இயக்குநர் கற்றது தமிழ் ராமும் , நானும்...



நல்ல நட்பு வட்டம் கிடைப்பது அரிது. ஆனால் ,கற்றது தமிழ் படம் வெளி வந்த பிறகு அந்த படத்தின் புகைபட கலைஞர் திரு . ராபர்ட் அவர்கள் எனக்கு ரொம்ப பழக்கம் படத்தில் கூட ,ரயில் டிக்கட் கவுன்டரில் கொலை ஆவது போல் நடித்து இருப்பார். அவரிடம் போன் நம்பர் வாங்கி திரு ராம் அவர்களுக்கு போன் செய்தேன் மிக மரியாதையாக பேசினார், நான் படத்தில் இருந்த காட்சிகள் பற்றியும் அந்த காட்சிகள் என்னை பாதித்த விஷயங்களை பகிர்ந்து கெண்டேன். உங்களுக்கு என்ன வயது என்றார் வயதை சொன்னேன், சார்லாம் போட்டு பேச வேண்டாம். ராம் என்றே அழையுங்கள் என்றார். அந்த அளவுக்கு பந்தா இல்லாத நபர் .அந்த நேரத்தில் பருத்திவீரன், மொழி,பொல்லாதவன், போன்ற படங்கள் வெளிவந்தன, நமக்கு சினிமாதான் வாழ்கை. நல்ல சினிமா எவர் எடுத்தாலும் அவர்களுக்கு வாழ்த்து சொல்வதும் அந்த படங்களின் சாதக பாதகங்களை இயக்குநர்களிடமே பேசுவேன்.ஏனெனில் நியாயமான விமர்சனங்களை எந்த படைப்பாளியும் புறந்தள்ளுவதில்லை. முக்கியமாக அமிர் மற்றும் வெற்றிமாறன் போன்றவர்கள் காது கொடுத்து கேட்டார்கள், முக்கியமாக அமிர் அவர்கள் நிறைய விஷயங்கள் பகிர்ந்து கொண்டார், பிறகு ராமுடன் மட்டும் தொடர்பில் இருந்தேன். ராம் அவர்கள் ஒருநாள் போன் செய்து ஒரு நல்ல வீடு பார்த்து தர முடியுமா? என்றார் என் வீட்டு அருகில் வீடு பார்த்தேன்அந்த வீடு அவருக்கு நிறைவாக இல்லை. பிறகு என் சித்தப்பாவிடம் சொல்லி அவருக்கு பிடித்தமான வீடு பார்த்து கொடுத்தேன்.திடிர் என்று போன் செய்வர் ஃப்ரியா இருந்தா வீட்டுக்கு வாங்க , கொஞ்சம் பேசாலாம் என்பார். பேச ஆரம்பித்தால் அன்று சிவராத்திரிதான். பேச்சு சுவாரஸ்யத்தில் நேரம் போவதே தெரியாது , நிறைய படிப்பாளி, நிறைய இலக்கியங்கள் விரல் நுனியில் அதனால், அவருடன் பேசுவதே ஆலாதி பிரியம் எனக்கு. பேசும் போது நிறைய விஷயங்கள் நான் கற்றுகொண்டு இருக்கிறேன். எந்த படமும் சினிமா இலக்கனம் இல்லாமல் எடுக்க கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர். நல்ல பேச்சாளர் எங்காவது அவர் பேசினால் கேட்டுபாருங்கள், அப்போது நான் சொன்ன உண்மை உங்களுக்கு புரியும்.சமுதாய கோபம் நிறைய அவரிடம். உரிமை உள்ளவரிடம் மட்டுமே தன் கோபத்தை வெளிபடுத்துவார். நான் நிறைய தொலைகாட்சி தொடர்களில் உதவி ஒளிப்பதிவாளராகவும், செகன்ட் யுனிட் கேமராமேனாகவும் பணி புரிந்து இருக்கிறேன். சிரியல் டைரக்டர்கள் கூட செம்ம பந்தா காட்டுவார்கள் அந்த மாதிரி விஷயம் ஏதும் தெரியாத டைரக்டர்களுடன் நான் பணிபுரிந்து இருக்கிறேன். ராம் ரொம்பவே வித்யாசமானவர் எவரையும் உயர்வு தாழ்வு படுத்தி பழகமாட்டார். அவரால் நீண்ட இடைவேளைக்கு பிறகு நல்ல நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்கள். பாண்டி , விஜயராகவன், மதுரை சாம்ராஜ், சரவணன், செல்வம், போன்ற நல்ல நண்பர் வட்டம் கிடைத்து இருக்கிறது. கடவுளுக்கு நன்றி. ராம் அடிக்கடி ஒரு விஷயம் சொல்வார், ஒரு நாவலை விமர்சனம் செய்ய பத்து முறை படிக்கிறார்கள் .ஆனால் ஒருபடத்தை ஒரே ஒருமுறை பார்த்துவிட்டு விமர்சனம் செய்கிறார்களே அது ஏன்? என்பார். சமீபத்தில் கூட கற்றதுதமிழ் படத்தை பற்றி இடுக்கையில் ரொம்ப காரசாரமாக எழுதி இருந்தார்கள். நான் உடனே போன் செய்து விஷயம் சொன்னேன்.கற்றதுதமிழ்முடிந்து பல மாதங்கள் ஆகின்றன. நாம் அடுத்த படத்தின் கதை விவாதத்தில் இருக்கிறோம் அதை பற்றி மட்டும் பேசுவோம் என்றார். நீங்களோ, நானாகவோ அந்த இடத்தில் இருந்துஇருந்தாள் , ஒரு ஆர்வத்திற்க்காவது, அதில் என்ன எழுதியிருக்கிறார்கள் படியுங்கள் என்போம் .இது வரை அவர் எந்த கேள்வியும் அந்த இடுக்கை பற்றி கேள்வி கேட்டதில்லை. அதுதான் கற்றதுதமிழ் ராம். அன்புடன் / ஜாக்கிசேகர்

5 comments:

  1. விஜய் டீவியில் தமிழை பற்றிய அவரது பேச்சு எனக்கு பிடித்திருந்தது
    அதை பற்றி இந்த பதிவில் எழுதியுள்ளேன்

    வால்பையன்

    ReplyDelete
  2. சாரே...

    ஒரு தபா ராம் சாரை அறிமுகப்படுத்தி விடுங்கன்னா மாட்டேன்றேளே...

    உங்களுக்கு ரொம்ப நன்னா எழுத வர்றது...

    சூப்பரு...

    அன்பு நித்யகுமாரன்

    ReplyDelete
  3. சாரே...

    ஒரு தபா ராம் சாரை அறிமுகப்படுத்தி விடுங்கன்னா மாட்டேன்றேளே...

    உங்களுக்கு ரொம்ப நன்னா எழுத வர்றது...

    சூப்பரு...

    அன்பு நித்யகுமாரன்

    ReplyDelete
  4. நேரில் வாங்க நித்யா , அதுஒன்றும் கம்ப சுத்திரம் அல்ல.

    ReplyDelete
  5. நன்றி . வால் பையன் தங்கள் பதிவும் மிகவும் அற்புதமாக இருந்தது,

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner