திருவண்ணமலையும் ,கிரி வல பாதையும்...


நண்பரின் திருமணத்திற்க்காக நேற்று திருவண்ணமலை செல்ல நேர்ந்தது, திருவண்ணாமலைக்கும் எனக்கும் பெரிய தொடர்புகள் ஏதும் இல்லை. ஒரு ஆவணப்படம் எடுக்கவும், இரண்டு முறை திருமணத்திற்க்கும் சென்று உள்ளேன். பிதாமகன் படம் ரீலீஸ் ஆனபோது போது படத்தை பற்றி மக்கள் கருத்தை அறிய வடமாவட்ட தியேட்டர்களுக்கு செல்லும் போது திருவண்ணமலை சென்று உள்ளேன். என்னை நிறைய நண்பர்கள் கிரிவலபாதைக்கு அழைத்த போது ,என்னால் மலை சுற்றுவதற்க்கு உடன் பாடு இல்லை. தாம்பரத்தில் எனது சொந்த ஊர் கடலூருக்கு செல்ல பேருந்துக்கு காத்து இருக்கும் போது தொடர்ந்து திருவண்ணாமலை பேருந்துகள் வரும் போது வயிறு எறியும். மாலை 3 மணிவாக்கில் சில புகைபடங்கள் எடுக்க கிரிவலபாதைக்கு செல்ல நேர்ந்தது. நல்ல ரம்யமான சாலை பக்தர் இளைப்பார ஆங்காங்கே உட்பகார்வதற்க்கு, சிமெண்ட் கட்டை கட்டிஇருக்கிறார்கள். நிறைய உண்மை சாதுக்களும் நிறைய சோம்பேறி சாதுக்களும் சுற்றி திரிந்தவண்ணம் இருந்தார்கள்.எனக்கு பகலில் அந்த மலை சுற்றி பார்க்க ஆர்வாமாக இருந்தது. கிரிவலப்பாதையை பக்தர் போர்வை கழட்டி விட்டு மிக நிதானமாக அந்த மலை பகலில் சுற்றி வர ஆசை.இரவிலும் எப்படி இருக்கும் அங்கே மக்களின் பக்தி எந்தளவுக்கு இருக்கிறது என்பதை தெரிந்து வேறு ஒரு பதிவில் சிலாகிக்கிறேன். ஆனாலும் சில வருடங்களில் கிரிவலப்பதையை மட்டும் வைத்து திருவண்ணமாலை பெருவளர்ச்சி அடைந்து இருக்கிறது . எங்க கடலூரிலும் , பாடலிஸ்வரர் கோவிலும், திருஹிந்தபுரம் தேவநாத சவாமி கோயிலும் இருக்கு, எதாவது நம்பிக்கை வளர்த்து எங் ஊரையும் வளர்த்து விடுங்க அப்பு. சரி நானே நம்பிக்கை சேதி ஒன்னு சொல்றேன். எவங்கிட்ட பணம் கொடுத்து ஏமாந்தாலும் எங்க ஊர் கோவிலுக்கு வாங்க எல்லாம் நல்லதே நடக்கும் அதுமட்டும் அல்ல ஏமாந்த பணம் ரெண்டு மடங்காகிடைக்கும் .


அன்புடன் /ஜாக்கிசேகர்

6 comments:

  1. இன்னும் ரெண்டு/மூணு படங்கள் போட்டிருக்கலாம்.

    ஒரு முறை 'திருவஹிந்திபுரம்' போயிருக்கிறேன். அருமையான தலம். மிகவும் சக்தி வாய்ந்தது என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  2. கிரி வலப்பாதையை பௌர்ணமி நாளன்று சுற்றுவது தான் சிறப்பாக இருக்கும் என்று கேள்வி பட்டு இருக்கிறேன். எனக்கும் ஆசை தான் சுற்றி பார்க்க ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. கோவில் இடத்தை சுத்தமாக வைத்து கொள்வதில் அக்கறை காட்டினால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  3. ஏற்கெனவே போகும் எண்ணம் இருந்தது. பாதையைப் பார்த்தபிறகு உறுதியாயிற்று. நீள நடக்கத் தகுந்த நிழல்.

    ReplyDelete
  4. நன்றி தமிழ், நல்ல அற்புதமான சாலை, என்னை கேட்டால் மழை நாளில் சொர்கம் என்பது என் எண்ணம்

    ReplyDelete
  5. நன்றி கிரி .பாதையை சுத்தமாக வைத்துகொள்வதுபோல்தான் தெரிகிறது.

    ReplyDelete
  6. நன்றி ச்சின்ன பையன், திருவஹிந்த புரத்தை சின்ன திருப்பதி என்றும் அழைப்பர்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner