திருமணத்துக்கு பிறகு ஒரு காதல் என்பது நம் சமுகத்தை பொறுத்தவரை தவறான விஷயம்... ஆனால் என் அப்பன் முருகனில் இருந்து எல்லா கடவுள்களும்.... இரண்டாவது பெண்ணை ஏறெடுத்து பார்த்தவர்கள்தான்... திருமணத்துக்கு பிறகு குழந்தை பிறந்த பிறகு, மனைவி முழுக்க முழுக்க அவள் காதலை சிந்தாமல் சிதறாமல் குழந்தைகள் மேல் செலுத்திவிடுகின்றாள்... ஆனால் கணவனிடம் ஒரு வெற்றிடம் தெரிந்தோ தெரியாமலோ விழுந்து விடுகின்றது....
ஆணுக்கான காமமும் பெண்ணுக்கான காமமும் பொதுதான் என்றாலும் நாம் நாட்டு பெண்கள் சமூகத்தின் அவமானத்துக்கு பயந்தே காமத்துக்கு கால நேரம் வைத்து இருக்கின்றார்கள்...நமது சமுகத்தில் ஒரு பெண் 45 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்வதை அசி்ங்கமாக நினைக்கின்றனர்....நடிகர் கமல் பிறந்த போது அவர்கள் அண்ணண்கள் வளர்ந்து பெரியவர் ஆகி இருந்தனர்...நடிகை ராதிகா காபி வித் அனுவில் சரத்குமார் குழந்தையோடு வந்த போது என் அத்தை விரல்களில் கணக்கு போட ஆரம்பித்து விடடார்...
கள்ள காதல் கொலைகளை பேப்பரில் பார்த்து விட்டு நண்பரோடு விவாதிக்கும் போது... ஏகபத்தினி விரதன்.. அல்லது விரதி இருக்கின்றார்களா? என்று ஒரு கேள்வி எழுந்தது.... கூட்டு குடும்பம் என்ற அமைப்பு இருந்த போது அதன் கொடி பட்டோளி வீசி பறந்தது.... ஆனால் இப்போது அப்படி சொல்வதற்க்கு இல்லை இதற்க்கான சதவீதம் குறைந்து கொண்டே வருகின்றது...என்பதே உண்மை... அதை விடஅப்பட்டமான ஒரு உண்மையை சொல்றேன் என்றார் என் நண்பர்... பல் இருக்கறவன் பட்டாணி சாப்பிடுறான்... மாட்டிக்காதவன் தப்பிச்சிடுறான்.. என்று சொன்ன கருத்தில் உண்மை இல்லாமல் இல்லை.....
தமிழகத்தில் ஒரு பழமொழி உண்டு...
“கிளி போல பொண்டாட்டி வீட்ல இருந்தாலும், குரங்கு போல ஒரு கூத்தியா வச்சி இருப்பானுங்க....” என்று... காரணம் தெரியாது... அதற்க்கான காரணத்தை இந்த படம் அலசுகின்றது...
அவள் கேட்கின்றாள்... உனக்கு என்னை பிடித்து இருக்கின்றதா?
அவன்... ரொம்பவும் பிடித்து இருக்கின்றது....
அவள்...உன் மனைவியை உனக்கு பிடிக்குமா??
அவன்... ரொம்பவும் எனக்கு பிடிக்கும்...
அவள்.... அப்புறம் ஏன் என்னிடம் வந்து பேசுகின்றாய்?காதல் காமம் இரண்டும் என்னிடத்தில் ஏன்????
அவன்... தெரியலை..
sometimes love isn't enough....இந்த ஒற்றை வரியை கையில் வைத்துக்கொண்டு திரைக்கதை அமைத்து இருக்கின்றார்கள்.... இந்த படத்துக்கு...
LANTANA படத்தின் கதை இதுதான்....
நம்ம ஊரில் உன்னி பூ என்று சொல்லுவோம் நம் கிராமத்து வீட்டு வேலிகளில் கொத்து கொத்தாக பூத்து குலுங்கும்... இது முதலில் ரோஸ் நிறமாகதான் ,இருந்தது ஆனால் இப்போது பல வண்ணங்களில் பார்க்க முடிகின்றது....சில நேரங்களில் இந்த கொத்து பூக்களையும் பறித்து பின் பக்கம் லேசாக வாய் வைத்து உரிஞ்சினால் கொஞ்சமே கொஞ்சம் இனிப்பாக இருக்கும்... அந்த இனிப்புக்காக அந்த அழகு பூக்களை சிறுவயதில் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல அந்த பூக்களை அழித்து இருக்கின்றோம்.... அது போலான உனிப்பூ அதிகம் உள்ள புதரில் கேமரா ஈக்களின் சத்தத்தோடு பயணிக்கும் கேமரா... ஆர்வத்தில் புதரின் உள்ளே செல்லுகையில் அங்கே ஒரு பெண்ணின் பிணம் கிடைக்கின்றது...
Valerie (Barbara Hershey)ஒரு தெரபிஸ்ட்....அவள் கணவன் John, (Geoffrey Rush) இவர்களின் 11வயது குழந்தை கொலை செய்யபடுகின்றாள்... அதை பற்றி தெரபிஸ்ட் ஒரு புத்தகம் கூட எழுதுகின்றாள்.... ஒருநாள் அவள் காணமல் போகின்றாள்... அதை கண்டுபிடிக்கும் பொறுப்பு போலிஸ் அதிகாரிLeon (Anthony LaPaglia) வசம் வந்து சேர்கின்றது...இவரின் மனைவிSonja (Kerry Armstrong ஒரு home maker இரண்டு பிள்ளைகள்... ஆனால் போலிஸ் அதிகாரி லியோனுக்கு தற்போது கணவனை விட்டு பிரிந்து வந்து இருக்கும்
Jane (Rachael Blake) இருமுறை படுக்கையை பகிர்ந்து கொண்டு இருக்கின்றான்...எப்படி இவர்களுக்குள் பழக்கம் என்றால் ?லியோன், மனைவி, ஜேன் மூவரும் ஒரே டான்ஸ் கிளாசில் பிராக்டிஸ் செய்கின்றனர்....ஜேன் வீட்டு பக்கத்தில் 3 குழந்தைகளுக்கு அப்பாவான நிக் இருக்கின்றான்...ஒரு நாள் ஜென் தூக்கம் வராமல் ஜன்னல் வழியாக பார்க்கும் போது நிக் ஒரு பெண்ணின் ஷுவை கழற்றி புதரில் எறிவதை ஜேன் பார்த்து விடுகின்றாள்.... போலிசுக்கு தகவல் சொல்ல... காணமல் போன Valerieயை யார் கொலை செய்தார்கள்..?. எப்படி கொலை செய்யபட்டாள்?. என்பதை வழக்கம் போல் வெண்திரையில் பாருங்கள்...
படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....
ஒரு சாதாரண notயை வைத்துக்கொண்டு அதில் கொஞ்சம் கிரைமை மிக்ஸ் செய்து... அதில் கள்ள உறவுகளை அறிமுகபடுத்தி பார்வையாளனின் ஊகத்தை தவிடு பொடியாக்குகின்றது இந்த படம்...
கிரைம் கதையில் குடும்ப உறவுகளின் பிரச்சனையை அலசுவதாக அமைத்த... திரைக்கதை அருமை...முதல் காட்சியில் உடலுறவில் ஈடுபட்டு துணி உடுத்திக்கொண்டு பேசும் போது சான்சே இல்லை அற்புதம் என்கின்றான் அவன்...ஆமாம் எனக்கு அப்படித்தான் இருந்தது என்று அவள் சொல்லும் போது... அவள் என் ஒரு காதில் உள்ள முத்து கம்மலை காணவில்லை என்று சொல்ல... அவனும் ஆர்வத்துடன் தேட... அது என் கணவன் வாங்கி கொடுத்தது என்று சொல்லும் போது....படம் பார்க்கும் நமக்கு திடுக்கென்று தூக்கி போடும்... அது படம் முழுவதும் விரைய விட்டு இருக்கின்றார்கள்...லன்டான என்பது அஸ்திரேலியாவின் புறநகரில் புதர்களில் அதிகம் பூத்து குலுங்கும் நம்ம உனிப்பூதான்...மிக மெதுவாக நகரும் திரைக்கதையில் பல திருப்பங்கள் இருப்பதால் பெரிதான தொய்வாக இந்த படம் தெரிவதில்லை...
படத்தில் அறிமுகபடுத்திய அத்தனை கேரக்டர்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் திரைக்கதையில் சம்பந்தம் இருப்பதாக காட்டி இருப்பது சிறப்பு....
இந்த படம் அதிக விருதுகளை பெற்று இருதாலும் என்னை பொறுத்தவரை பாக்கவேண்டிய திரைபட வரிசையில்தான் என்னால் வைக்க முடியும்...
இந்த படம் வாங்கிய விருதுகள்...
* Awards and film festivals:
o Australian Fim Institute (AFI) 2001: film, actor, actress, director, adapted screenplay, supporting actor, supporting actress
o AWGIE awards 2001: script award
o Brisbane Film Festival 2001: Official selection
o Film Critics Circle of Australia 2002: best adapted screenplay, best supporting actress (Daniela Farinacci), best actress (Kerry Armstrong), best actor (Anthony Lapaglia), best film
o Fort Lauderdale Film Festival 2001: film, director, screenplay, special award for ensemble cast
o if Awards 2001: feature film, direction, actor (Anthony Lapaglia), script, actress (Barbara, Kerry Armstrong, Leah Purcell, Rachael Blake and Daniela Farinacci)
o if Awards 2002: Box Office Achievement
o Melbourne Film Festival 2001: Official selection
o San Sebastián International Film Festival 2001: Official selection
o SPAA independent producer: Feature Film: Jan Chapman
o Sydney Film Festival 2001: World première
o Telluride Film Festival 2001: Official selection
o Toronto International Film Festival 2001: Official selection
படத்தின் டிரைலர்...
படக்குழுவினர்விபரம்....
Directed by Ray Lawrence
Produced by Jan Chapman
Written by Andrew Bovell
Starring Anthony LaPaglia, Geoffrey Rush, Barbara Hershey, Kerry Armstrong, Rachael Blake, Vince Colosimo, Russell Dykstra, Daniela Farinacci, Peter Phelps, Leah Purcell, Glenn Robbins
Music by Paul Kelly
Cinematography Mandy Walker ACS
Running time 115 min
Country Australia
Language English
அன்புடன்
ஜாக்கிசேகர்
( இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு 30 செகன்ட் செலவு பண்ணி, ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....)
திருமணத்திற்குப்பின் காதல் ,உங்களுடைய பார்வை மிக நன்றாக உள்ளது.அதை உணர்த்திய விதம் அருமை
ReplyDeleteதிருமணத்திற்குப்பின் காதல் ,உங்களுடைய பார்வை மிக நன்றாக உள்ளது.அதை உணர்த்திய விதம் அருமை--//
ReplyDeleteஇந்த படத்தின் அடிநாதமே அதுதான் மைதீன்... பொதுவான கருத்தைதான் சொல்லி இருக்கின்றேன்..
க்ரைம் கதையா, ரைட்டு, ஓட்டும் போட்டாச்சு.
ReplyDeleteதல ......... ம்ம்ம்
ReplyDelete// இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு 30 செகன்ட் செலவு பண்ணி, ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க...//
ReplyDeleteபோட்டுட்டேன்யா.. மிரட்டுறீங்களேய்யா... நல்ல விமர்சனம். இப்படித்தான் எல்லாவற்றையும் கவர் செய்து ஆனல் எதையும் அதிகம் சொல்லாமல் படம் பார்க்கத்த் தூண்ட வேண்டும்.
லண்ட்டானா காமரா என்பது இதன் தாவரவியல் பெயர். நம்மூரில் இதன் பெயர் பீநாறிப் பூ, மத்திய கிழக்கு நாடுகளில் இதுதான் வேலிப்பூக்கள். நம்மூரில் இது ஓடைகளிலும், மலைப்பகுதிகளிலும் வளரும்.மகா மோசமான வாடை வரும்
அண்ணே அருமையாக சொன்னீர்கள்
ReplyDeleteபடம் பார்க்கிறேன் சீக்கிரம்
ஃபார்மாலிட்டி டன்
//லண்ட்டானா காமரா என்பது இதன் தாவரவியல் பெயர். நம்மூரில் இதன் பெயர் பீநாறிப் பூ//
ReplyDeleteSmall correction
It's Not பீநாறிப் பூ it's நாயுண்ணி பூ.
From vasanthanin.blogspot.com:
>>பீநாறியென்பது நாயுண்ணியை விட சற்று வித்தியாசமானது. நாயுண்ணி இலைகள் சிறிதாகவும் தடிப்பாகவும் இருக்கும். பீநாறி இலைகள் நாயுண்ணியைவிட சற்றுப்பெரிய இலைகள், அதேநேரம் ஒப்பீட்டளவில் மெல்லிய இலைகள்.
பீநாறியை விட நாயுண்ணிக் கொப்புக்கள் பலமானவை. பீநாறியின் தண்டுகள் (கொப்புக்கள் என்று சொல்ல முடியாது) மிகப்பலவீனமானவை. தாமரைத்தண்டு போல சடக்கென்று முறிந்துவிடும் இயல்புடையவை. வெறும் கோதாகவே இருக்கும். மேலும் பீநாறி கிளைகள் விட்டு பரந்து வரளாது. நெடுத்து வளரும்.
பீநாறிப் பற்றைகளுக்குள்ளால் நகர்வது ஒப்பீட்டளவில் சுலபம். சடக் சடக்கென்று முறிந்து வழிவிடும். ஆனால் நாயுண்ணிப் பற்றைகள் அப்படி முறிந்து வழிவிடா.
I have very deep chilhood memories with "Lantana Camera"..[gave this to my friend so offen :))] It won't stink that much but the leaves will give you itch for some time.
Neenga solvathan adipadaiyil solkiren,velinatil kuppai thottiyai kilarinal kidaikkum dvd il kooda ithu pola kathai konda padam than irukkum.
ReplyDelete1000 kanakkil ore vakai padam englishil vanthalum ulaga padam enpom,tamil enral ore mathiri eduthu kolran solvom.intha "lantana" ellam 'b' grade padam enru than sollavendum.
http://www.monova.org/details/371968/LANTANA%20(2001)%20-%20ANTHONY%20LAPAGLIA%20%26%20BARBARA%20HERSHEY.html
ReplyDeletejackie வர வர நாம ரெண்டு பேரும் ஒரே படத்தை பார்க்க ஆரம்பிச்சிட்டோம்..:)
ReplyDelete