என் சங்கத்துஆளை அடிச்சவன் எவன்டா?

ஒரு வாரத்துக்கு மேல் ஆகி விட்டது... பதிவுலகில் என்ன நடக்கின்றது என்று எனக்கு தெரியவில்லை... கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருக்கின்றது.. ஒரு வாரத்துக்கு முன்னே புது வீட்டுக்கு போய் விட்டேன்... நேற்று இரவுதான் நெட் கனெக்ஷன் வந்தது...சிபியில் 499 பிளான் ஓய் மேக்ஸ் தொழில் நுட்பம் போல் இருக்கின்றது...199 கேபிபபிஸ் என்பதால் நெட் ரொம்ப ஸ்லோ.... பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று நெருங்கிய நண்பர்களிடம் இருந்து அழைப்பு வந்தது.... அதனால் சனிக்கிழமை பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டேன்...தினமும் ஒரு 4 பேராவது கைபைசி்யில் என்னை அழைத்து ஏன் போஸ்ட் போடவில்லை என்று நலம் விசாரித்த நல்ல உள்ளங்களுக்கு என் நன்றிகள்...


சனிக்கிழமை நடந்த பதிவர் ச்நிதிப்பு பற்றி அங்கு நடந்த பிரச்சனைகளை பற்றி எழுதி ஆளு ஆளுக்கு கும்மி அடித்து விட்டார்கள்...முதலிலலேயே சங்கம் வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்று சொல்லி அண்ணன் உண்மைதமிழன் இரண்டு பக்க பேப்பர் கொடுக்கும் போது,ஏற்கனவே நீங்கள் எப்படி திட்டம் இட்டுக்கொண்டு வரலாம்..என்ற கேள்வியாக நண்பர் பைத்தியக்காரன் கேள்வி எழுப்ப??? சங்கம் அல்லது குழுமம் அந்த நொடியில் தீப்பிடித்துக்கொண்டது... பலரது வாதங்கள் சலசலப்புக்கு ஊடே நடை பெற்று கொண்டு இருந்தது... ஒரு வருடத்துக்கு முன் சற்றே யோசித்து பார்க்கின்றேன்...

முதன் முதலில் பதிவ்ர் சந்திப்புக்கு நான் போன போது இப்ப்போது வந்த கூட்டம் போல் எல்லாம் அப்போது வரவில்லை...நானே முத்துக்குமார் இறந்த போது பிளாக்கர் சார்பாக நடந்த இரங்கல் கூட்டத்தில்தான் நான் முதன் முதலில் கலந்து கொண்டேன்... அப்போதுதான் பல பிளாக்கர்களை நேரில் பார்த்தேன்...
அப்போது எல்லாம் பதிவர் அதிஷா எனக்கு போன் செய்து என்னை ஒவ்வோரு சந்திப்பின் போதும் என்னை மறக்கமால்கூப்பிடுவார்... அப்போது எல்லாம் 5 பேர் பத்து பேர் வந்த பதிவர் சந்திப்பு.... முத்துக்குமார் இறப்புக்கு பிறகு நடந்த கடற்கரை கூட்டத்தில் உட்கார இடம் இல்லாமல் போனது... அப்புறம் 20 பேருக்கு குறையாமல் கூட்டம் சந்திப்பில் அதிகரிக்க துவங்கியது... அதன் பிறகுதான்... அப்போது எல்லாம் அவ்வை சண்முகி மணிவண்ணன் போல் எனக்கு கூச்ச சுபாவம்... அதனால் பல கூட்டங்களை தவிர்த்து இருக்கின்றேன்...ஆனால் அததிஷா எல்லோருக்கும் போன் செய்து கூப்பிடுவார்....அதன் பிறகு கூடிய கூட்டங்களில் அதிக எண்ணிக்கையில் பதிவர்கள் கலந்து கொண்டார்கள்..
டிஸ்க்கவரி புக் பேலசில் நடந்த பதிவர் சந்திப்புதான் நான்கு சுவற்றுக்கு கிழே நடந்த முதல் பதிவர் சந்திப்பு என்பேன்..
இத்தனை பேர் சந்திக்கும் இந்த கூட்டத்தை சில வரையரைகளுடன் சங்கமாகவோ அல்லது குழுமமாகவோ ஆரம்பிக்க வேண்டும் என்ற கருத்து நல்ல கருத்து என்றாலும்... சரியான புரிதல் இன்றி... நிறைய கேள்விகள் கேட்கபட்டன... உதாரணத்துக்கு சொன்னவார்த்தைகள் எல்லாம் எடுத்துக்கொண்டு கூர்தீட்டி குளிர்காய்ந்தார்கள்...எவருமே அவர்கள் தனிதன்மையை விட்டுக்கொடுக்க முன்வரவில்லை...

இது எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டாலும்... பதிவர்களில் அசோக் போட்ட சாதி சாய பதிவு ரொம்பவும் கவலை அளித்தது... அசோக் எழுதுவது அவரது உரிமை என்றாலும்... இப்படி ஒரு சாயம் பதிவர்களில் இதுவரை வந்தது இல்லை...ஈழ பிரச்சனையில் துக்ளக்,இந்து,தினமலர் போன்றவை நடந்து கொண்ட விதம் கண்டனத்துக்கு உரியது... அந்த கோபத்தின் போது பிராமணர்கள் நடத்தும் பத்திரிக்கை இலங்கை பிரச்சனையில் நடந்து கொண்ட விதம் என்று எழுதி இருந்தால் பராவாயில்லை...ஆகால் பதிவர் சந்திப்பில் சரியான நேரத்துக்கு வந்து முன் சீட்டில் உட்காருவதை கூட தவறு என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்??? அப்போது அவர்கள் பதிவர்கள் இல்லையா? அவர்கள் முன் சீட்டில் உட்கார கூடாதா? அப்புறம் எதெச்சையாக நாளைக்கு எட்டு வன்னியர்கள் முன் வரிசையில் உட்கார்ந்து விட்டால்?? பத்து முதலியார்கள் உட்கார்ந்து விட்டால்? முன் சீட்டு முழுவதும் பறையர்கள் உட்கார்ந்து விட்டால்??? முன் சீட்டை ஆக்கிரமித்துகொண்ட வன்னியர்கள், முதலியார்கள்,பறையர்கள்,பிள்ளைகள் என்று அடித்துக்கொள்ள வழி வகுத்ததாய் இது அமையும்.... பதிவுலகத்தில் இந்த சாதி சாயம் வேண்டாம்... வேண்டவே வேண்டாம்....

ஞானி பேச்சு கொஞ்சம் நீளம் என்றாலும்... சங்கத்தை பற்றி ரொம்ப அற்புதமாக விளக்கி சொன்னார்...அவர் அளவிற்க்கு அந்த கூட்டத்தில் சங்கத்தின் பிரச்சனைகளையும் அதன் நெளிவு சுளிவுகளையும் பேசவில்லை... அல்லது அது பற்றிய புரிதல் இல்லை அல்லது அதற்க்கான வாய்ப்பு இல்லை என்று சொல்லலாம்...
ஒரு கட்டத்தில் பிள்ளை பிறக்கவே இல்லை அதற்க்குள், அதற்க்கு என்ன பெயர் வைக்கலாம்... அது பக்கத்து வீட்டு ஹாலில் ஆய் போய் விட்டால் என்ன செய்வது? எந்த பேப்பரில் துடைப்பது....??ஆபிஸ் போகும் போது யார் கவனித்து கொள்வார்கள்.. எந்த டாக்டர் இடத்தில் காட்டலாம் என்பது வரை பிரித்து மேய்ந்து கொண்டு இருந்தார்கள்... அதில் பெங்களுர் அரவிந் சங்கம் வேண்டும் என்று வைத்த கருத்து ஏற்புடையதாக இருந்தது...
ஞானி முதலில் சங்கம் வேண்டுமா? வேண்டாமா? என்று ஞானி அவர்கள் கை தூக்க சொல்ல, ஒரு பத்து பேராவது வேண்டாம் என்று கைதூக்குவார்கள் என்று எதிர்பார்த்தேன்.... இரண்டு பேர் மட்டுமே கைதூக்கினார்கள்....
அடுத்து பலர் பேசினார்கள் முடிவில் பேசிய நான்... சங்கம் ஆரம்பிக்க பதிவர்கள் ஏகமனதாக ஒத்துக்கொண்டது இதன் மூலம் தெரிகின்றது.... என்று பேசி முடித்தேன்.. இனி பெயர், லோகோ, சங்கத்திற்கான வரையறை போன்றவற்றை இனிதான் முடிவு செய்ய வேண்டும்.... அதை இனி வரும் சந்திப்புகளில் முடிவு செய்யலாம் என்று முடிவு செய்யபட்டது....

வெளியில் டீக்கடையில், என் சங்கத்து ஆளை அடிச்சவன் எவன்டா? என்று இனி யாராவது கேள்வி கேட்க வருவார்களோ? இனி சங்கம் தன் கடமையை செய்யும்...என்றும்.... டிராப்புக்கு காத்து இருந்த பதிவரை சங்கத்துக்கு இன்னும் வண்டி வாங்கலை... வண்டி வாங்கனதுக்கு அப்புறம் உங்களை டிராப் செய்வோம் என்று நக்கல் விட்டு கொண்டு இருந்தார்கள்.... இன்னும் நிறைய காமடி காட்சிகள் வரும் காலங்களில் நிச்சயம் நிகழும் என்று எனக்கு தொன்றுகின்றது...

உண்மை தமிழன் அமங்கலம் துயரம் என்று எல்லாம் எழுதி பதிவு போட்டு இருக்கின்றார்...அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு ஏன் இப்படி எல்லாம் பதிவு போடறிங்க???தாய புள்ளையா பழகறவங்களே இந்த காலத்துல அடிச்சிக்கிறாங்க... பல்வேறு கருத்துடைய நண்பர்களை இணைப்பது என்பது சாதாரண செயல் இல்லை....

அன்புடன்
ஜாக்கிசேகர்

(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....

46 comments:

  1. உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. நண்பா ஒரு கை தட்டி எப்போதும் ஓசை வராது. இரு கைகள் தட்டினால் தான் ஓசை எப்போதும் பலமாக எழும். எனவே வேற்றுமைகள் யாவற்றையும் களைந்து ஒற்றுமையுடனும் பெரு முயற்சியுடனும் நீங்கள் ஈடுபட்டுள்ள் இச் செயல் வெற்றி பெறும் என்பது எனது கருத்து.



    அண்ணே சங்கம் அமைச்சாப் பிறகு நாம ஒஸ்ரேலியாவிலை இருந்து வந்தும் கலந்துக்கலாமா))):

    ReplyDelete
  3. சிபியா? அண்ணே கிட்டத்தட்ட ஒரு வருசம் போராடி, இப்போ தான் அந்த இம்சைலேருந்து வெளில வந்திருக்கேன், மகா மட்டமான கஸ்டமர் சர்வீஸ், கிட்டத்தட்ட பொதுத்துறை நிறுவனம் மாதிரித்தான் பதில்கள் இருக்கும், ஒரு வார்த்தை கேட்டிருக்கக் கூடாதா :(((

    எவ்வளவு முன்பணம் கட்டினீங்க?

    ReplyDelete
  4. tamil mattume tevai.....saathi teva illiai.....sangatuku..

    ReplyDelete
  5. ஞானியின் கருத்துகள் அருமை தல. அனுபவஸ்தர் அவர் பேச்சையும் நான் கொஞ்சம் கேட்போம்.

    ReplyDelete
  6. //பல்வேறு கருத்துடைய நண்பர்களை இணைப்பது என்பது சாதாரண செயல் இல்லை//

    நீங்கள் சொல்வது உண்மைதான்...

    ReplyDelete
  7. AFTER THE LONG TIME.... YOU PUBLISHED THIS POST. IT'S REALISTIC AND INTRESTING.

    WRITE MORE...

    MANO

    ReplyDelete
  8. தலைவரே,

    நீங்க தீர்ப்பு சொல்லி முடிச்சு வைக்காம இருந்திருந்தா எல்லாரும் வீட்டுக்குப் போக 12 மணி ஆயிருக்கும். மற்றொரு அசத்தலான இடுகை.

    ஸ்ரீ....

    ReplyDelete
  9. // 1. அப்போது எல்லாம் பதிவர் அதிஷா எனக்கு போன் செய்து என்னை ஒவ்வோரு சந்திப்பின் போதும் என்னை மறக்கமால்கூப்பிடுவார்... அப்போது எல்லாம் 5 பேர் பத்து பேர் வந்த பதிவர் சந்திப்பு.... //
    http://poonspakkangkal.blogspot.com/2007/04/22.html


    // 2. டிஸ்க்கவரி புக் பேலசில் நடந்த பதிவர் சந்திப்புதான் நான்கு சுவற்றுக்கு கிழே நடந்த முதல் பதிவர் சந்திப்பு என்பேன்..//

    அண்ணே.. முடிவு எடுக்குறதுக்கு முன்னாடி இந்த சுட்டிகளைப் பாருங்க.. நல்லாப் பாருங்க!

    http://balabharathi.blogspot.com/2006/11/blog-post_18.html

    http://dondu.blogspot.com/2006/11/19112006.html

    http://chennapattinam.blogspot.com/2006/11/blog-post_19.html

    ReplyDelete
  10. சாதி சாயம் - இங்கேயுமா? கவலை அளிக்கும் விஷயம். இதனை முளையிலேயே கிள்ள வேண்டும்.

    புரிதல் இல்லாதபோது இப்படிதான் ஆகிறது.

    ReplyDelete
  11. குழப்பங்கள் தீர்ந்து நல்ல தீர்வு விரைவில் கிடைக்கும் என நம்புவோம்.

    ReplyDelete
  12. அன்பின் ஜாக்கி,

    முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தவர்களில் பலர் வயதானவர்கள் (50+)பலருக்கு பார்வை மற்று காது கேட்கும் திறனில் குறை இருந்திருக்கலாம் அதனால் பெரியவர்கள் முன்வரிசையில் உடகார்ந்திருக்கலாம்

    திரு.டோண்டு,திரு.இராதாகிருஷணன் மற்றும் திருமதி துளசி அவர்கள் 50 வயதினை கடந்தவர்கள்.

    நானே பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பாளனன் எனக்கே அசோக் அவர்களின் அந்த பதிவு மிகவும் எரிச்சலை தந்தது.

    ReplyDelete
  13. நான் ’முன்சீட்டு’ என்று எழுதியது ஒரு குறீயீடுதான்... பஜ்ரங்தள், விசுவைஇந்துபரிசத், மற்றும் கம்யூனிஸ தலைவர்களிலும் முன்சீட்டில் இருப்பது யார்.

    முன்சீட்டு குறியீடுதான். நான் எழுதியதியதும் பொதுவில்தான்.. குழுமத்தை மட்டுமல்ல. குழுமத்தை முன்னுருத்தி...


    பறையர்கள் பள்ளர்கள் எப்படி முன்சீட்டுக்கு வர முடியும் ஜாக்கி...
    //1913ம் ஆண்டு அமெரிக்கா சென்றதன் மூலம் தாழ்த்தப்பட்ட வகுப்பிலிருந்து படிப்புக்காக வெளிநாடு சென்ற முதல் மனிதர் என்ற பெருமை அம்பேத்கருக்கு கிடைத்தது//நன்றி சிவராம்
    http://naayakan.blogspot.com/search/label/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D

    அவர்களின் தலைவரே.. 1913-ல் தான் வெளிநாடு சென்றுயிருக்கிறார் என்றால் மற்றவர்களின் கதி என்ன என்பதை யோசியுங்கள். இப்போது அவர்கள் கொத்தடிமைகளாகதான் அனல்வீசும் பாலைவன தேச்ங்களில் வாழ்வாதாரதிற்க்கு ஓடிக்கொண்டியிருக்கறார்கள். சொற்பமானவர்களே பிற தேசங்களில் வாழ்கிறார்கள்...

    என் பதிவு குழமத்தின் ஆன்மாவை மறுபரிசிலனைகு உட்படுத்தத்தான்..
    உண்மையில் இது குழுமத்திற்கு வலுசேர்க்கும்தான்.

    ReplyDelete
  14. //தாய புள்ளையா பழகறவங்களே இந்த காலத்துல அடிச்சிக்கிறாங்க... பல்வேறு கருத்துடைய நண்பர்களை இணைப்பது என்பது சாதாரண செயல் இல்லை....
    //


    நச்சுனு சொன்னீங்க அண்ணே.....

    ReplyDelete
  15. பதிவர்கள் சந்திப்பை சாதி ரீதியாக பேசி கொச்சை படுத்தியிருக்க வேண்டாம்.. அங்கே என்ன் அநடந்த்து என்று தெரியாத நிலையில் இதை பற்றி மேலும் என்னால் பேச முடியவில்லை...

    ReplyDelete
  16. ஜாக்கி அண்ணே,
    நலமா?
    போஸ்ட் அருமை.
    ஓட்டுக்கள் போட்டாச்சு.
    விரைவில் நேரில் சந்திப்போம் அண்ணே

    ReplyDelete
  17. /அப்புறம் எதெச்சையாக நாளைக்கு எட்டு வன்னியர்கள் முன் வரிசையில் உட்கார்ந்து விட்டால்?? பத்து முதலியார்கள் உட்கார்ந்து விட்டால்? முன் சீட்டு முழுவதும் பறையர்கள் உட்கார்ந்து விட்டால்???//

    மற்ற பதிவர்களும் சாதி 'வெளியே' தெரிவது போல் தங்கள் சாதியை சொல்லிக் கொள்கிறார்களா ? வியப்பாக இருக்கிறது. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் சென்னைப் பதிவர்களில் யார் யார் என்ன சாதி என்று எல்லோருக்கும் தெரியுமோ !

    ReplyDelete
  18. ஹாய் ஜாக்கி,
    சந்தித்ததில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  19. எதிலயுமே ஒரு பிடிப்பு வேணும், இந்த அமைப்பின் நோக்கம் வெளித் தெரியும் முன்னரே எப்படியெல்லாம் பதிவுகள் வந்து விழுந்து இருக்கின்றன. நல்லதொரு பதிவு.

    ReplyDelete
  20. ரைட்டு
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  21. சங்கம் ஆரம்பிச்சா சங்கத்துக்கு தலைவரா யாரை போடலாம்னு ஒரு கேள்வி வரும். அங்கேயும் சாதி பிரச்சினை வரும். அப்புறம் நட்புல விரிசல்... புகைச்சல்... கோஷ்டி கானம்... அடிதடி... இதெல்லாம் தேவையா... ஏதோ நண்பர்களாய் இருந்தோம்... ஒருவரது பதிவைப் பற்றி பின்னூட்டம் போட்டோம்... எங்கேயோ ஏதோ ஒரு நாளில் சந்தித்தோம்னு இருந்தா அது நல்ல ஆரோக்கியமான விசயமா இருக்கும். சங்கம் வைத்து நட்புக்கு பங்கம் விழைவித்துக்கொள்ள வேண்டாம் என்பதே என் கருத்து...

    ReplyDelete
  22. பதிவர்களுக்கு சங்கம் அவசியமா?.

    any way ஓட்டுக்கள் போட்டாச்சு.

    ReplyDelete
  23. நன்றி ராஜபிரியன், நன்றி ராபின்... நன்றி கமல் கண்டிப்பாக ஆஸ்திரேலியாவில் இருந்து வந்து கலந்து கொள்ளலாம்..

    ReplyDelete
  24. நன்றி பிரகாசம்
    நன்றி கோலிபையன்
    நன்றி சூர்யா
    நன்றி ரோமியோ..
    நன்றி நர்சிம்
    நன்றி ஜெட்லி
    நன்றி வரதராஜிலு
    நன்றி அக்பர்
    நன்றி ஜீவன்பென்னி
    நன்றி ராம்
    நன்றி மனோ
    நன்றி சைவ கொத்து பரோட்டா
    நன்றி ஸ்ரீஸ்ரீஸ்ரீ

    ReplyDelete
  25. அண்ணே.. முடிவு எடுக்குறதுக்கு முன்னாடி இந்த சுட்டிகளைப் பாருங்க.. நல்லாப் பாருங்க!

    மொக்கை மோகன்.. கண்டிப்பா எனக்கு தெரியும் இது போல பிரச்சனைகள் எல்லாம் வரும்னு...

    நன்றி அனைத்து சுட்டியும் கொடுத்தமைக்கு

    ReplyDelete
  26. நானே பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பாளனன் எனக்கே அசோக் அவர்களின் அந்த பதிவு மிகவும் எரிச்சலை தந்தது.//

    நானும் அப்படித்தான்.. ஆனால் அது அங்கு தேவையில்லாதது

    நன்றி அர்விந்

    ReplyDelete
  27. பறையர்கள் பள்ளர்கள் எப்படி முன்சீட்டுக்கு வர முடியும் ஜாக்கி...
    //1913ம் ஆண்டு அமெரிக்கா சென்றதன் மூலம் தாழ்த்தப்பட்ட வகுப்பிலிருந்து படிப்புக்காக வெளிநாடு சென்ற முதல் மனிதர் என்ற பெருமை அம்பேத்கருக்கு கிடைத்தது//நன்றி சிவராம்//

    உண்மைதான் அசோக் அதில் எந்த மாற்றமும் இல்லை அதை ஏற்றுக்கொள்கி்ன்றேன்... ஆனால் அங்கு வந்து கலந்து கொண்ட யாவரும் ஜாதியை முன்னிலை படுத்தி் வரவில்லை எனபது என் கருத்து....

    ReplyDelete
  28. பதிவர்கள் சந்திப்பை சாதி ரீதியாக பேசி கொச்சை படுத்தியிருக்க வேண்டாம்.. அங்கே என்ன் அநடந்த்து என்று தெரியாத நிலையில் இதை பற்றி மேலும் என்னால் பேச முடியவில்லை...//
    இத்தனை பதிவு படிச்சும் அக்னி உனக்கு புரியலையா?

    ReplyDelete
  29. ஜாக்கி அண்ணே,
    நலமா?
    போஸ்ட் அருமை.
    ஓட்டுக்கள் போட்டாச்சு.
    விரைவில் நேரில் சந்திப்போம் அண்ணே//
    கண்டிப்பா நேரில் பார்போம்.. கார்த்தி

    ReplyDelete
  30. மற்ற பதிவர்களும் சாதி 'வெளியே' தெரிவது போல் தங்கள் சாதியை சொல்லிக் கொள்கிறார்களா ? வியப்பாக இருக்கிறது. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் சென்னைப் பதிவர்களில் யார் யார் என்ன சாதி என்று எல்லோருக்கும் தெரியுமோ !//


    அவர்கள் அப்படி சொல்லி இருக்கலாம் கோவி... ஆனால் மன் வரிசையில் உட்கார்ந்து விட்டதை கூட சாதி அரசியல் ஆக்க வேண்டுமா? என்பதே என் கேள்வி..

    ReplyDelete
  31. ரைட்டு
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்//

    நல்லது..

    ReplyDelete
  32. எங்கேயோ ஏதோ ஒரு நாளில் சந்தித்தோம்னு இருந்தா அது நல்ல ஆரோக்கியமான விசயமா இருக்கும். சங்கம் வைத்து நட்புக்கு பங்கம் விழைவித்துக்கொள்ள வேண்டாம் என்பதே என் கருத்து...//

    இந்த கோணத்தில் கூட இதனை எடுத்து கொள்ளலாம் ஆனால் என்ன நீங்கள் நினைப்பது போல் இல்லாமல் வேறு சில ஆக்க பணிகளுக்கு இது பயன்பட்டால் அது எப்படி இருக்கும்....???

    ReplyDelete
  33. ///என் பதிவு குழமத்தின் ஆன்மாவை மறுபரிசிலனைகு உட்படுத்தத்தான்..
    உண்மையில் இது குழுமத்திற்கு வலுசேர்க்கும்தான்.///

    நல்ல ஜோக்.
    ஹா..ஹா...ஹா...

    ReplyDelete
  34. //அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு ஏன் இப்படி எல்லாம் பதிவு போடறிங்க???தாய புள்ளையா பழகறவங்களே இந்த காலத்துல அடிச்சிக்கிறாங்க... பல்வேறு கருத்துடைய நண்பர்களை இணைப்பது என்பது சாதாரண செயல் இல்லை....

    இப்ப சொன்னீங்களே... இத இத இதத்தான் எதிர்பார்த்தேன்.

    பல்வேறு கருத்துக்களுடன் இருக்கும் பல்வேறு பதிவர்களை இணைக்க நண்பர்கள் சங்கம் என்று அறிவித்தால்தான் நலம். பதிவர்களுக்கிடையே ஏகப்பட்ட கருத்துவேறுபாடுகள் உண்டு.
    நான் படிக்கின்ற சொற்ற்ற்ற்ப பதிவர்களிடம் இருக்கும் சில கருத்துவேறுபாடுகளை என்னால் உணரமுடிகிறது.
    இந்தக்கருத்துவேறுபாடுகளினால், எதிர்காலத்தில் கோஷ்டிகள் உருவாகலாம். அப்புறம் சட்டசபைக்கு போகிற பயத்தோடு போகவேண்டியிருக்கும் :)

    அன்புடன்
    கார்த்திகேயன்
    http://kaaranam1000.blogspot.com

    ReplyDelete
  35. சாதி மட்டும் இல்ல , அரசியல் சாயமும் இல்லாம பாத்துகோங்க.

    ReplyDelete
  36. தமிழ்நாட்டுப் பதிவர்கள்னு இல்ல வேற எந்த நாட்டுப் பதிவர்களா இருந்தாலும் அவனுங்க கொலக்கிறத கொலச்சேதான் தீருவானுங்க! அவனுங்க வாய மட்டும் கட்டவே முடியாது.

    ReplyDelete
  37. Sangathuku peru varuthamilla valippar sangamnu vaikappa.thalaivar kaipillai.

    i am mirc chatter long before .In my experience peoples can chat jolly,attachment with us.Once you see their face they show their real face from next time.I saw many peoples globally chatters all are like this.So don't see face or direct meeting it should rise problem

    ReplyDelete
  38. தினமும் ஒரு 4 பேராவது கைபைசி்யில் என்னை அழைத்து ஏன் போஸ்ட் போடவில்லை என்று நலம் விசாரித்த நல்ல உள்ளங்களுக்கு என் நன்றிகள்...////

    அடப்பாவிகளா..??

    ReplyDelete
  39. ஒரு விஷயம் தெரியுமா? நான் அமர்ந்தது அந்த பெரிய பெடெஸ்டல் மின்விசிறிக்கு முன்னால். அது முன்வரிசையில் இருந்தது அவ்வளவே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner