா டெஸ்ட்டையும் செய்து விட்டு அன்று மாலை நாலு மணிக்கு 5000 ரூபாய் பிள்ளை
போட்டு தீட்டி பால்ஸ் பெயின்தான் வந்து இருக்கு.. என்று வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்...
================
யாரோ ஒருவர் யாழினி அப்பா என்று டூவிட்டரில்
இருக்கின்றார் போல.... அவர் நான்
என்று நினைதுதக்கொண்டு அவர் டுவிட்
ஆனந்தவிகடனில் வந்தால் எனக்கு வாழ்த்து
சொல்லுகின்றார்கள்.. நான் மட்டுமே யாழினி என்று பெயர் வைக்கவில்லை.. நிறைய யாழினி
அப்பாக்கள் இருக்கின்றார்கள்.. நான் எப்பவுமே ஜாக்கிசேகர்தான் அதில் எந்த
மாற்றமும் இல்லை..
==========
காலையில் அலுவலகம் கிளம்பும் போது ஒன்றரை வயது
யாழினியை யாரெல்லாம் ஒரு மணிநேரம் பார்த்துக்கொள்ளுகின்றார்களோ?
அவர்கள் எல்லோருமே எங்களுக்கு நடமாடும்
தெய்வங்கள்....#ஜாக்கி பீலிங்ஸ்.
=================
என் நாக்குல சனி இன்னைக்கு அதிகம் நேரம்
உட்கார்ந்துடுச்சி....போடா போடி போஸ்டர்ல போடா போடின்னு தமிழ்ல ஸ்டைலா எழுதி
இருக்காங்க போல.....நான் அது தமிழ் இல்லை ஆங்கிலம் நினைச்சி சத்தம் போட்டு வேற
படிச்சி தொலைச்சிட்டேன்... பக்கத்துல உட்கார்ந்து இருந்தவங்க மெரண்டு
போயிட்டாங்க... எல்லாம் என் நேரம்... போடாவை சொன்னப்ப கூட மன்னிச்சிட்டாங்க.. ஆனா
போடியை ஆங்கில வார்த்தைன்னு எழுத்து கூட்டினேன் பாருங்க.. கிரகமே.. என்னமோ போடா
ஜாக்கி....
=================
என்டிடிவி இந்துவில் ஒவ்வோரு ஞூயிற்று கிழமை இரவு 9,30
மணிக்கு சினிமா சென்ட்ரல் என்ற புரோகிராம் எழுதி இயக்கி வருகின்றேன்.
நேரம் இருப்பின் பாருங்கள்.. முகமூடி
படத்தின் திரைவிமர்சனம் இங்கே உங்களுக்காக.... சென்னையில்
தெரியவில்லை... தெரியாதவர்கள் இங்கே கொடுத்து இருக்கும் லிங்கில் லைவ்வாக அதே நேரத்தில் பார்க்கலாம்... .http://www.ndtv.com/video/live/channel/ndtv-hindu/ ,
இந்த வாரம் சுந்தரபாண்டியன் விமர்சனம்... நேரம் இருப்பின் பாருங்கள்..
=========
முகமூடி திரைவிமர்சனம்.
பாகம்..1
=============
பாகம்..2
==============
பாகம்...3
============
பிலாசிபி
பாண்டி..
================================
செவ்வாய் இரவு எட்டரை
மணிவாக்கில் சேப்பாக்கத்தை கடக்கும் போது சேப்பாக்கம் கிரிக்கெட் கிரவுண்ட்டில் டி20 இந்தியா ,நியுசிலாந்து கிரிக்கெட் மேட்ச் , ரட்சத ஒளி விளக்குகள் உதவியுடன் நடைபெற்றுக்கொண்டு இருந்தது… யாரோ பால் போட ஓடி இருக்க வேண்டும்… ரசிகர்களின்
மிகப்பெரிய உற்சாக ஒலியை ஸ்டேடியத்துக்கு பக்கத்து ரோட்டில் பைக்கில் பயணிக்கையில்
என்னால் கேட்க முடிந்தது… அப்படி ஒரு வெறித்தனமான உற்சாக
மக்கள் ஒலியை, இதுவரை நான் கேட்டதில்லை..எனக்கு
கிளாடியேட்டர் படத்தில் Colosseum யத்தில் நடக்கும்
சண்டைகாட்சியின் போது மக்கள் போடும் சத்தம் நியாபகத்துக்கு வந்து தொலைத்தது…
நாகரிக வளர்ச்சியில் எதுவேண்டுமானாலும் மாறலாம்… ஆனால் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் நாம் மனிதர்கள் என்பதைதான் இந்த
உற்சாக சத்தம் மறுமுறை நிரூபிக்கின்றது.
=============
நான்வெஜ் 18+
Girl to Mom: What is Veg film and Non-Veg film.
Mom: If moisture comes in the eyes it is VEG Film & If it comes between legs, then it's NON VEG!
Wish you a Non-Veg Week end!!!!!
===========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

ஏற்கனவே கொஞ்சம் படித்த மேட்டர் இருக்கு..ஜாக்கி...
ReplyDeleteNice Jackie
ReplyDeleteயாரோ ஒருவர் யாழினி அப்பா என்று டூவிட்டரில் இருக்கின்றார் போல.... அவர் நான் என்று நினைதுதக்கொண்டு அவர் டுவிட் ஆனந்தவிகடனில் வந்தால் எனக்கு வாழ்த்து சொல்லுகின்றார்கள்.. நான் மட்டுமே யாழினி என்று பெயர் வைக்கவில்லை.. நிறைய யாழினி அப்பாக்கள் இருக்கின்றார்கள்.. நான் எப்பவுமே ஜாக்கிசேகர்தான் அதில் எந்த மாற்றமும் இல்லை..//
ReplyDeleteவலை உலக கலைஞரே....
போடாவை சொன்னப்ப கூட மன்னிச்சிட்டாங்க.. ஆனா போடியை ஆங்கில வார்த்தைன்னு எழுத்து கூட்டினேன் பாருங்க.. கிரகமே..
ReplyDeleteஅப்படி என்னதான் வார்த்தை வந்தது நீங்களே கொஞ்சம் சொல்லிடுங்க அதில எனக்கு ஒன்னும் பிடிபடலை
anna i am going to watch coming week...,
ReplyDeletekeep going,,,
Anna ,, i am going to watch coming week...
ReplyDeleteKeep going..,
திமுக கொ ப செ, (திராவிடப்புயல்!!!!!) குஷ்பு தேர்தல் முடிவுகள் வந்ததும் சொன்னது நியாபகம் வந்தது.
ReplyDeleteதி மு க தோற்கவில்லை மக்கள் தோற்றுவிட்டார்கள்.
தோற்று சரணடைந்தவர்கள் ஜெயித்தவர்களின் நிபந்தனைக்கு கட்டுபட்டே ஆக வேண்டும்.
அனுபவி ராஜா அனுபவி.
ஜாக்கி அன்னே.
ReplyDeleteபோடா போடியை ஆங்கிலத்தில் குன்டா கு
..டி என்று படித்து இருப்பீர்கிலோ.
அப்பரம் உதவி செய்ய போய் உபத்திரத்தில் மாட்டி கொண்ட காரணத்தை சொல்லவே இல்லையே.
ஜாக்கி அன்னெ அந்த18++தமிழில் விளக்கமாக போடவும்.இஙிஷ்சு புரியலை
ReplyDeleteHi Jakkki,
ReplyDeleteI also read poda podi as Fun in Fun....
Getting tears while reading this post jakki :)
Have a nice weekend ahead....
நாளை மற்றோரு நாளே என்று அரசுகள் கடந்து போனால் மக்கள் வீதியில் இறங்கி போராடத்தான் செய்வார்கள். இல்லை இல்லை கடலில் இறங்கி கூட போராடத்தான் செய்வார்கள்...
ReplyDelete//
Amen...
PAST IS A NICE PLACE TO VISIT,BUT CERTAINLY NOT A GOOD PLACE TO STAY.VERY NICE JACKIE.
ReplyDelete
ReplyDeleteஜாக்கி,
உங்கள் எழுத்தில் நல்ல முன்னேற்றம். முன்பெல்லாம் ஒரு பத்தியில் ஒன்றிரண்டு என இருந்த எழுத்துப் பிழைகள், ஒரு வரிக்கே இரண்டு மூன்று என கூடி இருக்கிறது.
படிக்கவே வெறுப்பாக இருக்கிறது.
கண்டிப்பாக நீங்கள் கவனம் செலுத்தியே ஆகவேண்டும். என்ன செய்ய? நான் அப்படித்தான் என சமாளிப்பது உங்கள் இயலாமையை அல்ல முயலாமையைத்தான் காட்டுகிறது.
"எங்கள் ஊராக இருந்தால் தோள் கொடுக்க நிறைய இரண்டு பேராவது வருவார்கள் என்ன செய்ய?? "
ReplyDeleteentha ooru unga ooru????
Cuddalore
ReplyDelete