ரஞ்சிதாவுக்கும் பங்கு...

அந்த வீடியோ பார்க்கும் போதே மனதில் பட்ட விஷயம் என்னவென்றால் முதலில் உள்ளே நுழையும் ரஞ்சிதா சாமியின் காலை தொட்டு வணங்கி விட்டு அதன் பிறகு கதவை சாத்திவிட்டு வருவார்...

பின்பு கால்களை அமுக்கிவிட்டு மெயின் மேட்டருக்கு போகும் போது சாமீ லைட்டை ஆப் செய்ய முயற்ச்சிக்க.. அதை ரஞ்சிதா அணைக்கவிடாமல் தடுத்து விடுவார்... எனக்கு அப்போதே எழுந்த சந்தேகத்தை கூட நான் போன சான்வெஜ் நான்வெஜ் பதிவில் வெளிபடுத்தி இருந்தேன்... வாசக நண்பர் ஒருவர் கூட அதே ஐயபாட்டை வெளிபடுத்தி இருந்தார்....

ரஞ்சிதாவும் அதே ஆசிரமத்தில் தங்கி இருந்த தர்மானந்தா என்ற சாமியாரும் சேர்ந்து அமெரிக்காவில் இருந்து வரவழைக்கபட்ட உயர்தர கேமரா மூலம் அந்த காட்சிகள் பதிவு செய்யபட்டதாகவும்...அந்த கேமரா எல்லாத்தையும் படம் எடுக்காதாம் எதிரில் ஏதாவது அசைந்தால் மட்டுமே படம் எடுக்குமாம்... என்ன டெக்னாலஜி???? புடடடேஜை எப்படி எல்லாம் சேவ் பண்ணறானுங்கப்பா????

முதலில் 50 கோடிக்கு இந்த டிவிடியை சாமியார் தரப்பிடம் பேசியது ரஞ்சிதா தரப்பு... அதில் பாதி தர்மானந்தா சாமிக்கும் அவன் அண்ணணுக்கும் என முடிவானது.... இந்த தொகை டூமச் என்று சாமியார் தரப்பில் சொல்ல அததான் 1000 கோடிக்கு மேல் சொத்து இருக்கே என்று சொன்னார்களாம்....

கடைசியாக 15 கோடிக்கு பேரம் முடிய... அந்த பணத்தையும் கீழ் மட்டத்தில் இருந்தவர்கள் பணத்தை கொடுக்காமல் செல்வாக்கை வைத்து ஜெயித்து விடாலம் என்று நினைத்த கணக்கு போட.... அந்த கோஷ்ட்டி கொடுத்த விலைதான் இது என்று குமுதம் ரிப்போர்டர் இன்றைய பதிப்பில் செய்தி வெளியிட்டு உள்ளது... அவர்களின் பதிப்பான குமுதத்தில் எந்த தகவலும் இல்லை.... அடுத்த பதிப்பில் வரலாம்....

ரஞ்சிதா..... இந்த விவாகாரத்தில் நான் தவறு செய்து விட்டேன்... என் பிரச்சனையை நான் ஹேண்டில் செய்யாமல் மூன்றாம் நபரிடம் கொடுத்ததுதான் பெரியகுற்றம்.... சாமியாருக்கு எதிராய் எந்த புகாரும் கொடுக்கமாட்டேன் என்று சொல்லி ரஞ்சிதா சாமியாரிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தற்போது ரஞ்சிதா இருப்பது பெங்களுரில் உள்ள சாமியாரின் ஆசிரமத்தில்தானாம்...

ஒரு வழியாக ரஞ்சிதாவுக்கும் இந்த சதியில் பங்கு இருப்பதாக அம்பலமாகிவிட்டது... இந்த டிவிடி வெளியில் வராமல் இருக்கு சாமியார் தரப்பு எவ்வளவோ முயன்றாலும் கடைசியில் எல்லாம் முடிந்து விட்டது...


இதில் குற்றவாளியார்.. காமத்துக்கு சபலபட்ட சாமியாருக்கு, பணத்துக்கு சபலபட்ட ரஞ்சிதா தரப்பு விளையாட நினைத்தது... இரண்டு பேரும் பசியும் ஒன்றும் இல்லாமல் போக.... இந்த பிரச்சனை மீடியாக்களின் பெரும் பசியை தீர்த்து விட்டன... என்று குமுதம் ரிப்போர்டரிடம் புலம்பி இருக்கின்றார் ஆசிரம நிர்வாகி ஒருவர்...

கலைஞர் அருவருக்கதக்க படங்களை பத்திரிக்கை டிவியில் வெளியிடுவதா? என்று காலம் கடந்து கண்டனம் தெரிவித்து இருக்கின்றார்...

“ஒரு சாமியர் செய்யும் காரியமா இது” என்று இன்று செய்தி வெளியிட்ட மீடியாக்கள்...நாளை இதே போல் ஒரு அரசியல்வாதியோ அல்லது அவர் குடும்ப உறுப்பினர்களோ மாட்டிக்கொண்டால் செய்தி வெளியீடுவார்களா? என்பது தெரியவில்லை...

என்னை பொறுத்தவரை இதுவே கடைசி உண்மையாக இருக்காது என்று நினைக்கின்றேன்.. இன்னும் தோண்ட தோண்ட வரும் வாரங்களில் பல உண்மைகள் வரும்....

சாமி நித்யாவின் வக்கில் எந்த பெண்ணும் புகார் கொடுக்காத போது சாமியை கைது செய்வது சான்சே இல்லை என்று சொல்லி இருக்கின்றார்...

சாமியாரிடம் ரஞ்சிதாவை அறிமுகபடுத்திய அம்மா நடிகை சொல்லி இருக்கின்றார்..

அது கிருஷ்ணர் மீரா அடைந்த பரவசநிலை.. அங்கே என்ன விபச்சாரமா நடக்கின்றது? சாமி்க்கு ஒரு அர்பணிப்பு உணர்வுடன் கால் பிடித்து விடுகின்றார்... மாத்திரை கொடுக்கின்றார், சாப்பாடு ஊட்டுகின்றார்... அதோடு சாமியயோடு கலந்து விடுகின்றார். இதில் என்ன தப்பு என்று கேள்வி எழுப்பி இருக்கின்றார்...ரஞ்சிதாவை போல சாமியிடம் சரனாகதி அடைய எத்தளை பேர் காத்து கொண்டு இருக்கின்றார்கள் தெரியுமா? என்று கேட்டு இருக்கி்ன்றார்.... அதை படித்த போது எனக்கு தலை சுற்றியது.....

நேற்று கூட ரஞ்சிதாவின் பக்கத்தை யோசித்த நடுநிலையாளர்கள்... சாமி பேர் ரிப்பேர் ஆகும் போது இந்த பெண்ணி்ன் பெயரும் கெடுவதை நினைத்து வருத்தம் கொண்டனர்... ஆனால் இப்போது அப்படி இருக்காது என்று எண்ணுகின்றேன்...பணத்துக்கு சபலபட்டதற்க்கு அந்த விலை போலும்....

எது எப்படி இருந்தாலும் தொலைகாட்சியிலும் பத்திரிக்கையிலும் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்ததை பார்த்து பலர் கோபத்தில் இருக்கின்றனர் என்பது பல இடத்தில் நடக்கும் கருத்து மோதலில் தெரிகின்றது.....


குறிப்பு...

சாமியார், ரஞ்சிதா பற்றி நேற்று தமிழ்நாட்டில் பிறந்த குழந்தைக்கு கூட தெரியும் எனபதால் அவர்கள் இருவர் புகைபடங்களையும் வெளியிடவில்லை...


அன்புடன்
ஜாக்கிசேகர்

(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....)

34 comments:

  1. ரைட் .. பஸ்ட் காபி அடிப்படையில் பேரம் பேசி இருக்காங்க..

    ReplyDelete
  2. சுவாரஸ்யமாத்தான் இருக்கு..

    ReplyDelete
  3. சரி. ஓட்டுப்போட்டாச்சு:-)

    ReplyDelete
  4. அன்னைக்கி என்னோட 5 வயசு பையன் இராத்திரி நான் வீட்டுக்கு போற வரைக்கும் முழுச்சியிருந்து.. என் கைய புடிச்சு இரகசியம் சொல்லறான் ‘அப்பா நித்தயாணந்தா நல்லவருயில்ல அவர நம்பாதே’.

    அடுத்தவனோட அந்தரங்கத்தை அடுத்தவன் வீட்டு ஹால்ல வந்து படம் போட்டு காட்னதுக்கு நிச்சயமா இவங்களுக்கு பலன் கைமேல் உண்டு.

    ReplyDelete
  5. ///(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....)///

    :-))

    ReplyDelete
  6. அண்ணே... சூப்பர் நியுஸ் ஒட்டுப்போட்டுட்டேன்...

    ReplyDelete
  7. என்னோமோ போங்க! எனக்கும் தல சுத்துது

    ReplyDelete
  8. கலைஞர் அருவருக்கதக்க படங்களை பத்திரிக்கை டிவியில் வெளியிடுவதா? என்று காலம் கடந்து கண்டனம் தெரிவித்து இருக்கின்றார்...


    .......வேதம் ஓதுது,
    நிஜம் நிகழ்ச்சியில் ஹரித்துவார் நிர்வாண சாமியார்கள் பற்றிய செய்தியும் இதே ....... குடும்ப தொலைகாட்சியில் தான் அப்பட்டமாய் ஒளிபரப்பியது.

    ReplyDelete
  9. இதுக்குத் தான் துறைசார் வல்லுனர்கள் தேவைஎன்கிறது.. ;)
    சினிமாவை சொன்னேனய்யா..

    யார் அந்த அம்மா நடிகை?

    //கங்கனா கதவை திற.. காற்று வரட்டும்..
    //

    superb ;)

    ReplyDelete
  10. வணக்கம் எப்படி இருக்கீங்க... யாருனு தெரியுதா...

    நல்லா எழுதியிருக்கீங்க...

    ReplyDelete
  11. ரைட் .. பஸ்ட் காபி அடிப்படையில் பேரம் பேசி இருக்காங்க-- ன

    சிரிச்சு சி்ரிச்சு வயிறு புண்ணாயிடுத்து

    ReplyDelete
  12. சுவாரஸ்யமாத்தான் இருக்கு.==

    ராம் இன்னும் ஒரு வாரத்துக்கு அப்படிதான் இருக்கும்...

    ReplyDelete
  13. நன்றி துளசி டீச்சர்

    நன்றி சைவ பரோட்டா

    ReplyDelete
  14. அடுத்தவனோட அந்தரங்கத்தை அடுத்தவன் வீட்டு ஹால்ல வந்து படம் போட்டு காட்னதுக்கு நிச்சயமா இவங்களுக்கு பலன் கைமேல் உண்டு==//
    அசோக் பயங்கர கோபத்துல இருக்கிங்க போல...

    ReplyDelete
  15. ///(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....)///

    :-))==

    இப்படி சொன்னாலாவது ஓட்டு போடுவிங்க இல்லை.

    ReplyDelete
  16. அண்ணே... சூப்பர் நியுஸ் ஒட்டுப்போட்டுட்டேன்..//
    நன்றி நாஞ்சில்..

    ReplyDelete
  17. நன்றி மைதீன்...

    நன்றி லோஷன்..

    ReplyDelete
  18. வணக்கம் எப்படி இருக்கீங்க... யாருனு தெரியுதா...

    நல்லா எழுதியிருக்கீங்க...


    ஞாபகம் இல்லை நண்பா மன்னிக்கவும்...

    ReplyDelete
  19. அவமானம் தாங்காமல் ரஞ்சிதா தற்கொலை செய்து விடுவார் பாருங்கள் என்றுவேறு ஒரு கோஷ்டி அலைகிறது.

    ReplyDelete
  20. @@@@பின்பு கால்களை அமுக்கிவிட்டு மெயின் மேட்டருக்கு போகும் போது சாமீ லைட்டை ஆப் செய்ய முயற்ச்சிக்க.. அதை ரஞ்சிதா அணைக்கவிடாமல் தடுத்து விடுவார்...///

    நாப்பது தடவ பார்த்தேன்...இத கவனிக்க விட்டுடனே..ஜாக்கி அண்ணன்...எங்கயும் போயிராதீங்க..இங்கயே இருங்க..ஒரு எட்டு போய் அந்த பிட்ட இன்னொருதடவை பார்த்துட்டு வந்துடறேன்..!

    ReplyDelete
  21. ஒரு சஸ்பென்ஸ் சினிமா பார்த்தது போன்ற ஒரு உணர்வு இந்த நித்யா மேட்டர் :-)

    ReplyDelete
  22. நண்பரே . இதுல உங்களுக்கு எதுவும் பங்கு உண்டா . ஓட்டு பொடுவதார்க்கு ஓட்டு பாட்டையை காணவில்லையே அப்றம் எப்படி ??

    ReplyDelete
  23. ஜாக்கி,

    இது சாமியாருக்கும், ரஞ்சிதாவுக்கும் சாமியாரோட படுக்கையறையில நடந்த ஒரு தனிப்பட்ட விஷயம். ரஞ்சிதா காசுக்காக செய்தாரா இல்லையா என்பதெல்லாம் சாமியாருடைய சொந்தப் பிரச்சினை.

    இதை ஏதோ மக்களோட சொந்தப் பிரச்சினை மாதிரி நம்ம வீட்டு ஹோல் வரைக்கும் கொண்டு வந்தவனுங்கள எதால அடிக்கிறது.

    இதே சன் டிவி கலைஞர் வீட்டு (கனிமொழி) பிரச்சினையை இப்படி வெளியிடுமா?

    சாமியார் டிவிடி இங்க நல்லா விக்குது.

    ReplyDelete
  24. Land deal nnu sonnanga, ippo Land+cash um deal la undaa.

    ReplyDelete
  25. appo chaaru engalukku oru nala guru vai thaan arimugap padutthi irukkaraa

    ReplyDelete
  26. அப்பேர்ப்பட்ட விஸ்வமித்திரரே தடுக்கி விழுந்த இடம் காமத்தின் மடியில் தான்.பல முனிவர்களும் ஞானிகளும் பெண்னியத்தால் வீருக்கொண்டவர்களும் உண்டு, வீழ்ந்தவர்களும் உண்டு. பெண்னும் பிரம்மச்சாரியமும் விடைக்காண விடையம்தான். பெண்ணால் பிரம்மசாரியம் விழ்ந்ததா இல்லை விழ்த்தப்பட்டதா? என்பதை யார் அறிவார்?

    சுவாரஸ்யமாக எழுதி இருக்கிங்க.....வாழ்த்துக்கள்...ஜாக்கி சேகர்

    http://manilvv.blogspot.com/

    ReplyDelete
  27. அரசியல்வாதிகள் தம்மை பிரமச்சாரிகள் என்றா சொல்லிக் கொண்டு மற்றவர்களுக்கு வாழும் வழி சொல்லித் தருகிறேன் என்றெல்லாம் சொல்லவில்லை. ஆனால் இவன் நடந்துக் கொண்ட விதம் ஒரு நம்பிக்கைத் துரோகம்.

    ReplyDelete
  28. சரி. ஓட்டுப்போட்டாச்சு

    ReplyDelete
  29. ஜாக்கி,

    இந்த கள்ள சாமிய வச்சி நம்ம ஊடகங்கள்
    ஒரு வாரம் ஓயாம விபசாரம் செஞ்சி இன்னும்
    கதவை மூடாமல் காசு பார்த்து கொண்டிருப்பது
    கேவலம்.அக்கிரமம்...அசிங்கம்.

    சமுதாயத்திற்கு நல்வழிகாட்ட வேண்டிய‌
    ஊடகங்கள், கேவலம் நீலத் திரைப்படம்
    காண்பிக்கும் அளவிற்கு வந்தது நல்ல முன்னேற்றம்.

    இதில் "நக்கீரன்" நடந்து கொள்வது,...மஞ்சள் பத்திரிகையே
    பரவாயில்லை எனத் தோன்றுகிறது.கள்ள சாமியின்,கள்ள லீலையை
    காசுக்கு விற்பனை செய்த நக்கீரனை என்ன சொல்லி திட்டுவது......

    முகு,கடலூர்

    ReplyDelete
  30. மனிதன் என்றுமே மனிதன்தான், அவனை கடவுளின் தரத்திற்கு உயர்த்தி பார்க்கும் அவலம் எப்போது ஒழிகிறதோ, அப்போதுதான் இது போன்ற கழிசடைகளை ஒழிக்கமுடியும்.
    இப்பவும் கேடுகெட்ட இந்த காரியத்தை நியாயப்படுத்த விழையும் சில புத்திகெட்டதுகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.

    ReplyDelete
  31. //எனக்கு எதிராகவும், எனது தியான பீடத்திற்கு எதிராகவும் சிலர் விஷமத்தனமான, பொய்யான அவதூறான பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சட்டவிரோதப் பிரசாரத்தை எதிர்கொண்டு அதை முறியடிப்பேன் என்று கூறியுள்ளார் சர்ச்சைக்குள்ளாகியுள்ள சுவாமி நித்தியானந்தா.

    Whats your comment on this?

    ReplyDelete
  32. சினிமா சம்பவங்கள் போலவே ஏகப்பட்ட திருப்பங்கள். நல்ல கவரேஜ்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner