கோடை விடுமுறையும் ,திடிர் காதல்களும் இது எல்லேர் வாழக்கையிலும் நடந்ததுதான்



காதல் பற்றி ரொம்ப ராவாகசொல்வதென்றால், காதல் ஒரு பப்ளிக் டாய்லட் மாதிரி பப்ளிக் டாய்லட் உள்ள இருக்கறவன் எப்பட வெளியில போவனும்னு துடிச்சிகிட்டே இருப்பான் . அதே போல வெளியில இருக்கறவன் எப்படா உள்ளபோலாம்னு தவிச்சிகிட்டஇருப்பான். காதல் மேட்டர்ல ரொம்ப டீப்பா உள்ள போன வெங்காயம் போலதான். ஆனா அந்த போதை இருக்கு பாருங்க , அது சத்தியம் , அதுநிஜம். அதுரசனையான காலகட்டம்னு கூட சொல்லலாம் .எல்லேர் வாழ்கையிலும் நடந்து இருக்கும் , சிலருக்கு அது புரிஞ்சு இருக்காது அவ்வளவுதான். எல்லோரும் நம்ம பால்ய காலத்துல ஸ்கூல் லீவு விட்டதும் நம்ம தாத்தா பாட்டி வீட்டுக்குதான் பொதுவா போவோம் .ரொம்ப ரேராதான் மாமா பெரியப்பா ,சித்தப்பா வீடு எல்லாம் .ஏன்ன ,நம்ம அறந்தவால் தனத்தை பொருத்துக்கிற மனசு நம்ம தாத்தா பாட்டிங்களுக்குதான் வரும் . நான் சின்ன வயசில நிறைய வெட்டிகிறாக்கி புடிச்சிகிட்டு வருவேன் ,எங்க பாட்டி என் பேரன் அப்படி எல்லாம் செய்யவே மாட்டான்னு சாதிச்சுட்டு பாதிக்கபட்டவங்களையே திட்டிட்டு வருவாங்க .எல்லா தெருவிலயும் தாத்தா பாட்டி இருக்காங்க அவங்க பேரப்புளளைங்க சம்மர் லீவுக்குவருவாங்க, இதுல பண்ணன்டு வயசுக்கு கிழ இருக்கற பிள்ளைங்க தனக்கு எல்லா விஷயமும் தெரியும்னு காமிச்சிக்கற புத்தி நிறைய இருக்கும். நிறைய சண்டை தின்பன்டத்துக்காகதான் இருக்கும், ரெண்டாவதா ரஜினி கமலா, விஜய் அஜித்தான்ற சண்டையும் அதிகமா இருக்கும், எந்த தப்பு நாம பன்னாலும் அந்த குமார் பையன் பாரு படிப்பலயும் பேச்சுலயும் எவ்வளவு சமத்தா இருக்கு பாருன்ற ஒப்பீடு இருக்கும். அடுத்த வருஷ லீவுல சந்திக்கும் போது சிலர் ஞபாகம் வச்சி இருப்பாங்க சிலர் மறந்து போயிடுவாங்க, சில பசங்க பேசவே விரும்பமாட்டாங்க. விடுமுறை முடிவில் என் தங்கையோடு பழகிய பெண் என் தங்கையோடு எங்கள் ஊருக்கு வருவதாக அழுது புரன்டாள், அடுத்த வருடம் கோடை விடுமுறை பொது அவள் என் தங்கையை கண்டுக்கவே இல்லை , அப்புறம் என் தங்கை தேம்பினால். அதே போல் பத்தாம் வகுப்பு முடந்து அதே தாத்தா பாட்டி வீடு செல்லும் போது கொஞ்சம் மெச்சுரிட்டுதனம் பேச்சிலும் செயலிலும் வந்து இருக்கும். அரும்பு மீசை மேல் உள்ள கவனம் உடைகள் மீதும் இருக்கும். ஏம் பாட்டி எதிர் வீட்டு கோபால் மாமா பொண்னு எங்கே என்றால் அவள் வயசுக்கு வந்த விஷயம் சொல்லபடும் அவள் சின்ன பெண் இல்லை என்பதுமீண்டும் மீண்டும் அறிவுருத்தபடும். அந்த பெண்ணை நேரில் பார்க்கும் போது இத்தனை வருஷம் நம்ம கூட கன்னாமுச்சி ஆடிய பெண்ணா என்ற பயம் ஏற்படும் . ஓடிபிடிக்கும் விளையாட்டுக்கு திடிர் தடை ஏற்பட்டு பல்லாங்குழி ,தாயபாஸ் போன்றவை விளையாட அனுமதி வழங்கப்படும் . எப்போதும் என் பாட்டி வீட்டை சுற்றியும் என்னுடன் நீண்ட நேரம் செலவிட்ட பெண் எப்போதாவதுதான் என் வீடு வரும் அதுகூட மோர்குழம்பு பொறியல் ஏதாவது அவர்கள் வீட்டில் செய்தால் எடுத்துக்கொண்டு வீடு வருவதோடுசரி, அளவாய் பேசும் அதனால் அதிகம் பேச வேண்டும் என்ற ஆவல் அதிகமாகும். அப்புறம் நாம பார்க்கறோம்னு தெரிஞ்ச அடுத்த நொடி அது ரொம்ப அளட்ட ஆரம்பிக்கும் . அப்படியே அந்த லீவு போயிடும் .அதுக்கப்பறம், +2 லீவுக்குகெல்லாம் பார்க்க முடியாது. ஏதோ ஒரு விஷயத்துக்கு பாட்டி ஊருக்கு போனா கைல குழந்தை வச்சிக்குனு சோறு ஊட்டும். நாம திடிர் அதிர்ச்சியை காட்டாம ,ஏன் செல்வி இது உன் குழந்தையா ? னு கேள்வி கேட்போம், அந்த பொண்ணும் எதையும் வெளிகாட்டிக்காம குமார் மாமாவுக்கு ஒரு குட்மார்னிங் சொல்லுன்னு குழந்தைகிட்ட சொல்லறப்ப வயிறு எரிந்து தொண்டை கட்டி சட்டென அந்த இடம் விட்டு நகர்ந்து கண்ணில் ஜலம் வைத்து கொள்வோம். இந்த நேரம் இந்த கோடை விடுமுறையில் , எத்தனை பேருக்கு காதல் வந்ததோ? எத்தனை பேர் கண்ணுல ஜலம் வச்சுன்டாளோ? யாருக்கு தெரியும் லீவுக்கு எங்க போறிங்கன்ன யாரவது கேட்ட அவ ஞாபகம் வரத்தான் செய்யுது . இப்ப நான் என்ன செய்ய ? அன்புடன்/ ஜாக்கி சேகர்

3 comments:

  1. //காதல் ஒரு பப்ளிக் டாய்லட் மாதிரி பப்ளிக் டாய்லட் உள்ள இருக்கறவன் எப்பட வெளியில போவனும்னு துடிச்சிகிட்டே இருப்பான் . அதே போல வெளியில இருக்கறவன் எப்படா உள்ளபோலாம்னு தவிச்சிகிட்டஇருப்பான்//

    :))

    ReplyDelete
  2. பின்றீங்க சேகர்...

    வாழ்த்துக்கள்.

    பேரன்பு நித்யகுமாரன்

    ReplyDelete
  3. நன்றி நித்யா. நீங்கள் இல்லையென்றால் அல்லது நீங்கள் அறிமுகப்படுத்தவில்லை என்றால் இது சாத்தியம் இல்லை

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner