தமிழ்நாடு புதிய சட்டபேரவை ஒரு பார்வை....

புதுமனை புகுவிழாவுக்கு சில ஏற்பாடுகளை செல்ல சென்னை அண்ணாசாலை செல்ல நேர்ந்தது... அப்படியே புதிய தலைமை செயலகத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது....(இதுசிலமணி நேரத்துக்கு முன்ன எடுத்து )

நாளை திறக்க இருக்கும் தமிழ்நாடு புதிய தலைமை செயலகத்தை திறக்க இருப்பதால் இரவு பகலாகவே வேலைகள் நடந்து வருகின்றன...போர்கால அடிப்படையில் வேலைகள் விரைந்து நடப்பதை என் ஆயுலில் இன்றுதான் பார்க்கின்றேன்...

பல்லாயிரக்கணக்கான வட இந்திய முகங்கள் இரவு பகல் பற்றி கவலைபடாமல் இந்த பணியில் ஈடுபட்டு இருப்பதை அந்த பக்கம் கடக்கும் யாவருக்கும் தெரியும்...

முதலில் புதிய சட்டசபை கட்ட ஜெ அரசு சென்னை இராணி மேரி கல்லூரியி்ன் இடத்தை கை வைக்க முயல பலதரப்பட்ட பழங்கால மாணவிகள் மற்றம் எதிர்ப்பு காரணமாக அந்த திட்டம் கைவிடபட்டது... அப்போது ஸ்டாலின் உள்ளே சென்று போராடும் மாணவிகளுக்கு ஆதரவு தெரிவிக்க... அவரின் மீது கேஸ் கூட பைல் செய்யபட்டது என்பது வரலாறு.....
அதன் பிறகு புதிய சட்டசபை வளாகம் அனாதை குழந்தை போல இடம் இல்லாமல் அலைய, மகாபலிபுரம் பக்கம் புதிய தலைமைசெயலகம் கட்ட முடிவு எடுக்கபட்டதாக சொல்ல அவ்வளவுதான் ரியல் எஸ்டேட்காரர்கள் கொழுத்த விலை வைத்து கிழக்கு கடற்கரைசாலை மனைகளை விற்க்க ஆரம்பித்தார்கள்...அதன் பிறகு அந்த திட்டம் கைவிட பட்டது....

கலைஞர் தலைமையில் ஆட்சி அமைந்ததும் மக்களுக்கு அரும்பணி ஆற்ற அந்த இடம் போதாமல் தமிழக அரசு தவிக்க, திரும்பவும்புதிய தலைமை செயலகம் கட்டம் கட்ட அடி போடபட்டது...இந்த முறை சென்னையின் இதயமான அண்ணாசாலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் சட்டசபை அமைத்து மைக் சேரை வைத்து அடித்துகொள்ள இடம் கிடைத்தது....(நம்ம கிளிக்)

இந்த புதிய கட்டிடம் கட்ட அங்கு எற்க்கனவே இயங்கி வந்த பழமை வாய்ந்த சிபிஐ கட்டிடம்... இடித்து இந்த கட்டிடம் கட்டபட்டது..

முதலில் 425 கோடிக்கு திட்ட மதிப்பு போடபட்டு அப்புறம் கல் ,கம்பி, சிமென்ட் விலையேற்றத்தின் காரணமாக எக்ஸ்ட்ரா 25 கோடி கொடுத்து ரவுண்டா 450 கோடிக்கு தொகை செலவிட உத்தேசித்து 12/11/2008 அன்று அடிக்கல் நாட்டபட்டது.... அப்போதே தலைவர் கலைஞர் 2010மற்றும்2011 ஆம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்ய போவதாக சொன்னார்....ஏவிஎம் படநிறுவனம் அறிவிப்பது போல் புதிய தலைமை செயலகத்தின் ரிலீ்ஸ் தேதியை அப்போதே அறிவித்து பணிகள் தூரித கதியில் இயங்க ஆரம்பித்தன.....
(நம்ம கிளிக்)

ஒரு சில விபத்துக்களும் ஏற்பட முதல்வர் காயம் பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்...சென்னை சங்கமத்தின் போது வேலை செய்த வடநாட்டு தொழிலாளர்களை மகிழ்வூட்டும் விதமாக... சென்னை சங்கம நிகழ்ச்சி நடத்தி காட்டப்பட்டு தமிழர்களின் பாரம்பரிய கலைகளை வடநாட்டு தொழிலாளர்கள் வாயில்பான்பராக் ஹான்ஸ் போட்டு குதப்பிய வாயுடன் ரசித்தார்கள்......

சட்டசபை கோபுரம் வேலைகள் இன்னும் பாக்கி இருக்க, திறப்பு விழா தேதிகள் முடிவு செய்யபட்டு விட்ட படியால் இரண்டு கோடிக்கு செட் போட்டு மொட்டையாக இல்லாமல் செட் போட்டு அழகு படுத்தியிருந்தார்கள்...செட்போட்டதையும் அதற்க்கு 2 கோடிக்கு செய்த செலவையும் ஞானி இந்தவார குமுதத்தில் குட்டி கண்டித்து இருக்கின்றார்..... அந்த கோபுரம் 100 அடி உயரம் கொண்டது...


இரண்டாம் மாடியிர் பாபிலோனின் தொங்கு தோட்டம் போல் அமைக்க போகின்றார்களாம்.. பச்சை பசேல் என செடி கொடிகள் வைக்க போகின்றார்கள்... பச்சையை பார்த்தாலாவது கோபம் குறைந்து மைக் பிடுங்குவது குறையும் என்பதாலோ என்னவோ???? இது 6 தளங்களை கொண்டது.. இது 9லட்சத்து 31 ஆயிரம் சதுரஅடி பரப்பளவு கொண்டது....எனக்கு கொளப்பாகக்த்தில் 1000 சதுர அடி வாங்வதற்க்குள் நாக்கு தள்ளிவிட்டது... தலைமை செயலக இடத்தின் கிரவுண்ட் வேல்யூ மதி்ப்பை கணக்கு போட்டால் தலைசுற்றுகின்றது...(நம்ம கிளிக்)
எது எப்படி இருந்தாலும் ஜார்ஜ் கோட்டை கட்டியதை நான் பார்க்கவில்லை...இந்த தலைமை செயலகம் கட்டியதை நேரில் பார்க்கும் வாய்ப்புஎல்லோருக்கும் கிடைத்து இருக்கின்றது...கட்டிடம் கட்டுமான வேலையை போட்டோ எடுத்ததும் மறக்கமுடியாதவை...ஒரு சாண்ட்வெஜ் நான் வெஜ் பதிவில் இரவு நேர கட்டிட வேலையை போட்டோ எடுத்து போட்டு இருக்கின்றேன்...

தலைமை செயலகம் சுத்தி ஒரே தூசியாக இருக்கின்றது... செலவோடு செலவாக மரத்தின் இலைகளின் மேல் அப்பி இருக்கும் துசியை சினிமா செயற்க்கை மழை பெய்யவித்து அலம்பி விட்டாலே ஒரு அழகிய லுக் கிடைக்கும்...
(நம்ம கிளிக்)

பிரதமர், சோனியா வருகை என்பதால் எங்கு பார்த்தாலும் போலிஸ் தலைகளாக இருக்கின்றன... 4 அடுக்கு பாதுகாப்பு போடபட்டுள்ளது... வளாகத்தை என் வாகனத்தில் சுற்றி வந்தேன்... ஒரே இரு சக்கர வாகனமயம்.

எல்லாம் பாதுகாப்புக்கு வந்த போலிஸ்காரர்கள் வந்த வாகனங்கள்... எல்லா வாகனமும் விதம்விதமாக இருந்தது... அவரவர் வருமாணத்துக்கு ஏற்றபடி வெரைட்டியாக வாகனத்தை வாங்கி நிறுத்தி இருந்தார்கள்... எல்லா வாகனத்திலும் போலிஸ் என்று மறக்காமல் எழுதிவைத்து இருந்தார்கள்.....சித்தப்பா பையன் வாகனத்தை எடுத்துக்கொண்டு எவர் மீதாவது மோதினால் காப்பற்றுவதற்க்காக என்று நினைக்கின்றேன்...
(நம்ம கிளிக்)
சபாரியில் பல மப்டி போலிஸ்காரர்களை பார்த்தேன்... எல்லோரும் நீட்டாக ஷேவ் செய்து இருந்தார்கள்...தான் கருப்பு என்று தெரிந்தும் அடிக்கும் கலரில் சபாரி உடை அணிந்து மிரட்டிக்கொண்டு இருந்தார்கள்...கொஞ்சம் லைட் கலர் எடுத்து இருக்கலாம்...

தலைமை செயலகம் அருகில் இருக்கும் சிம்சன் பேருந்து நிறுத்த சுரங்க நடைபாதையை ஹைடெக்காக மாற்றி கொண்டு இருந்தார்கள்...

சென்னை தொலைகாட்சி நிலையம் இருக்கும் சுவாமி சிவானந்தா சாலைக்கு இப்படி ஒரு வாழ்வு வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை... அண்ணா சாலையில் இருந்து வலபக்கம் திரும்பினாலே...ஹோமோ, திருநங்கை, போன்றவர்களும் அழைப்புகளை இனி பார்க்க முடியாது... கோகுல் பவுடர் அதிகம் அப்பிய முகத்துடன் சினுங்கி அழைத்து பக்கத்து முள்புதர் ஓரம் அழைத்து சென்று வயிற்றை கழுபவர்கள் வாழ்க்கையில் மண் விழுந்து விட்டது.... தொழில் நிமித்தமாக பாம்பே போய் இரண்டு ஆண்டு கழித்து அந்த இடம் வரும் திருநங்கை நிச்சயம் அந்த இடத்தை பார்த்து விட்டு மயக்கம் போட்டு விழுந்து விடுவார்...

(நம்ம கிளிக்)

வட்டம், மாவட்டம்,ஒன்றியம் போன்றவைகள், அமைச்சரின் அடிபொடிகள், குவாட்டர் அல்லது ஆப் அடித்து விட்டு, பக்கத்து ஹோட்டல் நான்வெஜ்கடையில் வயிறு முட்ட தின்று விட்டு ,தேவி தியேட்டரில் படம் பார்க்க டிக்கெட் வாங்கிவிட்டு போதையில் வேட்டி நழுவ குறட்டை விட்டு அந்த சத்தம் காதை பிளக்க தூங்கும் நிகழ்ச்சியும்... படம் ஓடும் போதே டிடிஎஸ் சவுண்டையும் மீறி வாந்தி எடுக்கும் சத்தத்தையும் இனி தேவி தியேட்டர் வளாகத்தில் அடிக்கடி கேட்கலாம்... எதற்கும் தேவி தியேட்டர் நிர்வாகம் இரண்டு ஹவுஸ் கீப்பிங் ஸ்டாப்புகளையும், இரண்டு பவுண்சர்களையும் இப்போதே நியமித்துக்கொள்வது நல்லது என்பேன்...

(நம்ம கிளிக்)
அண்ணாசாலையில் பணி புரியும் மக்களுக்கு இனி ஆப்புதான்...பழைய படியே கடற்க்கரை சாலையை பயண்படுத்தினால் எந்த பிரச்சனையும் இல்லை.. முதல்வரோ அல்லது துணை முதல்வரோ சட்டென மூட் மாறி வண்டியை, அண்ணாசாலை பக்கம் திருப்ப சொன்னால்... அன்னைக்கு அண்ணாசாலை பயணிக்கு அரோகராதான்...

அண்ணாசாலையில் சிகப்பு விளக்கு சுற்றிக்கொண்டு பல கார்கள் பவணி வர வாய்ப்பு இருக்கின்றது.... என்ன வாசப்படியை சிவானந்தா ரோட்டில் வைத்து இருப்பதால் தப்பித்தோம்....வடக்கு பார்த்த வாயிலை புதிய தலைமை செயலகம் வாஸ்து படி பெற்று இருக்கின்றது என்று நினைக்கின்றேன்...

காப்ரேட் கம்பெனி போல் சட்டசபை லுக் இருப்பது மகிழ்ச்சியே... அதேபோல் ஓமந்தூரார் மளிகையில் ஒரு கீறல் கூட படவில்லை.. அது என்ன என்று கேட்கின்றீர்களா? எல்லா தமிழ் படத்திலும் நிறைய படிகட்டுகளுடன் ஒரு கோர்ட்டை காண்பிப்பார்களே... அதே தான்... எப்படியும் அந்த படிக்கட்டில் யாராவது உளுவது போல் எதாவது ஒரு காட்சியாவது எடுத்து இருப்பார்கள்...

நாளை மாலை விழா திறப்பு விழா நடக்க இருக்கின்றது...தலைமை செயலர் நேரில் பத்தி்ரிக்கை கொடுத்தும் எதிர்கட்சிதலைவர் ஜெ நேரில் வருவாரா? வந்தால் அது பெரிய விஷயம்....அந்த அரசியல் உள் குத்து என்ன என்பதும், அறிக்கை போரும் சாமி சத்தியமாக எனக்கு தெரியாது...

(நம்ம கிளிக்)

எது எப்படி இருந்தாலும் முதல்வர் கலைஞர் வாழ்க்கையில் நாளை மறக்கமுடியாத நாள்தான்... இனி வரும் அரசியல் தலைமுறை அவர் திறந்து வைத்த சட்டசபையில்தான் அரசியல் நடத்தும்...

குறிப்பு ..
இன்னும் கொஞ்சம் போட்டோ எடுத்து போட்டு இருப்பேன்... ஓ நீதான் பாம் வைக்க வந்தவனான்னு சொல்லி ஸ்டேசன்ல உட்கார வச்சிட்டா???


அன்புடன்
ஜாக்கிசேகர்

(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....

24 comments:

  1. கலைஞர்க்கு பத்திரிக்க குடுக்க வந்தேன் என்று சொல்லுங்க விட்ருவாங்க :)

    ReplyDelete
  2. //இனி வரும் அரசியல் தலைமுறை அவர் திறந்து வைத்த சட்டசபையில்தான் அரசியல் நடத்தும்//
    நமது அரசியல்வாதிகள் மீது அவ்வளவு நம்பிக்கையா?
    ஆட்சி மாறினால், அம்மா அவங்களுக்காக ஒன்னு கட்டிகட்டா போச்சு!

    ReplyDelete
  3. //இனி வரும் அரசியல் தலைமுறை அவர் திறந்து வைத்த சட்டசபையில்தான் அரசியல் நடத்தும்//
    நமது அரசியல்வாதிகள் மீது அவ்வளவு நம்பிக்கையா?
    ஆட்சி மாறினால், அம்மா அவங்களுக்காக ஒன்னு கட்டிகட்டா போச்சு!

    ReplyDelete
  4. March 13 2006, CM took the charge, now march13 2010 is good for his new office (Sani horai peyarchi march13).

    ReplyDelete
  5. கலைஞர் "தலை"மையில் ஆட்சி அமைந்ததும் மக்களுக்கு அரும்பணி ஆற்ற அந்த இடம் போதாமல்

    //////



    சட்டசபை கோபுரம் வேலைகள் இன்னும் பாக்கி இருக்க, திறப்பு விழா தேதிகள் முடிவு செய்யபட்டு விட்ட படியால் இரண்டு கோடிக்கு செட் போட்டு "மொட்டை"யாக இல்லாமல் செட் போட்டு அழகு படுத்தியிருந்தார்கள்...

    /////

    :-)

    ReplyDelete
  6. கோட்டைய நான் புடிக்கப் போறேன்னு இனிமேல் யாரும் சொல்ல மாட்டார்கள்.உங்கள் பதிவு நன்றாக உள்ளது.புகைப்படங்களில் சிறப்பான ஒளிப்பதிவு.-தி.தமிழ் இளங்கோ

    ReplyDelete
  7. //காப்ரேட் கம்பெனி போல் சட்டசபை லுக் இருப்பது மகிழ்ச்சியே//

    நல்லா இருக்குது... இருந்தாலும் நம்ம ஊரு பாரம்பரியம் இருக்கும்வாறு வடிவமைத்திருக்கலாம்.

    ReplyDelete
  8. பொதுவாக அரசியல்வாதிகள் கூடும் இடங்களான சட்டசபை, நாடாளுமன்றம் போன்றவற்றை அரண்மனை மாதிரி கட்டுவார்கள். அதிகாரம் இருக்கும் இடம் என்று நினைத்துக்கொள்ளலாம்.

    இது நீங்கள் சொல்வது மாதிரி கார்பரேட் நிறுவனம் போல் உள்ளது. எல்லாம் வணிகம் தான் என்று சொல்கிறார்கள் போல!

    ReplyDelete
  9. சட்டசபை கட்டுவதில் காட்டிய அக்கறை போல தமிழ்நாட்டின் முக்கிய துறைகளிலும் காட்டினால்,நாடு எங்கேயோ போய்விடும்.

    ReplyDelete
  10. ஏன் இவ்வளவு நெருக்கடியான சாலையில் அமைக்கிறார்கள்..ஊருக்கு கொஞ்சம் ஒதுக்குபுறமாக அமைத்தால் விசாலமாக ஒரு அரண்மனை போல் அமைத்திருக்கலாம்..

    ம்ம்ம்ம்ம்ம்ம்...எப்படி கட்டினால் என்ன..ஜெ ஆட்சிக்கு வந்தால் புதிய கட்டிடத்துக்கு என்ன நிலை என யாருக்கு தெரியும் :)

    ReplyDelete
  11. //எதற்கும் தேவி தியேட்டர் நிர்வாகம் இரண்டு ஹவுஸ் கீப்பிங் ஸ்டாப்புகளையும், இரண்டு பவுண்சர்களையும் இப்போதே நியமித்துக்கொள்வது நல்லது என்பேன்...//

    ஜாக்கி, ஒனக்கு கொழுப்பு கொஞ்சம் இல்ல ரொம்பவே தான். அம்மா தாயே, ஒன் ஊட்டு காரருக்கு உப்பு இல்லாம பத்து நாளைக்கு கஞ்சி ஊத்தும்மா !

    ReplyDelete
  12. ரொம்ப நல்லா கவர் பண்ணியிருக்கீங்க..

    வாழ்த்துகள்

    ReplyDelete
  13. இப்ப இருக்கிற தலைமைச் செயலகத்தை என்ன செய்யப் போகிறார்களாம்?

    ReplyDelete
  14. There is lots of thing not highlighted by the blogger's.

    you are missing the good breeze between the green trees in the shivanantha salai (TV station Road).

    It will always trouble to the Triplicane mansion stayers. already started & to the shops.

    1. Puthupet old spare part shop already closed and few left.
    2. Richie street will be the next target.
    3. Simpson company will be closed soon from the place.
    4. trains will be stopped (due to high risk)

    Roads will be blocked every alakai and nolakai visit & thalaivar visit & budget days.

    babyan tree and other trees in the place and the surrounding were killed. the roads are widen now and the place becomes a very huge concrete arasial tree.

    It will be useful for the muthalver & thunai muthalvar to reach the place with in 10 mins time. it is max 4 - 5 KM from the place.

    if they want to help the people then they would of chosen the North Madras so that it will be developed the place and surrounding.

    if you ever watched the koovam during the raindays from the bridge nearer to the new secrateriate you would defently doesnt like the building.

    maram vetuvom arasial valarpom

    I have lots to right but nothing going to change.

    let give it to Iyarkai Pilayar

    ReplyDelete
  15. அந்த கடைசி குறிப்பு...........ஹா...........ஹா......

    ReplyDelete
  16. நம்ம க்ளிக் .. (ஓட்டு போட்டேனுங்க)

    ReplyDelete
  17. //ஒரு சில விபத்துக்களும் ஏற்பட //

    அன்ணே ஒரே ஒருமுறைதான் விபத்து நிகழ்ந்தது.

    ReplyDelete
  18. இந்த முறை சென்னையின் இதயமான அண்ணாசாலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் சட்டசபை அமைத்து மைக் சேரை வைத்து அடித்துகொள்ள இடம் கிடைத்தது..

    ReplyDelete
  19. மக்கா நானும் ஒரு ஒட்டு போட்டுட்டேன்..உங்க க்ளிக்குக்கா

    ReplyDelete
  20. சரி, இதை முடிச்சிட்டு தான் கிரஹப்பிரவேசத்திற்கு வரணும்.

    ReplyDelete
  21. Amazing COVER UP.......pictures are also amazing.

    All the best for your new home. I pray god to give more peace and happiness to your family.

    Its pleasure to talk with you on that day. I think that is the first call in this India visit.

    I wondered the way you remembered me...(you are the gentleman used to write comments mostly in English)I thought I have to explain lot about my identity. Also I wondered when you remembered about my request to write about Bhopal Accident.

    Thanks and Happy for your House Warming Ceremony invitation. As I said I was in my village by that time.

    Coming to your article திருவண்ணாமலை,சாத்தனூர்டேம்,புதர்காமம்...though I belongs to that area, I have to accept each and every line. That to the thing happening in Dam is too much. Now a days family peoples are hesitating to visit that picnic spot. If you visited that dam 10 - 15 years ago..this dam was maintained as good as Mysore Brindavan Garden. Lot of the tamil film songs in those days are taken in this dam only.

    Don't know when the local government will open their eyes. Till that time that dam will be free lodge. That to for two engineering college and two arts college students in Thiruvannamalai

    ReplyDelete
  22. கவர் ஸ்டோரி சூப்பர் அண்ணே..
    பேசமா நீங்க நக்கீரன்ல சேர்ந்துடுங்க...
    :-)

    ReplyDelete
  23. அண்ணா நல்லா இருக்கு வாழ்த்துக்கள்//////// இயக்குனருக்கான தகுதிகள சொல்லுங்க விரிவா.....

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner