சேலம் 636140.உடையார்பட்டி கந்தாஸ்ரமம் - ஒரு பயண கட்டுரை...


என்னோடு பணிபுரியும் நாகலட்சுமி அவர்களின் இரு பெண்களின் நாட்டிய அரங்கேற்றம் ,சேலம் கந்தாஸ்ரம வளாகத்தில்18/05/08 அன்று வைத்து இருந்தார்கள் .என்னை சலனப்டம் மற்றும் நிழற்படம் எடுக்க பணித்தார்கள். இரவு பதினொன்றை மணியளவில் அவரின் உறவினர் மற்றும் நண்பர்களோடு நானுமாய், ஒரு மினி பேருந்தில் பயணம் செய்தோம்.நான் ஜன்னல் ஓரம் வெப்பகாற்றை அனுபவித்தபடி பயணம் செய்தேன். உளுந்தூர்பேட்டை பஸ் நிலையம் எதிரில் டீ சாப்பிட்டோம். டீநன்றாக இருந்தது. உள்நாக்கில் டீசுவையோடு தூங்கிப்போனேன். கழுத்து வியற்வை பிசுபிசுக்க எழுந்தபோது வண்டி ஆத்தூரில் நி்ன்று இருந்தது.முகம் கழுவி டிரைவர் சீட் அருகே உட்கார்ந்துகொன்டேன். விபத்துக்கள் எல்லாம் விடியற்காலை மூன்று மணியில் இருந்து ஆறு மணிக்குள் நடப்பதால் டிரைவரிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே வந்தேன். நிறைய முறை இதே வழியில் பயணம் செய்து இருக்கிறேன். அப்போதெல்லாம் ,பொட்டல் காடாக இருந்த இடங்கள் எல்லாம், பொறியியல் கல்லூரிகளாக மாறி விட்டன. எல்லா காசு வச்சிருக்கற புண்ணியவானும் ,தமிழ்நாட்டில் கல்வி கண்ணை திறக்க அரும்பாடுபடுவது சாலையோர பொட்டல் காடுகளில் உள்ள கான்கிரிட் கட்டிடங்கள் சொல்லாமல் சொல்லுகின்றன. அதே போல் ஏதோ ஒரு எழை விவசாய தகப்பனின் , இரத்த வியற்வை நியான் விளக்காய் பொறியியல் கல்லூரி வாசல்களில் மின்னுகின்றன. நாங்கள் விடியலில் சேலம் சேர்ந்தோம். எங்கு தேடியும் தங்கும் அறை கிடைக்கவில்லை. காரணம் , மந்திரி விரபாண்டியார் பேத்தி திருமணம் அதே நாளில் நடக்கிறது என்பதால் கழக உடன்பிறப்புகள் தங்கும் அறைகளில் (full ) ஆக இருந்தார்கள். சேலம் ஜெயா திரைஅரங்கு அருகில் உள்ள லாட்ஜில் தங்கி குளித்து முடித்து கந்தாஸ்ரமம் கோவில் சென்றோம் . சிறு குன்று மேல் அமைந்த கோவில். மிக அற்புதமான இயற்கை அழகு கொஞ்சம் இடம். மிகப்பெரிய கோவில் வளாகம். அழகான சிற்பங்கள் , என என் மனதை மயக்கின எனலாம். இங்கு நிறைய சுவாமிகள் , சாதுக்கள் இருக்கிறார்கள். கோவில் வரும் அனைத்த பக்தகோடிகளுக்கும் சுவையான உணவு கொடுக்கிறார்கள். எல்லா கிரகங்களும் மனைவியுடன் இருக்கின்றன. என் கடவுள் நம்பிக்கை என்பது கொஞ்சம் வித்யாசமானது. அது வேறு ஒரு பதிவில். எல்லா விக்கரங்களும் மிக அழகாக இருந்தன , முருகன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பிரமாதமாக இருந்தார். காவில் பக்கத்தில் ஒரு ஓடை ஓடுகிறது. கோடை என்பதால் அதில் நீர் இல்லை . சேலத்தில் இருந்து பேருந்து மூலம் உடையார்பட்டி வந்து பிறகு ஆட்டோ மூலம் செல்லலாம் சேலத்தில் இருந்து சில கிலோமீட்டர்தான். பரதநாட்டிய அரங்கேற்றம் இனிதே நடந்தது.இரவு நேரத்தில் கோவில் போகஸ் விளக்கு வெளிச்சத்தி ல் மிக அழகாக இருந்தது. இரவு பத்து மணியளவில் சென்னை கிளம்பினோம். நீங்களும் ஒருமுறை இயற்கை எழில் கொஞ்சும் சேலம் கந்தாஸ்ரமம் சென்று வாருங்கள்

கருத்து /புகைப்படம் .. அன்புடன் / ஜாக்கிசேகர்

2 comments:

 1. ஊர் சுத்துறீங்க... குடுத்து வச்சவர்...

  சீக்கிரம் உங்களை ஒரு பொண்ணுகிட்ட பிடிச்சு குடுக்கணும்.

  பயணக்கட்டுரை அழகு.

  அன்பு நித்யகுமாரன்

  ReplyDelete
 2. நன்றி நித்யா, எனக்கும் போரடிக்குது. சிக்கரம் புடுச்சிகொடுங்க

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner