வெறிச்சோடிய சென்னை...சுதந்திர காற்றை சுவாசித்தபடி பனகல் பார்க் மரங்கள் ...
நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை சற்றும் வாய்ப்பு கிடைத்தது , சென்னை புது சட்டை போட்ட குழந்தை போல் இருந்தது . எல்லா இடங்களிலும் இருந்த விளம்பர பலகைகள் , எல்லாம் மாயமாக போய் இருந்தது . அதில் நிறைய அரசியல் இருக்கிறது என்றார்கள். அது பற்றி நமக்கு கவலை இல்லை, ஆனால் பல வலை தளங்களில் தமிழக முதல்வருக்கு பாராட்டு விழா நடத்துகிறார்கள்,.ரொம்ப நாளைக்கு பிறகு சர்ச் பார்க் பிள்ளைகளையே பார்த்த கண்களுக்கு, சர்ச்பார்க் பள்ளி கட்டிடம் பல வருடங்களுக்கு பிறகு இப்போது தான் தெரிகிறது. பனகல் பார்க் மரங்கள் சுதந்திரம் பெற்று தன் பார்வையை நால புறமும் சுழல விடுகின்றன .டிராபிக்கில் விளம்பரபடங்களை பார்த்து முன் வண்டியில் இடிக்கும் அசட்டு தனங்கள் இனி இல்லை . சென்னையில் இவ்வளவு மரங்களா ? என்று வியக்கும் வண்ணம் இருக்கிறது .ஒரே ஒரு குறைதான். இனிமேல் சின்ன மார்பும் சிறு இடுப்பு பெண்களை விளம்பர ஹோர்டிங்களில் பார்க்க முடியாது .‘ வெளிநாட்டு வாழ் தமிழர்களே’ அல்லது தற்போதைய சென்னை பார்க்காத தென்மாவட்டத்துக்காரர்களே, இப்போது சென்னை எப்படி இருக்கிறது தெரியுமா? அம்மா மஞ்சள் பூசி தலை சிவி பொட்டு வைத்து மல்லிகை பூ வைத்து இருப்பது போல் இவ்வளவு நாட்களும் சென்னை இருந்தது. இப்போது வெள்ளிகிழமையானால் தலையில் எண்ணை வைத்து , கம்மல் முக்குத்தி எல்லாம் கழட்டி விட்டு ஒரு வித தினுசான அழகோடு இருப்பாள் பாருங்கள் அதுபோல் இருக்கிறது சென்னை . என்னை பொருத்தவரை அந்த பகட்டுஇல்லாத உண்மையான அழகுதான் எனக்கு பிடிக்கும், உங்களுக்கு ???
அன்புடன் / ஜாக்கிசேகர் ...
Labels:
அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
கண்ணுக்குக் குளிர்ச்சியா மரங்கள் இருக்கே அது போதாதா?
ReplyDeleteஅவள்தானே இயற்கை என்னும் இளைய கன்னி?
தமிழ்நாட்டுலே இருந்த வட இந்தியப் பெண்களைத் துரத்தியாச்சு போல:-)))
//என்னை பொருத்தவரை அந்த பகட்டுஇல்லாத உண்மையான அழகுதான் எனக்கு பிடிக்கும், உங்களுக்கு ???//
ReplyDeleteஎனக்கும் தாங்க :D
இதே இப்படியே தொடர்ந்தாங்கன்ன நல்லா இருக்கும். நம்மவங்க சட்டம் எல்லாம் ஒரு 3 மாதம் வரை தீவிரமாக இருக்கும். அப்புறம் அப்படியா! அப்படி ஒரு சட்டம் இருந்தான்னு கேட்குற நிலைமையில இருக்கும்.
அமாம் அது உண்மைதான் தமிழ்நாட்டில் சப்பாத்தி சாப்பி்டும் பெண்களை துரத்தியாச்சு நன்றி துளசி கோபால
ReplyDeleteநன்றி கிரி, விளம்பர போர்டுகள் எடுத்ததில் ஏகப்பட்ட ஆரசியல் இருக்கிறது என்று, அப்புறம் எப்படி அதை தொடர்வார்கள்
ReplyDelete