திருவண்ணாமலை,சாத்தனூர்டேம்,புதர்காமம்...


நித்யானந்தா சுவாமிகள்... தன்னை வெளிபடுத்திக்கொண்ட இடமான திருவண்ணாமலைக்கு ஒரு நண்பியின் திருமணத்துக்கு போய்வந்தேன்... அதையும் அப்போதே பதிவிட்டேன்... ஆனால் பல விஷயங்கள் விரிவாய் எழுதவில்லை என்பதே உண்மை...

திருவண்ணாமலைக்கு நான், என் மனைவி, மச்சான் என்று மூன்று பேர் மட்டும் சென்று இருந்தோம்... முதலில் பைக்கில் செல்வதாக இருந்தது.. ஆனால் அதீத பனி காரணமாக அந்த திட்டம் கைவிடபட்டு,பேருந்தில் செல்வதாக முடிவானது...என் மச்சான் பெங்களூரில் இருந்து வந்து சேர்ந்துக்கொண்டான்...

ஒரு காலத்தில் பெரிய பேருந்து வசதிகள் எல்லாம் அப்போது திருவண்ணாமலைக்கு கிடையாது... முதலில் இளையராஜா திருவண்ணாமலை கிரிவல பாதையை பற்றி வெளியே சொல்ல அப்புறம் நடிகர் ரஜினி அந்த பாதைக்கு விளக்கு எல்லாம் போட்டு கொடுக்க.... அப்புறம் எழுத்தாளர் பாலகுமாரன் விசிறி சாமியார் பற்றி சொல்ல.. எப்போதும் விசிறி பற்றி எழுத.. திருவண்ணாமலை என்ற அந்த ஊர் கொஞ்சம் கொஞ்சமாக லைம் லைட்டுக்கு வந்தது....

அண்ணாமலை தீபமும், ரமணமகரிஷியும் எற்க்கனவே பேர் பெற்று இருந்தாலும்...20 வருடங்களில் ரஜினி, இளையராஜா,பாலகுமாரன் போன்றவர்கள்... திருவண்ணாமலைக்கு கொடுத்த முக்கியத்துவமே இவ்வளவு அதீத புகழுக்கு காரணம் என்பேன்...


அதன் பிறகு கிரிவலபாதை மக்கள் மத்தியில் பேச்சாக இது காட்டு தீ போல பரவ.... திருமணம் செய்ய, நல்ல மணமகன் கிடைக்க, நல்ல மணமகள் கிடைக்க,குழந்தையின்மை, கடன்தொல்லை, பிசினஸ் லாஸ்,அது இது என மன அமைதி தேடி திண்டாடிய மக்கள் திருவண்ணாமலை கிரிவலபாதை நோக்கி படை எடுக்க ஆரம்பித்தார்கள்...அதன் விளைவு... திருவண்ணாமலை பெமஸ் ஆக ஆரம்பித்தது...... இந்த பெருமை எல்லாம் பத்தாது என்று இயக்குனர் பேரரசு இயக்கத்தில் அர்ஜுன் நடிக்க... திருவண்ணாமலை என்ற படம் வெளிவந்த பிறகு அந்த ஊருக்கு இன்னும் செம ரெஸ்பான்ஸ்......


கிண்டியில் எனது சொந்த ஊர் கடலூருக்கு போக பேருந்துக்காக காத்து இருக்கும் போது... பாண்டி, கடலூர் பேருந்துக்காக தவம் கிடப்பேன்.. ஆனால் 5 நிமிடத்துக்கு ஒரு பேருந்து திருவண்ணாமலைக்கு போய் கொண்டே இருக்கும்...வயிறு எல்லாம் எரியும்... அப்படி என்ன அங்க இருக்குன்னு இத்தனை பஸ் போகுன்னு தெரியலை என்று நினைத்துக்கொள்வேன்...

அதன் பிறகு கோவில் பக்கத்தில் மலையில் இருக்கும் சாமியார்களை பற்றி டாக்குமென்ட்ரி எடுக்க போய் கேமரா ஸ்டேன்டை தூக்கி கொண்டு வாயில் நுரை தள்ள, ஏறி திருவண்ணாமலை கோவில் கோபுரத்தை இரண்டு ஷாட் எடுக்க மலை மீது ஏறியதை என் வாழ்வில் எப்போதும் மறக்க முடியாது...

என் நண்பர்கள் பலமுறை அழைத்தும் திருவண்ணாமலை கிரிவலத்துக்கு நான் சென்றது இல்லை...


கிரிவலம் போய் என்ன செய்விங்க---??
மலையை சுத்துவோம்...
அப்ப சாமி பாக்க மாட்டிங்களா?
இல்லை பயங்கர கூட்டம் அப்ப போய் சாமி எல்லாம் பாக்க முடியாது....

மலையை சுத்தி 16 கிலோமீட்டர் நடப்போம்....

மலையை சுத்தி நடக்கத்தான் இவ்வளவு கூட்டமா?

ஆமாம்...

அதனாலோ என்னவோ நான் இதுவரை கிரிவலம் போனதில்லை....இருப்பினும் அண்ணாமலையானை தரிசிக்க உள்ளே சென்றோம்.... அந்த கோவிலின் முழுக்க முழுக்க எங்கள் ஊர் திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோவில் போலவே அதன் கட்டட அமைப்பு இருந்தது... ஒரு வேளை சிவன் கோவில் எல்லாம் அதே போல்தான் இருக்கும் போல.....நிறைய வெளிநாட்டவர்.... ரொம்பவும் பக்தி சிரத்தையாக சாமிகும்பிட்டனர்...யானையிடம் காசு கொடுத்து ஆசிர்வாதம் வாங்கினார்கள்...ஒரு வெளிநாட்டு பெண் ....குடுமி வைத்துக்கொண்டு நாக்கில், புருவத்தில் கடுக்கன் மற்றும் வளையம் மாட்டியபடி வளைய வந்தாள்.... வேற எங்க எல்லாம் வளையம் போட்டு இருக்கின்றாள் என்று அறிய.... இந்த ஜாக்கியோட மனசு துடித்தாலும்... வலப்புறம் மனைவி சாமி கூம்பிடுவதை பார்த்ததும் ஆர்வம் திடும் என வடிந்து போனது...எனக்கு ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது...ஒரு மலையை சுற்றி நடக்க இவ்வளவு கூட்டமா? இவ்வளவு நம்பிக்கையா? திருமணம் முடிந்ததும் வெளியே வந்ததும் ஒரு ஆட்டோ பிடித்தோம்.... பேருந்து நிலையம் செல்ல அல்ல... கிரிவலபாதையை பார்பதற்க்கு... ஆட்டோகாரரிடம் 150க்கு பேசி, ஏறி உட்கார்ந்து கொண்டோம்.... ஆட்டோ மலையை சுற்றி ஓடத்துவங்கியது.... அந்த மலையை சுற்றி செல்லும் சாலையில் ஏகபட்ட துறவிகளும் சாதுக்களும் இளைப்பாறிக்கொண்டும்.... நடந்துக்கொண்டும் இருந்தார்கள்... ரோட்டைசுற்றி நிறைய கோவில்கள்... எல்லாம் சடுதியில் தோன்றியது போல் என் மனதுக்கு பட்டது..

ஏக்கர் கணக்கில் இருக்கும் நம்ம நித்யா ஆசிர்மத்தை சுட்டி காட்டியபடி வண்டியை ஓட்டிக்கொண்டு இருந்தார் ஆட்டோ டிரைவர்...எனக்கு அதில் எல்லாம் கவணம் இல்லாமல் மலையை கவனித்துகொண்டு வந்தேன்.. அப்படியே இரவில் நடப்பதாக கற்பனை செய்தேன்... நிறைய கூட்டத்தோடு நடக்கும் போது 20 கிலோ மீட்டர் நடைபயணம் சாத்தியம் என்று பட்டது.... வீட்டில் கீரைகட்டு எடுத்து தனியாக சுத்தம் செய்ய ஆரம்பித்தால் போர் அடித்து விடும்... இதுவே 3 பேர் உட்கார்ந்து பேசிக்கொண்டே கீரை ஆய ஆரம்பித்தால் சீக்கரமாக கீரையை சுத்தம் செய்து விடுவோம்... அது போலத்தான் இந்த நடைபயணமும் என்று மனதுக்கு பட்டது... ஒரு வேளை அந்த அதிர்வு வைபரேஷன் என்று எல்லாம் சொல்லுகின்றார்களே அது இருந்தாலும் இருக்கலாம்.... ஒரு நாள் ஒரு பவுர்ணமிக்கு வர வேண்டும்... மக்களோடு மக்களாக கலந்து நடந்து அதை பற்றி வேறு ஒரு பதிவில் எழுதுவோம்....
=========================================
சாத்தனூர் டேம்....

பேருந்து நிலையம் சென்று நேரம் இருந்த காரணத்தால்... சாத்தனூர் டேம் செல்ல தீர்மானித்தோம்....பனல் ஒரு மணிக்கு ஒரு தனியார் பேருந்தில் எறி உட்கார்ந்து குண்டும் குழியுமான ரோட்டில் பயணித்து சாத்தனூர் வந்த போதே... கொளுத்தும் வெயிலில் தலைகாய்ந்து ஷாலை தலையில் போர்த்தியபடி வட்டர் பாட்டில் சகிதம் வந்து கொண்டு இருந்தது...

அந்த பெண் ரொம்ப களைப்பாக காணப்பட்டாள்... அவனும்தான்...கொஞ்ச நேரத்தில் களைப்பையும் மீறி ஓடி பி்டித்து விளையாடினார்கள்... எனக்கு ஒன்று மட்டும் புரிந்து போனது... சென்னைக்கு ஒரு மகாபலிபுரம்... திருவண்ணாமலைக்கு ஒரு சாத்தனூர்....

நல்ல பசி தமிழ்நாடு ஓட்டல் என்று ஒன்று பக்கத்தில் இருக்க அதன் பக்கத்திலேயே டாஸ்மார்க்... எல்லா குடி மகன்களும் அங்குதான் தாகம் போக்கி பசி போக்கி கொண்டு இருந்தார்கள்... ஓட்டலை ஒரு மலையாள பெண்மணி நிர்வாகித்து கொண்டு இருந்தார்... அவரை விட அவர் பெண் அழகாக கொஞ்சம் பூசினால் போல நிர்வாகம் செய்கின்றார்... என்ன எந்த பொருளையும் வாயில் வைக்க முடியவில்லை.. என் மனைவியும் என் மச்சானும் ரொம்ப சிரம பட்டார்கள்...

சாத்தனூர் டேம் போனோம்... அப்படியே மைசூர் பிருந்தாவன கார்டனை போல வடிவமைத்து இருந்தார்கள்... இப்போதுதான்... நான் முதன் முதலாக சாத்தனூர் டேமை பார்த்தேன்... எதையும் பராமரிக்காமல் வைத்து இருந்தார்கள்... அனையில் முதலைகள் வெயிலில் சன் பாத் எடுத்துக்கொண்டு இருந்தன... ஆற்றில் முதலைகள் இருப்பதால் இறங்க வேண்டாம் என்று பொதுமக்களை எச்சரித்துக்கேட்டுக்கொண்டது அணை நிர்வாகம்... ஆனாலும் ஆற்றில் குடும்பம் குடும்பமாக இறங்கி குளித்துக்கொண்டு இருந்தனர்... ஏதாவது நடந்தால் சன் நீயூஸ் மைக் முன்னாடி அரசாங்கம் ஆத்தை சுத்தி வேலி போட்டு பொது மக்களை காக்க வேண்டும் என்று வீரமாக பேசுவார்கள்...

அணையில் இருக்கும் தண்ணீரை சொட்டு நீர் பாசனம் போல் வைத்து இருந்தால் கூட, பூங்காக்களை அழகாக பராமிரித்து இருக்கலாம்... எல்லாம் காய்ந்து போய் கிடக்கின்றன... மனசு ஒட்டவில்லை

டேம் முழுவதும் பிஞ்சில் பழுத்த காதலர்கள் புற்றிசல் போல சுற்றி திரிந்து கொண்டு இருந்தார்கள்....முதலை பண்ணை பக்கம் போனால் ஒவ்வொறு புதரிலிருந்தும் தலை கலைந்து களைப்பாக எழுந்து செல்லும் ஜோடிகளை பார்க்கும் போது என்ன சொல்வது...

நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள்... எந்த பெண்ணுக்கும் மார்பகமே வளராத சிறுமிகள்... மொட்டுக்கள்... எல்லாம் கிராமத்து பெண்கள்....எல்லாம் காம சூட்டோடு அலைவதை பார்க்கும் போது மனது வருத்தம் கொண்டது....சென்னை பெண்கள்தான் பிச்சிலேயே பழுத்தவர்கள் என்று ஒரு சாரர் இன்னமும் நினைத்துக்கொண்டு இருக்கலாம்... அப்படி இதுநாள்வரையில் நினைத்து இருந்தால் அதை ரப்பர் போட்டு அழித்து விடுங்கள்...


பெண்களை கூட்டிக்கொண்டு சுற்றும் பசங்களை பார்க்கும் போது...எதையும் கல்யாணம் செய்து கொண்டு செட்டில் அகும் எண்ணம் இருப்து போல் தெரியவில்லை....எல்லோரிடமும் சத்தமாக பாடும் விதமாக சைனா மொபைல் வைத்த இருந்தார்கள்... சொல்லி வைத்தது போல் எல்லோரிடமும் இளையராஜாவின் நான் தேடும் செவ்வத்தி பூவிது இருந்தது.... அந்த பாடலை சத்தமாக செல்லில் கேட்டபடி அந்த கிராமத்து பெண்கள் தோள்களில் கை போட்டுக்கொண்டு அலைந்து கொண்டு இருந்தார்கள்....எதாவது ஒரு புதரில் அவன் சொல்லுவதை அந்த பெண் செய்யவில்லை என்றால்... அங்கேயே உணர்ச்சி வேகத்தில், காம போதையில் அவள் கழுத்தை அழுத்தி கொன்று போட்டால் நாலாவது நாளுக்கு பிறகு நாற்றம் எடுத்துதான் அந்த பெண் இறந்து போன விஷயம் வெளியே தெரிய வரும்...... இவ்வளவு அடர்த்தியான புதர்கள்.... இதை எல்லாம் பார்த்து வெறுத்து போய் அனை நிர்வாகம் பல புதர்களை அழித்து இருக்கின்றது...
முதலை பண்ணை போகும் வழியில் கொஞ்சம் இளைப்பாற பக்கத்தில் உள்ள பாறை மீது உட்கார்ந்தால்.... அந்த வழியில் சட்டென இரண்டு ஜோடிகள் புதரில் இருந்து வந்து தலை சரி செய்து கொண்டு நடப்பார்கள்..அதே போல் அந்த பெண் நடையில் எனக்கும் லவ்வர் இருக்கின்றான் என்று எங்களுக்கு காட்டும் அலட்சியம் இருந்தது...

அணையில் நீர் குறைவாக இருந்தது... காதலர்கள் அதிகமாக இருந்தார்கள்..

அணையின் டாப் அங்கிளில் இருந்து பார்த்து ரசித்தோம்... அப்போது ஒரு வெள்ளை சுடிதார் போட்ட பெண்ணின் மடியில் படுத்துக்கொண்டு சைனாமொபைலில் சேது படத்தில்...விக்கரமிடம் அந்த பெண் காதலை சொல்ல நினைச்சு நினைச்சு தவிச்சு தவிச்சுன்னு ஒரு பாடல் வரும் அந்த பாடலை போட்டு விட்டு..... அந்த பெண்ணிடம்...

நைட்டு எல்லாம் தூக்கம் வரலை..
ஓரே பீலிங்ஸ்..
நீ நல்லா தூங்கினியா???
அந்த பெண் இல்லை என்று சொல்லிவிட்டு அவனை மார்போடு இன்னும் அனைத்துகொள்கின்றது....நிறைய பேர் வந்து நடந்து போகின்றார்களே... என்று எந்த கூச்சமும் இல்லை....
எனக்கும்தான் தூக்கம் வரலை...
நீ என்ன பாட்டு கேட்ட?
ராசவே உன்னை விட மாட்டேன்.... என்று சொல்லி விட்டு இன்னும் மார்போடு இருக்கும் போது....
அவர்கள் தைரியத்தை மெச்சுவதை தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை...


அன்புடன்
ஜாக்கிசேகர்

(ஏன்டா மக்கா.. இவ்வளவு தூரம் சுவாரஸ்யமா படிச்சிங்களே.... ஒரு ஒட்டு போட்டா என்ன? கொறைஞ்சா போயிடுவிங்க....

28 comments:

 1. //ஒரு வேளை சிவன் கோவில் எல்லாம் அதே போல்தான் இருக்கும் போல.....//

  naan pona sivan kovil ellame ore mathiriyaai irunthathaai naan eppothum ninaitthukkolven, anaal athu unmai pola irukku :)

  //அணையில் நீர் குறைவாக இருந்தது... காதலர்கள் அதிகமாக இருந்தார்கள்..//

  athaana parthen jackie label comment innum varalayennu...

  //அவர்கள் தைரியத்தை மெச்சுவதை தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை...//

  hmmm oorla nandu sindulaam kaathal pannuthu nu naangale kadupula irukom neenga vena anne.... ana ellorum rompa thairiyamaathaanirukaanga, namakku road la oru ponnu nadanthu pona niminthu paakave koochama iruku :(

  ReplyDelete
 2. //இந்த பெருமை எல்லாம் பத்தாது என்று இயக்குனர் பேரரசு இயக்கத்தில் அர்ஜுன் நடிக்க... திருவண்ணாமலை என்ற படம் வெளிவந்த பிறகு அந்த ஊருக்கு இன்னும் செம ரெஸ்பான்ஸ்......//

  கொடுமை :( இப்படியெல்லாம் பெருமை வரனுமா அந்த ஊருக்கு!

  ReplyDelete
 3. அது தைரியம் இல்ல அவமானம் என்று தெரிய இன்னும் ஒரு தலைமுறைபிடிக்கும்... ஒரு காலத்தில் மேற்கத்திய நாடுகளைப்பற்றி படிக்கும் பொது ஒருவிஷயம் வித்தியாசமாய் இருக்கும். அவர்கள் நாட்டு சட்டப்படி 18 வயதுக்கு மேல் எல்லா உரிமைகளையும் (புகை பிடித்தல், மது அருந்துதல், மாதுவுடன் கூடுதல், இத்யாதி கெட்ட சங்கதிகள்) பெற்று விடுவதினால் அவர்களில் 18 வயதுக்குள் நடக்கும் குற்றங்கள் மிக குறைவு என்பது தான் அது. ஆனால் இப்போதெல்லாம் 13 வயதிலேயே குழந்தை பெற்றேடுத்துக்கொள்ளும் மேலை நாட்டவரை பார்த்து நம் மக்களும் இப்படி செய்து விடுகிறார்கள்...

  எதிலேயும் நல்லதை எடுத்துக்கொண்டு கெட்டதை விட்டுவிடும் பழக்கம் நம் மக்களிடம் சுத்தமாக மறைந்தே விட்டது. அன்றே நம் மக்கள் சொல்லி சென்று விட்டார்கள்... தீதும் நன்றும் பிறர் தர வாரா... தனக்கு வரப்போகும் மனைவியோ கணவனோ உத்தமராக இருக்க வேண்டும் என்று கோயிலில் வேண்டிக்கொண்டு கோயிலின் பின்புற பிரகாரத்தில் தன் வாழ்க்கையில் பங்கெடுக்கப்போகாத ஒருவருடன் கூடுவது தான் இன்றைய தலைமுறையின் வாழ்க்கை முறையாக இருக்கிறது...

  ReplyDelete
 4. இந்தக் கொடுமைய எங்க போயி சொல்றது...

  :(

  நிச்சயமா புதர் ஒழிப்பு வாரியம்-னு ஒன்னு வேணும் போலயே...

  ReplyDelete
 5. படங்கள் அழகாய் இருக்கிறது.

  ReplyDelete
 6. //
  பேரரசு இயக்கத்தில் அர்ஜுன் நடிக்க... திருவண்ணாமலை என்ற படம் வெளிவந்த பிறகு அந்த ஊருக்கு இன்னும் செம ரெஸ்பான்ஸ்......
  //

  எங்கள வச்சு காமெடி கீமடி பண்ணலயே!!!

  ReplyDelete
 7. இத விட கொடுமை என்னன்னா திருச்சி கல்லனைல இரண்டு சோடிகள அம்மணமா ஓட விட்டு போலிஸ்காரங்க அடிச்சாங்க. அது ஒரு பத்திரிக்கைல செய்தியாவும் வந்துச்சு. ஆனா இன்னைக்கும் எல்லா புதரும் காதர்களால் நிரம்பித்தான் வழிகிறது. முக்கொம்பும் இப்படித்தான். இரண்டு இடத்துலயும் இப்போ போலிஸ் கெடுபிடி அதிகமா இருக்கு.

  ReplyDelete
 8. பாலகுமாரன் எழுதும்போது நான் நெல்லையில் இருந்தேன். திருவண்ணாமலை பார்க்கவேண்டும் விசிறி சாமியார் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் நிறைய இருந்தது. நடிகனை பார்க்க துடிக்கும் ரசிகன் போல,ஏனென்றால் பாலகுமாரன் மீது அவ்வளவு காதல். வேலூர் வந்து வசிக்க தொடங்கியதும் திருவண்ணாமலை தொழில் நிமித்தம் அடிக்கடி சென்று வரும் ஊரானது. அதன் பிறகு பழைய எண்ணங்கள் அனைத்தும் என்னிடம் சொல்லாமேலே ஓடிப்போனது.பாலகுமாரன் எழுத்து உட்பட.சாத்தனூர் இன்னும் சென்றதில்லை .நன்ற ஜாக்கி .

  ReplyDelete
 9. நல்லா பக்தி மயமாத்தான் ஆரம்பம் இருந்தது. ஆனா திடீர்ன்னு ஒரு திருப்பம், அப்படியே track மாறி போச்சி.

  ப்ரீயா லைவ் ஷோ பார்த்த மாதிரி போட்டு இருக்கீங்க.

  ReplyDelete
 10. கலக்கலான திருவண்ணாமலை உலா.நாங்களும் கூட நடந்து வருவது போல இருக்கு ஓட்டு போட்டாச்சு தல.

  ReplyDelete
 11. அண்ணே செம லைவ் ரிப்போர்ட்.
  இந்த இடத்துக்கு குழந்தைகளுடன் போனாலோ பள்ளியில் சுற்றுலா அழைத்து போனாலோ இதுகளைப்பார்த்து கெட்டுப்போவது தான் மிச்சம்.
  அப்போ சென்னை தேவலை?ஓக்கேஓக்கெ
  அண்ணே ஓட்டுக்கள் போட்டாச்சு

  ReplyDelete
 12. Nithyananda Kicked Out of Kumbh Mela - Fraud, Sex,...

  http://nithyananda-cult.blogspot.com/2010/03/nithyananda-kicked-out-of-kumbh-mela.html

  ReplyDelete
 13. வணக்கம் ஜாக்கி
  திருவண்ணாமலை பதிவு அற்புதம்
  அதை விட அற்புதம் சாத்தனூர் பதிவு நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை தான்
  சென்னை பெண்களை மிஞ்சி விடுவார்கள் அவர்கள், அனால் நீங்கள் ஒரு உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்
  நான் கல்லூரியில் சேர்ந்த பிறகு நான் கண்ட ஒரு உண்மை சென்னை பெண்களை விட வெளியூரில் இருந்து படிப்பதற்காக,
  வேலை பார்பதற்காக வரும் பெண்களே அதிகம் பேர் காதல் வயப்பட்டு பீச் பார்க் மகாபலிபுரம் சத்யம் தேவி காசி சங்கம் மாயாஜால் என்று
  சுற்றி ஏமார்ந்து போகிறார்கள். சென்னை பெண்கள் கொஞ்சம் அலெர்ட் ஆனவர்கள்.

  என்ன உண்மை தானே

  அன்பு அரவிந்தன்.

  ReplyDelete
 14. கிண்டியில் எனது சொந்த ஊர் கடலூருக்கு போக பேருந்துக்காக காத்து இருக்கும் போது... பாண்டி, கடலூர் பேருந்துக்காக தவம் கிடப்பேன்.. ஆனால் 5 நிமிடத்துக்கு ஒரு பேருந்து திருவண்ணாமலைக்கு போய் கொண்டே இருக்கும்...வயிறு எல்லாம் எரியும்... அப்படி என்ன அங்க இருக்குன்னு இத்தனை பஸ் போகுன்னு தெரியலை என்று நினைத்துக்கொள்வேன்...//


  அதே தாண்ணே...நானும் இதை கவனிச்சு இருக்கேன்..திருவன்னமளையைப் போலவே, மேல்மலையனூர் என்ற ஊரும் புகழடைந்து கொண்டு வருகிறது...இதுவும் ஒரு மலைக்கோயிலாம்... இதுக்கும் அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு பஸ் வரதை நோட் பண்ணினீங்களா?

  ReplyDelete
 15. ஓரே பீலிங்ஸ்..
  நீ நல்லா தூங்கினியா???
  அந்த பெண் இல்லை என்று சொல்லிவிட்டு அவனை மார்போடு இன்னும் அனைத்துகொள்கின்றது....நிறைய பேர் வந்து நடந்து போகின்றார்களே... என்று எந்த கூச்சமும் இல்லை....
  எனக்கும்தான் தூக்கம் வரலை...
  நீ என்ன பாட்டு கேட்ட?
  ராசவே உன்னை விட மாட்டேன்.... என்று சொல்லி விட்டு இன்னும் மார்போடு இருக்கும் போது....//

  எனக்கு மட்டும் என்னே இந்த மாதிரி எல்லாம் நடக்கவே இல்லை...
  நானும் வாங்கறேன் சீனா செட்டு..
  சீக்கிரம் புடிக்கிறேன் ஒரு இளம் மொட்டு...

  ReplyDelete
 16. ////நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள்... எந்த பெண்ணுக்கும் மார்பகமே வளராத சிறுமிகள்... மொட்டுக்கள்... எல்லாம் கிராமத்து பெண்கள்....எல்லாம் காம சூட்டோடு அலைவதை பார்க்கும் போது மனது வருத்தம் கொண்டது....சென்னை பெண்கள்தான் பிச்சிலேயே பழுத்தவர்கள் என்று ஒரு சாரர் இன்னமும் நைனைத்துக்கொண்டு இருக்கலாம்... அப்படி இதுநாள்வரையில் நினைத்து இருந்தால் அதை ரப்பர் போட்டு அழித்து விடுங்கள்...///
  ம்ம்ம்........என்னத்த சொல்ல :((

  ReplyDelete
 17. வணக்கம் ஜாக்கி

  பதிவு அருமை

  ReplyDelete
 18. //வீட்டில் கீரைகட்டு எடுத்து தனியாக சுத்தம் செய்ய ஆரம்பித்தால் போர் அடித்து விடும்... இதுவே 3 பேர் உட்கார்ந்து பேசிக்கொண்டே கீரை ஆய ஆரம்பித்தால் சீக்கரமாக கீரையை சுத்தம் செய்து விடுவோம்//

  எங்கயிருந்துய்யா இப்படி உதராணம் கொடுக்கறிங்க்..!

  அட்டகாசம் போங்க..

  ReplyDelete
 19. //வீட்டில் கீரைகட்டு எடுத்து தனியாக சுத்தம் செய்ய ஆரம்பித்தால் போர் அடித்து விடும்... இதுவே 3 பேர் உட்கார்ந்து பேசிக்கொண்டே கீரை ஆய ஆரம்பித்தால் சீக்கரமாக கீரையை சுத்தம் செய்து விடுவோம்//

  எங்கயிருந்துய்யா இப்படி உதராணம் கொடுக்கறிங்க்..!

  அட்டகாசம் போங்க..

  ReplyDelete
 20. பயணப்பதிவில் திருவண்ணாமலைச் செய்தி அருமை சுவை, சாத்தனூர் அணைச் செய்தியை என்னென்பது...உலக மயமாகிவிட்டோம். இதிலும் படங்கள் மிகத் தெளிவு

  ReplyDelete
 21. படங்கள் அருமை. தொழிற்திறமை பளிச்சிடுகிறது.

  பின்பகுதி காதலர்களைப்பற்றி. முன்பகுதியை விழுங்கி விடுகிறது!

  கிராமத்துக்காதலர்கள் - நகரத்துக்காதலர்கள்.

  காமம் என்பது பொது. இதில் வேறுபாடு எங்கே? அஃது ஒரு சூடு. எல்லாரையும் ஒன்றாகத்தான் பெருக்கும்.

  காதலர்கள் காட்சிகள். மனிதனேயத்துடன் அணுகவேண்டியது.

  விஜயகுமார் சென்னை உயர்னீதி மன்றத்தில் மாநகர போலிசு சார்பாக மன்னிப்புக்கேட்டது தெரியுமா?

  காதலர்கள் - அல்லது ஒரு பெண்ணும் ஆணும் - தனித்துப்பேசுவதே மாபெருங்குற்றம் என்ற சமூகத்தில் இப்படி இருட்டைனோக்கித்தான் போவார்கள்.

  தில்லியில் ஒரு பூங்கா உண்டு. அதன் பெயர் : மகாவீர் ஜெயந்தி பார்க். அதன் முகப்பிலேயே:

  ‘இப்பூங்கா காதலர்கள் அமைதியான இயற்கைச்சூழ்னிலையில், பிறர் தொந்தரவில்லாமல், சிலமணி நேரங்கள் கழிப்பதற்கே. தயவுசெய்து பிறர் நுழைய வேண்டாம்”

  என்று போர்டு போட்டிருக்கும்.

  இப்படி நாம் செய்யாததால், அணைகட்டு புதர்களில், திரைப்படக்கொட்டகைகளில் இருட்டில் குலவும் காதலர்களைக்கண்டு கலாச்சாரம் கேட்டது என சொல்கிறோம்.

  ReplyDelete
 22. unga post ellam paticha oru feel good iruku. old post neraya patichan very nice. keep it up!!!!

  ReplyDelete
 23. ரொம்ப அருமையான பதிவு...

  ReplyDelete
 24. நீங்க சாத்தனூர் டாமை பாக்க போன மாதிரி தெரியல. அம்மனியோடு போகும்போதே இப்படி மேயரிங்களே, தனிய போனா, நீங்களும் எதையாவது ஒன்ன சேர்த்துகிட்டு புதருக்கு போய்விடுவீங்க போல!!!.

  எங்களுக்கு ஒருகாலத்தில் பிக்னிக் என்றாலே சாத்தனூர்தான். அப்போதெல்லாம் கொஞ்சமேனும் பசுமையாக இருக்கும். மூன்று வருடங்களுக்கு முன் போகும்போதே மனசு விட்டுபோச்சு. முன்பெல்லாம் குடும்பமாக செல்லும்போது சாத்தனூர் சரியான இடமாக தெரியும். இப்போது அது கள்ள காதலர்களின் கூடாரமாகிவிட்டது.

  சாத்தனூரை விடுங்கள், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கோவிலுக்கு எதிரில் இருக்கும் மலையில் நீங்க சொன்ன எல்லாமும் நடக்கிறது.

  கலிகாலம்

  இல்யாஸ்.மு

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner