புதிய வீடு வாழ்த்திய உள்ளங்களுக்கு என் நன்றிகள்....


புதுமனை புகுவிழா நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது...இன்னும் கனவு போல்தான் எனக்கு படுகின்றது...இன்னும் என்னால் நம்ப முடியவில்லை...மெரினா பீச்சின் பிளாட்பாரத்தில் படுத்து கிடந்து மல்லாந்து வானத்தை பார்த்துக்கொண்டு உறக்கம் வராத வேலைகளில் நான் யோசித்து இருக்கின்றேன்... அப்போது நான் அதிகம் யோசித்தது அடுத்த வேளை உணவையும், வாடகைக்கு தங்க ஒரு நல்ல இடத்தையும்தான்.... அப்போது கூட சொந்த வீட்டை பற்றி நான் கனவிலும் நினைத்து பார்த்தது இல்லை....கல்லூரியில் வேலை செய்யும் போதும், வாடகை வீட்டுகாரர்கள் தொல்லை கொடுக்கும் போது மட்டுமே... சொந்த வீட்டடை பற்றி யோசித்து இருக்கின்றேன்.... அது கூட விடியல் கனவு போல் சடுதியில் மறைந்து விடும்...ஆனால் எனக்கு திருமணமான ஒன்றரை வருடத்தில் சொந்த வீட்டுக்கனவு சாத்தியமாகி இருக்கின்றது....அந்த கனவின் சாத்தியத்துக்கு நீங்களும் உதவி இருக்கின்றீர்கள்... பணம் கொடுத்து உதவி செய்வது ஒரு வகை என்றாலும், மனதாரவாழ்த்த ஒரு பெரிய மனது வேண்டும்.... ஒரு பின்னுட்டத்தில் உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள உங்கள் ஆசிகளை வழங்க பெரிய மனது வேண்டும்....புதிய புதிய நண்பர்கள் பெயர்கள்... ஆசிகளின் பட்டியலில் இருந்த போது...நான் நன்றாக எழுதுகின்றேன் என்று கர்வபடவில்லை..என்னோடு சக பயணிகளாய் என் பதிவை படிப்பவர்களும் பயணிக்கின்றார்கள்... என் வாழ்க்கையோடு அவர்களும் வாழ்க்கின்றார்கள்... எனும் போது மனதுக்கு சந்தோஷமாக இருக்கின்றது....மனதுக்கு நிறைவாய் இருக்கின்றது....

இலக்கிய தரமாய் எனக்கு எழுத வராது...பெரிய வாசகர் கூட்டம் இல்லை.. பதிவு போட்டதும் எல்லோருக்கும் போன் செய்து ஓட்டு போடுங்கள் என்று கேட்டது இல்லை....எனக்கு இருக்கும் வேலை பளுவில் பலரது பதிவுகளை வாசித்தது கூட இல்லை....ஆனாலும் என் எழுத்தை வாசித்து நன்றாக இருந்தால் ஓட்டு போடும் அந்த முகம் தெரியாத வாசகர்களுக்கும், பதிவர்களுக்கும் என் நன்றிகள்...

நான் இதுவரை என் பின்னுட்டஙகளில் அதிகம் பார்க்காத அந்த பெயர்களில் இருக்கும் வெள்ளந்தி மனிதர்களின் ஆசிர்வாதங்கள் கீழே...

ஜீவன் (தமிழ்அமுதன்), ஜெ.ஜெயமார்த்தாண்டன்,(இனி எல்லாம் சுகமே என்று கேச்சியாக சொல்லி நெகிழவைத்தார்...)சரவணசக்தி,ரவிச்சந்திரன், மாணவி தீப்தி,இளங்கோ,ரமேஷ், எனது அம்மாவை பற்றிய பதிவை படித்து விட்டு தினசரி பார்வையாளனாய் வந்து எனக்காக ஜிமெயில் முகவரி தொடங்கி இந்த சந்தோஷபகிர்வுக்கு எனக்கு முதல் பின்னுட்டம் இட்ட அன்பு,ரவி,செல்வன் நம்பி...சௌரி,என் பதிவை பார்த்து விட்டு வீடு வாங்கியே தீருவேன் என்று அடம் பிடிக்கும் மோகன்...,பாபு, எனது வாசக நண்பர் வெங்கட், மேரி ஜோசப்,மகராஜன்,சுதா,கருவாச்சி மாதேவி,சுந்தரா,இராமசாமி கண்ணன்,கோவைஅரன்,பதிவுலகில் தெரிஞ்சவனுக்க எப்படி இவ்வளவு நம்பிக்கையோட பணம் கொடுக்கறாங்க என்று ஆச்சர்யத்தை வெளிபடுத்திய பப்பு,இரவீ,சீவேல்,சாராம்மாஎன்கின்ற பிரான்சில் வாழும்அனிதா,நானானி,ரஞ்சிட், என் அத்தைமகன் அரவிந்,சுப்பராமன்,நிலாமதி,ஒருகாசு,ஜஹிர்ஜி,குட்டி,ராஜபிரியன்,எனக்குஉதவ துடித்த தமிழ்,சிம்பிள்மேன்,தமிழ்உதயன்,நிர்மல்,ராம்குமார்அனிதா, யாசவி,புரட்சிகவி என்கின்ற அறிவுடைநம்பி,பாலாராஜன்கீதா,ரமேஷ், ஈழம்,போன்ற நண்பர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்



எனக்கு தெரிந்த பதிவர்கள் மற்றும் வாசகர்கள்...
மனோ, உண்மைதமிழன், தன்ஸ் , ஆர்கே.சதிஷ்குமார்,ராம்ஜியாஹு,துளசிகோபால்,கோவிகண்ணன்,தராசு,பட்டர்பிளை சூர்யா,டிவிராதாகிருஷ்ணன்,வெள்ளிநிலாஷர்புதீன்,ரிஷி,என் உலகநாதன்,பாலகுமார்,டிஆர் அஷோக்,நட்புடன் ஜமால்,ராகவன் நைஜீரியா,சைவ கொத்துபரோட்டா,அமுதாகிருஷ்ணன்,கல்ப் தமிழன் , அண்ணாமலையான்,ராஜேஸ்வரி, புண்ணாக்கு மூட்டை,வரதராஜுலு, எனது பெங்களுர் வாசகி சச்சனா, மலர், கண்மணி,டாகால்டி, செந்தழல்ரவி,சையத்,மைதீன்,நிகழ்காலத்தில்,தாமோதர் சந்ரு,தனா,சின்னபையன்,விசா,ஸ்ரீராம்,பபுட்டியான்,பிளாக்பாண்டி,சந்தனமுல்லை,
சங்கரராம்,தர்ஷன்,கக்குமாணிக்கம்,தீப்பெட்டி,கார்திகை பாண்டியன்,கதிரவன்,கார்த்திகேயனும் அறிவுதேடலும்,ஆர்டிஎக்ஸ்பனிதுளி,வந்தியதேவன்,பின்னோக்கி,பிரதீப்பாண்டியன்,ஹாலிபாலா,ஹைதரபாத் கைலாஷ்,அகல்விளக்கு,நான்ஆதவன், முத்துலட்சுமி,மங்களுர் சிவா, போன்றவர்கள் அழைப்புக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்....

பதிவர்களில் முன்னாள் பதிவர் நித்யகுமாரன்மற்றும்இன்னாள் பதிவர் அதிஷா தம்பதி சகிதமாய் வந்து வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்...வாசக நண்பர் போர்டு வெங்கட் தனது மனைவி குழந்தையுடன் வந்து வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்..


விழா நடைபெறும் போதே பதிவர்கள் பைத்தியக்காரன், உண்மைதமிழன்,எறும்பு ராஜகோபால் முதலிலேயே வந்து வாழ்த்து தெரிவித்தனர்...
பதிவர்கள் பைத்தியக்காரன், உண்மைதமிழன்,எறும்பு ராஜகோபால் வாழ்த்திய போது...

லக்கியும் அதிஷாவும் வந்து வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்....
லக்கி அதிஷா வருகையும் வாழ்த்தும்...

தண்டோரா மற்றும் அகநாழிகை வாசு போன்றவர்கள் திருவண்ணமலையில் ஒரு இலக்கிய சந்திப்பில் கலந்து கொண்டதையும் போனில் தெரிவித்தனர்....

பணம் கொடுத்து உதவிய நண்பர்களில்ஹரிராஜகோபாலன் தனது மனைவியுடனும்,மற்றும் பெயர் சொல்ல வேண்டாம் என்ற சிங்கை பதிவுலக நண்பர் வாழ்த்துக்களை போனில் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.... நண்பரே புது வீட்டில் நெட்ஒர்க் ரொம்ப லோ என்பதால் நாம் பேசிய போதே கட் ஆகிவிட்டது... இன்னும் இரண்டு தினங்களில் பேசுகின்றேன்... மற்றும் பாஸ்டன் ஸ்ரீராம்போனில் தொடர்பு கொண்டு விழா பற்றி விசாரித்தார்... அதே போல் பெங்களுர் அரவிந்... விழா பற்றி கேட்டு வாழ்த்து தெரிவித்தார்.... அதுமட்டும் அல்ல அவர் பாஸ்டன் ஸ்ரீராமுக்கு போன் செய்து ஜாக்கிக்கு நீங்க 3 லட்சம் கொடுத்தமைக்கு அரவிந் அவரது நன்றிகளை சொல்ல... நான் நெகிழ்ந்து விட்டேன்....மற்றும் சினனபையன் போன்றவர்கள் வாழ்த்துக்களைபகிர்ந்து கொண்டார்கள்..உங்கள் எல்லோருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்...

அதே போல் ஜாக்கி விழா பணத்துக்கு என்ன செய்விங்க அக்கவுணட் நம்பர் கொடுங்க என்று சொல்லி நெகிழ வைத்த நணப்ர் வாசகர் ராஜ்க்கு என் நன்றிகள்..
அமதே போல் பதிவர் ஜெர்ரி அவர் வரமுடியாது என்ற காரணத்தால் அவர் சார்பாக ஒரு சென்னை நண்பரை அனுப்பி பரிசு பொருளை கொடுக்க செய்து வாழ்த்தியது மறக்கமுடியாத அன்பு பரிசுகள்...


மற்றும் மெயி்லில் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட அதியமான்,முகு எண்ணத்து பூச்சி,சிவராம் ,ராஜவைரக்கண்ணு,பிரசன்னகுமார்,வித்யாசாகர்... போன்றவர்களுக்கும் என் நன்றிகள்...

மற்றும் எஸ் எம் எஸ்களில் வாழ்த்திய...கிருஷ்னா,சூர்யா,சூர் கன்னிராசி பிளாக் ஸ்பாட்,எங்கள் ஊர்காரார் சீ வேல்... பதிவர் ரோமியோ,திருச்சி ராஜேஷ் கண்ணன்,மும்பை தீபக் சண்முகம்,பஹ்ரைன் பாண்டியன்,எல்லோருக்கும் என் நன்றிகள்... பெயர் விடுபட்டு இருந்தாலோ அல்லது பிழையாக மாற்றி எழுதி இருந்தாலும் மன்னிக்கவும்....

இந்த விழா உண்மையான நட்புகளை இனம் கண்டு கொள்ளவும் இது ஒரு வாய்பாக இருந்தது என்பது கூடுதல் சிறப்பு.... மற்றும் விழா சிறப்பாக நடந்தது மகிழ்ச்சியை கொடுத்து... அந்த விழா முடிந்து காரடையான் நோம்புக்கு இரவு மனைவியை பெருங்களத்தூர் அவள் அத்தை வீட்டுக்கு அழைத்து போய் அப்படியே பெருங்களத்தூரில் இருந்து மச்சானை அழைத்து போய் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விட்டு விட்டுபுது வீட்டுக்கு வந்து அன்று இரவு அந்த வீடடில் படுக்கும் போது வந்த தூக்கம் இருக்கின்றேதே...அது ஒரு சுகமான தூக்கம்....

அன்புடன்
ஜாக்கிசேகர்

(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....

95 comments:

  1. வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...மென்மேலும் வளம் பலப்பெற்று,நலம் வாழ வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. மேலும் பல சிகரங்களை அடைந்து, வாழ்வில் அனைத்து நலங்களும் பெறுவீர்கள் ஜாக்கி...

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    ReplyDelete
  3. வர முடியாமல் போனது வருத்தமே.. நெஞ்சார்ந்த வாழ்த்துக்களுடன்..

    அன்புடன் மணிகண்டன்

    ReplyDelete
  4. படிக்கும்போதே, என் குடும்ப நிகழ்ச்சி போல் மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும்
    வளம் பெற்று வாழ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. மேலும்
    வளம் பெற்று வாழ வாழ்த்துக்கள்.
    என்னுடைய கனவும் இந்த வருடம் நிறைவேறுகிறதா என்று பார்ப்போம்

    ReplyDelete
  6. வாழ்த்து தெரிவித்தவர்களைப் பற்றி ஒரு இடுகை...
    இவ்விடுகையை படிக்கும் போது தான் தெரிகிறது, உங்கள் மேல் அன்பு வைத்திருக்கும் இதயங்களின் எண்ணிக்கையை...
    அதில் நானும் ஒருவன் என்பதில் மிக்க மகிழ்ச்சி அண்ணே...
    புதுமனை மகிழ்ச்சி வளம் கொழிக்க மீண்டுமொருமுறை எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்...

    ReplyDelete
  7. நிகழ்வு நன்றாக நடந்தது அறிந்து மகிழ்ச்சி..வீடு நன்றாக இருக்கிறது..

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...மென்மேலும் வளம் பலப்பெற்று,நலம் வாழ வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  9. "புது வீட்டுக்கு வந்து அன்று இரவு அந்த வீடடில் படுக்கும் போது வந்த தூக்கம் இருக்கின்றேதே...அது ஒரு சுகமான தூக்கம்...." - மிக உன்மையான வரிகள்.நானும் அனுபவித்திருக்கிறேன் அந்த அற்புதத்தை....

    வாழ்த்துக்கள், புகை படங்களும் உங்கள் வரிகளும் மிக்க மகிழ்ச்சியினை கொடுத்தது.

    மனோ

    ReplyDelete
  10. மகிழ்ச்சியாக இருக்கிறது!
    வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  11. கடவுள் நம்பிக்கை உண்டா?
    அப்படி இருந்தால் அருகிலேயே கொளப்பாக்கத்தில் ஒரு பழமையான சிவன் கோயில் இருக்கிறது, போய் வாருங்கள்

    ReplyDelete
  12. மிக்க மகிழ்ச்சி ஜாக்கி.:))
    வாழ்த்துகள்.:))

    ReplyDelete
  13. THALA NEENGA INUM PERIYA LEVALUKU VAARANUM THALA VARUVEENGA,ADUTHA VEEDU VAANGA IPAVE VAZHTHUKAL JACKIE,

    ReplyDelete
  14. உங்க உணவும் தங்க இடமும் வாழ்க்கையின் அத்தியவாசத் தேவையாக இருக்கிறது.அதை பெரும்போது கிடைக்கக் கூடிய மன மகிழ்ச்சிக்கு அளவில்லை.
    உதவியவர்களையும் வாழ்த்தியவர்களையும் மறக்காமல் பதிவெழுதிய உங்களின் தமிழ்மனசை புரிந்துக்கொள்ள முடிகிறது.
    எப்பவும் சந்தோசத்துடன் வாழுங்கள்....வெற்றி மீது வெற்றி வந்து உம்மைச்சேரும்....வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. மென்மேலும் உயர்வீர்கள். வாழ்த்துக்கள் ஜாக்கி, மிக்க மகிழ்ச்சி.

    அதிகம் தெரியாதவர்கள் லிஸ்ட்ல வருவேன்னு பார்த்தா, தெரிந்த பதிவர்கள் லிஸ்ட்ல இருக்கேனே, சந்தோஷம் :)

    ReplyDelete
  16. இன்றைய வாழ்க்கையில் இது பெரிய சாதனை.

    Congradulations.

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் ஜாக்கி.

    நல்ல மனதுடனும், உயர்ந்த குறிக்கோளுடன் வாழும் எவரும் வாழ்க்கையில் தோற்பதில்லை ஜாக்கி. நீங்கள் இன்னும் வளர வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் ஜாக்கி.

    நல்ல மனதுடனும், உயர்ந்த குறிக்கோளுடன் வாழும் எவரும் வாழ்க்கையில் தோற்பதில்லை ஜாக்கி. நீங்கள் இன்னும் வளர வாழ்த்துகள்.

    ReplyDelete
  19. Wishing you many more happiness and success in the years to come.

    ReplyDelete
  20. மேலும் வளம் பெற்று வாழ வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  21. வணக்கம் ஜாக்கி,
    பதிவு நல்ல நினைவூட்டல், அனைவரும் கூறியது போல் இன்னும் நீங்கள்
    சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது.
    1 ) பார்கிங்கில் விட ஒரு கார்
    2 ) எல் சி டி டிவி
    3 ) ஏ சி ( இரண்டு பெட் ரூமிலும் )
    இன்னும் பல இவை அனைத்தையும் வாங்கி வாழ்வில் சிறப்புடன் மேன் மேலும் வளர
    வாழ்த்துகிறேன் .
    அக்கா, நீங்கள் இல்லாமல் இந்த சாதனை கிடையாது உங்களுக்கு எனது நன்றிகள்
    வணக்கங்கள் வாழ்த்துக்கள்
    ஒவ்வொரு ஆணின் முன்னேற்றத்திற்கும் பினனால் ஒரு பெண் இருக்கிறாள்
    என்பதில் ஐயம் இல்லை

    அன்புடன்,
    தங்கள் நலம் விரும்பி

    ReplyDelete
  22. Dear Sekar

    MANAMARNTHA VAZHUTHUKKAL.

    Endrum Anbudan
    S.Sakul Hameed
    [Do you remember me?, u comment the vettaikaran picture]

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள் ஜாக்கி. இன்னும் பல வெற்றிகளைப் பெறுவீர்கள்.

    (என் பெயரைக் காணவில்லை!)

    ஸ்ரீ....

    ReplyDelete
  24. நம் சொந்த விஷயம் தானே என்று நினைக்காமல் வீடு வாங்கியதைப் பகிர்ந்து கொள்ளனும்னு நினைச்ச உங்க நேசமும் நட்புமே இத்தனைப் பதிவர்களின் வாழ்த்துக்களைப் பெற்றுத் தந்திருக்கிறது.
    பதிவுகளைப் படிக்கனும் பின்னூட்டம் போடனும் என்பது முக்கியமல்ல.சக பதிவரின் சந்தோஷத்தில் பங்கு கொள்வதும் வாழ்த்துவதும் வலை நமக்குத் தந்திருக்கும் மிகப் பெரிய வரம்.
    வாழ்வில் மேன்மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. புது வீட்டுக்கு வந்து அன்று இரவு அந்த வீடடில் படுக்கும் போது வந்த தூக்கம் இருக்கின்றேதே...அது ஒரு சுகமான தூக்கம்....
    உங்களின் கடைசி வரிகள் உண்மை உண்மை முற்றிலும் உண்மை நானும் அந்த சந்தோஷ நிமிடங்களை அனுபவித்து இருக்கிறேன் .
    நன்றி கூறியதற்கு ஒரு நன்றி .இனி என்றும் உங்கள் வாழ்வில் சுகமே .

    ReplyDelete
  26. WISH YOU ALL THE BEST... JACKIE
    SYED KSA

    ReplyDelete
  27. வாழ்த்துகள் ஜாக்கி.

    உங்களை வாழ்க்கையை வெச்சு வலைச்சரத்தில ஒரு பதிவு போடலாமின்னு இருந்தேன், ஆனா ஊறறிந்த பாட்டாளிக்கு குடுகுடுப்பைக்காரன் எதுக்குன்னு விட்டுட்டேன்.

    உங்களின் விடா முயற்சியும்/தன்னம்பிக்கையும் உங்களை மேலும் பல உயரத்திற்கு அழைத்து செல்லும்.

    ReplyDelete
  28. வாழ்த்துக்கள் நண்பரே! மனம் மகிழும் படி அத்தனை எளிய நடையில் நேரடி வர்ணணை போலத் தொகுத்துத் தந்துள்ளீர்கள்... மீண்டும் வாழ்த்துக்களும், நன்றிகள்.

    ReplyDelete
  29. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    புதுமனை மூலம் புது சாதனைகள் நிகழ்த்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  30. புது இல்லத்தில் ஆனந்தமாய் வாழ வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  31. புதிய வீட்டில் சகல சிறப்புகளுடனும் வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    சொந்த வீட்ல இருக்கிறோம் அப்படீங்கிறதே மனசுக்கு ஒரு தைரியம்/ சந்தோசம்.

    அனுபவியுங்க. GOOD LUCK

    ReplyDelete
  32. இனிய வாழ்த்துகள், வீடு மிகவும் அருமையாக இருக்கிறது.

    ReplyDelete
  33. வாழ்த்துக்கள் ஜாக்கி.. கலக்குங்க தொடர்ந்து... :)

    ReplyDelete
  34. புது வீடும் அதன் வர்ணமும் அருமை...!

    நன்றிக்கு ,,நன்றி..;;))

    ReplyDelete
  35. வீடு அழகு... உங்க சந்தோஷம் பார்க்க சந்தோஷமா இருக்கு.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  36. இந்திய சூழலின் சாதனை.வாழ்த்துக்கள் ஜாக்கி.

    ReplyDelete
  37. வீடு பார்க்க அம்சமா இருக்கு தல.. வாழ்த்துகள்.. ஏதோ நாமளே சாதிச்ச மாதிரி மனசு நெறஞ்சு இருக்கு.. உங்கள முன்னடி நிறுத்தி கூடிய சீக்கிரம் நானும் ஒரு வீடு வாங்கனும்..

    ReplyDelete
  38. எல்லாம் வல்ல இறைவன் உங்களுடனே இருக்க!
    மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  39. வாழ்க வளமுடன்
    அன்புடன்
    சந்துரு

    ReplyDelete
  40. இன்னும் மேன்மேலும் வளர வாழ்த்துகள் ஜாக்கி.

    ReplyDelete
  41. உங்கள் புது மனை புகு விழா பதிவர்களின் ஒரு பெரும் விழா போலவே நாடந்தேறியது மகிழ்ச்சி அளிக்கிறது.
    நீங்கள் ஒரு முறை வீட்டு ஓனர்களின் அலப்பறைகளை பற்றி ஒரு பதிவு
    எழுதினீர்கள். அந்த நிலை பெரும்பாலான சென்னை வாசிகள் அனுபவிக்கும்
    ஒரு வேதனை தான். அது நீங்க பெற இப்போது சொந்த வீட்டில் குடியேறியிருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    மேலும் முகம் தெரியாத நண்பர்கள் உதவியிருப்பது உங்கள் நட்பும் அன்பும் ததும்பும் நேர்மையான எழுத்தின் ரசிகர்களாக இருப்பதாலும் தான்....

    ReplyDelete
  42. Best wishes friend.May you get all luck residing there.
    By the by,I saw you have added Bordertown to be a must see film.Indeed,it is a great movie.

    ReplyDelete
  43. புது வீட்டை போல உங்கள் வாழ்க்கையும் வண்ண மயமாக திகழ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  44. ஹாய் ஜாக்கி,கடைசி நேரம் தவிர்க்க முடியாத காரணத்தால் வர இயலவில்லை,"அடுத்து சென்னை வரும்போது கட்டாயம் வருவேன்."

    ReplyDelete
  45. நீங்க குடுத்த ஆரஞ்சு வெள்ளையா இருந்துச்சு!

    மற்றபடி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  46. புதுமனை புகு விழா வாழ்த்துக்கள்.

    சொந்த வீடு என்றாலே ஒரு மனதில் ஒரு புத்துணர்வு தான்.

    ReplyDelete
  47. all the very best. wish you many many successes in the coming days too.

    ReplyDelete
  48. வாழ்த்துக்கள் ஜாக்கி. இன்னும் நெரைய சந்தோஷ கணங்களால் உங்கள் வாழ்க்கை சிறப்படையட்டும்.

    ReplyDelete
  49. வாழ்த்துகள் ஜாக்கி

    ReplyDelete
  50. இனிய வாழ்த்துகள், வீடு மிகவும் அருமையாக இருக்கிறது

    ReplyDelete
  51. மென்மேலும் வளம் பலப்பெற்று,நலம் வாழ வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  52. {{{{{{{ வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...மென்மேலும் வளம் பலப்பெற்று,நலம் வாழ வாழ்த்துக்கள்.. }}}}}}}}}}}


    நாங்களும் சொல்லுவோம்ல !

    ReplyDelete
  53. நாங்கெல்லாம் ராவான ரவுடிக .மலையயே உருட்டுவோம்ல


    மீண்டும் வருவான் பனித்துளி !

    ReplyDelete
  54. அதான் ஒரு தடவ நன்றி சொல்லிட்டியே, அப்புறம் என்ன சும்மா சும்மா சொல்லிகிட்டு, ஓவர் செண்டி ஒடம்புக்கு ஆகாது..

    வாழ்த்துக்கள் மறுபடியும்

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  55. அடடா நான் மிஸ் பண்ணிட்டேண்ணே...வாழ்த்துக்கள் அண்ணா..

    ReplyDelete
  56. மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது ஜாக்கி! வாழ்த்துகள்! :-)

    ReplyDelete
  57. வளம் பெற்று வாழ வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  58. புது வீடு அழகாயிருக்கு,வாழ்த்துக்கள்...நீங்க சந்தோஷமாயிருப்பது பார்க்க இன்னும் சந்தோஷமாயிருக்கு...

    ReplyDelete
  59. அண்ணே...சில தவிர்க்க முடியாத காரணத்தால் வரமுடியவில்லை....
    பதிவை படித்தவுடன் வந்த திருப்தி கிடைத்தது......

    ReplyDelete
  60. புகைப்படங்களை பார்க்கும்பொழுது மகிழ்ச்சியாக உள்ளது.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  61. அண்ணே,
    உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லா நடக்கும்.இனியெல்லாம் சுகமே...
    வீடு நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  62. ரொம்ப சந்தோஷம் ஜாக்கி அண்ணே...வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  63. அழகாக இருக்கு, மகிழ்ச்சியாகவும் இருக்கு ஜாக்கி, சரி சரி ஒழுங்கா நல்ல நெட் கனக்க்ஷன் கொடுத்துட்டு நேரத்துக்கு வீடு வந்து புதுசா பதிவு இடனும். மத்தவுங்க பக்கமும் கொஞ்சம் போகணும் . இன்னா ? பிரியிதா ??

    ReplyDelete
  64. வாழ்க வளமுடன்!!!

    தங்களது கனவுகள் யாவும் நிஜமாக என் வாழ்த்துக்கள்.. :)

    அன்புடன்
    கார்த்திகேயன்
    http://kaaranam1000.blogspot.com

    ReplyDelete
  65. வாழ்த்துக்கள்...

    நான் வீடு வாங்கி குடி போன பறவசம்...மேல் மேலும் வழமுடன் வாழ வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  66. Congrats and all the best in your future endeavours, Jackie!

    A daily reader of your blog.

    ReplyDelete
  67. வாழ்த்துக்கள் ஜாக்கி.

    ReplyDelete
  68. வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...நலம் வாழ வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  69. பதிவு மூலம் படிப்பார்வத்தை தூண்டுவது மட்டுமல்லாமல் வீடு வாங்குவதுபோன்ற எண்ணத்தை தான் நிறைவேற்றி படிப்பவர் மனதில் அந்த எண்ணத்தை ஏற்படுத்துவதுக்கும் இன்னும் பல கருத்து பரிமாற்றங்களுக்காகவும் வாழ்த்துகிறோம்.

    இதயபூர்வமான வாழ்த்துக்கள்.
    சௌந்தர்...

    ReplyDelete
  70. வாழ்த்துக்கள்!!!

    "மெரினா பீச்சின் பிளாட்பாரத்தில் படுத்து கிடந்து மல்லாந்து வானத்தை பார்த்துக்கொண்டு உறக்கம் வராத வேலைகளில் நான் யோசித்து இருக்கின்றேன்... அப்போது நான் அதிகம் யோசித்தது அடுத்த வேளை உணவையும், வாடகைக்கு தங்க ஒரு நல்ல இடத்தையும்தான்...."

    இதுபோல் இன்னும் கனவில் இருப்பவர்களுக்கும் நல்ல வீடு அமைய வாழ்த்துவோம்

    ReplyDelete
  71. வாழ்த்துக்கள் ஜாக்கி.

    மகிழ்ச்சியாக இருக்கிறது.

    ReplyDelete
  72. பெரு வாழ்த்துக்கள், மீண்டும்!

    ReplyDelete
  73. //முத்துலெட்சுமி/muthuletchumi said...
    நிகழ்வு நன்றாக நடந்தது அறிந்து மகிழ்ச்சி..வீடு நன்றாக இருக்கிறது.//

    repeat..

    ReplyDelete
  74. மிக்க மகிழ்ச்சி, நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  75. வாழ்த்துக்கள் ஜாக்கி, ஒரு உதவியும் செய்யாமலே எனக்கு நன்றியா, நெகிழ்ந்து விட்டேன். மென் மேலும் சிறப்புற வாழ இறையை பிரார்த்திக்கிறேன்.நன்றி.

    ReplyDelete
  76. நான் இப்பதான் உங்க பதிவ முதல் முறையா படிக்கிறேன்... உண்மையில் என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது... மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.. என் வோட்ட போட்டுட்டேன் ...

    நன்றி ராம், சென்னை

    ReplyDelete
  77. வாழ்த்துக்கள் ஜாக்கி!

    ReplyDelete
  78. லேட் பட் லேட்டஸ்ட். ஊருக்கு போயிருந்ததால் இரண்டு வாரமா பதிவுலகம் பக்கம் வரவில்லை. வாழ்த்துக்கள் ஜாக்கி...

    ReplyDelete
  79. Not sure u planned it or not but some one's face was visible very partially in all the stills.

    I just liked to see the face that was giving this much of support and love in your life for past 1.5 years

    ReplyDelete
  80. மிக்க மகிழ்ச்சி . வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  81. வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  82. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  83. Hi Jackie,
    Not sure if you are interested in cricket anyway pls visit
    http://iamverysimple.blogspot.com/
    for daily predictions.
    Thanks,
    ASM

    ReplyDelete
  84. என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  85. ஜாக்கி, வாழ்த்துக்கள்

    ReplyDelete
  86. NALLA VEEDU MANAIVI MAKKAL ....ALL THE BEST

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner