ஆல்பம்..
ஒரு லட்சத்தி எழுபதாயிரம் கோடி..
கொள்ளை அடிச்சாச்சி, ஒன்றரை வருஷம்
ஜெயில்லேயும் போட்டாச்சு, இன்னும் அவ்வளவு பணம் என்னாச்சி? எங்க இருக்கு?-
எதுவும் இன்னும் நிரூபிக்கபடலை... அதாவது இவ்வளவு பணம் அரசுக்கு இழப்புன்னு மட்டும்தான்
சொன்னாங்க... ஆனா அதுக்கு நட்டு நடு சென்ட்ருங்க ரவுண்டு கட்டினானுங்க..... இவ்வளவு பணம் இழப்புன்னா யாருக்குதான் நாடி
துடிக்காது..? பட் மூன்று லட்சத்து 80
ஆயிரம் கோடி நிலக்கரி ஊழல் யாருமே வாயை திறக்கலை.... இப்ப ஏன்டா நாடி துடிக்கலைன்னு பார்த்தா...
பணத்தை அடிச்சது நம்ம ஊர் காரன்.. அதுதான் காரணம்... தமிழ்நண்டு கதை இந்த விஷயத்துக்கு ஆப்ட்டா
பொருந்தும்.. அதாவது ஊழலையோ கொள்ளையையோ ஆதரிக்கவில்லை.. எந்த கட்சியில் தவறு செய்து இருந்தாலும்
கோர்ட்டில் நிறுத்தி தண்டனை வாங்கி தரட்டும்.. அதில் கிஞ்சித்தும் மாற்றுக்கருத்து
இல்லை.. ஆனால் ஸ்பெக்ட்ராமுக்கு குதித்த நட்ட நடு சென்டர்கள் நிலக்கரி விவகாரத்தில் ஏன் குதிக்கலை..
என்பதுதான் என் கேள்வி...தமிழ்நாட்டுல சுபிட்சமா வாழ்ந்த ஒருத்தன் வீட்டுக்கு
கடவுள் சர்பிரைஸ் விசிட் அடிச்சி இருக்கார்.. நல்லாத்தானே இருக்கே? உனக்கு எந்த
வரமும் தேவையில்லைதானே? என்று கேட்டு இருக்கின்றார்... அதுக்கு நம்மாளு இல்லை சாமி
எனக்கு வரம் வேண்டும் என்றான்... தமிழ் இனத்தை திருத்த முடியாது என்று தலையில் கை
வைத்துக்கொண்டு கடவுள் உட்கார்ந்து விட்டார்.. சரி சொல்லி தொலை என்ன வரம்
வேண்டும்.,.? எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை
சாமி.. நான் நல்லாத்தான்
இருக்கேன். பட் பக்கத்து வீட்டுல ஒரு பய எங்க ஊர்காரன்.... கிராமத்துல வரட்டி தட்டி வித்துக்கிட்டு இருந்த பய அவன். இன்னைக்கு காரு பங்களான்னு செட்டில்
ஆயிட்டான்... எனக்கு ஒரு கண்ணு போனா அந்த பயலுக்கு ரெண்டு கண்ணும் போகனும்.. நான் எப்படியாவது ஒரு கண்ணை வச்சி பொழச்சிக்குவேன்..அந்த பயலுக்கு ரெண்டு கண்ணும்
போகனும்.... உனக்கும் அவனுக்கும் ஏதாவது முன் விரோதம் இருந்துச்சா? என்று கடவுள்
கேட்டார்.. சாமி அப்படி எல்லாம் இல்லை.. ஆனா அவன் என்னை விட எப்படி வளரலாம்..? சாமி சொன்னார்... எனக்கும் தமிழ் நண்டு கதை
தெரியும்... ஆனால் இந்த அளவுக்கு சீரியசா இருக்கும்னு நான் இன்னைக்குதான்
உணருரேன்னு.. எத்தனை வருஷம் ஆனாலும் தமிழ்
நண்டு கதை சாகாவரம் பெற்ற கதை ன்னு சொல்லிட்ட்டு கடவுள் போயிட்டாராம்.
===================
பெங்களூர் சொத்துகுவிப்பு வழக்கை நினைச்சி பார்க்கும்
போது ஒரு பழ மொழி நினைவுக்கு வருது.. அடி
மேல அடி அடிச்சா அம்மியும்... நகரும்.. வழக்கறிஞர் ஆச்சர்யா நகர்ந்துட்டார்.. இனி
வெளிய வருவது மட்டும்தான் பாக்கி.. வாழ்த்துகள்..
================
மிக்சர்...
சென்னை பதிவர் சந்திப்பு இனிதே நடந்து முடிந்தது.. விழாவுக்கு நேரம் கிடைக்கும் போது அவசியம் கலந்து
கொள்ள வேண்டும் என்று அன்பு வெண்டுகோள் விடுத்த மெட்ராஸ்பவன் மணி , கணேஷ், மோகன்குமார்
போன்ற பாசமிகு நண்பர்களுக்கு நன்றி.. அன்று
எனக்கு ஒரு போட்டோ ஷூட் இருந்தது.. அந்த ஷூட் கேன்சல் ஆன காரணத்தால் நிகழ்சியில் தொடர்ந்து
பங்கேற்க்க முடிந்தது.. முதல் முறையாக சென்னை
பதிவர் சந்திப்பில் பெண் பதிவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து இருந்தார்கள்.
நிகழ்ச்சியில்
பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் சினிமா
விமர்சனங்கள் குறித்து பேசும் போது எனது பெயரையும்
குறிப்பிட்டு பேசினார்… அதுவே எனக்கு போதுமானது.. திடிர் என்று மேடை ஏற்றியதால் என்ன
பேசுவது என்று தெரியவில்லை..
=================
சென்னை
பெரு நகரில் மெட்ரோ ரயில் பெருத்த
மாற்றங்களை நிகழ்த்தி வருகின்றது.. நிறைய வீடுகள் கட்டிடங்கள், மரங்கள் மெட்ரோ ரயிலின் அகோர பசிக்கு பலியாகின..
தற்போது அண்ணா நகர் துவக்கத்தில்
கம்பீரமாக நின்றுக்கொண்டு இருந்த அண்ணா
ஆர்ச் அகற்றப்பட்டு விட்டது... பல இடங்களை விதைவை கோலம் போட வைத்த பெருமை மெட்ரோ ரயிலுக்கு உண்டு..
=====================
கிரானைட் ஊழல்ல எப்படியும் திமுக புள்ளிங்க சில பேர் உள்ள போக வாய்ப்பு
இருக்கும் போல.. ஏ ஏப்பா.. என்னம்மா சில
புகைபடங்களை பார்க்கும் போது.. பாதி மலைகளை காணோம்.. மலைமுழுங்கி மகாதேவன்களான்னு
போகிற போக்கில் கிராமத்தில் ஓரு பேச்சு வழக்கு உண்டு... அது உண்மைதான் போல..
========
ஜெமினி பிளை ஓவர் கிட்ட இருக்கற பார்க் ஓட்டல் கிட்ட ரைட் கட் பண்ணி சேம வேகத்துல வந்துகிட்டுஇருந்தேன்.. இரண்டு பேர் என்னை துரத்திகிட்டு சார் சார் சார்ன்னு கத்திகிட்டு வந்தாங்க... வள்ளுவர் கோட்டத்துகிட்ட வண்டியை நிறுத்தினேன்.. சார் நான் உங்க வலை ரசிகர்...என்று பெயர் சொன்னார்... பெயரை மறந்து தொலைத்து விட்டேன். அவருடைய நண்பரோடு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்து விட்டு கிளம்பினேன்.. பரங்கி பேட்டை பக்கம்ன்னு சொன்னாங்க.. இன்னமும் ஒட்டிட்டாங்க..
==============
மைதிலி பணத்தை கட்டி விட்டு வீட்டுக்கு வந்து ரெசிப்ட் கொடுத்து விட்டு சென்று இருக்கின்றாள்.. நான் அப்போது பேங்களுரில் இருந்தேன்.. போன் பண்ணிட்டு வரலாம் இல்லையான்னு கடிந்து கொண்டேன்..
===============
நெடுஞ்சாலைபுகழ் நம்மவர் கண்மணி குணசேகரன்
அவர்கள் என்னிடத்தில் தொலைபேசியில் பேசினார்...
உங்கள் பிளாக்கில் நெடுஞ்சாலை
நாவல் புத்தக விமர்சனத்தை பார்த்து
படித்து விட்டு பலர் பாராட்டினார்கள்
என்றார்.. மிக்க நன்றி.. கோவையில் ஒரு விழா நடக்க இருக்கின்றது முடிந்தால் வரவும் என்றார்.. இப்ப இருக்கும்
வேலை பளுவில் என்னால் செல்ல முடியாது...
எல்லா மண்ணின்
மனத்தையும் செல்லுலாய்டில் பதிந்து வைத்து
இருந்தாலும் எங்கள் ஊர் கடலூர் மாவட்டத்தின் பேச்சு வழக்கு ஆவணப்டுத்தியிருப்பவர்… எங்கள் மாவட்டத்துக்காரர் கண்மணி குணநேகரன் அவர்கள்தான்..
ரத்தமும் சதையுமான முந்திரிகாடுகளின் வாழ்க்கையை
கசிந்துருக பதிவு செய்து இருப்பவர்..
கோவையில் வரும் ஞாயிற்றுக்கிழமை கண்மணி குணசேகரன் படைப்புகளின் ஆய்வரங்கம் நடக்க
இருக்கின்றது.. கோவை வாழ் மக்கள் அவசியம் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்.
================
முகமூடி படத்து விமர்சனத்தை பார்த்து விட்டு
தம்பி செ .சரவணகுமார் எழுதிய வரிகள்
இவை... நன்றி சரவணகுமார்.
//தெளிவான அலசல். தான் ஒரு தேர்ந்த விமர்சகர்
என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் ஜாக்கி அண்ணன். எனக்கு மிஷ்கினைப்
பிடிக்கும். ஆகவே யுத்தம் செய் படத்திற்குப் பிறகு மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த
படம் இந்த முகமூடி. எல்லோரும் மொக்கை என்று சொன்னதால் சற்று ஏமாற்றமாக இருந்தது.
ஆனால் ஜாக்கி அண்ணனின் விமர்சனம் அந்த ஏமாற்றத்தைத் தணிப்பதாக உள்ளது. ஷாட் பை
ஷாட்டாக அண்ணன் விமர்சித்திருக்கும் பாங்கு அவர் ஒரு ப்ரஃபஷனல் சினிமா ரசிகர் என்று
காட்டுகிறது. பதிவர்களை விமர்சித்திருந்த மிஷ்கின் இந்த விமர்சனம் படித்துவிட்டு
வெட்கித் தலைகுனியப் போவது உறுதி. அந்த வகையில் வலையுலகமே அண்ணனுக்கு நன்றி
சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது.
இன்னும் சொல்லப்போனால் விகடனில் வெளியான
செழியனின் மக்ஃபல்ப் கட்டுரைக்கு ஈடான வாசிப்பனுபவத்தைக் கொடுக்கிறது அண்ணனின்
விமர்சனம். ’உங்கள் விமர்சனம் படம் பார்க்க
தூண்டுகிறது அண்ணே’ ஹாட்ஸ் ஆஃப் யூ. நீங்கள் தான் real
legendary blogger.--//
மீண்டும் நன்றி சரவணகுமார்.
===========
முகமூடி படத்துக்கு விமர்சனம் எழுதியதில்
இருந்து நிறைய பேர் என்னிடம் உங்கள்
விமர்சனத்துடன் நான் ஒத்துப்போகவில்லை...
என் விமர்சனத்துடன் எஎன் ரசனையுடன்
நீங்கள் ஏன் ஒத்துப்போக வேண்டும் என்று எனக்கு சத்தியமாக எனக்கு தெரியவில்லை..
எனக்கு பிடித்ததை ரசித்ததை மற்றவருக்கும் பிடிக்க
வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை... அதே போல பொதுரசனைக்காக நான் எழுதுபவனும் அல்ல.... பொண்ணு
பார்க்க போறதுக்கு முன்னாடி எப்படியும் பொண்ணை பத்தி நிச்சயம் தெரிஞ்சிதான் பொண்ணு
பார்க்க போவிங்க.. போற வழியில யாராவது ரெண்டு பேர் அந்த பொண்ணு அசிங்கமா இருக்கும்,
அட்டுபிகர்ன்னு சொன்னா அந்த பொண்ணை பார்க்கமா
வந்துடுவிங்களா? ரசனை என்பது எல்லோருக்கும் மாறுபடும்.. அது
போலத்தான் சினிமா விமர்சனங்கள்.. அவரு இப்படி எழுதிட்டாரு... இவரு இப்படி
எழுதிட்டாருன்னு எந்த படத்தையும் பார்க்காம இருந்துடாதிங்க...உங்கள் ரசனை
வித்யாசமானது என்று நீங்கள் நினைத்தால் உங்கள் மேல் நம்பிக்கை இருந்தால் நீங்கள்
பார்த்து விட்டு ஒரு படம் நன்றாக இருக்கின்றது நல்லா இல்லை என்பதை
முடிவெடுங்கள்.... சினிமா எடுப்பது சாதாரண விஷயம் இல்லை... அது போல சினிமா
ரசனையும் முற்றிலும் வேறுபாடு கொண்டது... பவித்ரன் இயக்கிய வசந்தகாலபறவை படத்தை 5
முறை பார்த்தேன்.. காரணம் நிறைய இருக்கின்றது .. அது போல நீங்கள் பாத்து விட்டு
முடிவு செய்யுங்கள்.. உங்கள் ரசனை மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால்..??
===============
பிலாசபி
பாண்டி கார்னர்.
100 எஸ் எம் எஸ் இருக்கும் போது தினமும்
எஸ்எம்எஸ் வந்தது ஒரு பெரிய விஷயமே இல்லை.. ஆனா ஒரு நாளைக்கு 5 எஸ்எம்எஸ்தான்
அனுப்ப முடியும் என்ற போதும்,20 எஸ் எம் எஸ்தான் அனுப்பலாம் என்ற போதும், எவரிடம்
இருந்து தொடர்ந்து எஸ்எம் எஸ் உங்களுக்கு வந்து கொண்டு இருக்கின்றதோ.. அவர்கள்
உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமானவர்கள். #ஜாக்கிசேகர்
அவதனிப்பு.
============
கம்யூட்டரை refresh செய்ய F5 கீ இருப்பது போல,தம்பதிகளுக்குள் காமத்தையும், காதலையும் refresh செய்ய ஊடல்சண்டை என்கின்ற F5 கீ அவசியமாகின்றது.#
ஜாக்கிசேகர் அவதனிப்பு.
=================
நான்வெஜ் 18+
ஒருத்தன் காண்டம் கடைக்கு போய் அவசரமா ஒரு
பாக்கெட் காண்டம் கேட்டான்... கடைக்கார்ர் சைஸ் என்னன்னு தெரியுமமான்னு கேட்டார்..
இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்கலை..பல சைஸ்ல காண்டம் புதுசா விற்பனைக்கு வந்து
இருக்கு.. அதோ எதிர்ல இருக்கும் பெஞ்சில இருக்கும் பல சைஸ்களில் ஓட்டை இருக்கு.. அதுல செக் பண்ணிட்டு உங்க சைஸ்
என்னன்னு சொல்லுங்கன்னு கடைகாரன் சொன்னான்..கொஞ்ச நேரம் கழிச்சி வந்தவன்....
எனக்கு காண்டம் வேண்டாம்.. அநத பெஞ்சு
விலை என்னன்னு? கேட்டான்..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
==========================
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
அன்பின் ஜாக்கி சேகர் - மிக்சர் அருமை - பல இடங்களை விதவைக் கோலம் பூண வைத்த பெருமை மெட்ரோ இரயிலுக்கு நிச்சயம் உண்டு - பாதி மலை முழுங்கி மகாதேவன்கள் - ம்ம்ம்ம்ம்ம் - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
ReplyDeleteஜாக்கி ... மெட்ராஸ் பவன் வலை ஓனர் பெயர் சிவகுமார்
ReplyDeleteஅருமையான எழுத்து.
ReplyDeleteஎல்லாமே அருமை.
வாழ்த்துக்கள் அண்ணா.
asathal jaakki
ReplyDeleteநீங்க சொன்ன மாறி ஒருத்தருகு ஒரு படம் பிடிக்கும் இனோருதருக்கு அது பிடிக்காது எல்லாருக்கும் பிடிச்ச மாறி படம் எடுக்க முடியாது
ReplyDeleteதிரு ஜாக்கி சேகர் அவர்களே,
ReplyDeleteஉங்களது தி மு க விசுவாசம் புல்லரிக்க வைக்கிறது.
மேலும் அவர்கள் பல ஊழல் செய்து அவர்களில் பலர் கைது ஆகி இருந்தாலும்
நீங்கள் கண்மூடி தனமாக சப்போர்ட் செய்வது நகைக்கும் படி
உள்ளது. நீங்கள் வலை உலகினில் மிக பிரபலம். ஊழல் கட்சிகளுக்கு
சப்போர்ட் செய்து உங்களது பேரை நீங்களே கெடுத்து கொள்ளாதீர்கள்.
நம் ஊரில் தி மு க , ஆ தி மு க இரு கட்சிகளும் ஊழல் செய்வதில்
சளைத்தவர்கள் அல்ல . இரு கட்சிகளுமே மக்கள் பணத்தில் கொள்ளை அடிக்கும்
கட்சிகள் . மேலும் நம்ம ஊரில், நல்ல குடும்பத்தில் பிறந்த ஒருவனும் எந்த
கட்சியிலும் சேர மாட்டான். நம்ம ஊரில் மட்டும் தான் குடும்பத்திலும் கூட
கட்சிகள் வந்து விட்டன..
மேலும் நம்ம ஊரில் அரசியல் வாதிகள் மோசமானவர்கள். நீங்கள் அவர்களை
தாக்கி எழுதுவதால் அவர்கள் உங்களுக்கு ஏதேனும் தீங்கு விளைவிக்க கூடும்.
தயவு செய்து அரசியல் விமர்சனங்களை தவிர்க்கவும்.
ஹா ஹா ஹா.. கடைசி ஜோக் படித்து வெடித்து சிரித்தேன்!!
ReplyDelete