காமராஜருக்கு அடுத்து எழை மாணவர்களின் கல்வி கண் திறந்த தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு நன்றி


+2 பரிட்சையில் மாநிலத்தில் முதலாவதாக வந்த மாணவர்களின் மேற்படிப்பு செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என்ற முத்தான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இது ஒரு நல்ல தொடக்கம் என்பேன். நிறைய படிக்கும் மாணவர்களின் கணவுகள் பொருளாதார அரக்கனால் சிதைக்கப்படுகின்றன . அதே போல் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர் இனி வெரும் 50பைசா கல்வி கட்டணம் செலுத்தினால் போதும் என்ற அறிவிப்பு ,எழைகள் மனதில் பாலை வார்த்து இருக்கிறது . அதே போல் 5 வருடம் முதல்வராக இருந்த கருணாநிதி அப்போதெல்லாம் ஏதும் செய்யாமல், சாவும் போது ஏன் சங்கரா , சங்கரா என கத்த வேண்டும் . என, வரும் வாரத்தில் குமுதம் ஓ பக்கங்களில் ஞாநி அவர்கள் புலம்பாமல் இருக்க எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன். அன்புடன் / ஜாக்கிசேகர்

6 comments:

  1. //அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர் இனி வெரும் 50பைசா கல்வி கட்டணம் செலுத்தினால் போதும் என்ற அறிவிப்பு//

    தேர்வு கட்டணத்தை நீக்கிய செய்தி தான் கண்டேன். இது என்ன? செய்திக்கான தொடுப்பு இருக்கிறதா? இனி அரசு பள்ளியில் 50 பைசா தவிர வேறேதும் செலவில்லையா? பள்ளி வளர்ச்சி, சிறப்புக் கட்டணம் என்று மறைமுகக் கட்டணங்கள் என்று ஏதும் இல்லையா?

    ReplyDelete
  2. பதிவிற்கு நன்றி சேகர்!

    கலைஞர் அருமை யாருக்கு தெரிய போவது?!

    இதே இந்த மாதிரி அறிவிப்பை 'அம்மா' சொல்லிருந்த 'எல்லா'பத்திரிக்கையும் பாராட்டி தள்ளி இருக்கும்?!

    கலைஞர் தந்தை பெரியாரைப் போல நீண்ட ஆயுட் பெறவேண்டும்!

    நன்றிகள் பல...

    மயிலாடுதுறை சிவா...

    ReplyDelete
  3. என்ன செய்தாலும் பார்ப்பன ஏடுகளும்,பாதி பார்ப்பன ஏடுகளும்
    குறை கூறிக் கொண்டேதான் இருப்பார்கள்.
    பெரியார்,காமராசர்,அண்ணா இவர்கள் கண்ட கனவுகள் நிறை வேறி வருவதை நேர்மையானவர்கள் ஒத்துக் கொள்வார்கள்.
    தமிழினத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் ஒத்துழைத்து மேலும் முன்னேற்றப் பார்ப்பார்கள்.
    பெரியார் சொன்னது போல அவாள் திட்டினால் நாம் சரியாக வேலை செய்கிறோம் என்று பொருள்!

    ReplyDelete
  4. நன்றி சிவா, நான் கடலுர்காரன்தான். உண்மைதான் எல்லா பத்திரிக்கையும் அந்த அம்மாவைபாராட்டும் . மக்களும் குருட்டு ஆந்த போல புகழ்வாங்க. இதே அந்த அம்மா செய்தாலும் பாராட்டுவேன் நான்.

    ReplyDelete
  5. நீங்கள் சொல்வது மிக்க சரி. எல்லோரும் இங்கே ஜாதி கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கிறார்கள். என்ன செய்வது? பார்பானர்களிலும் நேர்மையானவர்கள் இருக்கிறார்கள். நான் பார்த்தும், பழகியும் இருக்கிறேன்.

    ReplyDelete
  6. அரசு பள்ளிகளில் தனிகட்டனம் என்று வசுலிப்பார்கள், அதில் நுலக ,விளையாட்டு போன்ற இன்ன பிற கட்டணங்களும் அடங்கும் அதெல்லாம் இனி கிடையாது. வெறும் 50 பைசா செலுத்தி பள்ளியில் சேர்ந்தால் போதும். நன்றி ரவி

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner