வெல்லம் தின்றது ஒருத்தன் விரல் சப்பறது இன்னோருத்தன்... சத்தியமா இது ஆபாச பதிவு இல்லைங்க..
2010லிருந்து அமெரிக்ககாரன் அணுகுண்டு போடாமலே, நம்ம இந்தியர்களுக்கு ஒரு அப்பு காத்து இருக்கிறது. வருஷத்துக்கு பத்து லட்சம் பேர் புகையால் வரும் நோயால் இறக்க போகிறார்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம் . இதுல இந்தியாவில மட்டும் பத்து கோடி பேர் புகை பிடிக்கும் பழக்கத்திற்க்கு ஆட்பட்டு இருக்கிறார்கள். இதில் இரண்டு சதவித பேர் மட்டுமே, புகை பழகக்கத்தை விட்டு இருக்கிறார்கள்.இதில் புகை பிடிப்பவரை விட ,புகை பிடிப்பவர் அருகில் இருப்பவருக்கதான் ஆப்பு அதிகம் என்று வேறு ஒரு புள்ளி விவரம் வயித்த வேற கலக்க வைக்குது . இந்த புள்ளிவிவரம் கைக்கு வந்ததும் நம்ம சுகாதாரதுறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் ரத்தம் கொதிச்சு போய் சில முடிவுகள் எடுத்தாரு...அவைகள் பின்வருமாறு....
1. சிகரேட் பாக்கட் மற்றும் விளம்பரங்களி்ல் சிகரேட் தீமை குறித்த வாசகங்களும் படங்களும் இடம்பேற வேண்டும் .அதுவும் ஜுன்24 /2008ல் இருந்து கண்டிப்பாக இடம் பெற வேண்டும், இல்லை என்றால் 200 ருபாயாக இருந்த அபராதம் 1000 மாக மாற்றப்படும் என திருவாய் மலர்ந்துள்ளார்.
2. அலுவலகங்களில் புகை பிடித்து எவராவது மாட்டினால் அந்த கம்பனி 5000ருபாய் அபாராதம் கட்ட வேண்டும்.
3.நடிகர்கள் ரஜினி, ஷாருக், விஜய் , மேற்க்கு வங்க முதல்வர் புட்டதேவ் போன்றவர்களிடம் சிகரேட் பிடிக்காமல் இருங்கள் என்று கெஞ்சுகிறார்.
சரி ஏன் மொத்தமாக புகையிலையை இந்தியாவில் தடை செய்யகூடாது? அங்கதான் மேட்டர் கீது நைனா, இந்தியாவில் வரும் மொத்த வருவாயில் 10சதவிகிதம் புகையிலை பொருட்களால் வருகிறது. எவனாவது வரம் கொடுக்கற சாமி தலையில கை வைப்பானா? அன்புமணி தந்தை ராமதாஸ்க்கு ஒரு கேள்வி தமிழகத்தில் மதுவிலக்கு வேண்டும் என்று குரல் கொடுப்பவர், தன் மகன்துறை என்பதால் பாரமுகம் காட்டுவது ஏன்? நான் தப்பு செய்ய ஒரு அழகான பெண்ணை அனுப்புவேன் , ஆனால் நீ தொட கூடாது என்பது என்ன நியாயம் ? இதுதான் மத்திய அரசின் நிலைப்பாட? ஆப்கான் போல் மத்திய அரசு ,காஞ்சாவை அனுமதித்தால் இன்னும் நல்ல வருவாய் ஈட்டலாம் . எப்படி நம்ம ஐடியா ( நானும் சின்ன வயசுல ரஜினி படம் பார்த்துட்டு அவரு போல ஸ்டைல சிகரெட் புடிக்கனும்னு நோட்புக் பேப்பர் கிழித்து சுருட்டி மெழுகுவத்தியில் நெருப்பு பற்றி இருமியது இன்னும் என் நியாபக அடுக்குகளில் ) அன்புடன் / ஜாக்கிசேகர்
Labels:
அரசியல்
Subscribe to:
Post Comments (Atom)
well said
ReplyDelete