+2 தேர்வு முடிவுகள் ...சென்னை முதலிடம் ஒரு தேச அவமானம்
+2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. சென்னை முதலிடம் என்ற செய்தி என்னை வருத்தப்பட செய்தது , சென்னை முதலிடம் வருவது என்பது ஒரு பெருமை அல்ல , அது ஒரு அவமானத்தின் வெளிப்பாடு. சென்னை மாணவ மாணவிகளுக்கு எகப்பட்ட வசதி வாய்ப்புகள் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. என்னதான் தென்மாவட்ட இளைஞர்கள் கணக்கிலும் இயற்பியலிலும் சுரப்புலி என்றாலும் மொழிப்பாடமான ஆங்கிலத்தில் அவர்களுக்கு போதுமான பயிற்ச்சி இல்லை. அரசு நல்ல ஆங்கில புலமை உள்ள ஆசிரியர்களை உடன் நியமிக்க வேண்டும் ,ஈரோடு மாவட்டத்தில் உள்ள ,கோபி தாலுக்காவில் உள்ள ,வேலங்காட்டுபாளையத்தில் உள்ள,மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள, பாவாடை மகன் குமார் முதலிடம் என்றால் மட்டுமே பெருமைபடும் விஷயம். அதை விடுத்து சென்னை முதலிடம் என்றால் அது பெருமை அல்ல சிறுமை. எனெனில் பாவாடை மகன் குமார் வாழ்வதும் இதே தமிழகத்தில் தான் என்பதை நாம் மறந்து விட கூடாது . பத்திரிக்கை அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்... இனிமேலாவது வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தாய் தந்தையர் அல்லது பள்ளி முதல்வர் முத்தம் கொடுப்பது போல் பத்திரிக்கையில் புகைப்படம் வெளியிடப்படுவதை தயவு செய்து குறைத்து கொள்ளுங்கள் ,ஏனென்றால் அதில் ஒரு செயற்கைதனம் இருப்பதாக எனக்கு படுகிறது , அதற்க்கு பதில் தம்ஸ் அப் போல் கை வைத்து அனைத்துக்கொண்டு போஸ் கொடுக்கலாமே. அன்புடன் / ஜாக்கிசேகர்
Labels:
அரசியல்
Subscribe to:
Post Comments (Atom)
romba naalaikku appuram chennai mudal idathirkku vanthirukku ..athil ivvlavu politicsa ..Chennaiil Lungi illaiya (pavadai mathiri )
ReplyDeleteகிராமத்து பள்ளியில் படித்தவர்களுக்கே அந்த வலி தெரியும், 8,9,10 ஆகிய வகுப்புகளுக்கு ஒரே வாத்தியார் பாடம் நடத்தி நீங்கள் பார்த்ததில்லை நான் பார்த்து இருக்கிறேன், சென்னையில் வெற்றி பெற்ற பிள்ளைகளும் நம் பிள்ளைகள்தான், நன்றி நம்பி வாசித்து பதில் எழுதியமைக்கு
ReplyDeleteமுதலில் இந்த கேவலத்தை நிறுத்த வேண்டும். 1200 மதிப்பென்களில் எவ்வளவு அதிகமா இந்த முறை பெறப்பட்டது என்ற புள்ளி விபரம் வேண்டுமென்றால் கொடுக்கலாமே தவிர. இது போன்ற அலப்பரைகள் தேவையே இல்லை.
ReplyDeleteஅது போன்ற மதிப்பென்களை குவித்த மாணக்கர்கள் பிற்காலத்தில் என்னாத்தை சாதிக்கிறார்கள் என்பதனையும் பின்னாலில் எல்லோருக்கும் தெரியப்படுத்த வேண்டும். இது போன்ற அலம்பல்களே மற்ற சாதா குடும்பத்தின் அவலங்களாக உருப்பெறுகிறது, பின்னாலில்... கொடுமை அண்ட் வெட்கக் கேடு.