கமலுக்க அடுத்த படியாக பொதுமக்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் விளம்பர படங்களில் நடித்தவர் சூர்யா. அவர் காசநோய் விளம்பரபடங்களில் நடித்தார். அது பொது மக்களிடம் பெரும்பான்மையான மக்களின் வரவேற்ப்பும் ,சமுக ஆர்வலர்களின் ஏகோபித்த வரவேற்ப்பும் பெற்றது. அதே போல், கமல் எவரும் நடிக்க துணியாத எயிட்ஸ் விளம்பர படத்தில் நடித்தார் . அதன்பிறகு மாதவன் ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டுங்கள் போன்ற ரேடியோ விளம்பரங்களில் வந்தார் . அந்த வரிசையில் இப்போது வாய் திறந்து அதிர்ந்து பேசாத விஜய் கூட பொது பிரச்சனைக்கு குரல் கொடுத்து இருப்பது வரவேற்க்க தகுந்த ஒன்று. விளம்பரபடத்தின் நோக்கம் , குழந்தை தொழிளாளர் ஒழிப்பு , பெண் கல்வி அவசியத்தையும் வலியுறுத்துவதாக இருந்தது. இந்த நான்கு நடிகர்களும் அவர்கள் வேலையை ஒதுக்கி பொது பிரச்சனைக்கு ஒன்றுசேர்ந்ததற்க்கு என் நன்றிகள். அதுமட்டும் அல்லாது திருமண்த்திற்க்கு பின் நடிக்க மறுத்த தன் மனைவியை இந்த விழிப்புனர்வு படத்தில் தன் மனைவியை நடிக்க வைத்த சூர்யா, மற்றும் ஜோதிகா இருவரின் பெருந்தன்மைக்கு என் நன்றிகள். தமிழகத்தில் எதாவது ஒரு பெற்றோராவது ,தன் பெண் குழந்தைக்கு நல்ல கல்வியும் , தன் ஆண் பிள்ளையை வேலைக்கு அனுப்பாமல் இருக்க இந்த விளம்பர படம் நிச்சயம் உதவும்என்பது என் எண்ணம். சமுகத்துக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற இந்த நடிகர்களின் முயற்ச்சிக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
“எதையம் செய்யாமல் இருப்பதை விட எதையாவது செய்வது நன்று”
அன்புடன் / ஜாக்கி சேகர்
//“எதையம் செய்யாமல் இருப்பதை விட எதையாவது செய்வது நன்று”//
ReplyDeleteசூர்யா சார் இயல்பாகவே ரொம்ப நல்லா பழகக் கூடியவர். அவரது பொறுமைதான் அவரை இந்த அளவு வளர வைத்திருக்கிறது என்பதை நானறிவேன். நல்ல எண்ணம் இருப்பவர்கள் சமூக அக்கறையுடன் எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள்.
பாராட்டுவதற்கும் ஒரு மனம் வேண்டும். சினிமா நடிப்புக்காக பாராட்டுவது வேறு...! பொது சேவைக்காக பாராட்டுவது வேறு. நான் ஏற்கனவே நண்பர்கள் சூர்யா, மாதவன் மற்றும் விஜய் ஆகியோரிடம் நேரில் வாழ்த்து தெரிவித்து விட்டேன். தங்கள் வலைப்பூ வாயிலாகவும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி!
பொதுவாக நல்ல விழயங்களை பாராட்ட பாராட்ட மேலும் நல்ல விஷயங்கள் நடக்கும் என்பது என் எண்ணம் தங்கள் பாராட்டுக்கும் பதீல் எழுதியமைக்கும் மிக்க நன்றி
ReplyDelete