புதுமனை புகுவிழா அழைப்பு....

நினைத்து நான் சாத்தியபடுத்தியது நீங்கள்....

கல்யாணத்தை பண்ணிபார் வீட்டை கட்டிபார் என்று பழமொழி சொன்ன வாய்க்கு
சக்கரை போட வேண்டும்...எனக்கு கல்யாணத்தை பண்ணிய அனுபவம் 3 உண்டு
என்றாலும் இந்த வீடு மேட்டர் ரொம்பவும் புதுசு...

குடியிருக்கும் வீட்டை காலி செய்து கொடுங்கள் என்று தாழ்மையாக ஹவுஸ் ஓனர்வேண்டுகோள் வைக்கும் போது... முடியாது என்று நம்மால் சொல்ல
முடியாது...நான் இருக்கும் வளசரவாக்க வீட்டை இடித்து விட்டு அடுக்குமாடி
குடியிருப்பு கட்ட போகின்றார்களாம்....கட்ட வேண்டாம் என்று சொல்ல நாம் யார்..???அப்படித்தான் சொல்ல முடியுமா?

இதற்க்கு முன்னே 5 வருடங்களாக வீடு வாங்க முடியாவிட்டாலும், எந்த ஏரியாவில்
என்ன ரேட் போகின்றது என்று பிரி ஆட்ஸ் பேப்பராவது வாங்கி நானும் என்
மனைவியும் சில விளம்பரங்களை பார்த்து பெரு மூச்சு விட்டுக்கொண்டு
இருப்போம்...

ஏற்கனவே வீ்டு எனும் மாற்றத்தை சமாளிக்க வேண்டி பெரிய பொருள்கள் ஏதும்
இல்லாமல் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே வைத்துக்கொண்டு இருந்தேன்...
அனால் திருமணத்துக்கு பின் ஒரு லாரியாக அத்யாவசிய பொருட்கள் அளவு
உயர்ந்து விட்டது... என்ன செய்ய???


லோன் கேட்டோம்... 13 லட்சம் கேட்டு அவன் கொடுத்தது12 அரைலட்சம்
மட்டுமே.. அதிலும் அது இது என்ற பிடித்தம் 25000 போக வந்த தொகை
இதுதான்... 1300000 லட்சம் கொடுக்கறேன்னு சொன்னவன் கையெழுத்து போடும்
போது 12 அரை லட்சம்தான் தரமுடியும்னு சொன்னான் என்றால் என்ன செய்ய
முடியும்....??

சொந்தகாரர்களிடம் நெருங்கிய நண்பர்களிடம் கேட்ட போது... 3 பைசா
வட்டியில் குறியாக இருந்தார்கள்.... ஏம்பா கடன் வாங்கும் போது 3 பைசா வட்டி எல்லாம் சாதாரணம்...
இந்த காலத்துல அது கெடைக்கறது என்பது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா? என்று அட்வைஸ்
கொடுத்தார்கள்.... சிலருக்கு இப்போது உதவமுடியாத சூழல்.....வட்டியில்லாத
கடனாக யார் தருவார்கள்...
அதே இப்போது சொந்த வீடு வாங்க முயற்ச்சி எடுக்கவில்லை என்றால் அப்புறம்
வாய்ப்பே இல்லை.. அதன் பிறகு குழந்தை பிறந்து அதனை வளர்க்கும் போது வீடு
என்பது நினைத்து கூட பார்க்க முடியாத விஷயமாக இருக்கும்...

ஒரு கட்டத்தில் முடவன் கொம்பு தேனுக்கு ஆசைபட்ட கதையா இந்த வீடு வாங்கும் மேட்டர் இழுத்துக்கொண்டே போக பேசாமல் டிராப் செய்ய முடிவு எடுத்தும் விட்டேன்....
அதன் பிறகு 3 லிருந்து 4 லட்சம் வரை பெண்டிங்...கொடுக்கும் சொந்தங்கள் மாத்தி மாத்தி சொல்ல... ஒரு மாதிரி வெறுத்து போய்
ஒரு பதிவை எழுதி விட்டேன்.... சொந்த வீடு என்பது நடுத்தர மக்களின் கனவா
என்று....

பதிவை போட்டு கொஞ்ச நேரத்தில் நான் சுவாமிநாதன்...டைட்டல் பார்க் கிட்ட வேலை செய்யறேன்...என்கிட்ட 10,000 பணம்
இருக்கு நீங்கள் வீடு வாங்க இந்த சிறு தொகை உதவும் என்பதில் ஆரம்பித்து...

உங்க நம்பர் கொடுக்க என்று சொல்லி சிங்கபூரில் இருந்து பெயர்வெளியிட
வேண்டாம் என்று கெட்டு கொண்ட நண்பர் ஒரு லட்சம் நான் கொடுக்கறேன்..
நீங்க திருப்பி தர வேணாம்.. எப்ப முடியுமோ அப்ப கொடுங்க? என்று சொல்லி
அவர் நெகிழ வைக்க.... அதை விட அந்த பணத்தை என் அக்கவுன்டிற்க்கு அனுப்பும்
வரை தினமும் தொடர்பில் இருந்து செய்த உதவியை எப்படி மறக்க மடியும்....


நேரடியா விஷயத்துக்கு வரேன்... என்னால ஒரு லட்சம் கொடுக்க முடியும் என்று
அமெரிக்காவில் இருந்து பதிவுலக நண்பர் ஒருவர் பெயர் வெளியிட வேண்டாம்
என்று சொல்ல..... எனக்கு லேசாக மயக்கம் வந்து கொண்டு இருந்தது...

அன்று
சாயந்திரமே பாஸ்டன் ஸ்ரீராம் தொடர்பு கொண்டு எப்படி என்னைக் கேட்காம
பதிவுல நீ எப்படி எழுதுவ???? 3 லட்சம்தானே நான் கொடுக்கறேன் என்று
சொல்லி கோபித்து கொண்டதாகட்டும்....இத்தனைக்கும் ஸ்ரீராம் வேறு ஒரு
புராஜக்ட்டிற்க்கு பணத்துக்கு அலைந்து கொண்டு இருக்கும் போது செய்த இந்த உதவி
இது....
உங்களுக்கு ஒன்னு தெரியுமா? 3லட்சம் மொத்தமா கையில பார்த்தது இப்போதுதான்....

அதே போல் ஹரிராஜகோபாலன் சான்பிரான்சிகொவில் இருக்கும் ஒரு
வாசக நண்பர்.... அவர் மயிவாடுதுறையில் இப்போதுதான் சொந்த வீடு கட்டி கூட
போனார்.... அவர் ஒரு மெயில் அனுப்பினார்... உனக்கு ஐம்பதாயிரம்
கொடுக்கறேன்....கேள்வியே கேட்கவில்லை... அவ்வளவுதான் நம்பர் கொடுங்க நான் அனிப்பி வைக்கிறேன்
என்று சொல்லி நெகிழ வைத்து என் மீது அன்பு வைத்து இருக்கும் நண்பர்களிடம்
இருந்து வாங்க முடிவுசெய்தேன்....வட்டிக்கும் டைலோமாவாக இருந்த
நண்பர்களை ஒதிக்கிவிட்டு என்பதிவுல நண்பர்களிடம் வட்டியில்லாத கடனாக
பணத்தை வாங்க முடிவு செய்தேன்...வாங்கியும் விட்டேன்....


ஒன்று மட்டும் புரிந்து போனது....நான் தனி ஆள் இல்லை.... என் பதிவை
வாசிப்பவர்கள் என் வாழ்க்கையோடு பயணித்து வருகின்றார்கள் என்பது புரிந்து
போனது...நான் சிரித்தால் அவர்களும்.. நான் வருத்தபட்டால் அவர்களும்
வருத்தபடுகின்றார்கள் என்பதை என்னால் உணர முடிகின்றது...

என் மனைவியால்இன்னமும் நம்ப முடியவில்லை....இப்படி கூட ஆட்கள் இருப்பார்களா? உதவின்னுகேட்காம இருந்ததுக்கே இப்பபடி ஒரு உதவியா? என்று சொல்லி சொல்லி ஆத்து ஆத்து போகின்றாள்..


இது போன்ற பல எதிர்பாராத நிகழ்வுகளை எல்லாம் பெற்று அடித்து பிடித்து வீடு
வாங்கி விட்டோம்...

இந்த ஜாக்கி நல்லவானா கெட்டவனா? அவன் பேக்ரவுண்ட் என்ன? எதுவும் தெரியாது.. பதிவின் மூலம் மட்டுமே தெரியும்... சட்டென பணம் கொடுக்க ஒரு மனது வேனும்... நெற்றி வேர்வை நிலத்தில் சிந்தி உழைத்த அந்த நேரில் சந்திக்காத அந்த நண்பர்கள் மனப்பூர்வமாய் செய்த உதவிகள் இப்போதும் என்னை நெகிழ வைத்துக்கொண்டு இருக்கின்றன... இந்த நண்பர்களிடம் வாங்கிய பணத்தை வெகு சீக்கிரத்தில் திருப்பி கொடுக்க, எல்லா வல்ல பரம்பொருள் பலத்தையும்,உழைப்பின் மூலம் செல்வத்தையும் கொடுக்கவும்...வெகுசீக்கிரத்தில் வாங்கிய பணத்தை திருப்பிக்கொடுக்க இந்த நேரத்தில் வேண்டிக்கொள்கின்றேன்....

ஒரு 100 ரூபாய் கூட இப்போது முக்கியமாக படுவதால் எப்போ கிரகபிரவேசம் என்று யாராவது கேட்க.... யோவ் அப்படி சொல்லதையா? பால்காய்சி குடி போகின்றோம் என்று சொல்... என்று வடிவேல் போல் சொல்ல ஆரம்பிக்க.... நெருங்கிய நண்பர்களை மட்டும் அழைக்கலாம் என்று முடிவு செய்யது இருந்தேன்...

கல்யாணம்,சொந்தவீடு எல்லாம் வாழ்வில் ஒரு முறை நடக்கும் நிகழ்வுகள் செலவோடு செலவா... சிம்பிளா செஞ்சாலும் எல்லோரையும் அழைத்து ஆசிர்வாதம் வாங்கி கொள் என்று நண்பர் ஒருவர் சொல்ல... என் மனைவியும் அதனையே ஆமோதித்தாள்...இந்த 14ம் தேதி புது வீட்டிற்க்கு குடி போனாலும் போவேன் என்று எழுதியதற்க்கே எத்தனை வாழ்த்துக்கள்....எனக்கு இப்போது நெருங்கிய நண்பர் என்று சொல்ல யோசிக்க வேண்டியதாகி விட்டது.. எனக்கு எல்லோரும் நண்பர்கள்தான்....

வரும் 14ம் தேதி ஞாயிறு காலை 6லிருந்து 7,30க்குள் புதுமனை விழா செய்ய இருப்பதால் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகின்றேன்...

படத்தை கிளிக்கி பெரிதாக பார்த்துகொள்ளவும்.... ஒரு மணிநேரத்தில் மேட்டர் இல்லாமல் போய் அடித்த இரண்டு மணி நேரத்தில் வாங்கிய பத்தி்ரிக்கை இது....

வீட்டிற்க்கு பெயர் மகிழ்வகம் என்று வைத்து இருக்கின்றேன்.... பெயரை செலக்ட் செய்த எனது அத்தை மகன் தாமோதரனுக்கு என் நன்றியும், நமஸ்காரங்களும்....

இந்த பத்திரிக்கையை நேரில் வீட்டுக்கு வந்து கொடுத்தாக நினைத்து இதனையே அழைப்பாக ஏற்று...டீ, அதன் மேலேயே காபி..அப்புறம் ஜுஸ் எல்லாம் கலந்து குடித்த கலவையோடு பதிவர்களையும் வாசகர்களையும் வரவேற்க்கின்றேன்...

அடுக்குமாடி குடியிருப்பில் தரைதளம்...

விலாசம்...

சம்பந்தம் அடுக்குமாடி குடியிருப்பு
தரைதளம் இரண்டு
மேக்ஸ் ஒர்த் நகர்...பேஸ்.. 1
கொளப்பாக்கம்...
சென்னை 101..

கிண்டியில் இருந்து வரும் போது மியோட் ஆஸ்பிட்டல் சிக்னலில் லெப்ட் திரும்பினால் முதலில் மனப்பாக்கம்... அதன்பின் கொளப்பாக்கம்....நல்லரோடு... முகலிவாக்கம் வழியாகவும் வரலாம்....போருரில் பாய்கடை பஸ்ஸ்டாப்பில் இறங்கி ஒன்றரை கிலோமீட்டடரில் வீடு....

எத்தனை பேர் வரப்போகின்றார்கள்...எதுவும் தெரியாது....குறை ஏதும் இருந்தால் மன்னிக்கவேண்டுகின்றேன்...


அன்புடன்
நெகிழ்ச்சியுடன்
ஜாக்கிசேகர்

120 comments:

 1. மிக்க மகிழ்ச்சி ..!
  வாழ்த்துக்கள்...!
  அழைப்பிற்கு நன்றி ..!;)

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் ஸார்.

  இனி எல்லாம் சுகமே

  ReplyDelete
 3. மென்மேலும் சிறப்புற வாழ்த்துகள் ஜாக்கி.........

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள்!

  அன்புடன்,
  -ரவிச்சந்திரன்

  ReplyDelete
 5. VERY VERY HAPPY TO HEAR THIS...

  ALL THE BEST...

  MANO

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் ஜாக்கி..!

  வாழ்க்கையில் ஒரு படியை முன்னெடுத்து வைத்திருக்கிறாய்..!

  எல்லா வளமும் இனிமேல் சேர்ந்து வரும்..!

  முருகன் இருக்கிறான். கவலைப்படாதே..!

  ReplyDelete
 7. congtats!!! may god bless u and your family:)

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் அண்ணா..
  உதவிய உள்ளங்களுக்கு வணக்கங்கள்..

  ReplyDelete
 9. மகிழ்ச்சியாக
  நெகிழ்ச்சியாக இருக்கிறது...

  வாழ்த்துகள் ஜாக்கி!

  ReplyDelete
 10. my best wishes

  if i am in chennai definitly i will be coming.

  i am happy to see my friends getting new homes this year, you are the third who is getting their own home :)

  ReplyDelete
 11. நல்ல உள்ளங்களின் அன்பால் உருவான வீட்டில் நிச்சயம் லட்சுமி வாசம் செய்வாள்..இனி பல மடங்கு வெற்றி பெறுவீர்கள்..

  ReplyDelete
 12. Hi Jackie,

  All the best for you two this and forthcoming efforts.

  Sincere salutes to the happening hearts which has made this dream come true.

  Love D. Ramesh

  ReplyDelete
 13. இனிய வாழ்த்து(க்)கள் ஜாக்கி.

  எல்லா நலனும் 'பெற்று' வாழ மனப்பூர்வமாக வாழ்த்துகின்றோம்.

  விழாநாளில் ஊரில் இருக்க மாட்டேன். திரும்பி வந்ததும் ஒரு நாள் புதுவீட்டைப் பார்க்க வரலாமா?

  என்றும் அன்புடன்,
  துளசியும் கோபாலும்.

  ReplyDelete
 14. வாழ்த்துகள் ஜாக்கி,

  சொந்த வீடு இருந்தாலே மனது பலம் மிக்கதாகி, எதையும் சாதிக்க ஊக்கப்படுத்தும்.

  ReplyDelete
 15. நண்பரே,

  நீங்கள் எல்லா செல்வங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன். சென்னையில் இருந்தால் கண்டிப்பாக வரிக்கிறேன்.

  பதிவுலக நட்பின் ஆழத்திற்கு இது ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காடு.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. வாழ்த்துக்கள் ஜாக்கி..!


  வேலை பளுவால் முன்பு போல் அடிக்கடி பேச முடிவதில்லை.

  மிக மிக மகிழ்ச்சி.

  So nice.. சாதனை தான்.

  ReplyDelete
 17. விழாநாளில் ஊரில் இருக்க மாட்டேன். திரும்பி வந்ததும் ஒரு நாள் புதுவீட்டைப் பார்க்க வரலாமா?
  :)

  ReplyDelete
 18. வாழ்த்துகள் ஜாக்கி!!

  ReplyDelete
 19. வாழ்த்துகள் சேகர்...

  ReplyDelete
 20. வாழ்த்துக்கள் ஜாக்கி.

  ReplyDelete
 21. நிறைவாய் இருக்கிறது, வாழ்த்துக்கள் ஜாக்கி. :)

  ReplyDelete
 22. வாழத்துகள் ஜாக்கி... treat உண்டுயில்ல?

  ReplyDelete
 23. அன்பு நண்பர் ஜாக்கி
  முதற்கண் உங்கள் புது மனை புகு விழாவிற்கு வாழ்த்துக்கள்.உங்கள் தாய் (நமது) பற்றிய பதிவு கண்டபின் உங்களின்
  தினசரி பார்வையாளர் நான் .ஆனால் இப்போதுதான் முதல் பதிலிடுகிறேன்.காரணம் gmail முகவரி உங்களுக்கு பதில் இடுவதற்காகவே இன்று தொடங்கியுள்ளேன்.மென்மேலும் பல சிகரங்களை தொட வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 24. அன்பு நண்பர் ஜாக்கி
  முதற்கண் உங்கள் புது மனை புகு விழாவிற்கு வாழ்த்துக்கள்.உங்கள் தாய் (நமது) பற்றிய பதிவு கண்டபின் உங்களின்
  தினசரி பார்வையாளர் நான் .ஆனால் இப்போதுதான் முதல் பதிலிடுகிறேன்.காரணம் gmail முகவரி உங்களுக்கு பதில் இடுவதற்காகவே இன்று தொடங்கியுள்ளேன்.மென்மேலும் பல சிகரங்களை தொட வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 25. வாழ்த்துகள்

  ReplyDelete
 26. வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்

  மகிழ்வகம் - படிக்கும் போதே மகிழ்ச்சியா இருக்கு நெகிழ்ச்சியாவும் ...

  ReplyDelete
 27. வாழ்த்துக்கள் உதவிய உள்ளங்களுக்கு
  வணக்கங்கள்

  ReplyDelete
 28. "Happy Home" will bring more happiness. Congrats and I am happy for you.

  ReplyDelete
 29. வாழ்த்துக்கள் தனா...நானும் இத்தனை நாட்களாக வீடு வாங்கும் எண்ணத்தை தள்ளிப்போட்டிக்கொண்டே வந்துள்ளேன்... உங்கள் முந்தய பதிவையும்,இப்பதிவையும் பார்த்தவுடன்,வாங்கியே தீருவது என முடிவு செய்து விட்டேன்... நலம்வாழ வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 30. மகிழ்ச்சி!வாழ்த்துக்கள்!!
  அழைப்பிற்கு நன்றி

  ReplyDelete
 31. உங்கள் கஷ்டங்கள் விலக , என்றும் மகிழ்ச்சி நிலவ வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 32. மிக்க மகிழ்ச்சி ..!
  வாழ்த்துக்கள்...!
  உதவிய உள்ளங்களுக்கு வணக்கங்கள்..

  ReplyDelete
 33. வாழ்த்துக்கள் ஜாக்கி,

  புது வீடு என்பதே புத்துணர்வுதான்.

  காலமுழுக்க அந்த புத்துணர்வு நிலைத்து இன்பங்கள் பல காண என் இதய நாளனுனியில் இருந்து வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

  திருமதி & திரு ஜாக்கி சேகர் இருவரும் தங்கள் முதல் சந்திப்பில் அடைந்த மகிழ்வை விட பன்மடங்கு அதிக இன்பம் என்றும் கிடைக்க வாழ்த்துக்கள்.

  இப்படிக்கு,

  பாலா,

  ReplyDelete
 34. வாழ்த்துக்கள். சாதித்தற்கும் மேன்மேலும் சாதிப்பதற்கும்.

  :)

  ReplyDelete
 35. Congrats Jackie,

  Sunday - Present sir...

  Sorry that am unable to call you on last Friday.. the meeting was over by 10.00PM only..

  Venkat M

  ReplyDelete
 36. ''''''இந்த நண்பர்களிடம் வாங்கிய பணத்தை வெகு சீக்கிரத்தில் திருப்பி கொடுக்க, எல்லா வல்ல பரம்பொருள் பலத்தையும்,உழைப்பின் மூலம் செல்வத்தையும் கொடுக்கவும்...வெகுசீக்கிரத்தில் வாங்கிய பணத்தை திருப்பிக்கொடுக்க இந்த நேரத்தில் வேண்டிக்கொள்கின்றேன்....''''


  உங்கள் நல்ல எண்ணத்துக்கும் புது வீடு குடி போகுதலுக்கும் என் வாழ்த்துக்கள்.....

  ReplyDelete
 37. இது போன்ற சந்தோஷங்களைப் பகிர்ந்து கொள்ள பதிவுலகம் பாலமாக இருப்பது மகிழ்ச்சியே...
  நேரில் வந்து மொய் எழுதி விருந்து சாப்பிட முடியாவிட்டாலும் கூட ஆசிகளையும் வாழ்த்துக்களையும் கூறும் பதிவுலத்தில் நானும் ஒருத்தி.
  வாழ்த்துக்கள் சகோதரா
  சந்தோஷமும் வளமும் பொங்கட்டும்
  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 38. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 39. கலக்குறீங்க ஜாக்கி அண்ணே...
  புது வீடு..
  அடுத்து புது காரு?
  வாழ்த்துகள் அண்ணே...
  உங்கள் புதிய இல்லத்தில் புதிய வாழ்க்கை சந்தோஷமாக அமைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 40. ரொம்ப சந்தோஷம் ஜாக்கி !!! உங்கள் மனைவிக்கும் வாழ்த்துக்கள் !!!

  ReplyDelete
 41. Wish you all the best jackie
  by
  syed KSA

  ReplyDelete
 42. Wish you all the best jackie
  by
  syed KSA

  ReplyDelete
 43. வீடு வாங்குறது மாதிரி ஒரு கஷ்டம் நம்மள மாதிரி மிடில் கிளாஸ்க்கு எவ்வளவு பிரச்சினை
  அத்தனையும் தாண்டி வந்த ஜாக்கி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள், காலத்தே உதவி செய்த பதிவர்களுக்கும்.

  ReplyDelete
 44. சகலசெல்வங்களும் பெற்று வாழ வாழ்த்துகின்றேன்.

  ReplyDelete
 45. மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 46. வாழ்த்துக்கள் ஜாக்கி.

  ReplyDelete
 47. வாழ்த்துக்கள் ஜாக்கி,மென் மேலும் சிறப்புற வாழ பிரார்த்திக்கிறேன்.பின்பு ஒருநாள் நேரில் வந்து அறிமுகம் கொள்கிறேன் .நன்றி!

  ReplyDelete
 48. மிகுந்த மனநிறைவாக உள்ளது நண்பரே.

  ReplyDelete
 49. வாழ்த்துகள் திரு.ஜாக்கிசேகர்..

  பதிவுலக நண்பர்களை எண்ணி நானும் பெருமைப்படுகிறேன்.

  வாழ்த்துகிறேன்..

  ReplyDelete
 50. புது மனை மகிழ்வகத்தில் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்.
  அன்புடன்
  சந்துரு

  ReplyDelete
 51. வாழ்த்துக்கள் ஜாக்கி!

  ReplyDelete
 52. வாழ்த்துக்கள். சாதித்தற்கும் மேன்மேலும் சாதிப்பதற்கும்...

  ReplyDelete
 53. .எனக்கு கல்யாணத்தை பண்ணிய அனுபவம் 3 உண்டு
  என்றாலும் //

  பாஸ் எல்லாரும் 1க்கே கஷ்டப் படும் போது உங்களுக்கு 3ஆ? ;)

  இப்படி பதிவுல தெரிஞ்ச ஆசாமிக்கு இவ்வளவு நம்பிக்கையோட எப்படி கொடுக்குறாங்க? ஆச்சரியமா இருக்கு...

  ReplyDelete
 54. உங்கள் புதுமனை புகு விழாவுக்கு என் வாழ்த்துக்கள்.
  இணையம் பலரையும் அன்பால் இணைத்துள்ளது பெரும் மகிழ்ச்சி...

  ReplyDelete
 55. வாழ்த்துக்கள் ஜாக்கி
  மகிழ்வகத்தில் என்றும் மகிழ்ச்சி தங்கட்டும்.
  இது ஒரு சாதனைதான், இல்லையென்று சொல்லவில்லை, ஆனால இதுவொன்றும் எவரெஸ்ட்டின் உச்சி அல்ல, தேங்கி விடாமல், அடுத்தடுத்த உயரங்களை நோக்கிப் போய்க்கொண்டே இரு. தனி வீடு வாங்கும் பாக்கியம் சீக்கிரமே வாய்க்கட்டும்.

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்.

  ReplyDelete
 56. வாழ்த்துகள் ஜாக்கி.. இது ஒரு பெரிய சாதனை.

  ReplyDelete
 57. வாழ்த்துகள் ஜாக்கி! முகந்தெரியாத நண்பர்கள் அன்பு நெகிழ வைக்கிறது!

  தங்களுக்கும், தங்கள் மனைவிக்கும் வாழ்த்துகள்! :-)

  வர முயற்சி செய்கிறேன்!

  ReplyDelete
 58. வாழ்த்துக்கள்..!

  ReplyDelete
 59. //எனக்கு கல்யாணத்தை பண்ணிய அனுபவம் 3 உண்டு//
  என்ன ஜாக்கி சார் சொல்றீங்க

  ஒவ்வொருவனதும் கனவுகளில் ஒன்று வாழ்த்துக்கள்

  ReplyDelete
 60. வணக்கம் ஜாக்கி

  கடலூரில் இருந்து வருவதற்கு வாய்ப்பில்லை ,

  வாழ்த்துக்கள். சாதித்தற்கும் மேன்மேலும் சாதிப்பதற்கும்.

  ReplyDelete
 61. dear sir,

  best wishes for ur house warming ceremony.

  all the best.

  anita

  ReplyDelete
 62. கனவு நனவானதுக்கு வாழ்த்துக்கள்!!
  காரணமான பதிவுலக நண்பர்களை நினைத்தால் மனதுக்கு இதமாக இருக்கிறது.

  ReplyDelete
 63. மிக்க சந்தோசம் ஜாக்கி,
  வாழ்த்துக்கள்.
  புது வீட்டின் படங்களையும் போட்டால் நாங்களும் பார்ப்போமே !

  ReplyDelete
 64. பாசமிகு அண்ணனுக்கு,
  உங்களுக்கும் திருமதி ஜாக்கிக்கும் (அக்கா) என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
  மேலும் நான் உங்கள் முந்தய பதிவு ( மிடில் கிளாஸ் கனவு ) படிக்கவில்லை அப்படி படித்திருந்தாலும் எனக்கு உதவ மனம் இருந்தாலும் என்னால் உதவி இருக்க முடியாது ஏனெனில் எனக்கு என் அப்பா ஸ்பான்சர் செய்கிறார் அது உங்களுக்கு தெரியும்.
  இருந்தாலும் உங்கள் பதிவுலக நண்பர்கள் உங்களுக்கு உதவியதை எண்ணி மகிழ்கிறேன் நெகிழ்கிறேன் அசந்து போனேன்
  நாம் நெருங்கி பழகும் நண்பர்களிடம் நூறு ரூபாய் கேட்டல் காரணம் கேட்காமல் கொடுப்பார்கள் ஐநூறு ரூபாய் கேட்டல் காரணம் கேட்பார்கள்
  ஆயிரம் கேட்டால் யோசிப்பார்கள் பத்தாயிரம் கேட்டால், போடா நீயும் உன் நட்பும் என்று போய்விடுவார்கள்.
  ஆனால் இந்த கலியுகத்தில் இப்படி பட்ட நண்பர்கள் கிடைக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்
  சிலர் சொல்லுவார்கள் ஒருவன் வாழ்வில் முன் பாதி எப்படி இருக்கிறதோ அதற்கு நேர்மாறாக பின்பாதி இருக்கும். அதை நான் சாதாரண ஒரு வாக்கியமாக நினைத்தேன். அது உண்மை தான் என்று நீங்கள் நிரூபித்து விட்டீர்கள் நீங்கள் பட்ட கஷ்டங்கள் வீண் போக வில்லை நீங்கள் அனுபவித்த இன்ப துன்பங்கள் அனைத்தையும் நான் நேரில் கண்டிருக்கிறேன். அவை அனைத்தின் வெற்றியாக இந்த மணிமகுடம்.

  ரொம்ப அறுக்க விரும்ப வில்லை நேரில் உங்கள் வீட்டிற்கு வந்து அறுக்கிறேன்

  உங்கள் அன்பு தம்பி,
  அரவிந்தன்.

  ReplyDelete
 65. பாசமிகு அண்ணனுக்கு,
  உங்களுக்கும் திருமதி ஜாக்கிக்கும் (அக்கா) என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
  மேலும் நான் உங்கள் முந்தய பதிவு ( மிடில் கிளாஸ் கனவு ) படிக்கவில்லை அப்படி படித்திருந்தாலும் எனக்கு உதவ மனம் இருந்தாலும் என்னால் உதவி இருக்க முடியாது ஏனெனில் எனக்கு என் அப்பா ஸ்பான்சர் செய்கிறார் அது உங்களுக்கு தெரியும்.
  இருந்தாலும் உங்கள் பதிவுலக நண்பர்கள் உங்களுக்கு உதவியதை எண்ணி மகிழ்கிறேன் நெகிழ்கிறேன் அசந்து போனேன்
  நாம் நெருங்கி பழகும் நண்பர்களிடம் நூறு ரூபாய் கேட்டல் காரணம் கேட்காமல் கொடுப்பார்கள் ஐநூறு ரூபாய் கேட்டல் காரணம் கேட்பார்கள்
  ஆயிரம் கேட்டால் யோசிப்பார்கள் பத்தாயிரம் கேட்டால், போடா நீயும் உன் நட்பும் என்று போய்விடுவார்கள்.
  ஆனால் இந்த கலியுகத்தில் இப்படி பட்ட நண்பர்கள் கிடைக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்
  சிலர் சொல்லுவார்கள் ஒருவன் வாழ்வில் முன் பாதி எப்படி இருக்கிறதோ அதற்கு நேர்மாறாக பின்பாதி இருக்கும். அதை நான் சாதாரண ஒரு வாக்கியமாக நினைத்தேன். அது உண்மை தான் என்று நீங்கள் நிரூபித்து விட்டீர்கள் நீங்கள் பட்ட கஷ்டங்கள் வீண் போக வில்லை நீங்கள் அனுபவித்த இன்ப துன்பங்கள் அனைத்தையும் நான் நேரில் கண்டிருக்கிறேன். அவை அனைத்தின் வெற்றியாக இந்த மணிமகுடம்.

  ரொம்ப அறுக்க விரும்ப வில்லை நேரில் உங்கள் வீட்டிற்கு வந்து அறுக்கிறேன்

  உங்கள் அன்பு தம்பி,
  அரவிந்தன்.

  ReplyDelete
 66. This comment has been removed by the author.

  ReplyDelete
 67. வாழ்த்துகள்..

  மிக்க மகிழ்ச்சி
  :)

  ReplyDelete
 68. வாழ்த்துகள்..

  மிக்க மகிழ்ச்சி
  :)

  ReplyDelete
 69. வாழ்த்துகள்..

  மிக்க மகிழ்ச்சி
  :)

  ReplyDelete
 70. வாழ்த்துகல் தல.. நன்பர்கள் இருக்க பயமேன்? பதிவுலகம் தரும் நண்பர்கள்.. இதை விட ஒரு மனிதனுக்கு வேறு யாரும் நல்லதை தந்து விட முடியுமா என்ன?

  ReplyDelete
 71. நெகிழ வைத்த நட்புகளுக்கு வணக்கம்... நான் இன்று இரவு பெங்களுர் போகின்றேன்... புதுமனை புகுவிழா விஷயமாக.. வந்து விரிவாய் பதில் சொல்கின்றேன்...

  அன்புடன் ஜாக்கி

  ReplyDelete
 72. வாழ்த்துக்கள் தனசேகர் !!

  ReplyDelete
 73. அண்ணே உங்க நல்ல மனசுக்கு எல்லாம் அற்புதமா நிறைவேறும்,உங்க அம்மா தெய்வமா நின்னு நடத்துறாங்க.
  அன்பான அற்புதமான மனம் கொண்ட அந்த நண்பர்கள் நீடூழி வாழ்க.

  ReplyDelete
 74. வாழ்கையில் பெரும் சொத்து நல்ல நட்புகள். நல்ல நட்புகளை கொண்டுள்ளீர்கள். இனி எல்லாம் சுபமே மன மகிழ்வுடன் வாழ்க

  ReplyDelete
 75. உங்களின் பதிவுடன் கூடிய அழைப்பிதழ் அற்புதம் .

  வாழ்த்துகள் !மிக்க மகிழ்ச்சி !

  ReplyDelete
 76. வாழ்த்துக்கள் அண்ணாச்சி அடுத்து உங்களை ஒளி ஓவியராக பார்க்கவேண்டும் அதுவும் விரைவில் நடைபெற உண்மைத்தமிழன் அண்ணாச்சியின் முருகனை வேண்டுகின்றேன்.

  ReplyDelete
 77. வாழ்த்துக்கள்!

  மிக்க மகிழ்ச்சி

  ReplyDelete
 78. உதவிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி....
  வாழ்த்துகள் தல .........

  ReplyDelete
 79. வாழ்த்துக்கள் ஜாக்கி,

  ReplyDelete
 80. வாழ்த்துக்கள் ஜாக்கி,

  ReplyDelete
 81. jackie sir kandipa neenga lucky dhaaan ipdi friends kidaika,inum nalla pathivugala podunga jackie ,yenakum udava vendumnu iruku ana kasu panam kudukura alavuku periya ala inum valarala,vera yeduna help venumna kandipa panren.

  ReplyDelete
 82. மகிழ்வகத்தில், உங்கள் வாழ்வு மென் மேலும் மகிழ்ச்சி பெருக இறைவனின் ஆசிகள் உங்களுக்கு உண்டு. நெகிழவைத்த பதிவு.

  ReplyDelete
 83. Congrats Jackie.
  you should really proud to have such friends. Wishing for your success to clear the debts soon.

  ReplyDelete
 84. அன்புள்ள ஜாக்கி அண்ணா,

  புதிய இல்லத்தில் நீங்கள் அனைத்து விதமான வளமும், நலமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.

  இறைவனையும் அவ்வாறே வேண்டுகிறேன்...

  நன்றிகளுடன்

  தமிழ் உதயன்.

  ReplyDelete
 85. மிகுந்த மகிழ்ச்சி... மனம் நிறைந்த வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 86. வாழ்துக்கள் ஜாக்கி ஸார்...|:-)

  ReplyDelete
 87. வாழ்த்துகள் ஜாக்கி! :) :)

  எனக்கு வேலை போனப்ப, நேரா பதிவிலேயேதான் உதவி கேட்டேன். உடனே எத்தனை ஆதரவு, மெயில், போன் கால்-ன்னு வந்தது!!! :)

  ஆச்சரியம்தான்!! :)

  ==

  ReplyDelete
 88. Congrats on getting new home . First Home is really an achievement for everyone and you achieved it . God will give strength to you and your family

  ReplyDelete
 89. புது இல்லம் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா...

  ReplyDelete
 90. வாழ்த்துகள் ஜாக்கி :)

  ReplyDelete
 91. happy to hear.

  Already wished for a new house.

  Now you got already

  Wow Go ahead.

  ReplyDelete
 92. May this house will bring to more luck to you and family

  :)

  ReplyDelete
 93. ஜாக்கி அவர்களே ! நீங்கள் ஜாக்கியும் லாரியும் போல, காமிராவும் சினிமாவும் போல சகல வளங்களோடும் உங்கள் புதுமனையில் புதுவாழ்க்கை ஆரம்பியுங்கள்.

  அறிவுடைநம்பி

  ReplyDelete
 94. உங்களுக்கு உதவிய நண்பர்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 95. மகிழ்ச்சி!வாழ்த்துக்கள்!!
  அழைப்பிற்கு நன்றி

  ReplyDelete
 96. மகிழ்ச்சி!வாழ்த்துக்கள்!!
  அழைப்பிற்கு நன்றி

  ReplyDelete
 97. மகிழ்ச்சி!வாழ்த்துக்கள்!!
  அழைப்பிற்கு நன்றி

  ReplyDelete
 98. வாழ்த்துக்கள் , வாழ்க வளமுடன்..

  ReplyDelete
 99. வாழ்த்துக்கள் ஜாக்கி சேகர். வீட்டை கட்டுவது (வாங்குவது) என்பது நடுத்தர குடும்பத்தினருக்கு மிகப்பெரிய விஷயம் தான்.

  இதன் பிறகு உங்களுக்கு மேலும் சந்தோசம் கிடைக்க என் அன்பான வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 100. வாழ்த்துக்கள் ஜாக்கி..!

  ReplyDelete
 101. மிக்க மகிழ்சி. வாழ்த்துக்கள். சென்னை வரும்போது அவசியம் வருகிறேன்.

  கடவுள் துணை.

  வாழ்க வளமுடன்.

  அன்புடன்

  மங்களூர் சிவா

  ReplyDelete
 102. லேட் பட் லேட்டஸ்ட். ஊருக்கு போயிருந்ததால் இரண்டு வாரமா பதிவுலகம் பக்கம் வரவில்லை. வாழ்த்துக்கள் ஜாக்கி...

  ReplyDelete
 103. Best wishes Jackie...I missed the function...will meet soon..

  ReplyDelete
 104. Best wishes Jackie...I missed the function...will meet soon..

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner