என் அன்னைக்கு வந்தனங்கள்


ஆண் ஆதிக்க மனோபாவம் கொண்ட, என் தந்தைக்கு எழ்மை குடும்பத்தில் இருந்து வாக்கப்பட்ட என் அன்னை, பெரிய சொத்துக்கள் ஏதும் இல்லாது , எவரிடமும் தன் குடும்ப கஷ்டங்கள் சொல்லாது , என்னையும் என் நான்கு தங்கைகளையும் கரை சேர்த்தவர்,3ம் வகுப்பு படிக்கும் போதே நாவல் புத்தகம் கொடுத்து வாசிக்க வைத்தவர். பொய் சொல்ல கடைசி வரை கற்று கொடுக்காமல் செத்து போனவர், இந்த அன்னையர் தினத்தில் அவரை நினைவு கூர்ந்து என் நன்றிகளை அவருக்கு காணிக்கையாக்குகிறேன் அன்புடன்/ ஜாக்கி சேகர்

9 comments:

 1. அன்னையை போல் ஒரு தெய்வம் உண்டோ..
  தங்களின் வாழ்வின் வெற்றிகள் ஒவ்வொன்றுமே உங்கள் அன்னைக்கு நீங்கள் செலுத்தும் நன்றிகள்!! வாழ்த்துக்கள் நண்பரே!!

  ReplyDelete
 2. உங்கள் அன்னைக்கு எனது வந்தனங்களும் நண்பரே !

  ReplyDelete
 3. மனமார்ந்த பாராட்டுக்கள்.
  அன்னையின் அன்பை உணர்ந்தவர்கள் அனைவருமே என்றாலும் சிலர் மிகவும் உணர்ந்தவர்கள்.
  ஏழைக் குடும்பம்,எள்ளியாடும் பொதுக் குடும்பம்,துன்பங்களை மறைத்து அன்பையே பொழிந்த அந்த உள்ளம் இதைப் போன்றவற்றை அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும்.எந்த படைப்பாளியும் வார்த்தைகளால் படைத்து விடக் கூடியதல்ல.

  ReplyDelete
 4. அன்னையர் தினம் என்று ஒன்று இருப்பதையே அறியாமல் இறந்துபோனவர்களில் என் தாயும் ஒருவர்.

  நம் அம்மாக்கள் மேலுலகில் இருந்து நம் வாழ்த்துக் காணிக்கைகளை ஏற்றுக்கொள்வார்கள்.

  நல்ல பதிவு ஜாக்கி

  ReplyDelete
 5. மனம் கனக்கிறது..

  வேறு என்ன சொல்ல :(

  ReplyDelete
 6. நிச்சயமாக துளசி நம் அம்மாக்கள், நம் காணிக்கைகளை ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ? அவர்களின் ஆசீர்வாதங்கள் நமக்கு எப்போதும்

  ReplyDelete
 7. மிக்க நன்றி ரிஷான் , என் அன்னை இப்போது இருந்து இருந்தால், பெரு மகிழ்ச்சி அடைந்து இருப்பாள்

  ReplyDelete
 8. நன்றி சுரேகா, நேற்று முழுதும் என் அன்னை நினைவாகவே இருந்தேன்

  ReplyDelete
 9. நன்றி முத்து உங்கள் எண்ணம் தான் என் எண்ணமும்....

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner